Showing posts with label ஹஜ். Show all posts

Wednesday, 31 October 2012
Friday, 19 October 2012
மதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்!
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
அல்லாஹ் தனது திருமறையில்:
‘ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்விற்காக பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்’ (அல்பகரா 2: 196). என குறிப்பிடுகிறான்.
இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஹஜ் திகழ்ந்து
கொண்டிருக்கின்றது. அதே போன்று உம்ராவை ஹஜ்ஜுடன் இணைத்தும், தனியாகவும்
நிறைவேற்ற முடியுமான ஒரு வணக்கமாகும். இங்கு கவனத்தில் கொள்ளப்படும்
விடயம், ஹஜ் மற்றும் உம்ரா நிறைவேற்ற செல்பவர்களில் பெரும்பாலானவர்கள்
மதீனாவை தரிசிப்பதையும் தவறாது செய்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒரு
அம்சமாக இருந்தாலும் மதீனா ஸியாரத்தோடு தொடர்பு படுத்தி சில தவறான
கருத்துக்கள், நம்பிக்கைள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.
அவைகளைக் களையெடுத்து அதன் உண்மை நிலையை விளக்குவதே இப்பிரசுரத்தின்
நோக்கமாகும்.
Labels:
ஹஜ்
Wednesday, 17 October 2012
ஹஜ் வழிகாட்டி
ஹஜ்ஜின் தினங்களில் ஹாஜிகள் தாம் நிறைவேற்றப்போகும் ஹஜ்ஜிற்கேற்ப மேற்கொள்ள வேண்டிய சுருக்கமான விவரங்கள்
நாள்: துல்ஹஜ் 8 க்கு முன்பு ஹாஜிகள் செய்ய வேண்டிய அமல்கள்.முஃப்ரித் - ஹஜ் இஃப்ராத்
1. மீக்காத்தில் இஹ்ராம் அணிந்ததும்
லப்பைக்க ஹஜ்ஜன் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்.
2. மக்காவாசிகளும் அங்கு தங்கியிருப்போரும் மீக்காத் வரவேண்டியதில்;லை, தத்தம் இருப்பிடங்களிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.
3. தவாஃபுல் குதூம் செய்ய வேண்டும்.
4. ஸயீ செய்ய வேண்டும். (தவாஃபுக்குப் பிறகு ஸயீ செய்யாமல் உடனே மினாவுக்குச் சென்று விட்டால் தவாஃபுல் இஃபாளாவுக்குப் பின் ஸயீ செய்ய வேண்டும்) துல்ஹஸ் 10 வரை இஹ்ராமுடன் இருக்க வேண்டும்.

Saturday, 13 October 2012
கூட்டுக் குர்பானியைக் குழப்பும் குறைமதியினர்
ஹஜ்ஜுப் பெருநாளில் நிறைவேற்றப்படும் முக்கியமான வணக்கம் குர்பானி கொடுப்பதாகும். இதற்கு அரபி மொழியில் உள்ஹிய்யா என்றும் கூறப்படும். உள்ஹிய்யா கொடுப்பதற்குத் தகுதியான பிராணிகள் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளாகும்.
ஒட்டகம், மாடு ஆகியவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்தும் குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி அவர்கள் அனைவரின் சார்பாகக் குர்பானி கொடுக்கலாம்.
ஒரு ஒட்டகத்தில் அதிகபட்சம் பத்துக் குடும்பங்கள் வரை கூட்டாகச் சேர்ந்து கொள்ளலாம். இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.
Labels:
ஹஜ்
குர்பானியின்-சட்டங்கள்
குர்பானி கொடுக்கும் நாட்கள்
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.
Labels:
ஹஜ்
Wednesday, 10 October 2012
16- குபா மஸ்ஜிதையும் பகீஃயையும் ஜியாரத் செய்வது விரும்பத்தக்க செயல்
மதினாவுக்கு வருகை தருவோர் குபா மஸ்ஜிதிற்குச் சென்று தொழுவது
விரும்பத்தக்க செயலாகும்.
( كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ رَاكِبًا وَمَاشِيًا - فَيُصَلِّي فِيهِ رَكْعَتَيْنِ )
நபி (ஸல்) அவர்கள் வாகனித்தவர்களாகவும் நடந்தவர் களாவும் குபா மஸ்ஜிதிற்கு வருகை தருவார்கள். அங்கே இரண்டு ரகஅத்கள் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள். (நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
( مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ ثُمَّ أَتَى مَسْجِدَ قُبَاءَ فَصَلَّى فِيهِ صَلَاةً كَانَ لَهُ كَأَجْرِ عُمْرَةٍ )
ஒருவர் தன்னுடைய வீட்டில் (உளுச் செய்து) தூய்மையாகி, பிறகு குபா மஸ்ஜிதிற்குச் சென்று அங்கே ஏதேனும் ஒரு தொழுகையைத் தொழுவாரானால் உம்ராவிற்குரிய நன்மை போன்று அவருக்குக் கிடைக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஸஹ்ல் -ரலி, நூல் : இப்னுமாஜா)
நபி (ஸல்) அவர்கள் பகீஃயின் கப்ர்களையும் ஷுஹதாக்களின் கப்ர்களையும் ஹம்ஸா (ரலி) கப்ரையும் ஜியாரத் செய்து, அவர்களுக்காக துஆச் செய்துள்ளதால் அவைகளை ஜியாரத் செய்வது சுன்னத்தாகும்.
( زُوْرُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُكُمُ الْآخِرَةَ )
கப்ர்களை ஜியாரத் செய்யுங்கள்! நிச்சயமாக அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : இப்னுமாஜா)
கப்ர்களை ஜியாரத் செய்யும் போது இவ்வாறு -ஸலாம்- கூறவேண்டுமென நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள் :
( اَلسَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ نَسْأَلُ اللَّهَ لَنَاوَلَكُمُ الْعَافِيَةَ)
அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன், வஇன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன், நஸ்அலுல்லாஹ லனா வலகூமுல் ஆஃபியா
(பொருள் : முஃமின்களான, முஸ்லிம்களான கப்ர் வாசிகளே! உங்கள் மீது -அல்லாஹ்வின்- அமைதி உண்டாவதாக! நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களை வந்தடைவோம். மேலும் நாங்கள் எங்களுக்காகவும் உங்க ளுக்காகவும் அல்லாஹ்விடம் நல்வாழ்வைக் கேட்கின்றோம்.)
(அறிவிப்பவர்: சுலைமான் பின் புரைதா-ரலி, நூல்: இப்னுமாஜா)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் கப்ர்களை கடந்து சென்றால் அதனை முன்னோக்கி நின்று கொண்டு இவ்வாறு கூறுவார்கள்:
( اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ )
அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூரி யஃபிருல்லாஹு லனா வலக்கும், அன்(த்)தும் ஸலஃபுனா வனஹ்னு பில்அஸர்.
(பொருள் : கப்ர் வாசிகளே உங்கள் மீது -அல்லாஹ்வின்- அமைதி உண்டாவதாக! அல்லாஹ் எங்களையும் உங்களை யும் மன்னித்தருள்வானாக! நீங்கள் எங்களுக்கு முன் சென்று விட்டீர்கள். நாங்கள் உங்களைத் தொடர்ந்து கொண்டுள் ளோம்) (அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் -ரலி, நூல் : திர்மிதி)
நாம் மறுமையை நினைவு கூர்வதற்காகவும், மரணித்து விட்டவர் மீது இரக்கப்பட்டு அவர்களுக்கு உபகாரம் செய்யும் விதமாக அவர்களுக்காக நாம் துஆச் செய்வதற்காகவும்தான் மார்க்கம் கப்ர் ஜியாரத்தை அனுமதித்துள்ளது என்பதை இந்த நபிமொழிகளின் மூலம் அறியமுடிகிறது.
கப்ர்களிடத்தில் பிரார்த்தனை செய்யும் நோக்கத்திலோ, அங்கு தங்குவதற்காகவோ ஜியாரத்திற்குச் செல்வது, அவர்களிடம் தம் தேவைகளை நிறைவேற்ற வேண்டுவது, நோய் நிவாரணம் தேடுவது, அவர்களைக் கொண்டோ அல்லது அவர்களின் பொருட்டாலோ அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது போன்ற அனைத்தும் மார்க்கம் தடுத்துள்ள பித்அத்தான ஜியாரத்தாகும். இதனை அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் அனுமதிக்கவில்லை. இவ்வாறு முன்சென்ற நல்லோர்(நபித்தோழர்)கள் எவரும் செய்யவில்லை. மாறாக இவையனைத்தும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ள, வெறுத்துள்ள காரியங்களாகும்.
( فَزُورُوهَا وَلَا تَقُولُوا هُجْرًا )
கப்ர்களை ஜியாரத் செய்யுங்கள்! வெறுக்கத்தக்கவைகளைக் கூறாதீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : சுலைமான் பின் புரைதா-ரலி, நூல் : அஹ்மத்)
மேற்கண்டவை அனைத்தும் -மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள- பித்அத்தின் வகையைச் சார்ந் தவைகளாகும். எனினும் -அதன் விளைவுகளில்- படித்தரங்கள் உள்ளன. கப்ருக்கருகில் நின்று கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது, மரணித்தவரின் பெயர்களைக் கூறி, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது போன்றவைகளும் பித்அத்கள்தான். என்றாலும் அவை ஷிர்க்கின் வகையைச் சார்ந்தவையல்ல. ஆனால் மரணித்தவர் களிடம் -நேரடியாகப்- பிரார்த்திப்பது, அவர்களிடம் உதவி தேடுவது போன்றவை மிகப்பெரிய ஷிர்க்கின் வகையைச் சார்ந்தவைகளாகும்.
இதனைப் பற்றிய விரிவான விளக்கங்கள் முன்னர் கூறப்பட்டுள்ளன. எனவே இவையனைத்தையும் விட்டு மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! அதனை விட்டும் முழுமையாக விலகிக் கொள்ளுங்கள்! உங்களுடைய இரட்சகனிடம் பாக்கியத்தையும் நேர்வழியையும் கேளுங்கள்! அவனே கிருபையாளன், நேர்வழி காட்டுபவன், வணக்கத் திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவனைத் தவிர வேறு இரட்சகனில்லை.
இறுதியாக, இதனையே நாம் உங்களுக்கு எடுத்துரைக்க விரும்பினோம். ஆரம்பமாகவும் இறுதியாகவும் அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அடியாரும் தூதரும் படைப்பினங்களில் சிறந்தவருமான முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் மீதும் அவர்களை நல்லவற்றில் -மறுமை நாள்வரை- பின்பற்றுவோர் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் ஸலாமும் ஸலவாத்தும் நிலவட்டுமாக!

உம்ரா சட்டம்,
ஹஜ்
15- எச்சரிக்கை
பொதுமக்களில் சிலர் எண்ணிக்கொண்டிருப்பது போல் நபி (ஸல்) அவர்களின்
கப்ரை ஜியாரத் செய்வது ஹஜ்ஜின் கடமையான செயல்களிலோ, அல்லது அதன்
நிபந்தனை களிலோ உள்ளதன்று. மாறாக மஸ்ஜிதுன் நபவிக்கு வருகை தருபவர்கள்
அல்லது அதனருகில் இருப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத்
செய்வது விரும்பத்தக்க செயலாகும்.
மதீனாவை விட்டும் தூரமாக இருப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பயணம் மேற்கொள்வது கூடாது. மாறாக புனிதப் பள்ளிக்கு -மஸ்ஜிதுன் நபவிக்கு- செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் பயணம் மேற்கொள்வது சுன்னத்தாகும். பள்ளிக்கு வருகை தருபவர் நபி (ஸல்) அவர்களின் கப்ரையும் இரு தோழர்களின் கப்ர்களையும் ஜியாரத் செய்வார். மஸ்ஜிதுன் நபவியை ஜியாரத் செய்வதைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்களின் கப்ரையும் அவர்களின் இரு தோழர்களின் கப்ர்களையும் ஜியாரத் செய்யும் வாய்ப்பும் கிடைத்து விடுகிறது.
(وَلَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ َمَسْجِدِي هَذا وَالْمَسْجِدِ الْحَرَامِ وَالْمَسْجِدِ الْأَقْصَى )
மூன்று பள்ளிவாயில்களைத் தவிர -நன்மையை நாடி- பயணம் மேற்கொள்ளக் கூடாது. அவை : மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய மஸ்ஜித், மஸ்ஜிதுல் அக்ஸா என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பாளர் : அபூஸயீத் -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் கப்ரையோ அல்லது பிறரின் கப்ரையோ -ஜியாரத் செய்ய- பயணம் மேற்கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இருந்திருந்தால் அதனை உம்மத்தினருக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவித்திருப்பார்கள். அதன் சிறப்பையும் கூறியிருப்பார்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் மக்களுக்கு மிகத் தெளிவாக உபதேசம் செய்பவர்கள், அனைவரையும் விட அல்லாஹ்வைப் பற்றி அதிகம் அறிந்தவர்கள், அனைவரையும் விட அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவர்கள். நிச்சயமாக அவர்கள் மக்களுக்கு மிகத் தெளிவாக -மார்க்கத்தை- எடுத்துரைத்து விட்டார்கள். தம் உம்மத்தினருக்கு நல்லவைகள் அனைத்தையும் எடுத்துச் சொல்லி விட்டார்கள். அனைத்துத் தீமைகளை விட்டும் எச்சரித்து விட்டார்கள். மூன்று பள்ளிவாயில்களைத் தவிர -வேறு எங்கும் நன்மையை நாடி- பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று எச்சரித்த நபி (ஸல்) அவர்கள்,
( لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا وَصَلُّوا عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ )
உங்கள் வீடுகளை கப்ருகளாக்கிவிடாதீர்கள்! என்னுடைய கப்ரை விழாவாக ஆக்கிவிடாதீர்கள்! என்மீது ஸலவாத்துச் சொல்லுங்கள்! நிச்சயமாக நீங்கள் எங்கிருந்து ஸலவாத்துக் கூறினாலும் அது என்னை வந்தடையும் என்றும் கூறியுள்ளார்கள் எனும்போது கப்ர் ஜியாரத்திற்காக பயணம் செய்வதை எவ்வாறு அனுமதித்திருப்பார்கள்?!
(அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி, நூல்:அபூதாவூத்)
நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதற்காக பயணம் மேற்கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்ற கூற்று அவர்கள் கப்ரை விழாக் கூடமாக்குவதற்கும் அவர்களை அளவு கடந்து புகழ்வதற்கும் வறம்புமீறி உயர்த்துவதற்கும் -சுருக்கமாகக் கூறவேண்டுமானால்- நபி (ஸல்) அவர்கள் எதனை பயந்து எச்சரித்தார்களோ அவை கள் அனைத்தும் அரங்கேறுவதற்குக் காரணமாக அமையும். அதிகமான மக்கள் இத்தவறுகளைச் செய்யக் காரணம் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதற்குப் பயணம் மேற்கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்று அவர்கள் -தவறாக- நம்பியிருப்பதே!
நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதற்காக பயணம் மேற்கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது என சில ஆதாரங்கள் கூறப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் பலவீனமான அறிவிப்பாளர்களின் தொடர்களை உடைய, மாறாக, அவைகள் -நபி (ஸல்) அவர்கள் கூறாததை, அவர்கள் கூறியதாக- இட்டுக்கட்டி கூறப்பட்டுள்ள செய்திகளாகும். ஹதீஸ் கலை வல்லுனர்களான தாரகுத்னீ, பைஹகீ, ஹாஃபிழ் இப்னு ஹஜர் போன்றோர் அதன் பலவீனங்களைக் கூறி எச்சரித்துள்ளார்கள். எனவே -இட்டுக் கட்டப்பட்ட- அந்தச் செய்திகளை மூன்று பள்ளிவாயில்களைத் தவிர -வேறு எங்கும் நன்மையை நாடி- பயணம் மேற்கொள்வதைத் தடுக்கும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ் களுக்கு எதிராகக் கூறுவது கூடாது.
இத்தலைப்பு தொடர்பான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் அதனைக் கண்டு ஏமாந்து விடாமல் எச்சரிக்கையாக இருப்பதற்காகவும் அதில் சிலவற்றை தங்கள் முன் வைக்கின்றேன்;
مَنْ حَجَّ وَلَمْ يَزُرْنِيْ فَقَدْ جَفَانِيْ
யார் ஹஜ் செய்து, என்னை ஜியாரத் செய்யவில்லையோ நிச்சயமாக அவர் என்னை வெறுத்துவிட்டார்.
مَنْ زَارَنِيْ بَعْدَ مَمَاتِيْ فَكَأَنَّمَا زَارَنِيْ فِيْ حَيَاتِيْ
நான் மரணித்ததற்குப் பிறகு என்னை ஜியாரத் செய்பவர் நான் உயிருடன் இருக்கும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.
مَنْ زَارَنِيْ وَزَارَ أَبِيْ إِبْرَاهِيْمَ فِيْ عَامٍ وَاحِدٍ ضَمِنْتُ لَهُ عَلَى اللهِ الْجَنَّةَ
ஒரே வருடத்தில் என்னையும் எனது தந்தை இப்ராஹீம் அவர் களையும் ஜியாரத் செய்தவருக்கு அல்லாஹ்விடத்தில் சொர்க் கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

مَنْ زَارَ قَبْرِيْ وَجَبَتْ لَهُ شَفَاعَتِيْ
என்னுடைய கப்ரை ஜியாரத் செய்தவருக்காக என்னுடைய பரிந்துரை கடமையாகிவிட்டது.
ஹதீஸ்களாக கூறப்படும் இவை போன்றவைகளை நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கான எந்த ஆதாரமும் கிடையாது.
ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தல்கீஸ் எனும் நூலில் இது தொடர்பான அறிவிப்பாளர்களின் பல வரிசைகளைக் கூறிவிட்டு இந்த ஹதீஸின் அனைத்துத் தொடர்களும் பலவீனமானவைகளே! என்று கூறியுள்ளார்கள்.
இச்செய்தி தொடர்பாக வரும் எந்த ஒன்றும் ஆதாரப் பூர்வமானதல்ல என ஹாஃபிழ் உகைலீ அவர்கள் கூறியுள் ளார்கள். இந்த ஹதீஸ்கள் அனைத்தும் இட்டுக்கட்டப் பட்டவைகளே! என ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளார்கள்.
