Social Icons

Showing posts with label தொழுகை. Show all posts
Showing posts with label தொழுகை. Show all posts

Thursday, 22 November 2012

கஅபாவை முன்னோக்குதல்:


தொழுபவர் எந்தத் திசையை நோக்கியும் தொழக் கூடாது. மக்கா நகரில் உள்ள கஅபா என்ற ஆலயம் இருக்கும் திசை நோக்கித் தான் தொழ வேண்டும். கஅபா ஆலயம் தமிழகத்தின் வடமேற்குத்திசையில் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க பல நவீன சாதனங்களும் உள்ளன.

Wednesday, 21 November 2012

தொழுகை


தொழுகையின் வகைகள் 
கூட்டுத் தொழுகை
உபரியான வணக்கங்கள் 

தொழுகைச் சட்டம் குறித்த கேள்விப்பதில்கள்

தொழுகைச் சட்டம் PDF வடிவில் Download செய்ய 

Monday, 19 November 2012

தண்ணீரின் சட்டங்கள்

"என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: மாலிக்குப்னுல் ஹுவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூற்கள்: புகாரி, முஸ்லிம்

தொழுகையின் அவசியம்

இஸ்லாமிய மார்க்கம் ஐந்து காரியங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவை: வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனைத் தவிர எவருமில்லை. முகம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் இறைவனின் அடியாரும் தூதருமாவார்கள் என உறுதியாக நம்புவதும், தொழுகையை நிலை நாட்டுவதும், நோன்பு நோற்பதும், ஜகாத் கொடுப்பதும், சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வதுமாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்

உளூச் செய்யத் துவங்குதல்

பிஸ்மில்லாஹ் கூறித் உளூச் செய்யத் துவங்குதல்

بســـم الله நூல்கள்: அபூதாவூத்,இப்னு மாஜ்ஜா, அஹ்மத்.

தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்யும் முறை

நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது இரண்டு கைகளையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவி, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். அப்துல்லாஹ் பின் ஸைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத்,, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்

Sunday, 4 November 2012

உளுவை முறிக்கும் காரியங்கள்

1. முன் பின் துவாரத்தினால் ஏதாவது வெளியாகுதல்.
அதாவது மலம், ஜலம், பின் துவாரத்திலிருந்து காற்று மற்றும் மணி, மதி, வதி இவைகள் வெளியாகுவது உளுவை முறிக்கும்.

உங்களில் ஒருவர் சிறு தொடக்காகி விட்டால் அவர் உளு செய்யும் வரைக்கும் அல்லாஹ் அவரின் தொழுகையை ஏற்றுக் கொள்ளமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

Thursday, 1 November 2012

தொழுகையில் இமாமை முந்துதல்

மனிதன் இயற்கையிலேயே அவசரக்காரனாவான்.
அல்லாஹ் கூறுகிறான்:
மனிதன் (பொறுமை இழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:11)
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

வெறுக்கத்தக்க வாடையுடன் பள்ளிக்கு வருதல்

வெங்காயம் பூண்டு மற்றும் இதுபோன்ற வெறுக்கத்தக்க வாடை தரும் பொருட்களை சாப்பிட்டுவிட்டு அதன் வாடையுடன் பள்ளிவாயிலுக்கு வருவது கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்.

Saturday, 20 October 2012

தொழுகையின் குறுக்கே நடக்கக்கூடாது


njhOJ nfhz;bUg;gtUf;F Kd; (FWf;Nf) elf;ff; $batH> jd;kPJ vd;d jz;lid cz;L vd;gij mwpthuhdhy;> ehw;gJ (jhkjpj;J) epd;W tpLtJ (njhOgtuhd) mtUf;F Kd; (FWf;Nf) elg;gij tpl mtUf;F kpfr; rpwe;jjhFk; vd my;yh`;tpd; J}jH (]y;) mtHfs; $wpdhHfs;.
`jP]py; ,lk; ngw;Ws;s ehw;gJ vd;gjd; fUj;J ehw;gJ ehl;fs;> my;yJ 40 khjq;fs; my;yJ 40 tUlq;fs; vdf; $wpdhHfsh vd;gJ vdf;Fj; njhpatpy;iy vd (,e;j `jP]pd; mwptpg;ghsuhfpa) mGe;e];U $wpAs;shH.

தொழுகும் முறை

1. xStpw;F mtrpakhdJ vJ?
xStpw;F mtrpakhdJ epa;aj;.

2. epa;aj; vd;why; vd;d?
epa;aj; vd;w mugp thHj;ijf;F kdjhy; epidj;jy; vd;W nghUs;.

