ஒரே ஆண் பெண்ணிலிருந்து தான் இந்த உலக மக்கள் அனைவரும்
தோன்றினார்கள். இவர்களில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
இறைவனுக்குப் பிடித்தமான வாழ்வை வாழ்வதின் மூலமே இறைவனிடத்தில் நெருங்கமுடியும்.
Showing posts with label பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள். Show all posts
Showing posts with label பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள். Show all posts
Wednesday, 31 October 2012
பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா?
பெண்கள் அறுப்பதற்கு எவ்வித தடையும்
ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள்,
ஒரு பெண் அறுத்ததை
அங்கீகரித்துள்ளார்கள்.
ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.
ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
ஒப்பாரி வைக்கக்கூடாது
துக்கம் மேலிடும் போது சப்தமிட்டு
ஒப்பாரி வைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை
செய்துள்ளார்கள். ஒப்பாரி வைக்கக்கூடாது
என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம்
உறுதிமொழி வாங்கினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)
நூல் : புகாரி (1306)
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)
நூல் : புகாரி (1306)
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?
பெண்கள் வேலைக்காக வெளியே செல்லும் போது
அன்னிய ஆண்களுடன் தனித்திருக்க
வேண்டிய நிலையும் அவர்களுடன் பழக வேண்டிய
நிலையும் ஏற்படுகிறது. இதை
இஸ்லாம் தடுத்திருக்கிறது.
ஆண்களால் பெண்கள் அதிகமாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
ஆண்களால் பெண்கள் அதிகமாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
கோ எஜ‚கேஷன் கூடுமோ?
கல்லூரிகளில்
ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒரே வகுப்பறையில் பயிலும் கல்வி முறைக்கு கோ
எஜ‚கேஷன் என்று சொல்லப்படுகிறது. ஆணும் பெண்ணும் கல்வியை வளர்த்துக்கொள்வதற்கு இஸ்லாத்தில் பரிபூரண சுதந்திரம்
உண்டு. ஆனால் கல்வி என்றப் பெயரில் ஒழுக்கங்கெட்டு நடப்பதைத் தான் இஸ்லாம்
தடுக்கிறது.
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லலாமா?
மரண பயத்தையும் மறுமை சிந்தனைûயும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்லிலித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்'' என்று சொல்'' என்றார்கள்.
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
பெண்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கலாமா?
இஃதிகாஃப் என்பதற்கு தங்குதல் என்பது
பொருள். இறையில்லத்தில் இறைவனை வணங்குவதற்காக
மாத்திரம் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படுகிறது. இவ்வணக்கத்தை செய்பவர்கள் அவசியமானத் தேவைகளுக்குத் தவிர மற்ற விஷயங்களுக்கு பள்ளியை விட்டும் வெளியே செல்வதை
தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
பெண்கள் வெளியே செல்லுதல்
பெண்கள்
கடைத்தெருக்களுக்குச் செல்லலாமா?
எந்தத் தேவையும் இல்லாமல் பெண்கள் கடைத்தெருக்களில் சுற்றித்திரியக்கூடாது.
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
அல்குர்ஆன் (33 : 33)

ஜீவனாம்சம்
விவாகரத்துக்குப் பின் மவைவிக்கு
மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுப்பதை இஸ்லாம்
ஏற்கவில்லை. பெண்களுக்கு அநீதி
இழைப்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு
நன்மை செய்யவும், இதைவிடச் சிறந்த
ஏற்பாட்டைச் செய்யவுமே இதை
நிராகரிக்கின்றது.
பெண்களுக்கு இரண்டு வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது. ஒன்று திருமணத்தின் போது கணிசமான தொகையை மஹராகப் பெற்று அவள் தனது பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து ஒரு பெருந்தொகையை, சொத்தை ஜமாஅத்தினர், அல்லது இஸ்லாமிய அரசு அவளுக்குப் பெற்றுத் தர வேண்டும். திருக்குர்ஆன் 2:241 வசனம் இதைத் தான் கூறுகிறது.

இத்தா
சில முஸ்லிம்கள்
கணவன் இறந்துவிடும் போது மனைவியாக இருந்தவளை இத்தா என்ற பெயரில் நான்கு
மாதம் பத்து நாட்கள் இருட்டறையில் அடைத்து
கொடுமைப்படுத்துகின்றனர். மேலும்
வெள்ளைநிற ஆடையை அணிவிக்கின்றனர்.
நற்காரியங்களில் அவர்கள் வருவது அபசகுணம்
என்று கூறி ஒதுக்கி வைக்கின்றனர்.
இது குற்றமாகும். இத்தா பற்றிய சரியான
விளக்கம் இல்லாததே இதற்குக் காரணம்.
எனவே அது பற்றிய விபரங்களை காண்போம்.
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
தலாக் உடைய சட்டங்களின் சுருக்கம்
ஒரு பெண்ணிற்கு தன் கணவனைப்
பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும்.
அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாலோ அதைக் கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்கு கட்டளையிட வேண்டும்.
அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாலோ அதைக் கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்கு கட்டளையிட வேண்டும்.
