Social Icons

Showing posts with label சமுதாயச் செய்திகள். Show all posts
Showing posts with label சமுதாயச் செய்திகள். Show all posts

Saturday, 31 May 2014

இஸ்லாம்தான் சவால் ! ஒபாமா குமுறல்


“மேற்கத்திய மேலாதிக்கத்திற்கு உண்மையான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான்…. ரஷ்யா அல்ல…” இவ்வாறு ஒபாமா தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ……….
“ரஷ்யா முன்பு  சோவியத் யூனியனாக இருந்தபோது தலைமை ஏற்று நடத்தியது போன்று தற்போது எந்த நாடுகளின் கூட்டமைப்பையும் தலைமை ஏற்று நடத்தவில்லை; மேலும் அது தற்போது சர்வதேச சித்தாந்தத்தையும் கொண்டிருக்கவில்லை”

Wednesday, 28 May 2014

30 சதவிகித வாக்குகள் பெற்ற பாஜகவிற்கு இது பெரிய வெற்றியல்ல என்பது சரியா

பாஜக அதிகமான இடங்களை வென்றாலும் அவர்களுக்குக் கிடைத்தது 30 சதவிகித வாக்குகள் தான். எழுபது சதவிகித மக்கள் பாஜகவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். எனவே இது பெரிய வெற்றியல்ல என்று கூறுவது சரியா?

இதற்கு முன் நடந்த தேர்தல்களில் ஆட்சிக்கு வந்தவர்கள் ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் பெற்று ஆட்சிக்கு வந்து இருந்து பாஜக மட்டும் 30 சதவிகித வாக்குகளில் அதிக இடங்கள் பெற்று இருந்தால் தான் இந்த வாதம் சரியாக இருக்கும்.

Wednesday, 23 April 2014

சர்வதேச அழுத்தங்களும் இஸ்லாமிய எழுச்சியும்

     எம்மைக் கடந்து சென்ற நூற்றாண்டின் முதற் காற்கூறின் இறுதியிலிருந்து முஸ்லிம் உலகில் ஆர்த்தெழுந்து வரும் இஸ்லாமிய மறுமலர்ச்சியை மேற்கு நாடுகள் மிகக் கூர்ந்து அவதானித்து வந்துள்ளன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளிலும், மிக வேகமாகப் பரவி வருகின்ற இஸ்லாமிய எழுச்சி, மேற்குலகைப் பொறுத்தவரையில் தற்கொலைப் போராளி ஊடுருவியிருப்பதைப் போன்று, எப்போது? எங்கே? வெடிக்கும் என்ற அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Friday, 7 December 2012

தமிழில் டைப் செய்ய! - Google IME

Google IME இதை பதிவிறக்கம் செய்துகொண்டால்,  கணிணியில் எங்கு டைப் செய்தாலும் பொதுவான நடையில் இலகுவான முறையில் தமிழில் டைப் செய்துகொள்ள முடியும். விளக்கம் பின்வருமாறு...

Monday, 3 December 2012

இந்திய வரலாற்றின் கரும்புள்ளி அயோத்தி கி.பி. 1528-2002

இந்திய வரலாற்றின் கரும்புள்ளியாகவும் மதவாத அரசியலுக்கு அடித்தளமாகவும் இருக்கும் அயோத்திப் பிரச்சனை குறித்து ஒரு பார்வை:
கி.பி. 1528: முகலாய மன்னர் பாபரிடம் பணியாற்றிய மீர்பாகி அயோத்தியில் மசூதியைக் கட்டினார்.

ஆன்லைன் மூலம் பள்ளிப்பாடம்

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வகுப்பு வரை உள்ள இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை மாதம் 150 ரூபாய்க்கு ஆன்லைனில் படிக்கலாம்.

ஆதார் அட்டை விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகள்

ஆதார் கார்ட் நாட்டின் பல பாகங்களிலும் விநியோகம் செய்யப்படுகின்ற இந்நேரத்தில் ஆதார் அட்டை பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். மக்கள் மனங்களில் எழும்பும் ஆதார் பற்றின கேள்விகளுக்கு இதோ பதில்கள்

Friday, 23 November 2012

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இந்நேரம்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:

Monday, 29 October 2012

மதி மயங்கும் மாணவர்கள்!

மாணவப் பருவம் ஓர் இளமைப் பருவம்! இளமைப் பருவம் என்பது எப்போதும் ஒரு கலவரப் பருவம்! அதைக் கலவரப்படுத்தி, தன் கைவசப்படுத்துவதற்காகப் பல்வேறு தீமைகள் படையெடுத்து வந்து காத்துக் கொண்டிருக்கின்றன.