3. ,];yhj;ij Vw;w gpd; Kjd;Kjyhf filgpbf;f Ntz;ba flik vJ?
,];yhj;ij Vw;w gpd; Kjd;Kjyhf filgpbf;f Ntz;ba flik njhOif

4. njhOiff;F kpfTk; mtrpakhdJ vJ?
njhOiff;F kpfTk; mtrpakhdJ xS.

Friday, 19 October 2012

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்


1. பாங்கு சப்தம் கேட்ட பின்னர் தக்க காரணமின்றி ஜமாஅத்துடன் கடமையான தொழுகையை தொழாமல் பள்ளியிலிருந்து வெளியேறுவது இஸ்லாமிய ஒழுக்கங்களைச் சார்ந்ததல்ல.   
. 1521 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ عَنْ أَبِى الشَّعْثَاءِ قَالَ كُنَّا قُعُودًا فِى الْمَسْجِدِ مَعَ أَبِى هُرَيْرَةَ فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَامَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ يَمْشِى فَأَتْبَعَهُ أَبُو هُرَيْرَةَ بَصَرَهُ حَتَّى خَرَجَ مِنَ الْمَسْجِدِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ -صلى الله عليه وسلم-..مسلم
: நாங்கள் அபூஹுரைரா(ரலி)யுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம் அப்போது முஅத் தின் பாங்கு கூறினார், ஒரு மனிதர் பள்ளியிலிருந்து எழுந்து நடந்து சென்றார், அபூ ஹுரைரா (ரலி) அவரின் பக்கமாக தனது பார்வை செலுத்தினார்கள், அவர் பள்ளியி லிருந்து வெளியேறி வெளியேறி விட்டார், அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார் என்று கூறியதாக அபூ ஷஅதா(ரலி) கூறினார்கள். நூல்: முஸ்லிம், 1521  

Thursday, 18 October 2012

பெருநாள் தொழுகை

மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.

நபி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு (sports day) ஆக்கிக்கொண்டனர். இதனை செவியுற்ற நபி நீங்கள் ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தேர்வு செய்துள்ளான், அதில் ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள் என்றார்கள். இந்த நபி மொழியை மாலிக்(ரலி) அறிவிக்க அபூதாவூத், பைஹகீ, நஸயீ என்ற நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

Wednesday, 17 October 2012

உபரியான வணக்கங்கள்

 அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக இந்த மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு தண்டனையும் வழங்குகின்றான்.

    நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி (صلى الله عليه وسلم அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள்,  “இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்” என்றார்கள். உடனே அவர், “அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?” என்றார். அதற்கு அவர்கள்,”நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை”என்றார்கள்

    அடுத்து, “ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் “என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். உடனே அவர்,அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?” என்றார். அதற்கு அவர்கள், “நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள்.

பிரயாணத் தொழுகை

   கடமையான தொழுகையை குறித்த நேரத்தில் தொழவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. எனினும் பிரயாணிகளுக்கு அல்லாஹ் சில சலுகைகளை தந்துள்ளான். இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். அதைப் போன்று நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்தாக சுருக்கி தொழலாம்.    சுமார் 25 கிலோமீட்டர் தொலைவுக்குப் பிரயாணம் செய்தாலே ஜம்வு (இருநேரத் தொழுகையை சேர்த்து தொழுதல்) கஸ்ர் (நான்கு ரக்அத்கள் தொழுகையை இரண்டு ரக்அத்களாக குறைத்து தொழுதல்) செய்யலாம்.
   “நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் கஸ்ர் செய்வார்கள்” அறிவிப்பவர்: அனஸ்  رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத்

வித்ரு தொழுகை

   “நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவின் முற்பகுதியிலும் இரவின் நடுப்பகுதியிலும் இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுதார்கள். ஸஹர் நேரம் வரை வித்ரு தொழுதுள்ளார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, நஸயீ    “இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
   “உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்
    “வித்ரு தொழுகை அவசியமானது. எவர் ஏழு ரக்அத்கள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஐந்து ரக்கத்துகள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்

கிரகணத் தொழுகை

    நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இருந்தோம். அப்போது சூரிய கிரகணம் ஏற்ப்பட்டது. உடனே, நபி صلى الله عليه وسلم அவர்கள் மேலாடை இழுபட(வேகமாக)பள்ளிக்குள் நுழைந்தார்கள் கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்துகள் தொழவித்தார்கள். எவரது மரணத்துக்காகவும் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவே அவ்விரு கிரகணங்களையும் காணும் போது தொழுங்கள். உங்களுக்கு ஏற்ப்பட்டது விலகும் வரை துஆச் செய்யுங்கள்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி) நூல்:புகாரி
    நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகைக்கு தாயாராகுங்கள்) என்று பிரகடனம் செய்யப்பட்டது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமிர் நூல்:புகாரி, முஸ்லிம்
    பயணத்திலிருந்து வந்ததும் தொழுகை
    அல்லாஹ்வின் தூதர்
صلى الله عليه وسلم அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளி வாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்துகள்  தொழுவார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக்(ரலி) நூல்: புகாரி