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
திருமணச் சட்டங்கள்
திருமணத்திற்கு பெண்ணுடைய சம்மதம்
தனக்குப் பிடித்தக் கணவனை தன் விருப்பப்படி தேர்வு செய்வதற்கு பெண்ணிற்கு முழுமையாக இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தனக்குப் பிடித்தக் கணவனை தன் விருப்பப்படி தேர்வு செய்வதற்கு பெண்ணிற்கு முழுமையாக இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
நக பாலீஷ், நறுமணம், ஒட்டுமுடி, மொட்டை, பச்சை குத்துதல் சட்டங்கள்
நக பாலீஷ் பூசலாமா?
ஒரு பொதுவான அடிப்படையை விளங்கிக்கொண்டால் பல கேள்விகளுக்குரிய பதில்கள் நமக்குக் கிடைத்துவிடும். மார்க்க சட்டத்திட்டங்களுக்கு இடையூராக அமையாத அலங்காரப்பொருட்கள் எதை வேண்டுமானலும் நாம் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை. மார்க்கத்தை கடைபிடிப்பதற்கு இடஞ்சலாக அமைந்த அலங்காரப் பொருட்களை பயன்படுத்துவது கூடாது.
ஒரு பொதுவான அடிப்படையை விளங்கிக்கொண்டால் பல கேள்விகளுக்குரிய பதில்கள் நமக்குக் கிடைத்துவிடும். மார்க்க சட்டத்திட்டங்களுக்கு இடையூராக அமையாத அலங்காரப்பொருட்கள் எதை வேண்டுமானலும் நாம் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை. மார்க்கத்தை கடைபிடிப்பதற்கு இடஞ்சலாக அமைந்த அலங்காரப் பொருட்களை பயன்படுத்துவது கூடாது.
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
பெண்களுக்கு கத்னா செய்யலாமா?
ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை
அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள்
விந்தோ சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு
சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை.
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
காது மூக்கு குத்தலாமா?
காது மூக்கு குத்தக்கூடாது
என்று தெளிவாக எந்த ஒரு தடையும் வரவில்லை.
மாறாக அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம்
செய்யக்கூடாது என்று மார்க்கத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளை
கிழிப்பதும் அல்லாஹ்வின் படைப்பில்
மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல்
என்று குர்ஆன் கூறுகிறது.
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
ஆடைச் சட்டம்
காவிநிற ஆடையை
அணியலாம்
காவிநிறத்தை அதாவது குங்குமப்பூ நிறத்தை ஆண்கள் பயன்படுத்துவது கூடாது. பெண்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
ஆண்கள் (தங்களது மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (5846)
காவிநிறத்தை அதாவது குங்குமப்பூ நிறத்தை ஆண்கள் பயன்படுத்துவது கூடாது. பெண்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
ஆண்கள் (தங்களது மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (5846)
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்க்கலாமா?
இறந்த பெண்ணின்
முகத்தை ஆண் பார்ப்பதற்கும் இறந்துவிட்ட ஆணின் முகத்தை பெண்
பார்ப்பதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. மற்றவர்களை ஆசை உணர்வுடனும் தவறான எண்ணத்துடனும் பார்ப்பது தான்
தடைசெய்யப்பட்டுள்ளது. நபியவர்களின் காலத்தில் பெண்கள் தங்கள் முகத்தை
திறந்திருந்தார்கள் என்பதை
பல ஹதீஸ்களில் காணுகிறோம்.
உயிருடன் இருக்கும் போது எம்முறையில் பார்ப்பது
உயிருடன் இருக்கும் போது எம்முறையில் பார்ப்பது
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
ஹிஜாப் அணிதல்
பெண்கள்
முகத்தையும் மணிகட்டு வரை இரு கைகளையும் பாதத்தையும் வெளிப்படுத்துவதற்கு
மார்க்கத்தில் அனுமதி தரப்பட்டுள்ளது. இதைத் தவிர மற்ற அனைத்து
உறுப்புக்களையும் அண்ணிய ஆடவரிடமிருந்து பெண்கள் அவசியம் மறைத்துக்கொள்ள
வேண்டும். அவ்வாறு மறைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆடை எந்த நிறத்தில்
வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் தைக்கப்பட்டிருக்கலாம்.
இதற்கு அரபியில் ஹிஜாப் என்று சொல்லப்படுகிறது. நமது வழக்கில் பர்தா
என்றும் புர்கா என்று கூறப்படுகிறது.
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
தொழுகைச் சட்டங்கள்
உளூ செய்ய வேண்டிய நேரங்கள்
குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் முன்னால் உளூ செய்துகொள்ள வேண்டும். இது கட்டாயம் அல்ல. செய்வது சிறப்பு.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் உமர் பின் அல்கத்தாப் (ர-) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்'' உளூ செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி (290)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு எற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும்போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் ; முஸ்லிம் (513)
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
இல்லற வாழ்க்கை
மறு உடலுறவுக்கு முன்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் தம் இல்லாளிடம் பாலுறவு கொண்டுவிட்டுப் பின்னர் மீண்டும் (உறவுகொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம் (518)
Labels:
பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்
Subscribe to:
Posts (Atom)