இச்செய்திகளை நீங்கள் அறிந்து, நினைவில் நிறுத்தி, பிறருக்கும் எடுத்துரைக்க இதுவே போதுமானதாகும். இதில் ஏதேனும் ஒரு செய்தி ஆதாரப் பூர்வமானதாக இருந்திருந்தால் அதனை செயல்படுத்துவதிலும் மக்களுக்கு விளக்கிக் கூறுவதிலும் அதன்பால் அவர்களை அழைப் பதிலும் நபித்தோழர்கள் மக்களுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்திருப்பார்கள். ஏனெனில் நிச்சயமாக நபிமார்களுக்குப் பிறகு அவர்களே மக்களில் சிறந்தவர்கள், அல்லாஹ்வின் சட்டங்களையும் அவன் தன் அடியார்களுக்கு இட்ட கட்டளைகளையும் நன்கறிந்தவர்கள், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு மக்களுக்கு அதிகமாக உபதேசம் செய்தவர்கள். இத்தகையோர் -மேற்கூறிய- எதனையும் செய்ததாக எந்தச் செய்தியும் வராதது அவைகள் மார்க்கத்தில் உள்ளவையல்ல என்பதை உணர்த்துகிறது.
மேற்கண்ட செய்திகளில் ஏதேனும் ஒன்று ஆதாரப் பூர்வமானதாக இருந்திருந்தால் -இதுதொடர்பான ஹதீஸ்களை ஒருங்கிணைக்கும் விதமாக- கப்ரை ஜியாரத் செய்வதற்காக பயணம் செய்யாமல் -வேறு நோக்கத்திற்காக பயணிக்கும் போது கப்ரைக் கண்டால் அதனை ஜியாரத் செய்வதை- மார்க்கம் அனுமதித்துள்ள ஜியாரத்துடன் இதனையும் இணைப்பது அவசியமாகியிருக்கும். -ஆனால் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை- மிகத் தூய்மையான, மிக உயர்ந்தவனான அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
Labels:
உம்ரா சட்டம்,
ஹஜ்
14- ஜியாரத்தின் சட்டங்களும் ஒழுக்கங்களும்
மஸ்ஜிதுன் நபவிக்குச் செல்வது சுன்னத்தாகும். அங்கு ஹஜ்ஜுக்கு முன்போ
அல்லது பின்போ சென்று வரலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
(صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ)
என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிட நன்மையுடையதாகும்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
( صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ )
என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விட சிறப்பு மிக்கதாகும். (அறிவிப்பவர்: இப்னுஉமர்-ரலி, நூல்: முஸ்லிம்)
( صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ مِائَةِ صَلَاةٍ فِي هَذَا)
என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விட சிறப்பு மிக்கதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகையைத் தொழுவது என்னுடைய இந்தப் பள்ளியில் நூறு தொழுகையைத் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் சுபைர் -ரலி, நூற்கள் : அஹமத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான்)
( صَلَاةٌ فِي مَسْجِدِي هذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ مِائَةِ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ )
என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளி களில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகையைத் தொழுவது அது தவிர உள்ள பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும்.
(அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூற்கள் : அஹமத், இப்னுமாஜா)
இது பற்றி மேலும் பல நபிமொழிகள் வந்துள்ளன.
ஜியாரத் செய்பவர் பள்ளியை வந்தடைந்ததும் வலது காலை முன்வைத்து பிற பள்ளிகளில் நுழையும் போது கூறும் பின்வரும் துஆவைக் கூறி நுழைவது சுன்னத்தாகும்.
بِسْمِ اللهِ، وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ، أَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ وَبِوَجْهِهِ الْكَرِيْمِ وَسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ، أَللَّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
மஸ்ஜிதுன் நபவியில் நுழையும் போது மட்டும் கூறவேண்டிய பிரத்தியேக திக்ர் -துஆ- எதுவும் கிடையாது.
பிறகு அவர் இரண்டு ரகஅத்கள் தொழுவது சுன்னத்தாகும். அதில் இம்மை, மறுமையின் நல்ல தேவைகளில் தான் விரும்புவதை அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார். அந்த இரண்டு ரகஅத்களையும் புனித ரவ்லாவில் தொழுவது சிறப்பு மிக்கதாகும்.
( مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ )
என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் மத்தியில் உள்ளவை சொர்க்கத்துத் தோட்டங்களில் உள்ள ஒரு தோட்டமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜைது -ரலி, நூல் : புகாரீ)
தொழுத பிறகு அவர், நபி (ஸல்) அவர்களின் கப்ரையும் அவர்களின் தோழர்களான அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) அவர்களின் கப்ர்களையும் ஜியாரத் செய்வார். நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கு எதிரே ஒழுக்கத்துடன் நின்று, பணிவான சப்தத்துடன்
اَلسَّلاَمُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ وَرَحْمَةُ اللهِ وَبَرَكُاتُهُ
(அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ்! வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்!) என்று ஸலாம் கூறவேண்டும்.
( مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللَّهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ )
என் மீது யாரேனும் ஸலாம் கூறினால் அவருடைய ஸலாத்திற்கு பதில் கூறுவதற்காக என்னுடைய ரூஹை அல்லாஹ் மீட்டுத் தருகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : அபூதாவூத்)
ஜியாரத் செய்பவர், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்கள் மீது அல்லாஹ்வின் அமைதி உண்டாவதாக!, அல்லாஹ்வின் படைப்பினங்களில் சிறந்தவர்களே! உங்கள் மீது அல்லாஹ்வின் அமைதி உண்டாவதாக!, தூதர்களின் தலைவர் அவர்களே! இறையச்சமுடையவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்களே! உங்கள்மீது அல்லாஹ் வின் அமைதி உண்டாவதாக! நிச்சயமாக நீங்கள் இறைத் தூதை எடுத்துரைத்துவிட்டீர்கள்! அமாநிதத்தை ஒப்படைத்து விட்டீர்கள்! சமுதாயத்திற்கு உபதேசம் செய்துவிட்டீர்கள்! அல்லாஹ்வுடைய பாதையில் இயன்றவரை போராடிவிட்டீர்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன் என்று கூறுவாரானால் தவறில்லை. ஏனெனில் இவையனைத்தும் நபி (ஸல்) அவர்களின் தன்மைகளில் உள்ளவைகளே!
பிறகு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறி அவர்களுக்காக துஆச் செய்யவேண்டும்.
يَأَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
ஆகவே முஃமின்களே! நீங்கள் அவர் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! (33:56) என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க ஸலவாத்தையும் ஸலாமையும் இணைத்துக் கூறுவது மார்க்கச் சட்டங்களில் ஒன்றாகும்.
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக் கும் ஸலாம் கூறி அவர்களுக்காக துஆச் செய்யவேண்டும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் இரு தோழர்களுக்கும் ஸலாம் சொன்னால் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அபூபக்ர் அவர்களே! உங்கள்மீது ஸலாம் உண்டாவதாக! என்னுடைய தந்தையே! உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக! என்ற வார்த்தையைவிட அதிகமாகப் பெரும்பாலும் கூறமாட்டார் கள். இதனைக் கூறிவிட்டுச் சென்றுவிடுவார்கள்.
-கப்ருக்குச் சென்று ஸலாம் கூறும்- இந்த ஜியாரத் ஆண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பெண் களுக்கு கப்ர் ஜியாரத் என எதுவும் கிடையாது. நபி (ஸல்) அவர்கள், கப்ர் ஜியாரத் செய்யும் பெண்களையும் அதனை வணங்குமிடமாக்குபவர்களையும், அதில் விளக்கேற்றுபவர் களையும் சபித்துள்ளார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் -ரலி, நூல் : திர்மிதி)
நபி (ஸல்) அவர்களின் பள்ளியில் தொழவேண்டும் என்ற நோக்கத்தில் மதீனாவுக்குச் செல்வது, அங்கு அல்லாஹ்விடம் துஆச் செய்வது மற்றும் அனைத்துப் பள்ளிகளிலும் அனுமதிக்கப்பட்டவைகளைச் செய்வது யாவும் -மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில்- ஆண், பெண் அனைவருக்கும் பொதுவான அனுமதியாகும்.
• ஜியாரத் செய்ய வந்திருப்பவர் ஐவேளைத் தொழுகைகளையும் மஸ்ஜிதுன் நபவியில் தொழுவதும், அதிக நன்மைகளைப் பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அதிகமாக திக்ர், துஆ மற்றும் நஃபிலான வணக்கங்களில் ஈடுபடுவதும் சுன்னத்தாகும்.
• புனித ரவ்லாவில் நஃபிலான தொழுகைகளை அதிகமாகத் தொழுவது விரும்பத்தக்க செயலாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அதனைப் புகழ்ந்து

என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் மத்தியில் உள்ளவை சொர்க்கத்துத் தோட்டங்களில் உள்ள ஒரு தோட்டமாகும் எனக் கூறியுள்ளார்கள்.

ஜியாரத் செய்ய வந்திருப்பவர்களும் பிறரும் ஃபர்ளான தொழுகைகளில் ரவ்லாவை விட்டும் முன்னே சென்று முடிந்தவரை முதல் வரிசையில் தொழ முயலவேண்டும். அது கிப்லா திசையில் விரிவாக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும் சரியே! முதல் வரிசையைப் பற்றி ஆர்வமும் ஆசையுமூட்டி பல ஸஹீஹான ஹதீஸ்கள் வந்துள்ளன.
( لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا . . )
பாங்கிலும் முதல் வரிசையிலும் உள்ளதை (நன்மைகளை) மக்கள் அறிந்து கொண்டால், அதனை குலுக்கல் முறையில் தான் பெறமுடியும் என்றிருந்தால் குலுக்கலிடுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா-ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
( . . تَقَدَّمُوا فَأْتَمُّوا بِي وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ لَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ حَتَّى يُؤَخِّرَهُمُ اللَّهُ )
முன்னே வாருங்கள்! என்னைப் பின்பற்றி (உங்கள் தொழுகையை) நிறைவேற்றுங்கள்! உங்களுக்குப் பின் உள்ளவர்கள் உங்களைப் பின்பற்றி (அவர்களின் தொழுகையை) நிறைவேற்றிக் கொள்ளட்டும்! ஒரு கூட்டம் தொடர்ந்து (தொழுகைக்குத்) தாமதமாக வருவார்களானால் அல்லாஹ் அவர்களை பின்தங்கியவர்களாக்கி விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல் : முஸ்லிம்)
(لَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ عَنِ الصَّفِّ الْأَوَّلِ حَتَّى يُؤَخِّرَهُمُ اللَّهُ فِي النَّارِ)
ஒரு சமுதாயம் முதல் வரிசையை விட்டும்; தொடர்ந்து தாமதமாக வருவார்களானால் அல்லாஹ் அவர்களை நரகில் பின் தங்கியவர்களாக்கி விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா -ரலி, நூல்: அபூதாவூத்)
( . . أَلَا تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهَا فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهَا قَالَ يُتِمُّونَ الصُّفُوفَ الْأُوَلَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ )
மலக்குகள் தங்கள் இரட்சகனிடத்தில் வரிசையாக (அணிவகுத்து) நிற்பது போன்று நீங்களும் வரிசையாக நிற்க மாட்டீர்களா? என நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மலக்குகள் தங்கள் இரட்சகனிடத்தில் எவ்வாறு வரிசையாக நிற்பார்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் முந்தய வரிசைகளைப் பூர்த்தியாக்குவார்கள், வரிசைகளில் ஒருவரோடு ஒருவர் இணைந்து நிற்பார்கள் என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா -ரலி, நூல் : முஸ்லிம்)
இந்தக் கருத்தில் அதிகமான ஹதீஸ்கள் வந்துள்ளன. இவைகள் நபி (ஸல்) அவர்களின் -காலத்தில் இருந்த- பள்ளிக்கும், அது விரிவாக்கப்படுவதற்கு முன்னரும் விரிவாக்கப்பட்ட பின்னரும் உள்ள பிற பகுதிகளுக்கும் உரிய பொதுவான செய்திகளாகும்.
மேலும் வரிசையின் வலது புறத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ஆர்வமூட்டிய ஹதீஸ்களும் வந்துள்ளன.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த பள்ளியின் அமைப்பில் வரிசையின் வலதுபுறம் ரவ்லாவுக்கு வெளியே இருப்பது அனைவரும் அறிந்ததே! இதன் மூலம் ரவ்லாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட முந்தய வரிசை களுக்கும் வலது புறத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதும் ரவ்லாவில் தொழ முயற்சிப்பதைவிட இவ்விரண்டிலும் நின்று தொழ முயற்சிக்கவேண்டும் என்பதும் தெளிவாகிறது. இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்தால் இதுவே மிகத் தெளிவான முடிவாகும்.
- அல்லாஹ்வே நேர்வழிகாட்டுபவன்-
• நபி (ஸல்) அவர்களின் அறையைத் தொடுவதோ, முத்தமிடுவதோ, அதனை வலம் வருவதோ கூடாது. நிச்சயமாக முன்சென்ற நல்லோர்(நபித் தோழர்)களில் எவரும் இவ்வாறு செய்ததாக ஆதாரமில்லை. இது மார்க்கத்தில் தடுக்கப்படவேண்டிய பித்அத் -நூதனச்- செயலாகும்.
தன் தேவையை நிறைவேற்றவோ, கஷ்டத்தை நீக்கவோ, நோயைக் குணமாக்கவோ, அல்லது இது போன்ற எதனையும் நபி (ஸல்) அவர்களி(ன் கப்ரி)டம் கேட்டுப் பிரார்த்திப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை. இவை அனைத்தையும் அல்லாஹ் வைத் தவிர வேறு எவரிடத்திலும் கேட்கக் கூடாது. மரணித்தவர் களிடம் இவைகளைக் கேட்பது அல்லாஹ்வுக்கு இணைவைத்து அல்லாஹ் அல்லாதோரை வணங்கும் செயலாகும்.
மார்க்கம் இரண்டு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1-அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவரும் வணங்கப்படக் கூடாது.
2-அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த வழியைத் தவிர பிற முறைகளில் அவன் வணங்கப்படக் கூடாது.
இதுவே, நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை, நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்று சாட்சி கூறுவதன் பொருளாகும்.
• நபி (ஸல்) அவர்களி(ன் கப்ரி)டம் எவரும் -ஷஃபாஅத்தை- பரிந்துரையை (நேரடியாகக்) கேட்கக் கூடாது. பரிந்துரை என்பது அல்லாஹ்வுக்குச் சொந்தமானதாகும். எனவே அதனை அவனைத் தவிர பிறரிடம் கேட்பது கூடாது.
قُلْ ِللهِ الشَّفَاعَةُ جَمِيْعاً
பரிந்துரைகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் என்று நபியே நீர் கூறுவீராக! என்று அல்லாஹு தஆலா கூறுகிறான்.
(அல்குர்ஆன் 39:44)
யாஅல்லாஹ்! என் விஷயத்தில் உனது நபி (செய்யும்) பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக! யாஅல்லாஹ்! என் விஷயத்தில் உன்னுடைய மலக்குகளும் முஃமின்களான உனது அடியார்களும் செய்யும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக! யாஅல்லாஹ்! எனக்கு முன்சென்றுவிட்ட (நான் இழந்துவிட்ட சிறு குழந்தைகளான) என்னுடைய சந்ததியினர் என் விஷயத்தில் செய்யும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக! என்பன போன்ற துஆக்களைக் கேட்கலாம்.
பரிந்துரை மற்றும் அதல்லாத வேறு எந்த ஒன்றையும் மரணித்து விட்டவர்களிடம் கேட்கக் கூடாது. அவர்கள் நபிமார்களாகவோ அல்லது நபியல்லாத பிறராகவோ யாராக இருந்தாலும் சரியே! இவ்வாறு கேட்பதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை, மேலும் மரணித்துவிட்டவர்களை விட்டும் -மார்க்கம் விதிவிலக்காகக் கூறியுள்ளதைத் தவிர- மற்ற அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன.
( إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ )
மனிதன் மரணித்து விட்டால் மூன்றைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் துண்டித்துவிடுகின்றன. அவை : நிலையான தர்மம், பயனளித்துக் கொண்டிருக்கும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் ஸாலிஹான சந்ததி என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தபோதும் மறுமையில் அவர்களை சந்திக்கும் போதும் மட்டும்தான் அவர்களிடம் பரிந்துரைக்காக வேண்டிக் கொள்ள அனுமதியுள்ளது. அப்போதுதான் அவர்களால் அதனைச் செய்ய முடியும். (மறுமையில்) பரிந்துரைக்க வேண்டுவோருக்காக அல்லாஹ் விடம் முன்சென்று பிரார்த்திக்க முடியும். இவ்வுலகில் -அவர்கள் உயிருடன் இருந்த போது செய்த பரிந்துரைகள்- அனைவரும் அறிந்ததே! அது அவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானதல்ல. மாறாக அது அவர்களுக்கும் அவர்கள் அல்லாத பிறருக்கும் பொதுவானதாகும். எனவே ஒரு முஸ்லிம் தன் சகோதரரை நோக்கி எனக்காக அல்லாஹ் விடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்! என்ற பொருளில் எனக்காக இந்த காரியத்தில் என்னுடைய இரட்சகனிடம் பரிந்துரை செய்யுங்கள்! என்று கூறுவதற்கு அனுமதியுள்ளது. கோரப்படும் தேவைகள் ஹலாலானவைகளாக இருந்தால் அவர் தன் சகோதரருக்காக அதை அல்லாஹ்விடம் பரிந்துரைத்துப் பிரார்த்திக்க அனுமதியுள்ளது.
ஆனால் மறுமை நாளில் அல்லாஹ்வின் அனுமதியின்றி எவரும் -எவருக்காகவும்- பரிந்துரைக்க முடியாது.
مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ
. . அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுபவர் யார்? . . என அல்லாஹு தஆலா கேட்கின்றான்.
(அல்குர்ஆன் 2:255)
மரணத்திற்குப் பிறகுள்ள நிலை என்பது : மரணத்திற்கு முன்னுள்ள மனிதனின் நிலையுடனோ, அல்லது அவன் அழிக்கப்பட்டு மீண்டும் எழுப்பப்படும் (மறுமை) நிலையுடனோ ஒப்பிட முடியாத தனிப்பட்ட நிலையாகும்.
-மார்க்கம் விதிவிலக்காகக் கூறியுள்ளதைத் தவிர- மரணித்து விட்டவரின் அனைத்து அமல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவர் முன்செய்த தன் செயல்களுக்கு பொறுப்பாகிவிடுகிறார்.
மார்க்கம் விதிவிலக்காகக் கூறியவைகளில் மரணித்தவர் களிடம் பரிந்துரைக்காக வேண்டுவது இடம்பெறவில்லை. எனவே அதனை அவ்விதிவிலக்குடன் இணைப்பது கூடாது.