ஜும்ஆ, தஹிய்யத்துல் உலூ, தஹிய்யத்துல் மஸ்ஜித், லுஹா தொழுகை,

ஜும்ஆவுக்குப் பின் சுன்னத்
இப்னு உமர்(ரலி) அவர்கள் ஜும்ஆ தொழுகையை நீட்டித் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்களை தன் வீட்டில் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் இதை செய்தார்கள் என்றும் கூறுவார்கள். அறிவிப்பவர்: நாபிஃ நூல்: அபூதாவூத்صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  நூல்: முஸ்லிம், திர்மிதி,  நஸயீ, அபூதாவூத்
    உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுதால் அதன் பின்பு நான்கு ரக்அத்துகள் தொழுவாராக என்று அல்லாஹ்வின்  தூதர்
    நபி صلى الله عليه وسلم அவர்கள் பள்ளியில் தொழுதால் நான்கு ரக்அத்தும், வீட்டில் இரண்டு ரக்அத்தும் தொழுவார்கள் என அபூதாவூதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  
    இரண்டிரண்டாகத் தொழுதல்
    இரவிலும் பகலிலும் இரண்டிரண்டாகத் தொழ வேண்டுமென்று நபி
صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்:நஸயீ,தாரமீصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரிصلى الله عليه وسلم அவர்கள் கேட்டார்கள்.صلى الله عليه وسلم அவர்கள் அமர்ந்திருக்கும் போது நான் பள்ளிக்குள் நுழைந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், “நீ உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க எது தடையாக அமைந்தது” என்று கேட்டார்கள்.صلى الله عليه وسلم அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ
    உங்கள் இல்லங்களில் சில தொழுகைகளைத் தொழுங்கள். அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள் என நபி

    தஹிய்யத்துல் உலூ
    ஒரு ஃபஜ்ருத் தொழுகையின் போது பிலால் (ரலி)யிடம் “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்போசையை சுவர்க்கத்தில் நான் கேட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர்
    அதற்கு பிலால் (ரலி) “இரவிலோ பகலிலோ நான் உலூ செய்தால் அவ்வுலூவின் மூலம் நான் தொழ வேண்டும் என்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி

    தஹிய்யத்துல் மஸ்ஜித்
    மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர்
    அதற்கு,”நான் அல்லஹ்வின் தூதரே! நீங்கள் உட்கார்ந்து இருப்பதைக் கண்டேன். மக்களும் உட்கார்ந்து இருக்கின்றார்கள். (அதனால் நான் உட்கார்ந்து விட்டேன்)” என்று பதில் சொன்னேன்.
    உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்ததும்  இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர்

    லுஹா தொழுகை
    உங்களில் ஒருவர் தனது எலும்பு மூட்டுகளுக்காக தர்மம் வழங்க வேண்டும்.
صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி) நூல்: அபூதாவூத்
    (நீங்கள் கூறுகின்ற) ஒவ்வொரு சுபுஹானல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு லாயிலாஹ இல்லல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் தர்மமாகும். நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். முற்பகல் நேரத்தில் இரண்டு ரக்ஆத்துகள் தொழுவது இவை அனைத்திற்கும் போதுமான தாகும்  என்று நபி
    யார் உலூச் செய்தவராக கடமையான தொழுகைக்குப் புறப்பட்டு வருகின்றாரோ அவரது கூலி இஹ்ராமுடன் ஹஜ் செய்தவரின் கூலியை போன்றதாகும். யார் லுஹா தொழுகையைத் தவிர வேறு எதற்காகவும் தன்னை சிரமப் படுத்திக் கொள்ளாமல் புறப்பட்டு வருகிறாரோ அவரது கூலி உம்ரா செய்தவரின் கூலியைப் போன்றதாகும் இரு தொழுகைகளுக்கிடையே எவ்வித தீமையான காரியமும் இல்லாமல் ஒரு தொழுகைக்குப்பின் இன்னொரு தொழுகையைத் தொழுபவரின் தொழுகையானது இல்லியீன்களில் பதிவு செய்யப்படுகின்றது  என்று அல்லாஹ்வின்  தூதர்
குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்