Social Icons

Showing posts with label திருமணச்சட்டம். Show all posts
Showing posts with label திருமணச்சட்டம். Show all posts

Monday, 22 October 2012

திருமணச்சட்டம்

ஒழியட்டும் வரதட்சணை!

மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்களே அன்றி, மனிதர்களுக்கு ஒருபோதும் அல்லாஹ் அநீதி இழைப்பதில்லை" - (அல்குர்ஆன் 010:044).

இஸ்லாம் மேன்மையாக மதிக்கும் திருமண நிகழ்வின் ஆரம்பத்திலேயே இஸ்லாமிய வழிகாட்டுதல்களைக் கைவிட்டு, பிறமதக் கலாச்சாரத்திலிருந்து கடன் வாங்கிய பழக்க வழக்கங்களை நுழைத்து, நபி(ஸல்) அவர்களின் சுன்னாவின்படி அமைய வேண்டிய தங்களின் திருமண வாழ்வின் துவக்கத்தைப் பெரும்பாலான முஸ்லிம்கள் கண்ணை மூடிக் கொண்டு ஜாஹிலிய்யத்திற்குத் தாரை வார்த்துவிட்டு ஆரம்பிக்கின்றனர். அவ்வாறெனில் அவர்களின் திருமணத்திற்குப் பிந்தைய வாழ்வு எவ்வகையில் இறைவனுக்கு உவப்பான, மறுமை வெற்றிக்கான வழியில் அமையும்? எனச் சிந்திக்க வேண்டியது இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய முஸ்லிம்களுக்குக் கடமையாகும்.


இஸ்லாத்தில் கட்டாயத் திருமணம் இல்லை!

உலகம் முழுதும் வாழும் உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே திருமணம் செய்து கொண்டு ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் நடத்துகின்றனர். அந்த 'மனிதச் சடங்கு' நமக்கெதற்கு என்ற போக்கில், தளை அறுத்த சில நவ நாகரீக மேற்கத்தியர்களும் எல்லாவற்றிலும் மேற்குப் பார்த்துப் பின்பற்றி ஒழுகும் சில ஆசியரும் அண்மைக்காலமாக, "திருமணம் என்பது தனிமனித சுதந்திரத்துக்குத் தளை" என்பதாகக் 'கண்டு பிடித்து' அதைப் பின்பற்றிப் 'புரட்சி'யும் செய்து வருகின்றனர். மற்றும் சிலர் திருமணம் என்பது பெண்களின் மீதான அடக்குமுறைக்கு அடித்தளம் இடும் சமூகக் கட்டுப்பாடு என பெண்ணீயப் புரட்சியும் செய்கின்றனர்.

திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்?

எல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இறைவன் படைத்து அவற்றுள் இரத்த பந்தங்கள், சொந்தங்கள் என்று பல பந்தங்களை ஏற்படுத்தி நம்மை இணைத்து இருப்பது மிகவும் அற்புதமான மற்றும் ஆறுதலான விஷயம்.

இப்படிப்பட்ட பந்தத்தில் கணவன் - மனைவி என்ற உறவு இருக்கிறதே சுபஹானல்லாஹ்!!! எவ்வளவு ஒரு அழகிய உறவானதாக இறைவன் நமக்களித்துள்ளான். இந்த அழகிய பந்தத்தை நிக்காஹ் என்ற கடுமையான திருமண ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்திக் கொள்கிறோம்.
குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்