நபி (ஸல்) அவர்கள் தமது மரணத்திற்கு பிறகு பர்ஸக் எனும் திரைவாழ்வில் நிச்சயமாக ஷுஹதாக்களின் வாழ்வை விட மிகச் சிறந்த வாழ்வில் உள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் நிச்சயமாக அது மரணத்திற்கு முன்னுள்ள வாழ்வின் வகையைச் சார்ந்ததோ அல்லது மறுமை வாழ்வின் வகையைச் சார்ந்ததோ அல்ல. மாறாக அந்த வாழ்வின் தன்மையையும் எதார்த்த நிலையையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அறிய முடியாது. இதனால்தான் முன்சென்ற நபிமொழியில்

என் மீது யாரேனும் ஸலாம் கூறினால் அவருடைய ஸலாத்திற்கு பதில் கூறுவதற்காக என்னுடைய ரூஹை அல்லாஹ் மீட்டுத் தருகிறான் என்று கூறப்பட்டுள்ளது.

நிச்சயமாக அவர்கள் மரணித்துவிட்டார்கள், அவர்களின் ரூஹ் அவர்களின் உடலை விட்டும் பிரிந்து விட்டது, எனினும் அது ஸலாம் கூறப்படும் போது (அதற்கு பதிலுரைப்பதற்காக) திரும்பக் கொடுக்கப்படுகிறது என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம். நபி (ஸல்) அவர்களின் மரணத்தைப் பற்றி அல்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பல ஆதாரங்கள் உள்ளன. இது அறிஞர்களின் ஒருமித்த கூற்றுமாகும். எனினும் ஸலாத்திற்கு பதிலுரைப்பதற்காக அவர்களுக்கு மீண்டும் ரூஹ் கொடுக்கப்படுவது திரைவாழ்விற்கு தடையாக இருக்காது.

وَلاَ تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِيْ سَبِيْلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَ
அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) கொல்லப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நிச்சயமாக நீங்கள் எண்ணவேண்டாம். மாறாக அவர்கள் தங்கள் இரட்சகனிடத்தில் உயிருள்ளோராக இருக்கின்றார்கள். அவனால் அவர்கள் உணவளிக்கப் படுகின்றார்கள் (3:169) என்ற வசனம், ஷஹீதாக மரணித்தவர் களின் திரைவாழ்விற்கு தடையாக இல்லாதது போன்று (ஸலாத்திற்கு பதிலுரைப்பதற்காக மீண்டும் ரூஹ் கொடுக்கப் படுவது நபி (ஸல்) அவர்களின் திரைவாழ்விற்கும் தடையாக இருக்காது).
இவ்விஷயத்தை நாம் விரிவாக விளக்கியுள்ளதற்குப் பல காரணங்கள் உள்ளன. நாம் மேற்கூறிய விஷயத்தைப் -பிரித்துப் பார்க்க முடியாமல்- ஒன்றென நினைத்துவிடும் பலர், அல்லாஹ்வுக்கு -இணைவைக்கும்- ஷிர்க்கின் பக்கமும் அல்லாஹ்வை விட்டுவிட்டு கப்ரை வணங்குவதற்கும் சென்று விடுகின்றனர். மார்க்கத்திற்கு மாற்றமான அனைத்துக் காரியங்களை விட்டும் நம்மையும் முஸ்லிம்கள் அனைவர் களையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக!
ஜியாரத் செய்ய வருவோரில் சிலர் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கருகில் சப்தத்தை உயர்த்துவதும் அங்கு அதிகநேரம் நிற்பதும் மார்க்கத்திற்கு மாற்றமான செயலாகும். நபி (ஸல்) அவர்களின் சப்தத்தை விட தம் சப்தத்தை உயர்த்துவதை விட்டும், சிலர் சிலரிடம் சப்தமாக பேசுவது போன்று அவர்களிடம் சப்தமாக பேசுவதைவிட்டும் மக்களை அல்லாஹ் தடுத்துள்ளான். மேலும் அவர்கள் முன் சப்தத்தை தாழ்த்திக் கொள்ளுமாறு தூண்டியுள்ளான்.
يَأَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا لاَ تَرْفَعُوْا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلاَ تَجْهَرُوْا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لاَ تَشْعُرُوْنَ – إِنَّ الَّذِيْنَ يَغُضُّوْنَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللهِ أُولَئِكَ الَّذِيْنَ امْتَحَنَ اللهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيْمٌ
விசுவாசிகளே நபியுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள். மேலும் உங்களில் சிலர் மற்ற சிலருடன் உரக்கப் பேசுவதைப் போல் அவரிடம் பேசுவதில் (சப்தத்தை உயர்த்தி) நீங்கள் உரக்கப் பேசாதீர்கள். (ஏனெனில் இதனால்) நீங்கள் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் உங்களுடைய (நன்மையான) செயல்கள் அழிந்துவிடும். - நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் (பேசும் பொழுது) தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறாரே அத்தகையோர் - அவர்களுடைய இதயங்களை பயபக்திக்காக அல்லாஹ் பரிசுத்தமாக்கி வைத்தானே அத்தகையோராவார். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு. (அல்குர்ஆன் 49:2-3)
நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கு அருகில் அதிக நேரம் நிற்பதும் (அங்கு நின்று கொண்டு) மீண்டும் மீண்டும் பலமுறை ஸலாம் கூறுவதும் கப்ருக்கு அருகில் கூட்டம் கூடுவதற்கும், அதிக நெரிசலுக்கும், சப்தம் உயர்வதற்கும் காரணமாகிறது. இது (மேற்கூறப்பட்ட) தெளிவான வசனங்களில் அல்லாஹ் முஸ்லிம்களுக்குக் கூறும் கட்டளைக்கு மாறுசெய்வதாகும். நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதும் மரணித்த பின்னரும் மதிக்கப்பட வேண்டியவராவார்கள். அவர்களின் கப்ருக்கருகில் மார்க்க ஒழுக்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடுவது முஃமினுக்கு அழகல்ல.
இது போல் ஜியாரத் செய்பவர்களிலும் மற்றவர்களிலும் சிலர் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கருகில் கப்ரை முன்னோக்கி நின்று கொண்டு இரு கைகளையும் உயர்த்தி பிரார்த்திக்க முயற்சிக்கின்றனர். இவை அனைத்தும் முன்சென்ற நல்லோர்களான நபித்தோழர்களின் செயலுக்கும் அவர்களின் அனைத்து நல்லறங்களிலும் அவர்களைப் பின்பற்றியவர்களின் செயலுக்கும் மாற்றமாகும். மாறாக இது மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட -பித்அத்-தாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
( . . فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ )
நீங்கள் என்னுடைய வழிமுறையையும், எனக்கு பின் தோன்றும் நேர்வழி பெற்ற, நுண்ணறிவுடைய கலீஃபாக்களின் வழிமுறையையும் பின்பற்றிக் கொள்ளுங்கள்! அதனைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! அவைகளை கடவாய்ப் பற்களால் மிக வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள். (மார்க்க) விஷயங்களில் புதிதாக ஏற்படுத்தப்படுபவைகளை விட்டும் உங்களை எச்சரிக்கை செய்கிறேன். நிச்சயமாக புதிதாக ஏற்படுத்தப்படுபவை அனைத்தும் பித்அத்களாகும். அனைத்து பித்அத்களும் வழிகேடாகும்.
(அறிவிப்பவர் : இர்பாழ்-ரலி, நூற்கள் : அபூதாவூத், அஹ்மத்)
( مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ )
நம்முடைய -மார்க்க- விஷயத்தில் அதில் இல்லாததை யாரேனும் புதிதாக உருவாக்கினால் அது -அல்லாஹ்விடத் தில் ஏற்றுக் கொள்ளப்படாமல்- மறுக்கப்பட்டுவிடும்.
(அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
( مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ )
யாரேனும் -மார்க்க விஷயத்தில்- நாம் கட்டளையிடாத ஏதேனும் ஒரு செயலைச் செய்தால் அது -அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமல்- மறுக்கப்பட்டு விடும். (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : முஸ்லிம்)
(அலீ -ரலி, அவர்களின் பேரரான) ஜைனுல் ஆபிதீன் அலீ பின் ஹுஸைன் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் கப்ரருகில் துஆச் செய்தவராக ஒருவரைக் கண்டார்கள். உடனே அதனை விட்டும் அவரைத் தடுத்தார்கள். பிறகு, நான் என்னுடைய தந்தை (ஹுஸைன் -ரலி) அவர்களிடமிருந்தும் அவர் எனது பாட்டனார் (அலீ -ரலி) அவர்களிடமிருந்தும் அவர், நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் கேட்ட ஹதீஸை நான் உனக்கு கூறட்டுமா? என்னுடைய கப்ரை விழாவாக்கா தீர்கள்! உங்களுடைய வீடுகளை கப்ருகளாக்காதீர்கள்! என் மீது ஸலவாத்துக் கூறுங்கள்! நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களுடைய ஸலாம் நிச்சயமாக என்னை வந்தடையும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்.
இதனை ஹாஃபிழ் முஹம்மது பின் அப்துல் வாஹித் மக்தஸீ அவர்கள் தனது அல்அஹாதீஸுல் முக்தாரா எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ஜியாரத் செய்வோரில் சிலர் தொழுகையில் நிற்பது போன்று வலது கையை இடது கையின் மீது வைத்து அதனை நெஞ்சின் மேற்பகுதியிலோ அல்லது அதற்குக் கீழோ வைத்த வாறு நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறும் போதோ அல்லது அவர்களல்லாத அரசர்கள், தலைவர்கள் போன்றோருக்கோ இதுபோன்ற அமைப்பில் ஸலாம் கூறுவதற்கு அனுமதி யில்லை. இது போன்ற பணிவும் அடக்கமும் வழிபாடும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கு முன்னிலையிலும் செய்யக் கூடாது. இவ்வாறே மார்க்க அறிஞர்கள் கருதுவதாக இமாம் ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது ஃபத்ஹுல் பாரீ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். முன்சென்ற நல்லோர்(நபித்தோழர்)களின் நேர்வழியைப் பின்பற்றுவதை இலட்சியமாகக் கொண்ட ஒருவர் -நாம் கூறிய- இவ்விஷயத்தைப் பற்றி சிந்தித்தால் மிகத்தெளிவாகப் புரியும்.
குருட்டு பக்தியும் மனோஇச்சையும் கண்மூடிப் பின்பற்றும் தனிமனித வழிபாடும் மிகைத்து விட்டதன் காரணத்தினால், முன்சென்ற நல்லோர்(நபித்தோழர்)களின் வழியின் பக்கம் மக்களை அழைப்பவர்களைப் பற்றி சிலர் தீய எண்ணம் கொண்டுள்ளனர். அவர்களைப் பற்றிய தீர்ப்பு அல்லாஹ்விடம் உள்ளது. நாம் அல்லாஹ்விடம் நமக்கும் அவர்களுக்கும் நேர்வழியையும், அசத்தியத்தைப் புறக்கணித்து சத்தியத்தைத் தேர்ந்தெடுக்கும் பாக்கியத்தையும் கேட்போம். நிச்சயமாக அவனே மிகத்தூய்மையானவன், மிகச்சிறந்த பொருப்பாளன்.
மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களின் கப்ரை முன்னோக்கியவாறு வெகுதூரத்தில் நின்று கொண்டு ஸலாம் கூறுபவர்களாகவோ, பிரார்த்திப்பவர்களாவோ, உதடுகளை அசைப்பது போன்ற அனைத்தும் நாம் முன்னர் குறிப்பிட்டுள்ள பித்அத்களின் வகையைச் சேர்ந்தவைகளே! மார்க்கத்தில் அல்லாஹ் அனுமதிக்காததை புதிதாக ஏற்படுத்துவது எந்த முஸ்லிமுக்கும் அழகல்ல. ஒருவர் இச்செயலின் வாயிலாக அல்லாஹ்வைத் தூய்மையாக நேசிப்பதை விட்டும் தூரமாகி, அவன் வெறுப்பின் பக்கம் மிக நெருங்கிவிடுகிறார்.
இச்செயலையும் இதுபோன்றவைகளையும் தடுத்த இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்,
لَنْ يُصْلِحَ آخِرَ هَذِهِ اْلأُمَّةِ إِلاَّ مَا أَصْلَحَ أَوَّلَهَا
இச்சமுதாயத்தில் முந்தய காலத்தில் வாழ்ந்தவர்களை எது சீர்திருத்தியதோ அதுதான் இச்சமுதாயத்தின் பிந்திய காலத்தவர்களையும் சீர்திருத்தும் என்றார்கள்.
நிச்சயமாக இச்சமுதாயத்தில் முந்தய காலத்தில் வாழ்ந்தவர்களை நபி (ஸல்) அவர்களின் நெறியிலும், நேர்வழி பெற்ற கலீஃபாக்கள், இறைப்பொருத்தத்தைப் பெற்ற நபித் தோழர்கள், அவர்களை நல்லவற்றில் பின் தொடர்ந்தோர்கள் ஆகியோரின் வழியிலும் சென்றதுதான் சீர்திருத்தியது என்பது அனைவரும் அறிந்ததே! எனவே இச்சமுதாயத்தின் பின் தோன்றல்கள் இவ்வழியை பற்றிப் பிடித்து செல்லாதவரை சீர்திருத்தம் அடையமுடியாது.
முஸ்லிம்கள் அனைவரும் நேர்வழியிலும் வெற்றிப் பாதையிலும் செல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக! இம்மையிலும் மறுமையிலும் அவர்களை கண்ணியப் படுத்துவானாக! நிச்சயமாக அவனே கொடையாளன். கிருபையாளன்.
Labels:
உம்ரா சட்டம்,
ஹஜ்
13- அதிகமாக இறைவழிபாட்டில் ஈடுபடுதலின் அவசியம்
ஹஜ் செய்ய வருகை தந்திருப்பவர்கள் மக்காவில் இருக்கும் காலம் முழுவதும்
அல்லாஹ்வை திக்ர் செய்தல், வழிபடுதல், நல்லறங்கள் புரிதல் போன்றவற்றைக்
கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும். மஸ்ஜிதுல் ஹராமில் தொழுதல், தவாஃப்
செய்தல், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துக் கூறுதல் போன்றவற்றை
அதிகமாகச் செய்யவேண்டும். ஏனெனில் ஹரமில் செய்யப்படும் நல்லறங்களுக்கு
பன்மடங்காக கூலிகள் கிடைக்கின்றன. -கூலிகள் அதிகமாகக் கிடைப்பது
போன்று- அங்கே தீமைகள் செய்தால் அதற்கு பெருந் தண்டனைகளும் உள்ளன
ஹஜ் செய்ய வருகை தந்தவர் (அதனை நிறைவேற்றி) மக்காவை விட்டும் புறப்படும் போது தவாஃபுல் விதா -விடைபெறும் தவாஃப்- செய்வது கடமையாகும். ஏனெனில் -பயணத்தின்- இறுதி இடம் ஹரமாக இருக்கவேண்டும். மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்ட பெண்களுக்கு தவாஃபுல் விதா செய்வது கடமையில்லை.
( أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ إِلَّا أَنَّهُ خُفِّفَ عَنِ الْمَرْأَةِ الْحَائِضِ )
ஹஜ் செய்பவரின் விடைபெறும் இடம் ஹரமாக இருக்க வேண்டும் என மக்கள் கட்டளையிடப்பட்டிருந்தார்கள். எனினும் மாதவிடாய் வந்துவிட்ட பெண்களுக்கு அது குறைக் கப்பட்டு -சலுகை வழங்கப்பட்டு- விட்டது என இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
கஃபாவை (தவாஃப் செய்து) விடை பெற்று, பள்ளியை விட்டும் வெளியேறும் போது (எப்போதும் வெளியேறுவது போன்று) முன்னோக்கி நடந்தவாறுதான் வெளியேறவேண்டும். கஃபாவைப் பார்த்துக் கொண்டே பின்னோக்கி நடப்பது கூடாது. நபி (ஸல்) அவர்களோ, அவர்களின் தோழர்களோ இவ்வாறு செய்ததாக எந்த ஆதரமும் கிடையாது. எனவே இது மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
( مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ )
யாரேனும் நாம் கட்டளையிடாத ஏதேனும் ஒரு செயலைச் செய்தால் அது -அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப் படாமல்- மறுக்கப்பட்டுவிடும்.
(அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : முஸ்லிம்)
( . . وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ )
(மார்க்கத்தில்) புதிதாக ஏற்படுத்தப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன். நிச்சயமாக மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும் அனைத்தும் பித்அத் - நூதனச்- செயலாகும். அனைத்து பித்அத்களும் வழிகேடாகும்.
(அறிவிப்பவர் : இர்பாழ் பின் ஸாரியா -ரலி, நூல் : அபூதாவூத்)
அல்லாஹ் நம் அனைவரையும் மார்க்கத்தில் உறுதியாக இருக்கச் செய்வானாக! மார்க்கத்திற்கு மாறு செய்வதை விட்டும் பாதுகாப்பானாக! நிச்சயமாக அவனே கொடையாளன், கருணையுடையோன்.

12- ஹஜ் செய்பவர் மீதும் பிறர் மீதும் நன்மையை ஏவுவது கடமையாகும்
நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதும் ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன்
பேணித் தொழுவதும் ஹஜ் செய்பவர் மீதும் பிறர் மீதுமுள்ள முக்கியக்
கடமைகளில் உள்ளவைகளாகும். இதனை அல்லாஹ் தனது வேதத்தின் மூலமாகவும் தனது
தூதரின் வாயிலாகவும் கட்டளை யிட்டுள்ளான்.
மக்காவிலும் பிற பகுதிகளிலும் வசிப்பவர்களில் பலர், பள்ளிவாயில்களுக்கு வராமல், வீடுகளிலேயே தொழுது கொள்வது மார்க்கத்திற்கு முரணான, தவறான செயலாகும். இச்செயலை விட்டும் மக்களைத் தடுப்பதும் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழ ஏவுவதும் கடமையாகும்.
பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களின் வீடு பள்ளியிலிருந்து தூரமாக இருந்ததால், வீட்டிலேயே தொழுது கொள்ள நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு, நீர் தொழுகைக்கான -பாங்கு- அழைப்பை செவிமடுக்கின்றீரா? என்று கேட்க, அதற்கு அவர்கள், ஆம்! என்றார்கள். அவ்வாறானால் அதற்கு நீர் பதிலளித்து -பள்ளிக்கு- வரவேண்டும் என்றார்கள். -மற்றொரு அறிவிப்பில்- உமக்கு அனுமதி இருப்பதாக நான் கருதவில்லை என்று கூறியதாக வந்துள்ளது.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி, நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத்)
நிச்சயமாக நான், தொழுகையை ஆரம்பிக்கக் கட்டளையிட்டு, மக்களுக்குத் தொழ வைக்க ஒருவரை நியமித்துவிட்டு, (பள்ளிக்கு) தொழவராத ஆண்களிடம் சென்று அவர்களை அவர்களின் வீடுகளுடனே தீயிட்டுக் கொளுத்த நினைக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)
(مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِهِ فَلَا صَلَاةَ لَهُ إِلَّا مِنْ عُذْرٍ)
பாங்கைக் செவிமடுத்தும் -பள்ளிக்கு- தொழவராதவர்களுக்கு தொழுகையில்லை (ஏற்றுக் கொள்ளப்படாது) மார்க்கம் அனுமதித்துள்ள காரணம் உடையவரைத் தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் -ரலி, நூல் : இப்னுமாஜா)
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللَّهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ حَيْثُ يُنَادَى بِهِنَّ فَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّكُمْ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ سُنَنَ الْهُدَى وَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى وَلَوْ أَنَّكُمْ صَلَّيْتُمْ فِي بُيُوتِكُمْ كَمَا يُصَلِّي هَذَا الْمُتَخَلِّفُ فِي بَيْتِهِ لَتَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ لَضَلَلْتُمْ وَمَا مِنْ رَجُلٍ يَتَطَهَّرُ فَيُحْسِنُ الطُّهُورَ ثُمَّ يَعْمِدُ إِلَى مَسْجِدٍ مِنْ هَذِهِ الْمَسَاجِدِ إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ خَطْوَةٍ يَخْطُوهَا حَسَنَةً وَيَرْفَعُهُ بِهَا دَرَجَةً وَيَحُطُّ عَنْهُ بِهَا سَيِّئَةً وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْهَا إِلَّا مُنَافِقٌ مَعْلُومُ النِّفَاقِ وَلَقَدْ كَانَ الرَّجُلُ يُؤْتَى بِهِ يُهَادَى بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِي الصَّفِّ
நாளை அல்லாஹ்வை, முஸ்லிமாக சந்திக்க விரும்புபவர் இத்தொழுகைகளை அதற்காக அழைக்கப்படும் இடத்தில் (பள்ளியில்) பேணித் தொழுது கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய நபிக்கு நேரான வழிகளைக் காட்டியுள்ளான். நிச்சயமாக இத்தொழுகைகளும் அந்த நேரான வழிகளில் உள்ளவைகளாகும். (ஜமாஅத் தொழுகையை விட்டும்) பின்வாங்கிய இன்ன மனிதன் தன் வீட்டில் தொழுது கொள்வது போன்று நீங்கள் உங்கள் வீட்டில் தொழுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் உங்கள் நபியின் வழியை விட்டுவிட்டீர்கள். நீங்கள் உங்கள் நபியின் வழியை விட்டுவிட்டால் நிச்சயமாக நீங்கள் வழிகெட்டு விட்டீர்கள். ஒருவர் அழகிய முறையில் உளுச் செய்து தூய்மையாகி, இப்பள்ளிகளில் ஏதேனும் ஒரு பள்ளிக்குச் செல்வாரானால் அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான். ஒரு அந்தஸ்த்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். நம்மைக் கவனித்ததில், நயவஞ்சகத் தன்மை மிகவெளிப் படையாகத் தெரியும் முனாஃபிக்குகளைத் தவிர வேறு எவரும் (ஜமாஅத்தை விட்டும்) பின்வாங்குவதை நான் பார்த்ததில்லை. நிச்சயமாக -பலவீனமான ஒருவர்- இருவரின் துணையுடன் கைத்தாங்களாக அழைத்து வரப்பட்டு -தொழுகைக்காக- வரிசையில் நிற்கவைக்கப்படுவார். (நூல் : முஸ்லிம்)
ஹஜ் செய்பவரும் பிறரும் அல்லாஹ் ஹராமாக்கியவைகளை விட்டும் விலகிக் கொள்வதும் அவைகளைச் செய்துவிடாமல் மிக எச்சரிக்கையாக இருப்பதும் கடமையாகும். அவைகளில் சில :
விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, திருட்டு, வட்டியை உண்ணுதல், அனாதைகளின் பொருளை அபகரித்தல், கொடுக்கல் வாங்களில் ஏமாற்றுதல், அமாநித மோசடி, போதைப் பொருள் உட்கொள்ளுதல், புகை பிடித்தல், கரண்டைக்குக் கீழ் ஆடை அணிதல், பெருமை, பொறாமை, முகஸ்துதி, புறம், கோள், முஸ்லிம்களை கேலி செய்தல், இசைத் தட்டு, வீணை, ஆர்மினியம் போன்ற வீணான பொழுது போக்குச் சாதனங் களான இசைக் கருவிகளைப் பயன்படுத்துதல், பாட்டுக் கேட்டல், கொட்டு போன்றவைகளைக் கொண்டு தாளமிடுதல், தாயம் மற்றும் சதுரங்கம் விளையாடுதல், சு10தாடுதல், மனிதர்கள் மற்றும் உயிருள்ளவற்றின் உருவம் வரைதல் -புகைப்படமெடுத்தல்-, அதற்கு உடன்படுதல்.
இவை அனைத்தும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது அனைத்துக் காலங்களிலும் அனைத்து இடங்களிலும் ஹராமாக்கியுள்ள, மார்க்கத்திற்கு முரணான செயல்களாகும்.
எனவே ஹஜ் செய்பவர்களும் அல்லாஹ்வுடைய வீடுள்ள புனித மக்காவில் வசிப்பவர்களும் பிறரைவிட இவ்விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இப்புனித பூமியில் அல்லாஹ்வுக்கு மாறுசெய்வது பெருங்குற்றமும் கடும் தண்டனைக்குரிய செயலுமாகும்.
وَمَنْ يُرِدْ فِيْهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ نُذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيْمٍ
. . . . மேலும் அதில் (மஸ்ஜிதுல் ஹராமில் பாவம் செய்தலெனும்) அநியாயத்தைக் கொண்டு யார் (அசத்தியத்தின் பால்) சாய்வதை நாடுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையிலிருந்து நாம் சுவைக்கச் செய்வோம் என அல்லாஹு தஆலா கூறுகின்றான். (அல்குர்ஆன் 22:25)
ஹரமில் அநீதம் செய்ய நாடுபவனை அல்லாஹ் இவ்வாறு எச்சரித்துள்ளான் என்றால், அதனைச் செய்பவனுக்கு எப்படிப் பட்ட தண்டனை கிடைக்கும்!? நிச்சயமாக அது மிகப் பெரியதாகவும் மிகக் கடுமையானதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இதனை விட்டும் மற்ற அனைத்துப் பாவங்களை விட்டும் விலகிக் கொள்வது கடமையாகும்.
ஹஜ் செய்பவர் -நாம் மேற்குறிப்பிட்டுள்ள- பாவங்களை விட்டும் மேலும் அல்லாஹ் ஹராமாக்கியுள்ள மற்ற -அனைத்துச்- செயல்களை விட்டும் விலகிக் கொள்ளாதவரை அவருக்கு ஹஜ்ஜுடைய நன்மையோ, பாவமன்னிப்போ கிடைக்காது.
( مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ)
இச்சையான செயலில் ஈடுபடாமல், பாவம் செய்யாமல் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்பவர், அவருடைய தாய் அன்று அவரைப் பெற்றெடுத்ததைப் போன்று (பாவமற்று) திரும்புகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ)
மார்க்கம் தடுத்துள்ள இச்செயல்களை எல்லாம் விட மிகக் கொடிய, மிகப் பெரும்பாவங்கள் பல உள்ளன. அவைகளில்:
மரணித்துவிட்டவர்களிடம் பிரார்த்திப்பது, அவர்களிடம் அடைக்கலம் தேடுவது, அவர்களுக்காக நேர்ச்சை செய்வது, அவர்களுக்காகப் பலியிடுவது, அவர்களை அழைப்பவர் களுக்காக அவர்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்றும் அவர்களின் நோயை குணப்படுத்துவார்கள் என்றும் காணாமல் போனவற்றை மீட்டுத்தருவார்கள் என்றும் மேலும் இவை போன்றவைகளையும் நம்புவது. இது அல்லாஹ் ஹராமாக்கியுள்ள மிகப் பெரிய ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்) ஆகும். இது ஜாஹிலிய்யா எனும் அறியாமைக் காலத்தில் வாழ்ந்த -சிலைவணங்கிகளான- இணைவைப்பாளர்களின் வழிமுறையாகும். இவ்வழிமுறை களை மறுப்பதற்காகவும் அதனை விட்டும் -மக்களைத்- தடுப்பதற்காகவுமே அல்லாஹ் பல தூதர்களை அனுப்பினான், பல வேதங்களை இறக்கினான்.
எனவே ஹஜ் செய்பவர்களும், மற்றவர்களும் இச்செயல்களை விட்டுத் தவிர்ந்திருப்பதும் மேற்கூறப்பட்டவைகளில் எதையேனும் இதற்கு முன் செய்திருந்தால் அதற்காக பாவ மன்னிப்புத் தேடிக் கொள்வதும் கடமையாகும். மேலும் பாவமன்னிப்புத் தேடிய பிறகு புதிதாக ஹஜ்ஜைத் துவங்குவதும் கடமையாகும். ஏனெனில் நிச்சயமாக பெரிய ஷிர்க் அனைத்து அமல்களையும் அழித்துவிடும்.
وَلَوْ أَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
மேலும் அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்தால் அவர்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான)வைகள் (யாவும்) அவர்களை விட்டும் அழிந்துவிடும் என அல்லாஹ் கூறுகின்றான்.
(அல்குர்ஆன் 6:88)
அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியம் செய்தல். உதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் மீதோ, கஃபா மற்றும் அமாநிதம் போன்றவைகளின் மீதோ சத்தியம் செய்தல் - பிறர் பார்க்க வேண்டும், பிறர் தன்னைப் புகழவேண்டும் என்பதற்காக நல்லறங்கள் புரிதல் - அல்லாஹ்வும் நாடினான், நீங்களும் நாடினீர்கள்! - அல்லாஹ்வும் நீங்களும் இல்லை என்றால்! - இது அல்லாஹ்வின் மூலமும் உங்கள் மூலமும் கிடைத்தது! - என்பன போன்ற வார்த்தைகளைப் பயன் படுத்துதல். இவை அனைத்தும் சிறிய இணைவைத்தலின் வகையைச் சார்ந்தவைகளாகும்.
மார்க்கத்திற்கு முரணான, ஷிர்க்கான இவ்வனைத்தையும் விட்டு தானும் தவிர்ந்து கொண்டு, பிறருக்கும் உபதேசம் செய்வது கடமையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :
( مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ )
அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்பவர் நிச்சயமாக நிராகரித்து விட்டார் -அல்லது- இணைவைத்துவிட்டார்.
(அறிவிப்பவர் : இப்னுஉமர் -ரலி, திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)
( مَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ )
சத்தியம் செய்பவர் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ)
( مَنْ حَلَفَ بِالْأَمَانَةِ فَلَيْسَ مِنَّا )
அமாநிதத்தைக் கொண்டு சத்தியம் செய்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல. (அறிவிப்பவர்: புரைதா-ரலி, நூல்: அபூதாவூத்)
( إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ قَالَ الرِّيَاءُ )
நிச்சயமாக உங்கள் விஷயத்தில் நான் மிக அதிகமாகப் பயப்படுவது சிறிய இணைவைத்தலைத்தான்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! சிறிய இணைவைத்தல் என்றால் என்ன? என -நபித்தோழர்கள்- கேட்டார்கள். அதற்கு முகஸ்துதி (பிறர் பார்த்துப் போற்றுவதற்காக அமல் செய்தல்) என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: மஹ்மூத்-ரலி, நூல்: அஹமத்)
( لَا تَقُولُوا مَا شَاءَ اللَّهُ وَشَاءَ فُلَانٌ وَلَكِنْ قُولُوا مَا شَاءَ اللَّهُ ثُمَّ شَاءَ فُلَانٌ )
அல்லாஹ்வும் இவரும் நாடியது நடந்து விட்டது என்று கூறாதீர்கள்! மாறாக, அல்லாஹ் நாடியது நடந்தது. பிறகு இவர் நாடினார் என்று கூறுங்கள்.
(அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி, நூல் : அபூதாவூத்)
( أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ فَقَالَ جَعَلْتَنِي لِلَّهِ عَدْلًا بَلْ مَا شَاءَ اللَّهُ وَحْدَهُ )
அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வும் நீங்களும் நாடியது நடந்து விட்டது என ஒரு மனிதர் கூறினார். அதற்கு அவர்கள், என்னை நீர் அல்லாஹ்வுக்கு நிகராக்கிவிட்டீர்? மாறாக, அல்லாஹ் மாத்திரம் நாடியதே நடந்தது (என்று கூறுவீராக!) என்றார்கள்.
(அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் -ரலி, நூற்கள் : அஹமத், நஸாயீ)
இந்த ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு ஏகத் துவத்தை பாதுகாத்துள்ளார்கள் என்பதையும் பெரிய, சிறிய இணைவைப்புகளை விட்டும் எவ்வாறு எச்சரித்துள்ளார்கள் என்பதையும் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. மேலும் மக்களின் ஈமானைப் பாதுகாப்பதிலும் அல்லாஹ்வுடைய கோபத்திற்குக் காரணமானவைகளை விட்டும் அல்லாஹ்வின் தண்டனையை விட்டும் தனது சமுதாயம் ஈடேற்றம் பெற வேண்டுமென அவர்களுக்கிருந்த ஆவலையும் உணர்த்து கின்றன. அல்லாஹ் அவர்களுக்கு அதற்காக மிகச் சிறந்த நற்கூலி வழங்குவானாக! நிச்சயமாக அவர்கள் -மார்க்கத்தை- மிகத் தெளிவாக எடுத்துரைத்து விட்;டார்கள். -மார்க்கத்திற்கு முரணானவைகளை- கடுமையாக எச்சரித்துவிட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க, அவனது அடியார்களுக்கு அழகிய முறையில் உபதேசித்து விட்டார்கள். அல்லாஹ்வின் அமைதியும் அருளும் அவர்கள் மீது மறுமை நாள்வரை தொடர்ந்து பொழியட்டுமாக!
ஹஜ் செய்ய வந்திருப்பவர்களிலும் மக்கா, மதீனாவில் வசிப் பவர்களிலும் உள்ள மார்க்க அறிஞர்கள் மக்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகளைப் போதிப்பது கடமையாகும். அல்லாஹ் ஹராமாக்கியுள்ள அனைத்து வகை இணைவைத்தல்களையும் ஏனைய பாவங்களையும் விட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். அதற்குரிய ஆதாரங்களை எடுத்துரைத்து அவைகளை மிகத் தெளிவாக விளக்கிச் சொல்லவேண்டும். இம்முயற்சியால் -அறியாமை- இருள்களிலிருந்து மக்களை வெளியேற்றி -நேர்வழி எனும்- ஒளியின்பால் கொண்டு செல்லமுடியும். மேலும் -மார்க்கத்தை- மிகத்தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்குமாறு அல்லாஹ் (அறிஞர்களாகிய) இவர்கள் மீது கடமையாக்கி யுள்ளதை இம்முயற்சியின் மூலம் நிறைவேற்றியவர்களாக முடியும்.
وَإِذْ أَخَذَ اللهُ مِيْثَاقَ الَّذِيْنَ أُوْتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلاَ تَكْتُمُوْنَهُ
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் (உங்களுக்கு கொடுக்கப் பட்ட) வேதத்தை மறைத்துவிடாது மக்களுக்குத் தெளிவாக நீங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) . . என அல்லாஹு தஆலா கூறுகின்றான். (அல்குர்ஆன் 3:187)
வேதவாசிகளில் உள்ள அநியாயக்காரர்கள் மறுமையை விட இவ்வுலக பயன்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு சத்தியத்தை மறைப்பதில் கடைபிடித்த முறையை இந்தச் சமுதாய அறிஞர்கள் கடைபிடிக்கக் கூடாது என்று எச்சரிப்பதே இந்த வசனத்தின் நோக்கமாகும்.
إِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ
وَالْهُدَى مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ
أُولَئِكَ يَلْعَنُهُمُ اللهُ وَيَلْعَنُهُمُ اللاَّعِنُوْنَ – إِلاَّ
الَّذِيْنَ تَابُوْا وَأَصْلَحُوْا وَبَيَّنُوْا فَأُولَئِكَ أَتُوْبُ
عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيْمِ
தெளிவான அத்தாட்சிகளிலிருந்தும் நேர்வழியிலிருந்தும் நாம் இறக்கிவைத்துள்ளதை - அதனை நாம் மனிதர்களுக்காக வேதத்தில் விளக்கிய பின்னர், நிச்சயமாக மறைக்கின்றார்களே அத்தகையோர் - அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். (மனித இனம், ஜின், மலக்குகள் ஆகியோரில்) சபிப்பவர்களும் சபிக்கின்றனர். (தாங்கள் மறைத்தவற்றிற்காக மன்னிப்புக் கோரி) தவ்பாச் செய்து (தங்களைச்) சீர்திருத்திக் கொண்டு (அவற்றை) தெளிவாகவும் எடுத்துரைக்கின்றனரே அத்தகையோரைத் தவிர, அப்போது அவர்கள் - அவர்களை நான் மன்னித்துவிடுகிறேன். இன்னும் நான் தான் அதிகமாக தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவன், மிக்க கிருபையுடையவன் என அல்லாஹு தஆலா கூறுகின்றான். (அல்குர்ஆன் 2:159-160)
மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதும், அவர்கள் படைக்கப்பட்ட நோக்கத்தின் பக்கம் மக்களுக்கு வழிகாட்டு வதும், நிச்சயமாக மிகச் சிறந்த வணக்கமும் மிக முக்கியக் கடமையுமாகும் என்பதை அல்குர்ஆனின் பல வசனங்களும் நபிமொழிகளும் உணர்த்துகின்றன. நிச்சயமாக இது நபிமார்களின் வழியும் மறுமை நாள்வரை அவர்களைப் பின்பற்றுவோரின் வழியுமாகும். அல்லாஹு தஆலா கூறுகிறான்:
وَمَنْ أَحْسَنُ قَوْلاً مِمَّنْ دَعَا إِلَى اللهِ وَعَمِلَ صَالِحاً وَقَالَ إِنَّنِيْ مِنَ الْمُسْلِمِيْنَ
எவர் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) அழைத்து(த் தாமும்) நற்கருமங்களையும் செய்து, நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்களில் உள்ளேன் என்றும் கூறு கின்றாரோ, அவரை விட சொல்லால் மிக்க அழகானவர் யார்?
(அல்குர்ஆன் 41:33)

قُلْ هَذِهِ سَبِيْلِيْ أَدْعُوْا إِلَى اللهِ عَلَى بَصِيْرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِيْ وَسُبْحَانَ اللهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِيْنَ
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது (நேரான) வழியாகும். நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக் கின்றோம். அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன். நான் (அவனுக்கு) இணைவைப்போரில் உள்ளவனுமல்லன். (அல்குர்ஆன் 12:108)
( مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ )
யாரேனும் நல்லவற்றின் பக்கம் வழிகாட்டினால் அதனை செய்பவரைப் போன்று -வழிகாட்டியவருக்கும் நன்மையுண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் - ரலி, நூல் : முஸ்லிம்)
فَوَاللَّهِ لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ
அல்லாஹ்வின்மீது சத்தியமாக, அல்லாஹ் உன் மூலம் ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உமக்கு சிவந்த ஒட்டகம் இருப்பதை விட உமக்குச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் அலி (ரலி)க்கு கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது-ரலி, நூற்கள்: புகாரீ, முஸ்லிம்)
இதுபற்றி மேலும் பல இறைவசனங்களும் நபிமொழிகளும் உள்ளன.
அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கும் பணியிலும் மக்களுக்கு வெற்றிக்கான வழிகாட்டுவதிலும் அழிவை விட்டும் அவர்களைத் தடுப்பதிலும் ஈமானுள்ள, மார்க்க அறிஞர்கள் பன்மடங்காக உழைத்தாகவேண்டும். இன்று மனோஇச்சைகள் மிகைத்துவிட்டன. அழிவின் ஆரம்பமும் வழிகேட்டின் அடையாளங்களும் பரவிவிட்டன. நேர்வழியின்பால் அழைப் பவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர். வழிகேட்டின் பாலும் வரம்பு மீறுதலின் பாலும் அழைப்பவர்கள் அதிகரித்து விட்டனர். எனவே குறிப்பாக இக்காலத்தில் அழைப்பாளர்கள் மிகவும் கடுமையாக உழைத்தாகவேண்டும். அல்லாஹ்வே உதவியாளன். மகத்தான, உயர்ந்தவனான அல்லாஹ்வைக் கொண்டே தவிர (தீமையை விட்டும்) விலகவோ, (நன்மையைச் செய்ய) சக்தி பெறவோ முடியாது.
Labels:
உம்ரா சட்டம்,
ஹஜ்
11- தமத்துஃ மற்றும் கிரான் ஹஜ் செய்பவர் மீது பலிப்பிராணி கடமையாகும்
மக்காவாசி அல்லாதவர் தமத்துஃ அல்லது கிரான் முறையில் ஹஜ் செய்தால் ஒரு
ஆட்டையோ, அல்லது ஏழு நபர்கள் இணைந்து ஒரு ஒட்டகத்தையோ, ஒரு மாட்டையோ
அறுப்பது கடமையாகும். அது தூய்மையான முறையில் ஈட்டப்பட்ட, ஹலாலான
பொருளாதாரத்தில் இருப்பது கடமையாகும். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹு தஆலா
தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர ஏற்றுக் கொள்ளமாட்டான்.
பலிப்பிராணியையோ அல்லது பிற பொருளையோ ஆட்சியாளரிடமோ, பிற மக்களிடமோ யாசிப்பதை அனைத்து முஸ்லிம்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அவர்களுக்குப் பிராணியை பலியிடும் அளவிற்கு பொருளாதாரத்தைக் கொடுத்திருந்தால் அதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். பிறரிடம் கையேந்துவதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் யாசிப்போரின் இழிவு மற்றும் கேவலம் பற்றியும் யாசிக்காதவர்களைப் புகழ்ந்தும் அதிகமான ஹதீஸ்கள் வந்துள்ளன.
தமத்துஃ மற்றும் கிரான் ஹஜ் செய்பவர் -பலிப் பிராணி- ஹதீ கொடுக்க சக்திபெறவில்லையெனில் ஹஜ்ஜுடைய காலங்களில் மூன்று நாட்களும் வீடு திரும்பியபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்பது அவசியமாகும். ஹஜ்ஜுடைய காலங்களில் நோற்கவேண்டிய மூன்று நோன்புகளை துல்ஹஜ் பிறை 10-ம் நாளுக்கு முன்போ, அல்லது தஷ்ரீக்குடைய மூன்று நாட்களிலோ (ஆகிய இவ்விரண்டில்) அவர் விரும்பிய விதத்தில் நோற்றுக் கொள்ளலாம்.
فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلاَثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ
. . உம்ராவை முடித்துக் கொண்டு ஹஜ்ஜின்பால் செல்பவர் மீது ஹதீயிலிருந்து எவ்வளவு முடியுமோ அது அவர்மீது -கடமை- ஆகும். அதனைப் பெற்றுக் கொள்ளாதவர் ஹஜ்ஜில் மூன்று நாட்களும் நீங்கள் (இருப்பிடம்) திரும்பியபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்கவேண்டும். அவை பூரணமான பத்து (நாட்கள்) ஆகும். இது எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில் குடி) இருக்கவில்லையோ அவருக்குரியதாகும். . . என அல்லாஹு தஆலா கூறுகின்றான். (அல்குர்ஆன் 2:196)
ஹதீ கொடுக்க சக்தி பெறாதவர்களைத் தவிர பிறருக்கு தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதி வழங்கப் படவில்லை என ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் கூறியுள்ள செய்தி புகாரீயில் இடம் பெற்றுள்ளது. இது நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புடைய சட்டமாகவே கருதப்படும்.
அரஃபா தினத்தில் நோன்பின்றி இருப்பதற்காக இம்மூன்று நோன்புகளையும் அரஃபா தினத்திற்கு முன்பே நோற்றுவிடுவது சிறந்தது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் நோன்பின்றிதான் தங்கினார்கள். மேலும் அரஃபாவில் இருப்பவர்களை (அதாவது: ஹஜ் செய்பவர்களை) அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பதை விட்டும் தடுத்தார்கள். அன்றய தினம் நோன்பு நோற்காமல் இருப்பது உற்சாகமாக திக்ர், துஆக்களில் ஈடுபடவாய்ப்பாக அமையும்.
மேற்கூறப்பட்ட மூன்று நோன்புகளையும் தொடர்ந்தோ, விட்டு விட்டோ நோற்பதற்கு அனுமதியுள்ளது. அதுபோல் (ஊர் திரும்பியபின் நோற்கவேண்டிய) ஏழு நோன்புகளையும் தொடர்ந்து நோற்பது கடமையல்ல. மாறாக அதனையும் தொடர்ந்தோ அல்லது விட்டுவிட்டோ நோற்பதற்கு அனுமதி உள்ளது. அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ தொடர்ந்து நோற்பதை நிபந்தனையாகக் கூறவில்லை.
وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ
நீங்கள் (இருப்பிடம்) திரும்பிய பின் ஏழு நாட்களும் . . . என்ற வசனத்திற்கிணங்க ஏழு நோன்புகளையும் -முன்னரே நோற்றுவிடாமல் அதனை- வீடு திரும்பும்வரை பிற்படுத்துவதே சிறந்ததாகும்.
ஹதீ கொடுக்க சக்தி பெறாதவர் தனக்காக ஹதீ கொடுக்குமாறு ஆட்சியாளரிடமோ, பிறரிடமோ யாசிப்பதைவிட நோன்பு நோற்பதே மிகச் சிறந்ததாகும். யாசகம் கேட்காமலும் அதனை மனதால் கூட விரும்பாமலும் இருக்கும் நிலையில் யாரேனும் ஹதீயையோ அல்லது பிற பொருளையோ அன்பளிப்பாக கொடுத்தால் அதனைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. அவர் பிறருக்காக ஹஜ் செய்பவராக இருந்தாலும் சரியே! ஹஜ் செய்ய நியமித்தவர் தனது பொருளில்தான் ஹதீ கொடுக்கவேண்டும் என நிபந்தனையிடாவிட்டால் அவரும் -அன்பளிப்பைப் பெற்றுக் கொள்வதில்- தவறில்லை.
சிலர் அரசாங்கத்திடமோ அல்லது பிறரிடமோ பொய்யாகப் பிறரின் பெயரைக் கூறி ஹதீயைப் பெற யாசிப்பது ஹராமானது என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாக இது பொய்யுரைத்து பொருள் திரட்டுவதாகும்.

-அல்லாஹ் நம்மையும் முஸ்லிம்கள்
அனைவரையும் இச்செயலை விட்டுக் காப்பாற்றுவானாக!-
Labels:
உம்ரா சட்டம்,
ஹஜ்
10 - ஹஜ் செய்பவர் பத்தாம் நாளின் செயல்களை சிறந்த முறையில் நிறைவேற்றுவது பற்றிய விளக்கம்
ஹஜ் செய்பவர் 10-ம் நாளில்; நான்கு செயல்களை ஒன்றன்பின் ஒன்றாக
-வரிசையாகச்- செய்வது மிகச் சிறந்த தாகும். முதலாவதாக, ஜமரத்துல்
அகபாவிற்கு கல்லெறிதல். பிறகு -பிராணிகளைப்- பலியிடுதல். பிறகு
(முடியை) மழித்தல் அல்லது குறைத்தல். பிறகு கஃபாவை தவாஃப் செய்தல்.
இதன் பிறகு, தமத்துஃ ஹஜ் செய்பவர் ஸயீ செய்தல். அதுபோன்று கிரான்
மற்றும் இஃப்ராத் ஹஜ் செய்பவர்கள், கஃபாவிற்கு வருகை தந்ததிற்காக செய்த
தவாஃபுடன் ஸயீ செய்யவில்லை என்றால் அவர்களும் ஸயீ செய்தல்.
இச்செயல்களில் ஒன்றைவிட மற்றொன்றை முன், பின்னாக மாற்றிச் செய்தால் அதுவும் நிறைவேறியதாகவே ஆகும். 10-ம் நாள் செயல்களை முன், பின் மாற்றிச் செய்வதை நபி (ஸல்) அவர்கள் பொதுவாக அனுமதித்துள்ளதால் அதில் தவாஃபை விட ஸயீயை முற்படுத்துவதும் அடங்கும். ஏனெனில் அதுவும் 10-ம் நாளில் செய்யப்படும் வழிபாடுகளில் உள்ளவைதான். 10-ம் நாளின் செயல்களில் -ஒன்றைவிட மற்றொன்றை- முற்படுத்துவது பற்றியும் பிற்படுத்துவது பற்றியும் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் செய்து கொள்! அதனால் குற்றமில்லை! என்றே நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என்ற நபித்தோழர்pன் கூற்றில் -தவாஃபை விட ஸயீயை முற்படுத்துவதும்- அடங்கிவிடும். மேலும் தவாஃபும் ஸயீயும் மறதியாலும் அறியாமையாலும் -முன்பின்- நிகழ வாய்ப்புள்ளதால் நிச்சயமாக இப்பொது அனுமதியில் அதுவும் இடம்பெற்றுவிடும். மேலும் இவ்வனுமதியில்தான் இலகுவும் வசதியும் உள்ளது.
தவாஃப் செய்வதற்கு முன்னால் ஸயீ செய்துவிட்ட ஒருவரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அதனால் குற்றமில்லை! என்றார்கள் என உஸாமா பின் ஷாPக் (ரலி) அறிவிக்கும் ஸஹீஹான ஹதீஸ் அபூதாவுதில் இடம் பெற்றுள்ளது. -தவாஃபையும் ஸயீயையும் முன், பின் மாற்றிச் செய்வது 10-ம் நாளின்- பொது அனுமதியில் அடங்கிவிடும் என்பது இதன் மூலம் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகி விட்டது. -அல்லாஹ்வே நேர்வழி காட்டுபவன்-
ஹஜ் செய்பவர் முழுமையாக -இஹ்ராமிலிருந்து- விடுபட மூன்று காரியங்களைச் செய்தாகவேண்டும். அவை : (10-ம் நாள்) ஜமரத்துல் அகபாவுக்குக் கல்லெறிய வேண்டும். (முடியை) மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும். தவாஃபுல் இஃபாழா செய்யவேண்டும். தமத்துஃ ஹஜ் செய்பவரும் கிரான் மற்றும் இஃப்ராத் ஹஜ் செய்பவர்களும் கஃபாவிற்கு வருகை தந்ததிற்காகச் செய்த தவாஃபுடன் ஸயீ செய்யவில்லை என்றால் அவர்கள் இத்தவாஃபுக்குப் பின் ஸயீயும் செய்யவேண்டும்.
இம்மூன்றையும் நிறைவேற்றிவிட்டால் இஹ்ராமினால் தடுக்கப் பட்டிருந்த இல்லறம், நறுமணம் போன்ற அனைத்தும் ஹலால் ஆகிவிடும்.
இதில் இரண்டை மட்டும் நிறைவேற்றியவருக்கு இஹ்ராமினால் தடுக்கப்பட்டவைகளில் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் ஹலால் ஆகிவிடும். இந்நிலைக்கு தஹல்லுலுல் அவ்வல் -முதலாவது அனுமதி- என்று பெயர்.
ஹஜ் செய்பவர் ஜம்ஜம் தண்ணீரை வயிறு நிரம்பக் குடிப்பதும் அப்போது பயனுள்ள பிரார்த்தனைகளை -முடிந்த அளவு- செய்து கொள்வதும் விரும்பத்தக்க செயலாகும். நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் தண்ணீரைப் பற்றி இவ்வாறு கூறினார்கள் :
( مَاءُ زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ )
ஜம்ஜம் தண்ணீர் எதற்காகக் குடிக்கப்படுகிறதோ அது கிடைக்கும். (அறிவிப்பவர் : ஜாபிர்-ரலி, நூல் : இப்னுமாஜா)
( . . إِنَّهَا طَعَامُ طُعْمٍ . . ) ( وَشِفَاءُ سُقْمٍ )
நிச்சயமாக அது உண்ண உணவாகவும் நோய்க்கு நிவாரணமாகவும் உள்ளது.
(அறிவிப்பவர் : அபூதர் -ரலி, நூல் : முஸ்லிம் - அபூதாவூத்)

ஹஜ் செய்பவர், தவாஃபுல் இஃபாழாவையும், ஸயீ செய்ய வேண்டியவர்கள் ஸயீயையும் நிறைவேற்றிய பிறகு மினாவுக்குத் திரும்பி வந்து அங்கு மூன்று இரவுகள் தங்க வேண்டும். அந்த மூன்று நாட்களிலும் (சு10ரியன்) உச்சி சாய்ந்த பிறகு மூன்று ஜம்ராக்களுக்கும் கல்லெறியவேண்டும். அதனை (சிறியது, நடு, பெரியது என்று) வரிசையாக எறிவது கடமையாகும்.
ஆரம்பமாக, முதல் ஜம்ராவில் கல்லெறியவேண்டும். அது கைஃப் பள்ளியை அடுத்துள்ள ஜமராவாகும். அதில் ஒன்றன்பின் ஒன்றாக ஏழு கற்களை எறியவேண்டும். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் கையை உயர்த்தி எறிய வேண்டும். பிறகு சற்று முன்னேறிச் சென்று, ஜம்ரா தனக்கு இடதுபுறம் இருக்குமாறு நின்று கொண்டு, கிப்லாவை முன்னோக்கி, இரு கைகளையும் உயர்த்தி, மிகப் பணிவுடன் அதிகமாகப் பிரார்த்தனை செய்வது சுன்னத்தாகும்.
பிறகு முந்தய ஜம்ராவைப் போல் இரண்டாம் ஜம்ராவுக்குக் கல்லெறிய வேண்டும். பிறகு சற்று முன்னேறிச் சென்று, ஜம்ரா தனக்கு வலதுபுறம் இருக்குமாறு நின்று கொண்டு, கிப்லாவை முன்னோக்கி, இரு கைகளையும் உயர்த்தி, அதிகமாகப் பிரார்த்தனை செய்வது சுன்னத்தாகும். பிறகு மூன்றாம் ஜம்ராவுக்குக் கல்லெறிய வேண்டும். அதில் (பிரார்த்தனைக்காக) நிற்கக் கூடாது.
பிறகு தஷ்ரீக்குடைய இரண்டாம் நாள் உச்சி சாய்ந்த பின்னர், முதலாம் நாள் எறிந்தது போன்று (மூன்று) ஜமராக் களுக்கும் கல்லெறியவேண்டும். அதில் -நபி (ஸல்) அவர் களைப் பின்பற்றியவராக- முதலாவது மற்றும் இரண்டாம் ஜமராக்களில் முதல் நாள் செய்தது போன்று -பிரார்த்தனை- செய்வது சுன்னத்தாகும்.
தஷ்ரீக்குடைய நாட்களில் முதலிரண்டு நாட்கள் கல்லெறிவது ஹஜ்ஜின் கடமை(யான செயல்)களில் உள்ளவைகளாகும். அது போன்றே 11-ம் இரவும், 12-ம் இரவும் மினாவில் தங்குவதும் கடமையாகும். தண்ணீர் புகட்டுபவர், கால்நடைகளைப் பராமரிப்பவர் போன்றவர்களுக்கு இரவில் மினாவில் தங்குவது கடமையல்ல.
மேற்கூறப்பட்ட (11, 12 ஆகிய) இரண்டு நாட்களிலும் கல்லெறிந்து விட்டவர் மினாவை விட்டும் விரைவாகப் புறப்பட விரும்பினால் அதற்கு அனுமதியுள்ளது, அவ்வாறு புறப்படுபவர் -12-ம் நாள்- சு10ரியன் மறைவதற்கு முன் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்.
எனினும் தாமதித்து, பதிமூன்றாம் நாள் இரவும் தங்கி, அன்றய தினமும் ஜம்ராக்களுக்கு கல்லெறிந்து விட்டுச் செல்வதே மிகச் சிறந்ததும் அதிக கூலியைப் பெற்றுத்தரும் செயலுமாகும்.
وَاذْكُرُوا اللهَ فِيْ أَيَّامٍ مَعْدُوْدَاتٍ فَمَنْ تَعَجَّلَ فِيْ يَوْمَيْنِ فَلاَ إِثْمَ عَلَيْهِ وَمَنْ تَأَخَّرَ فَلاَ إِثْمَ عَلَيْهِ لِمَنِ اتَّقَى
(மினாவில் தங்கியிருந்து) எண்ணிவிடப்பட்ட (மூன்று) நாட்களில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். ஆகவே எவரொருவர் இரண்டு நாட்களில் அவசரப்பட்டு(ப் புறப்பட்டு) விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரொருவர் (மூன்றாம் நாள் வரை) பிற்பட்(டுப் புறப்பட்)டால் அவர் மீதும் குற்றமில்லை. (இது) யார் (அல்லாஹ்வாகிய) அவனை பயந்து நடக்கின்றார்களோ அவர்களுக்கு (உள்ளதாகும்.) என அல்லாஹு தஆலா கூறுகின்றான். (அல்குர்ஆன் 2:203)
நபி (ஸல்) அவர்கள், -12-ம் நாள் மினாவை விட்டும்- விரைவாகச் செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் விரைவாகப் புறப்படவில்லை. மாறாக 13-ம் நாள் சு10ரியன் உச்சி சாயும் வரை மினாவில் தங்கியிருந்து, அதன் பிறகு ஜம்ராக்களுக்குக் கல்லெறிந்தார் கள். பின்னர் ளுஹர் தொழுகைக்கு முன்னர் அங்கிருந்து புறப்பட்டார்கள்.
கல்லெறிய இயலாத சிறுவர்களுக்காக அவர்களின் பொறுப்பாளர்கள் (10-ம் நாள்) ஜமரத்துல் அகபாவிலும் (தஷ்ரீக்குடைய நாட்களில்) அனைத்து ஜம்ராக்களிலும் தனக்கு எறிந்ததற்குப் பிறகு அவர்களுக்காகக் கல்லெறிய வேண்டும். அதுபோல் கல்லெறிய இயலாத சிறுமிகளுக்காக அவர்களின் பொருப்பாளர்கள் அவர்களுக்குப் பகரமாகக் கல்லெறிய வேண்டும். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
( حَجَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَنَا النِّسَاءُ وَالصِّبْيَانُ فَلَبَّيْنَا عَنِ الصِّبْيَانِ وَرَمَيْنَا عَنْهُمْ )
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். எங்களுடன் பெண்களும் சிறுவர்களும் இருந்தனர். சிறுவர் களுக்குப் பகரமாக நாங்கள் தல்பியாக் கூறினோம். மேலும் அவர்களுக்கு பகரமாக நாங்கள் கல்லுமெறிந்தோம்.
(நூல் : இப்னுமாஜா)
فَاتَّقُوا اللهَ مَا اسْتَطَعْتُمْ
இயன்ற அளவிற்கு நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! (64:16) என்ற அல்லாஹ்வின் கட்டளைக் கிணங்க நோய், முதுமை, கர்ப்பம் போன்ற காரணங்களால் கல்லெறிய சக்தியற்றவர்கள் தங்களுக்குப் பகரமாக பிறரை நியமிக்க அனுமதியுள்ளது.
மக்கள் நெரிசலில் இவர்களால் ஜமராக்களுக்குக் கல்லெறிய முடியாது. (தாமதமாகச் சென்று எறியலாம் என்றால் அதற்குள்) கல்லெறியும் நேரம் முடிந்து போய்விடும். அதனை களாச் செய்யவும் முடியாது. எனவே இதனை நிறைவேற்ற மாத்திரம் பிறரை நியமிக்க அனுமதி உள்ளது. இது தவிர உள்ள ஹஜ்ஜின் பிற வழிபாடுகளில் (பகரமாகப் பிறரை) நியமிக்கக் கூடாது. ஹஜ்ஜுக்காகவோ, உம்ராவுக்காகவோ இஹ்ராம் அணிந்துவிட்டால் -அவ்விரண்டும் நஃபிலானவை களாக இருந்தாலும் சரியே!- அதனை முழுமையாக நிறை வேற்றுவது கடமையாகும். அதனை நிறைவேற்றுவதற்காக தனக்குப் பகரமாக பிறரை நியமிக்கக் கூடாது.
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ ِللهِ
ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் அல்லாஹ்வுக்காக நிறைவு செய்யுங்கள்! என அல்லாஹு தஆலா கூறுகின்றான்.
(அல்குர்ஆன் 2:196)
தவாஃபின் நேரமும் ஸயீயின் நேரமும் (வரையறுக்கப்பட வில்லை என்பதால் அது) முடிந்துவிடாது. ஆனால் கல்லெறி யும் நேரம் (வரையறுக்கப்பட்டிருப்பதினால் அது) முடிந்துவிடும்.
அரஃபாவில் தங்குவதும், முஸ்தலிஃபா மற்றும் மினாவில் இரவில் தங்குவதும் (விரைவில்) கடந்துவிடும் -குறிப்பிட்ட- நேரங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. எனினும் இயலாதவர்கள் சிரமப்பட்டாவது அந்த இடங்களை அதற்குரிய நேரத்தில் சென்றடைய முடியும். ஆனால் அவர்களால் கல்லெறிதலை அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றமுடியாது. மேலும் முன்சென்ற நல்லோர்களான நபித் தோழர்கள், கல்லெறிய இயலாதவர்களுக்காக பிறரைப் பகராமாக நியமித்துள்ளார்கள் என்றும் அதைத் தவிர உள்ள வழிபாடுகளில் பிறரைப் பகரமாக நியமிக்கவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன.
வணக்க, வழிபாடுகள் அனைத்தும் (அல்லாஹ் மற்றும் அவனது தூதர் -ஸல்- அவர்களால்) முடிவு செய்யப் பட்டவைகளாகும். அதில் ஆதாரமின்றி எவரும் எந்த ஒன்றையும் ஏற்படுத்திட முடியாது.
பிறருக்காகக் கல்லெறிபவர் -ஒரு தடவை சென்று- மூன்று ஜம்ராக்களில் ஒவ்வொன்றிலும் முதலில் தனக்காகவும் பிறகு பிறருக்குப் பகரமாகவும் எறிய அனுமதியுள்ளது. மூன்று ஜம்ராக்களிலும் முதலில் தனக்காக எறிந்துவிட்டு, பிறகு மற்றொரு முறை திரும்பிச் சென்று பிறருக்காக எறிய வேண்டும் என்று கடமையில்லை. இதுவே அறிஞர்களின் இரு கூற்றுக்களில் சரியான கூற்றாகும். ஏனெனில் -இருமுறை செல்லவேண்டும் என்ற- கூற்றிற்கு எந்த ஆதாரமும் கிடையாது. மேலும் அவ்வாறு செய்வதில் கஷ்டமும் சிரமமும் ஏற்படும்.
وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّيْنِ مِنْ حَرَجٍ
. . இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு யாதொரு சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. . என அல்லாஹு தஆலா கூறுகின்றான். (அல்குர்ஆன் 22:78)
( يَسِّرُوْا وَلاَ تُعَسِّرُوْا )
எளிதாக்குங்கள்! கஷ்டப்படுத்தாதீர்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்-ரலி, நூல்: புகாரீ)
மேலும் நபித்தோழர்கள் தங்களின் சிறுவர்களுக்கும் பலவீனர்களுக்கும் பகரமாகக் கல்லெறியும் போது இவ்வாறு (இருமுறை) சென்றதாக எந்தச் செய்தியும் வரவில்லை. அவர்கள் அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக அச்செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏனெனில் இச்செய்திகளை பதிவு செய்வதற்காக பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
-அல்லாஹ்வே மிகஅறிந்தவன்-
Labels:
உம்ரா சட்டம்,
ஹஜ்
9 - துல்ஹஜ் 8-ம் நாள் ஹஜ்ஜுக்குரிய இஹ்ராமிற்காக நிய்யத் வைத்து மினாவுக்குப் புறப்படுவது பற்றிய சட்டம்
மக்காவில் தங்கியிருப்பவர்களும் மக்கா வாசிகளில் ஹஜ் செய்பவர்களும்
துல்ஹஜ் 8-ம் நாளன்று அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்தே
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்வது விரும்பத்தக்கச் செயலாகும்.
ஏனெனில் -மக்காவில்- அப்தஹ் எனும் இடத்தில் தங்கியிருந்த நபித்
தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க 8-ம் நாளில் அங்கிருந்தே
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டனர்.
ஹரமுக்கோ, கஃபாவின் முகட்டிலிருக்கும் தங்கப் பீலிக்கோ சென்று அங்கிருந்து இஹ்ராம் அணிந்து கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. அதுபோன்று மினாவுக்குப் புறப்படும் போது விடைபெறும் தவாஃப் -என்ற பெயரில் ஒரு தவாஃப்- செய்யவும் கட்டளையிடவில்லை. இவ்வாறு செய்வது மார்க்கச் சட்டமாக இருந்திருந்தால் அதனை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் பின்பற்றுவதில் மட்டுமே நமக்கு நன்மையுள்ளது.
எல்லையில் இஹ்ராம் அணியும்போது குளித்து, தூய்மையாகி, நறுமணம் பூசிக் கொண்டது போன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியும் போதும் செய்து கொள்வது விரும்பத்தக்கச் செயலாகும்.
8-ம் நாளன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்த பிறகு சு10ரியன் உச்சி சாய்வதற்கு முன்போ, உச்சி சாய்ந்த பின்போ மினாவுக்குச் செல்வது சுன்னத்தாகும்.
(இஹ்ராம் அணிந்ததிலிருந்து 10-ம் நாள்) ஜமரத்துல் அகபாவுக்குக் கல்லெறியும் வரை அதிகமாக தல்பியாக் கூறிக் கொண்டிருக்க வேண்டும்.
ளுஹர், அஸர், மஃரிப், இஷா மற்றும் ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளை மினாவில் தொழவேண்டும். (இரு தொழுகை களை ஒரே நேரத்தில் சேர்த்து) ஜம்ஆகத் தொழாமல் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழுவதும், அதனை கஸராக (நான்கு ரகஅத் தொழுகைகளை இரண்டு ரகஅத்களாக)த் தொழுவதும் சுன்னத்தாகும். ஃபஜ்ரையும் மஃரிபையும் கஸராகத் தொழ முடியாது.
(ஜம்வு, கஸர் சலுகையில்) பிறருக்கும் மக்கா வாசிகளுக்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகிய அனைத்து இடங்களிலும் மக்கா வாசிகளுக்கும் பிறருக்கும் கஸராகவே தொழவைத்தார்கள். தொழுகையை பூர்த்தியாக்கி (4 ரகஅத்களாகத்) தொழுமாறு மக்கா வாசிகளுக்கு கட்டளையிடவில்லை. அவ்வாறு தொழுவது அவர்கள் மீது கடமையாக இருந்திருந்தால் நிச்சயமாக அதனை அவர்களுக்குத் தெளிவுபடுத்தியிருப்பார்கள்.
அரஃபா தினத்தன்று சு10ரிய உதயத்திற்குப்பின் மினாவிலிருந்து அரஃபாவை நோக்கிப் புறப்பட வேண்டும். வாய்ப்பிருந்தால் சு10ரியன் உச்சி சாயும் வரை நமிரா என்ற இடத்தில் தங்குவது சுன்னத்தாகும். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்.
சு10ரியன் உச்சி சாய்ந்த பின்னர் ஆட்சித் தலைவரோ அல்லது அவருக்குப் பகரமாக நியமிக்கப்பட்டவரோ கால சு10ழ்நிலைகளுக்கேற்ற செய்திகளுடன் உரை நிகழ்த்துவது ஸுன்னத்தாகும். அதில் ஹஜ் செய்பவர் அன்றைய தினமும் அதற்குப் பின்னரும் செய்யவேண்டியவைகளை தெளிவுபடுத்த வேண்டும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறும் அவனை ஓர்மைப் படுத்துமாறும் அனைத்து அமல்களையும் அவனுக்காகவே மனத்தூய்மையுடன் நிறைவேற்றுமாறும் அவர் களுக்குக் கட்டளையிடவேண்டும். மார்க்கம் தடுத்துள்ள காரியங்களைச் செய்வதை விட்டும் அவர்களை எச்சரிக்க வேண்டும். அல்லாஹ்வுடைய வேதத்தையும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறும் அவ்விரண்டைக் கொண்டே ஆட்சி நடத்து மாறும் அனைத்துக் காரியங்களுக்கும் அவ்விரண்டின் அடிப்படையிலேயே தீர்ப்புக் கூறுமாறும் இவ்வனைத்திலும் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுமாறும் வலியுறுத்தி போதிக்க வேண்டும்.
பிறகு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க, ஒரு பாங்கு, இரு இகாமத்களுடன் ளுஹரையும் அஸரையும் இணைத்து ளுஹர் நேரத்தில் கஸராக (இரண்டிரண்டு ரகஅத்களாக)த் தொழ வேண்டும்.
(அறிவிப்பவர் : ஜாபிர் - ரலி, நூல் : முஸ்லிம்)
பிறகு அரஃபாவில் தங்கவேண்டும். பத்னு உரனா என்ற இடத்தைத் தவிர அரஃபாவின் மற்ற பகுதிகள் அனைத்தும் தங்குமிடமே! வாய்ப்பிருந்தால் கிப்லாவையும் ஜபலுர் ரஹ்மாவையும் முன்னோக்கியவாறு தங்குவது விரும்பத்தக்க செயலாகும். ஒரே நேரத்தில் இரண்டையும் முன்னோக்க வாய்ப்பில்லை என்றால் -ஜபலுர் ரஹ்மாவை முன்னோக்க வில்லை என்றாலும் சரியே!- கிப்லாவை மட்டுமாவது முன்னோக்கியவாறு தங்குவது சிறந்தது.
ஹஜ் செய்பவர் அரஃபாவில் தங்கியிருக்கும் நேரத்தில் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறவேண்டும், பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். அவனுக்கு முற்றிலும் அடிபணிய வேண்டும். இரு கைகளையும் உயர்த்திப் பிரார்த்திக்க வேண்டும். தல்பியாக் கூறினால் அல்லது அல்குர்ஆனில் ஏதேனும் சில பகுதிகளை ஓதினால் அதுவும் சிறந்ததே!
لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ، لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
என்ற திக்ரை அதிகமாகக் கூறுவது சுன்னத்தாகும்.
( خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ )
பிரார்த்தனைகளில் மிகச் சிறந்த பிரார்த்தனை அரஃபா தினத்தன்று கேட்கும் பிரார்த்தனைதான்! நானும் எனக்கு முன்சென்ற நபிமார்களும் கூறியவைகளில் மிகச் சிறந்த -திக்ர்- லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாPக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் என்பதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் : திர்மிதி)
( أَحَبُّ الْكَلَامِ إِلَى اللهِ أَرْبَعٌ : سُبْحَانَ اللهِِ وَالْحَمْدُ ِللهِ وَلَا إِلَهَ إِلَّا الله ُ وَالله ُ أَكْبَرُ . . )
ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகிய நான்கு வார்த்தைகளும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் :ஸமுரா பின் ஜுன்துப் -ரலி, நூல் : முஸ்லிம்)
எனவே இந்த திக்ரை மனஈடுபாட்டுடனும் இறையச்சத்துடனும் திரும்பத் திரும்ப அதிகமாகக் கூறிக் கொண்டிருப்பது சிறந்ததாகும்.
மார்க்கம் கற்றுத் தந்துள்ள திக்ர், துஆக்களை பொதுவாக அனைத்துக் காலங்களிலும் அதிகமாகக் கூறிக் கொண்டிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, இந்த இடத்தில், இந்த மகத்தான நாளில் மிக அதிகமாக திக்ர், துஆக்களில் ஈடுபட வேண்டும். மேலும் சிறந்த திக்ர், துஆக்களைத் தேர்ந்தெடுத்துப் பிரார்த்திக்க வேண்டும். அவைகளில் சில :
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ
அல்லாஹ்வைப் புகழ்வதுடன், அவனைத் தூய்மைப் படுத்து கிறேன். மகத்தான அல்லாஹ் மிகவும் தூய்மையானவன்.
{ لاَإِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ }
வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர யாருமில்லை, நீ மிகவும் தூய்மையானவன், நிச்சயமாக நான் அநியாயக் காரர்களில் ஒருவனாகி விட்டேன். (அல்குர்ஆன் 21:87)
لاَ إِلهَ إِلاَّ اللهُ، وَلاَ نَعْبُدُ إِلاَّ إِيَّاهُ، لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لاَ إِلهَ إِلاَّ اللهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நாங்கள் அவனைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அனைத்து அருட்கொடைகளும் அனைத்துச் சிறப்புக்களும் அனைத்து அழகிய புகழ்களும் அவனுக்கே உரியன! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. மார்க்கத்தை அவனுக்காக மட்டுமே தூய்மையாக்கியவர்களாக -அவனை மட்டுமே வணங்குவோம்.- அதனை இறைநிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் சரியே!
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ
அல்லாஹ்வைக் கொண்டே தவிர (தீமையை விட்டும்) விலகவோ, (நன்மையைச் செய்ய) சக்தி பெறவோ முடியாது.
رَبَّنَا آتِنَا فِيْ الدُّنْيَا حَسَنَةً وَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகில் நல்லதையும் மறுமையில் நல்லதையும் தருவாயாக! எங்களை நரக வேதனையிலிந்து காத்தருள்வாயாக!
أَللَّهُمَّ أَصْلِحْ لِيْ دِيْنِي الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِيْ ، وَأَصْلِحْ لِيْ دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ ، وَأَصْلِحْ لِيْ آخِرَتِي الَّتِيْ فِيْهَا مَعَادِيْ ، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِّيْ فِيْ كُلِّ خَيْرٍ ، وَالْمَوْتَ رَاحَةً لِّيْ مِنْ كُلِّ شَرٍّ .
யாஅல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு சீர் படுத்துவாயாக! அதுதான் எனது -வாழ்வின்- அரண். எனது உலகை எனக்குச் சீர்படுத்துவாயாக! அதுதான் நான் வாழும் இடம். எனது மறுமையை சீர்படுத்துவாயாக! அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையை அனைத்து நல்லறங்களையும் அதிகமாகச் செய்ய வாய்ப்புடையதாக ஆக்குவாயாக! அனைத்து தீமைகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்குவாயாக!
أَعُوْذُ بِاللهِ مِنْ جَهْدِ الْبَلاَءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوْءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ اْلأَعْدَاءِ
சோதனையின் சிரமத்தை விட்டும் விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி, கிண்டல்களுக்கு ஆளாவதை விட்டும் நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَمِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَمِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَمِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ وَمِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ وَأَعُوْذُ بِكَ اللَّهُمَّ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ اْلأَسْقَامِ
யாஅல்லாஹ்! கவலை, சோகம், இயலாமை, சோம்பல், கோழைத்தனம்;, கஞ்சத்தனம், பாவமிழைத்தல், கடனாளியாதல், கடன் அதிகரித்தல், மனிதர்களின் அடக்குமுறைக்கு ஆளாகுதல் ஆகியவைகளை விட்டும், வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புக்கள் அழுகி விழும்நோய் (கருங்குஷ்டம்), மற்றும் கெட்ட நோய்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَفْوَ والْعَافِيَةَ فِي الدُّنْيَا وَاْلآخِرَةِ
யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் பாவமன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன்.
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِيْ دِيْنِيْ وَدُنْيَايَ وَأَهْلِيْ وَمَالِيْ
யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் என்னுடைய மார்க்க விஷயத்திலும் உலக விஷயத்திலும் குடும்ப விஷயத்திலும் பொருளாதார விஷயத்திலும் -செய்த தவறுகளுக்காக- பாவமன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன்.
اَللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ وَآمِنْ رَوْعَاتِيْ، اَللَّهُمَّ احْفَظْنِيْ مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِيْ وَعَنْ يَمِيْنِيْ وَعَنْ شِمَالِيْ وَمِنْ فَوْقِيْ وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ
யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைத்திடுவாயாக! என்னுடைய பயத்தை நீக்கி, அச்சமற்ற நிலையை ஏற்படுத்திடுவாயாக! எனக்கு முன்னும் பின்னும் வலப்புறமும் இடப்புறமும் மேற்புறமும் என்னை நீ பாதுகாப்பாயாக! கீழ் புறமிருந்து -பூமியினுள்- நான் இழுக்கப்படுவதை விட்டும் உன்னுடைய கண்ணியத்தின் பொருட்டால் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
أَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطِيْئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِيْ أَمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ
யாஅல்லாஹ்! என்னுடைய குற்றங்களையும் என்னுடைய அறியாமையால் விளைந்தவைகளையும் என்னுடைய செயல் களில் நான் வரம்புமீறியதையும் எவைகளைப் பற்றி நீ என்னை விட நன்கறிந்துள்ளாயோ அவைகளையும் மன்னித்துவிடு;வாயாக!
اَللَّهُمَّ اغْفِرْ لِيْ جِدِّي ْوَهَزْلِيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ
யாஅல்லாஹ்! நான் வேண்டுமென்றோ, விளையாட்டாகவோ, அறியாமலோ, அறிந்தோ செய்தவைகளை மன்னித்து விடுவாயாக! அவைகள் யாவும் என்னிடம் நிகழ்ந்தவைகளே!
اَللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ.
யாஅல்லாஹ்! நான் முற்படுத்தியவைகளையும், நான் பிற்படுத்தியவைகளையும், நான் மறைவாகச் செய்தவைகளை யும், பகிரங்கமாகச் செய்தவைகளையும் எவைகளைப் பற்றி நீ என்னை விட நன்கறிந்துள்ளாயோ அவைகளையும் நீ மன்னித் தருள்வாயாக! நீயே முற்படுத்துபவன், நீயே பிற்படுத்துபவன், நீயே அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الثُّبَاتَ فِي اْلأَمْرِ وَالْعَزِيْمَةَ عَلَى الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيْمًا وَلِسَاناً صَادِقاً وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ، إِنَّكَ عَلاَّمُ الْغُيُوْبِ.
யாஅல்லாஹ்! அனைத்து -நல்ல- காரியங்களிலும் நிலைத்து நிற்பதையும் நேர்வழியில் உறுதியாக இருப்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். உன்னுடைய அருட்கொடை களுக்கு நன்றி செலுத்துவதையும் அழகிய முறையில் உன்னை வழிபடுவதையும் உன்னிடம் கேட்கின்றேன். மேலும்-உனக்குக்- கட்டுப்படும் உள்ளத்தையும் உண்மை பேசும் நாவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். மேலும் நீ அறிந்துள்ள நல்லவை களை உன்னிடம் நான் கேட்கின்றேன். நீ அறிந்துள்ள தீயவை களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். -என் விஷயத்தில்- நீ அறிந்து வைத்திருப்பவைகளுக்காக நான் உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். நிச்சயமாக நீயே மறைவானவைகளை நன்கறியக் கூடியவன்.
اَللَّهُمَّ رَبَّ النَّبِيِّ مُحَمَّدٍ عَلَيْهِ الصَّلاَةُ وَالسَّلاَمُ اغْفِرْ لِيْ ذَنْبِيْ، وَأَذْهِبْ غَيْظَ قَلْبِيْ وَأَعِذْنِيْ مِنْ مُضِلاَّتِ الْفِتَنِ مَا أَبْقَيْتَنِيْ.
யாஅல்லாஹ்! முஹம்மது (ஸல்) அவர்களின் இரட்சகனே! என்னுடைய பாவத்தை நீ மன்னித்தருள்வாயாக! என்னுடைய உள்ளத்தின் ஆத்திரத்தைப் போக்கிடுவாயாக! வழிகெடுக்கும் குழப்பங்களை விட்டும் என்னை நீ வாழ வைக்கும் வரை காத்தருள்வாயாக!
أَللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ، وَرَبَّ اْلأَرْضِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْئٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَاْلإِنْجِيْلِ وَالْقُرْآنِ، أَعُوْذُ بِكَ مِنَ شَرِّ كُلِّ شَيْئٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، أَللَّهُمَّ أَنْتَ اْلأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْئٌ، وَأَنْتَ اْلآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْئٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْئٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُوْنَكَ شَيْئٌ، اِقْضِ عَنِّي الدَّيْنَ،وَأَغْنِنِيْ مِنَ الْفَقْرِ
யாஅல்லாஹ்! ஏழு வானங்களின் இரட்சகனே! பூமியின் இரட்சகனே! மகத்தான அர்ஷின் இரட்சகனே! எங்கள் இரட்சகனே! அனைத்துப் பொருட்களின் இரட்சகனே! விதை யையும் வித்துவையும் பிள(ந்து முளை)க்கச் செய்பவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகிய வேதங்களை இறக்கியவனே! எந்தப் பொருட்களின் முன்னெற்றி உரோமம் உன் ஆதிக்கத் திலுள்ளதோ அவைகள் அனைத்தின் தீமைகளை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! நீயே ஆரம்பமானவன்; உனக்கு முன்பு எதுவுமில்லை. நீயே இறுதி யானவன்; உனக்குப் பின்பு எதுவுமில்லை. நீயே மிகைப்பவன்; உனக்குமேல் எதுவுமில்லை. நீயே மறைவானவன்; உனக்கு மறைவானது எதுவுமில்லை. என்னுடைய கடனை நிறைவேற் றிடுவாயாக! மேலும் வறுமையை விட்டும் (பாதுகாத்து, பிறர்) தேவையற்றவனாக என்னை ஆக்குவாயாக!
أَللَّهُمَّ أَعْطِ نَفْسِيْ تَقْوَاهَا، وزَكِّهَا، أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا، أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْهَرَمِ وَالْبُخْلِ وَ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ.
யாஅல்லாஹ்! என் உள்ளத்தில் உனது அச்சத்தை ஏற்படுத் துவாயாக! அதனை தூய்மைப்படுத்துவாயாக! நீதான் அதனைத் தூய்மைப்படுத்துவோரில் மிகச் சிறந்தவன். நீயே அதன் பொறுப்பாளனும் அதன் பாதுகாவலனுமாவாய். யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம் மற்றும் கப்ர் வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
أَللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، أَعُوْذُ بِعِزَّتِكَ أَنْ تُضِلَّنِيْ،لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ ،أَنْتَ الْحَيُّ الَّذِيْ لاَ يَمُوْتُ،وَالْجِنُّ وَاْلإِنْسُ يَمُوْتُوْنَ
யாஅல்லாஹ்! நான் உனக்கே கட்டுப்பட்டுள்ளேன். உன்மீதே நம்பிக்கைக் கொண்டுள்ளேன். உன் மீதே உறுதி கொண்டுள்ளேன். உன்பக்கமே மீண்டுள்ளேன். உன் உதவியால்தான் (எதிரிகளிடம்) தர்க்கம் செய்கிறேன். என்னை நீ வழிதவறச் செய்வதை விட்டும் உன்னுடைய கண்ணியத்தின் பொருட்டால் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. நீயே மரணிக்காத நித்திய ஜீவன்;. மனித, ஜின் இனத்தினர் மரணித்துவிடுவர்.
أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لاَيَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لاَيَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لاَيُسْتَجَابُ لَهَا
யாஅல்லாஹ்! பயனளிக்காத கல்வியைவிட்டும் (உனக்குப்) பயப்படாத உள்ளத்தை விட்டும் நிறைவடையாத மனதை விட்டும் பதிலளிக்கப்படாத பிரார்த்தனையை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
أَللَّهُمَّ جَنِّبْنِيْ مُنْكَرَاتِ اْلأَخْلاَقِ وَاْلأَعْمَالِ وَاْلأَهْوَاءِ وَاْلأَدْوَاءِ
யாஅல்லாஹ்! தீய குணங்கள், தீய செயல்கள், தீய ஆசைகள், தீய நோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்றுவாயாக!
أَللَّهُمَّ أَلْهِمْنِيْ رُشْدِيْ، وَأَعِذْنِيْ مِنْ شَرِّ نَفْسِيْ
யாஅல்லாஹ்! எனக்கு நீ நேர்வழியைக் காட்டுவாயாக! மேலும் என்னுடைய மனதின் தீங்கிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!
اَللَّهُمَّ اكْفِنِيْ بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ،وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
யாஅல்லாஹ்! நீ தடுத்துள்ளவைகளை விட்டும் என்னைக் காப்பாற்றி, நீ அனுமதித்தவைகளின் மூலம் எனக்கு நிறைவை ஏற்படுத்துவாயாக! உன்னுடைய அருட்கொடைகளின் மூலம் என்னை பிறர் தேவையற்றவனாக ஆக்கிடுவாயாக!
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
யாஅல்லாஹ்! நேர்வழியையும் (உனது) அச்சத்தையும் பத்தினித் தனத்தையும் தன்னிறைவையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ
யாஅல்லாஹ்! நேர்வழியையும் அதில் உறுதியாக நிற்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَالَمْ أَعْلَمْ، وَأَعُوْذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمالَمْ أَعْلَمْ، وأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ عَبْـدُكَ وَنَبِيُّكَ مُحَمَّدٌ ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ مِنْهُ عَبْدُكَ وَنَبِيُّكَ مُحَمَّدٌ
யாஅல்லாஹ்! நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து நன்மைகளையும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் (தருமாறு) உன்னிடம் கேட்கிறேன். மேலும் நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்துத் தீமைகளை விட்டும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! உன்னுடைய அடியாரும்; நபியுமாகிய முஹம்மது (ஸல்) அவர்கள் கேட்ட நல்லவைகள் அனைத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அடியாரும் நபியுமாகிய முஹம்மது (ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய தீமைகள் அனைத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَامِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْـتَـهُ لِيْ خَيْرًا .
யாஅல்லாஹ்! சொர்க்கத்தையும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ எனக்கு நிர்ணயித்துள்ள அனைத்துத் தீர்ப்புக்களையும் எனக்கு நல்லதாக ஆக்கிவைக்குமாறு உன்னிடம் வேண்டுகிறேன்.
لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِيْ وَيُمِيْتُ، بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ، ولاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அனைத்து ஆட்சியும் அனைத்துப் புகழும் அவனுக்குரியதே! அவனே உயிர்ப்பிப்பவன், அவனே மரணிக்கச் செய்பவன், அவனுடைய கையில்தான் அனைத்து நல்லவைகளும் உள்ளன. அவனே அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் மிகத் தூய்மையானவன், புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, அல்லாஹ் மிகப் பெரியவன். மகத்துவமிக்க, மிக உயர்ந்த வனான அல்லாஹ்வைக் கொண்டே தவிர (தீமையை விட்டும்) விலகவோ, (நன்மையைச் செய்ய) சக்தி பெறவோ முடியாது.
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ، اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
யாஅல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிந்தது போன்று முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீயே பெருமைக்கும் புகழுக்குமுரியவன். யாஅல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் பரகத் செய்தது போன்று முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் பரகத் செய்வாயாக! நிச்சயமாக நீயே பெருமைக்கும் புகழுக்குமுரியவன்.
{ رَبَّنَا آتِنَا فِيْ الدُّنْيَا حَسَنَةً وَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ}
எங்கள் இரட்சகனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங் களையும் மறுமையில் நற்பாக்கியங்களையும் தருவாயாக! மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!
ஹஜ் செய்பவர் இப்புனித இடத்தில் மேற்கண்ட திக்ர், துஆக்களையும் இவை போன்ற பொருள் கொண்ட திக்ர், துஆக்களையும் நபி (ஸல்) அவர்கள் மீது கூறவேண்டிய ஸலவாத்தையும் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பதும் மனமுறுகி துஆச் செய்வதும் விரும்பத்தக்க செயலாகும். இம்மை, மறுமையின் நல்லவற்றை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் பிரார்த்தனை செய்தால் அதனை மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறுவார்கள். எனவே நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர் களாக - ஒவ்வொன்றையும் மும்மூன்று முறை பிரார்த்திக்க - வேண்டும்.
இந்த இடத்தில் முஸ்லிம் தனது இரட்சகனுக்கு முன் கட்டுப்பட்டவனாக, அவனுக்கு அடிபணிந்தவனாக, அவனிடம் சரணடைந்தவனாக, அவன் முன் கீழ்படிந்தவனாக, அவனுடைய அருளையும் பாவமன்னிப்பையும் எதிர்பார்த் தவனாக, அவனுடைய தண்டனைக்கும் கோபத்திற்கும் பயந்தவனாக, தன்னை -சுயபரிசோதனை செய்து- விசாரித்த வனாக, மனத் தூய்மையுடன் பாவமன்னிப்புத் தேடியவனாக நடந்து கொள்ளவேண்டும்.
ஏனெனில் நிச்சயமாக அரஃபா தினம் என்பது பெருங் கூட்டத்தினர் ஒன்றிணையும் மகத்தான நாளாகும். இந்நாளில் அல்லாஹ் தன் அடியார்களுக்கு அருட்கொடைகளை வாரி வழங்குகிறான். மலக்குகளிடம் அவர்களைப் பற்றிக் கூறிப் பெருமைப்படுகிறான். இந்நாளில் அதிகமானோருக்கு நரகத்திலிருந்து விடுதலை அளிக்கின்றான்.
அரஃபாவுடைய நாளில், ஷைத்தான் விரட்டப்பட்டு, மிகச் சிறுமையடைந்து, கேவலப்படுவது போன்று மற்ற எந்த நாட்களிலும் கேவலப்படுவதில்லை. -பத்ர் களத்தில் அவன் அடைந்த இழிவைத் தவிர-. அரஃபா தினத்தன்று அல்லாஹ் தன் அடியாருக்கு வழங்கும் கொடையையும் கிருபையையும் அதிகமானோருக்கு நரகிலிருந்து விடுதலை அளிப்பதையும் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குவதையும் அறிந்திருப்பதால் ஷைத்தான் இவ்வாறு கைசேதப்படுகிறான்.
( مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمُ الْمَلَائِكَةَ فَيَقُولُ مَا أَرَادَ هَؤُلَاءِ؟ )
அரஃபாவுடைய நாளில் அல்லாஹ் தன் அடியார்களை நரகத்திலிருந்து விடுவிப்பதைவிட மிக அதிகமாக வேறு எந்த நாளிலும் விடுவிப்பதில்லை. நிச்சயமாக அவன் -அந்நாளில்- அவர்களை நெருங்குகிறான். இவர்கள் எதனை எதிர் பார்க்கின்றார்கள்! என்று மலக்குகளிடம் கூறிப் பெருமைப் படுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : முஸ்லிம்)
முஸ்லிம்கள் தங்களை அல்லாஹ்வுக்கு முன்னிலையில் சிறந்தவர்களாக காண்பிக்கவேண்டும். திக்ர் மற்றும் துஆக் களை அதிகமாகச் செய்யவேண்டும். அனைத்துப் பாவங்களுக்காகவும் தவறுகளுக்காகவும் மன்னிப்புத்தேடி, உறுதியாகத் தவ்பாச் செய்ய வேண்டும். இவை போன்ற நல்லறங்களால் முஸ்லிம்களின் எதிரியான ஷைத்தானை கவலைக்குள்ளாக்கி கேவலப்படுத்தவேண்டும்.
ஹஜ் செய்பவர், சு10ரியன் மறையும்வரை அரஃபாவில் தங்கி மன ஈடுபாட்டுடன் திக்ர், துஆக்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும். சூரியன் மறைந்து விட்டால் அமைதியாகவும் கம்பீரமாகவும் அதிகமாகத் தல்பியாக் கூறியவர்களாகவும் முஸ்தலிஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். விசாலமான இடத்தில் நபி (ஸல்) அவர்கள் விரைவாகச் சென்றுள்ளதால் அது போன்ற இடங்களைக் கடக்கும் போது விரைவாகச் செல்ல வேண்டும். சு10ரியன் மறைவதற்கு முன் (அரஃபாவிலிருந்து) புறப்படுவது கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சு10ரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கியுள்ளார்கள். மேலும் உங்களுடைய ஹஜ் வழிபாட்டை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்! என்றும் கூறியுள்ளாhகள். (நூல் : பைஹகீ)
முஸ்தலிஃபா வந்தடைந்தவுடன் ஒரு பாங்கு, இரு இகாமத் கூறி மஃரிபை மூன்று ரகஅத்களாகவும் இஷாவை இரண்டு ரகஅத்களாகவும் ஜம்ஆக -இரண்டையும் ஒரே நேரத்தில்- தொழவேண்டும். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள். மஃரிபுடைய நேரத்திலோ, அல்லது இஷாவுடைய நேரம் வந்த பிறகோ ஆக, எந்நேரத்தில் முஸ்தலிஃபாவை வந்தடைந்தாலும் இவ்வாறே தொழ வேண்டும்.
பொதுமக்களில் சிலர் முஸ்தலிஃபா வந்தடைந்தவுடன் தொழுவதற்கு முன்னர் ஜம்ராவிற்காக கல்லெடுக்கச் செல்வதும் அவ்வாறு செய்வதுதான் முறையானது என நம்பிக் கொண்டிருப்பதும் தவறாகும். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவைக் கடந்து மினாவுக்குச் செல்லும் போதுதான் அவர்களுக்காகக் கற்களை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள். எந்த இடத்திலும் கற்களை எடுத்துக் கொள்ளலாம். முஸ்தலிஃபாவில்தான் கற்களை எடுக்க வேண்டும் என (மார்க்கத்தில்) குறிப்பாகக் கூறப்படவில்லை. மாறாக மினாவிலேயே கூட எடுத்துக் கொள்வதற்கு அனுமதியுள்ளது.
-நபி (ஸல்) அவர்களை பின்பற்றியவர்களாக- ஜம்ரத்துல் அகபாவிற்கு (10-ம் நாள்) எறியவேண்டிய ஏழு கற்களை -மட்டும்- அன்றைய தினம் எடுத்துக் கொள்வது சுன்னத்தாகும். பிறகுள்ள மூன்று நாட்களில் மூன்று ஜம்ராக்களுக்கும் எறியவேண்டிய கற்களை ஒவ்வொரு நாளும் 21 கற்கள் வீதம் மினாவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அக்கற்களைக் கழுவிக் கொள்வது மார்க்கத்தில் விரும்பத்தக்க செயலல்ல. மாறாக அவைகள் கழுவப்படாமல் எறியப் படவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களோ, அவர்களின் தோழர்களோ அவைகளை கழுவியதற்கு எந்த ஆதாரமுமில்லை. எறியப்பட்ட கற்களைக் கொண்டு மீண்டும் எறியக் கூடாது.
ஹஜ் செய்பவர், அன்றிரவு முஸ்தலிஃபாவில் தங்க வேண்டும். பெண்கள், சிறுவர்கள் மற்றும் அவர்களைப் போன்ற பலவீனமானவர்கள் அன்றிரவின் இறுதிப் பகுதியில் மினாவுக்குச் செல்ல அனுமதியுள்ளது. ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) போன்றோர் அறிவிக்கும் ஹதீஸ்களில் இந்த அனுமதி இடம்பெற்றுள்ளது.
சலுகை வழங்கப்பட்டுள்ள இவர்களைத் தவிர ஹஜ் செய்பவர்கள் அனைவரும் ஃபஜ்ர் தொழும் வரை கண்டிப்பாக முஸ்தலிஃபாவில் தங்கியாக வேண்டும். பிறகு மஷ்அருல் ஹராமில் கிப்லாவை முன்னோக்கியவர்களாக தங்கி (வானம்) நன்கு வெளுக்கும் வரை அதிகமாக திக்ர், தக்பீர் மற்றும் துஆக்களில் ஈடுபட வேண்டும். அங்கு இரு கைகளையும் உயர்த்தி துஆச் செய்வது விரும்பத்தக்க செயலாகும். முஸ்தலிஃபாவின் எந்தப் பகுதியில் தங்கினாலும் அதனை நிறைவேற்றியதாகிவிடும். மஷ்அருக்கருகில் தங்குவதோ, அல்லது அதன் மீது ஏறுவதோ கடமையல்ல. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள்
( . . وَوَقَفْتُ هَاهُنَا وَجَمْعٌ كُلُّهَا مَوْقِفٌ)
நான் இங்கு -மஷ்அரில்- தங்குகிறேன். மேலும் ஜம்உ அனைத்தும் தங்குமிடமே! என்றார்கள். (நூல் : முஸ்லிம்) ஜம்உ என்பது முஸ்தலிஃபாவின் மற்றொரு பெயராகும்.
(வானம்) நன்கு வெளுத்துவிட்டால் சு10ரியன் உதிப்பதற்கு முன்னர் மினாவுக்குப் புறப்பட வேண்டும். செல்லும் வழியில் அதிகமாக தல்பியாக் கூறவேண்டும். முஹஸ்ஸிர் என்ற பகுதியை மட்டும் சற்று விரைவாகக் கடப்பது விரும்பத்தக்க செயலாகும். மினாவில் ஜம்ரத்துல் அகபாவை வந்தடைந்து விட்டால் தல்பியாவை நிறுத்திவிட வேண்டும். பிறகு ஜம்ரத்துல் அகபாவை நெருங்கி ஏழு கற்களை ஒன்றன்பின் ஒன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறியவாறு கையை உயர்த்தி எறிய வேண்டும்.
பத்னுல்வாதி எனும் பகுதியில் கஃபா இடது புறம் இருக்குமாறும் மினா வலதுபுறமிருக்குமாறும் நின்று கொண்டு எறிவது விரும்பத்தக்க செயலாகும். ஏனெனில் இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள்.
பிற பகுதிகளிலிருந்து எறிந்து அது கல்லெறியப்படுமிடத்தில் விழுந்து விட்டால் அது நிறைவேறிவிடும். எறியப்படும் இடத்தில் விழுந்த கற்கள் அதிலேயே தங்கிட வேண்டும் என்ற நிபந்தனையில்லை. மாறாக கல்லெறியப்படுமிடத்தில் விழுவதுதான் நிபந்தனையாகும். எனவே கல், அது எறியப்படும் இடத்தில் பட்டு பிறகு வெளியே விழுந்துவிட்டால் -அறிஞர்களின் தெளிவான கூற்றின்படி- அது நிறைவேறி விடும். இதனை இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் ஷரஹுல் முஹத்தப் எனும் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
ஜம்ராவில் எறியும் கற்கள் விரல்களால் சுண்டி எறியப்படும் அளவில் அதாவது; மொச்சையை விடச் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும்.
கல்லெறிந்த பிறகு பிராணியை -ஹதியை- அறுக்கவேண்டும். அறுக்கும் போது
بِسْمِ اللهِ وَاللهُ أَكْبَرُ، أَللَّهُمَّ هَذَا مِنْكَ وَلَكَ
என்றுகூறி கிப்லாவை முன்னோக்கி அறுப்பது விரும்பத்தக்கச் செயலாகும். ஒட்டகத்தை அதன் இடது கால் கட்டப்பட்டவாறு நிற்கவைத்து அறுப்பதும், மாட்டையும் ஆட்டையும் அதன் இடதுபுறம் (படுக்கவைத்து) அறுப்பதும் சுன்னத்தாகும். கிப்லா அல்லாத திசைகளை முன்னோக்கி அறுப்பவர் சுன்னத்தை விட்டவராவார். எனினும் அவ்வாறு அறுக்கப்பட்ட ஹதீ நிறைவேறிவிடும். ஏனெனில் கிப்லாவை முன்னோக்கி அறுப்பது சுன்னத்து தானே தவிர கடமையல்ல.
தான் அறுத்த பிராணியிலிருந்து தானும் சாப்பிட்டு, பிறருக்கு அன்பளிப்பும் தர்மமும் செய்வது விரும்பத்தக்கச் செயலாகும்.
. . فَكُلُوْا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيْرَ
ஆகவே அ(றுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள்! கஷ்டப்படும் ஏழைக்கும் உண்ணக் கொடுங்கள்! என அல்லாஹு தஆலா கூறுகின்றான். (அல்குர்ஆன் 22:28)
-அறிஞர்களின் சரியான கூற்றின்படி- பலிப் பிராணியை அறுப்பதற்குரிய நேரம் தஷ்ரீக்கின் மூன்றாம் நாள் (பிறை 13-ம் நாள்) சு10ரியன் மறையும் வரை நீடிக்கிறது. இதனடிப்படையில் அறுப்பதன் கால அளவு 10-ம் நாளும் அதற்கு பிறகு மூன்று நாட்களுமாகும்.
பலிப் பிராணியை அறுத்த பிறகு தலை (முடி)யை மழித்துக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ வேண்டும். எனினும் மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். ஏனெனில் மழித்துக் கொள்பவருக்கு அருளுக்காகவும் பாவமன்னிப்பிற்காகவும் மூன்றுமுறை துஆச் செய்த நபி (ஸல்) அவர்கள், குறைத்துக் கொள்பவர்களுக்காக ஒரு முறைதான் பிரார்த்தித்தார்கள். தலையின் சில பகுதிகளை மட்டும் குறைத்துக் கொள்வது போதுமானதாகாது. மாறாக அனைத்துப் பகுதிகளையும் மழிப்பது போன்று அனைத்துப் பகுதிகளையும் குறைப்பதும் அவசியமாகும். பெண் தனது அனைத்து ஜடைகளின் கடைசிப் பகுதியில் விரல் நுனியளவோ அல்லது அதைவிடக் குறைவாகவோ முடியை வெட்டிக் கொள்ளவேண்டும்.
(10-ம் நாள்) ஜம்ரத்துல் அகபாவிற்குக் கல்லெறிந்து (முடியை) மழித்தோ அல்லது குறைத்தோ விட்டால் இஹ்ராம் அணிந்தவருக்கு இஹ்ராமினால் தடுக்கப்பட்டவைகளில் பெண்களை (இல்லறத்தை)த் தவிர மற்ற அனைத்தும் அனுமதியாகிவிடும். இந்த அனுமதிக்கு (தஹல்லுலுல் அவ்வல்) முதலாவது அனுமதி என்று பெயர். இவ்வாறு இஹ்ராமைக் களைந்து ஹலாலான பிறகு நறுமணம் பூசிக் கொண்டு தவாஃபுல் இஃபாழா -ஹஜ்ஜுக்குரிய தவாஃப்- செய்வதற்காக மக்காவுக்குச் செல்வது சுன்னத்தாகும்.
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்கு முன்பும் (துல்ஹஜ் 10-ம் நாள்) இஹ்ராமைக் களைந்து, கஃபாவைத் தவாஃப் செய்வதற்கு முன்பும் நான் அவர்களுக்கு நறுமணம் பூசிவிட்டேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
இந்த தவாஃபிற்கு இஃபாழா என்றும் ஜியாரா என்றும் பெயர். ஹஜ்ஜின் அடிப்படைக் கடமைகளில் இந்த தவாஃபும் ஒன்றாகும். இதனை செய்யாவிட்டால் ஹஜ் நிறைவேறாது. இந்த தவாஃபைப் பற்றியே இவ்வசனத்தில் கூறப்படுகிறது.
ثُمَّ لْيَقْضُوْا تَفَثَهُمْ وَلْيُوْفُوْا نُذُوْرَهُمْ وَلْيَطَّوَّفُوْا بِالْبَيْتِ الْعَتِيْقِ
பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தறித்து, குளித்து இஹ்ராமை களைவதன் மூலம்) தங்கள் அழுக்குகளை அவர்கள் நீக்கிக் கொள்ளவும்! தம் நேர்ச்சைகளையும் அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளவும்! (ஹஜ்ஜின் அடிப்படைக் கடமையான தவாஃபை நிறைவேற்ற) பூர்வீக ஆலயமான (கஃபா எனும்) வீட்டையும் அவர்கள் (தவாஃப் செய்ய) சுற்றி வரவும்! (அல்குர்ஆன் 22:29)
தவாஃபை நிறைவேற்றி, அதற்குரிய இரண்டு ரகஅத்களை மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் தொழுத பிறகு, தமத்துஃ ஹஜ் செய்பவராக இருந்தால் ஸஃபா மர்வாவுக்கிடையில் ஸயீ செய்யவேண்டும். இது ஹஜ்ஜுக்குரிய ஸயீயாகும். இதற்கு முன்னர் செய்த ஸயீ உம்ராவிற்குரியதாகும்.
(தமத்துஃ செய்பவர்) ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் ஒரு முறை மட்டும் ஸயீ செய்வது போதுமானதாகாது. (மாறாக இரண்டு ஸயீ செய்யவேண்டும்) என்பதே அறிஞர்களின் கூற்றுக்களில் சரியான கூற்றாகும். ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் சென்ற தனது ஹஜ் பயணத்தைப் பற்றிக் கூறும் போது :
. . எவருடன் பலிப்பிராணி உள்ளதோ அவர் தனது ஹஜ்ஜுடன் உம்ராவையும் இணைத்து (கிரானாக) தல்பியா கூறிக்கொள்ளட்டும்! பிறகு அவ்விரண்டிலிருந்தும் (10-ம் நாளன்று) ஹலாலாகும் வரை அவர் இஹ்ராமைக் களையக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனடிப்படையில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியவர்கள் கஃபாவை தவாஃப் செய்து ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸயீ செய்தார்கள். பிறகு இஹ்ராமைக் களைந்துவிட்டார்கள். அதன்பின் மினாவிலிருந்து திரும்பிய பிறகு ஹஜ்ஜுக்காக மற்றொரு முறை தவாஃப் சுற்றினார்கள். . . என்று கூறினார்கள். (நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தவர்களின் ஹஜ் செய்முறைகளை கூறிவந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அதன்பின் மினாவிலிருந்து திரும்பிய பிறகு ஹஜ்ஜுக்காக மற்றொரு முறை தவாஃப் சுற்றினார்கள். . என்று கூறியுள்ளார்கள். இங்கு அவர்கள் தவாஃப் என்று கூறியது, ஸஃபா, மர்வாவுக்கிடையில் சுற்றியதையே கருத்தில் கொண்டு கூறியுள்ளார்கள் என்பதே இந்த ஹதீஸின் விரிவுரையின் கூற்றுக்களில் மிகச் சரியான கூற்றாகும்.
மற்றொரு முறை தவாஃப் செய்தார்கள் என்ற வார்த்தையை தவாஃபுல் இஃபாழாவை கருத்தில் கொண்டே கூறியுள்ளார்கள் என்று கூறுவோரின் கூற்று சரியானதல்ல. ஏனெனில் தவாஃபுல் இஃபாழா என்பது (மூன்று வகை ஹஜ்ஜில் எதனைச் செய்தாலும்) அனைவரும் நிறைவேற்ற வேண்டிய அடிப்படைக் கடமையாகும். அதனை அவர்கள் அனைவரும் நிறைவேற்றி யுமிருந்தனர்.
எனவே ஆயிஷா (ரலி) அவர்கள் தனது இவ்வார்த்தையின் மூலம் தமத்துஃ செய்பவர்கள் மட்டும் பிரத்தியேகமாக நிறைவேற்றிய ஒன்றை கூற நினைத்துள்ளார்கள். அது: மினாவிலிருந்து திரும்பிய பிறகு ஹஜ்ஜை முழுமையாக்கு வதற்காக மற்றொரு முறை ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸயீயிக்காகச் சுற்றினார்கள் என்பதே! -இறையருளால்- இதுவே மிகத் தெளிவானதும் அறிஞர்களில் பெரும்பாலானோரின் கூற்றுமாகும்.
இக்கருத்தே சரியானது என்பதை -அறிவிப்பாளர் வரிசையுடன்- பாடத் தலைப்பாக புகாரியில் இடம்பெற்றுள்ள இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றும் உறுதிப்படுத்துகிறது :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தமத்துஃ ஹஜ் பற்றி வினவப்பட்டது. அதற்கவர்கள், ஹஜ்ஜத்துல் விதாவில் முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் நபி (ஸல்) அவர்களின் மனைவியரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள். நாங்களும் இஹ்ராம் அணிந்திருந்தோம். நாங்கள் மக்கா வந்தடைந்ததும் பலிப்பிராணியை -தன்னுடன் கொண்டுவந்து, அதனை ஹரமில் அறுப்பதற்கு அடையாளமாக அதன் கழுத்தில் எதையேனும்- தொங்கவிட்டவர்களைத் தவிர மற்றவர்கள் ஹஜ்ஜுக்காக அணிந்த இஹ்ராமை உம்ராவிற்காக மாற்றிக் கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே நாங்கள் தவாஃப் செய்து, ஸஃபா மர்வாவை ஸயீ செய்து . . உம்ராவை நிறைவேற்றினோம். பிறகு இல்லறத்தில் ஈடுபட்டோம், (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்தோம்.
பலிப்பிராணியின் -கழுத்தில் அடையாளத்தைத்- தொங்க விட்டவர், அப்பிராணி அதன் இடத்தை அடையும் வரை -அது அறுக்கப்படும் வரை- அவர் இஹ்ராமைக் களையக் கூடாது என்றும் கூறினார்கள்.
பிறகு எட்டாம் நாள் இரவு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ள கட்டளையிடப்பட்டோம். இவ்வாறு வழிபாடுகளை நிறைவேற்றிய பிறகு -மக்காவிற்கு- வருகை தந்து கஃபாவை தவாஃப் செய்தோம். ஸஃபா, மர்வாவிற்கிடையில் ஸயீ செய்தோம்.
இச்செய்தியின் வாயிலாக, தமத்துஃ செய்பவர் இரண்டு ஸயீ செய்யவேண்டும் என்பது மிகத் தெளிவாகிறது. - அல்லாஹ் மிக அறிந்தவன் -
நிச்சயமாக நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஸஃபா, மர்வாவிற்கிடையில் முதலாவதாக ஒருமுறை சுற்றியதைத் தவிர (பிறகு) சுற்றவில்லை என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. இது தங்களுடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்த நபித் தோழர்களின் செயல்களைப் பற்றிய செய்தியாகும். ஏனெனில் அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டிலிருந்தும் -10-ம் நாள்- இஹ்ராமைக் களையும் வரை நபி (ஸல்) அவர்களுடன் இஹ்ராமோடு இருந்தனர். நபி (ஸல்) அவர்களும் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவிற்காகவும் (கிரானாக) இஹ்ராம் அணிந்திருந்தார்கள். பலிப்பிராணியைக் கொண்டுவந்தவர்கள் ஹஜ்ஜுடன் உம்ராவிற்கும் (கிரானாக) தல்பியாக் கூறிக் கொள்ளுமாறும் அவர்கள் (10-ம் நாளன்று) இரண்டிலிருந்தும் ஒன்றாக இஹ்ராமைக் களையும் வரை -அதற்கு முன்னர்- இஹ்ராமைக் களையக் கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.
ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒன்றாக இணைத்து (கிரானாக) ஹஜ் செய்பவர் ஒரு முறை மட்டும் ஸயீ செய்யவேண்டும் என்பதையே மேற்கூறப்பட்ட ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸும் பிற ஸஹீஹான ஹதீஸ்களும் அறிவிக்கின்றன.
இதுபோன்றே (இஃப்ராத் முறையில்) ஹஜ் மட்டும் செய்பவரும் 10-ம் நாள்வரை இஹ்ராமுடனே இருந்து, ஒரு முறை மட்டுமே ஸயீ செய்யவேண்டும். கிரான் ஹஜ் செய்பவரும் இஃப்ராத் செய்பவரும் மக்கா வருகை தந்தவுடன் செய்த தவாஃபுக்குப் பிறகு ஸயீ செய்திருந்தால் தவாஃபுல் இஃபாழாவுக்குப் பிறகுள்ள ஸயீக்கும் அதுவே போதுமானதாகிவிடும்.
இதுவே ஆயிஷா (ரலி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இரு ஹதீஸ்களையும் மேற்கூறப் பட்டுள்ள ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸையும் ஒன்றிணைக்கும் முடிவாகும். இதன் மூலம் ஹதீஸ் களுக்கிடையில் தென்படும் முரண்பாடுகள் நீங்கி, அனைத்து ஹதீஸ்களின் அடிப்படையில் செயல்படவும் முடியும்.
இவ்வொருங்கிணைப்பை உறுதிப்படுத்தும் மற்றொரு விஷயம் யாதெனில் ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய இருவர் அறிவிக்கும் ஹதீஸும் ஸஹீஹான ஹதீஸ்களாகும். இவ்விரண்டும் தமத்துஃ செய்பவர் இரண்டு ஸயீ செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மேலோட்டமாக அதனை (ஸயீயை) மறுக்கிறது. சட்டக்கலையிலும் ஹதீஸ்கலையிலும் பின்பற்றப்படும் விதிகளில், செய்யவேண்டியதில்லை என்பதை விட செய்யவேண்டும் என்று வந்துள்ள கூற்றுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.
அல்லாஹ்வே சரியான கூற்றிற்கு வழிகாட்டுபவன். அல்லாஹ்வைக் கொண்டே தவிர (தீமையை விட்டும்) விலகவோ, (நன்மையைச் செய்ய) சக்தி பெறவோ முடியாது.
Labels:
உம்ரா சட்டம்,
ஹஜ்
Subscribe to:
Posts (Atom)