Saturday, 29 September 2012

வரதட்சணை ஓர் வன்கொடுமை

பெண் வீட்டுவிருந்து சீரழிக்கும் ஒரு சீதனம் 



இன்று, பல்வேறு வடிவங்களில் சீதனம்   வரதட்சணை வாங்கப்படுகிறது. பணமாக பாத்திரமாக லி நகையாக   நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.
ஆனால், உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது, அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது திருமண வீட்டில் லி மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டாரிடம் பாதிச் செலவு வாங்கிக் கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது மார்க்கம் படித்த பலரால் கூட உணரப்படு வதில்லை. அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படு வதில்லை. அதனால்தான் இத்தீமை இன்னும் ஒழியாமல் நவீன வடிவங் களில் தொடர்கிறது.

Friday, 28 September 2012

எங்கே போய்கொண்டிருக்கிறது மத்திய அரசாங்கம்

அந்நிய முதலீட்டிற்கு நமது நாட்டில் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்போது சில்லரை வணிகத்திலும் அந்நிய முதலீட்டிற்கான அளவு 51 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
              
நமது நாட்டின் பிரதமர் அமெரிக்காவின் ஆள் என்பதை நரசிம்மராவ் காலத்திலிருந்தே நாம் பதிவு செய்துவருகிறோம். அவர் இந்தியாவின் நலனைவிட அமெரிக்காவின் நலனைத்தான் நாடுவார். அவர் ஓர் அமெரிக்க அடிமை என்பதில் நாம் உறுதியான கருத்தில் இருக்கிறோம்.
              
நமது நாட்டில் ஒருவர் அமைச்சராக வேண்டுமானால் அவர் ஆளும் கட்சியில் செயல்பட்டு அரசியல், அனுபவம் பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒருவர் இந்தியாவில் அமைச்சராக முடியாது. ஆனால் மன்மோகன்சிங் அரசியல்வாதி அல்ல. மாறாக அமெரிக்காவில் உள்ள அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள உலக வங்கியில் பணிபுரிந்தவர் அவர்.
              
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அரசாங்கம் 1993 ஆம் ஆண்டு அவருக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து, மன்மோகன்சிங்கை இந்தியாவின் நிதியமைச்சராக நியமிக்கச் செய்தது. இல்லாவிட்டால் நாட்டுமக்களில் எவருக்குமே தெரியாத ஒருவர் திடீரென்று இந்தியாவின் நிதியமைச்சராக முடியுமா?
              
அன்று முதல் அமெரிக்காவிற்குத் தொண்டு புரிவது என்ற அடிப்படையில் மட்டுமே நிதியமைச்சகம் செயல்படலாயிற்று.

நாட்டில் எந்தப் பொருளாதாரத் திட்டம் என்றாலும், அது அமெரிக்காவிற்கு எந்தவகையில் உதவும் என்பதே இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையாகிப் போனது.
              
சோனியா தலைமையில் காங்கிரஸ் வென்ற பின்னர் பிரணாப் முகர்ஜி மற்றும் அர்ஜுன்சிங் போன்ற மூத்த தலைவர்கள் பிரதமராவார்கள் - இல்லாவிட்டால், ராகுல் பிரமதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் ஆதரவு பெற்ற(?) மன்மோகன் சிங் பிரதமராக்கப்பட்டார் என்றால் அது அமெரிக்கா எஜமானரின் உத்தரவுப்படிதான் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்.

பொருளாதாரம் தவிர வேறு எந்தத் துறையிலும் அனுபவம் இல்லாத ஒருவர் பிரதமராக ஆக்கப்பட இதைத் தவிர எந்தக் காரணமும் இல்லை. நரசிம்மராவ் அமெரிக்காவின் நலனுக்கு பாடுபட்டார் என்றால் பிறப்பால் இத்தாலியரான சோனியாவுக்கு அமெரிக்காவுக்கு அடிமையாக இருப்பது ஒரு பிரச்சினையே இல்லை.  இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், அனைத்துமே உலகை அடக்கியாளும் பாசிச சக்திகள் என்ற ஒற்றுமை இருப்பதை உலகம் அறியும்.

மன்மோகன் அமெரிக்க அடிமை என்பது அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மூலம் சந்தேகமின்றி உறுதியானது. வீழ்ந்து கிடக்கும் அமெரிக்கப் பொருளதாரத்தைத் தூக்கி நிறுத்த வேண்டுமானால் அங்கு மூடப்பட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் இதில் உள்ளது.

எவ்வளவு பெரிய போராட்டம் என்றாலும் மன்மோகன் அசைந்து கொடுக்காமல் இருந்தால், மேட்டர் அமெரிக்கா சம்மந்தப்பட்டது என அறிந்து கொள்ளலாம்.

மன்மோகன் பிரதமரான பின் தனது அமைச்சரவையில் சசிதரூர் என்பவருக்கு முக்கிய இலாக்காவை வழங்கினார். இவர் யார் என்றே இந்தியாவில் ஒருவருக்கும் தெரியாது. மன்மோகனைப் போலவே அமெரிக்காவில் பணிபுரிந்தவர் என்பதைத் தவிர இதற்கு ஒரு காரணமும் சொல்ல முடியாது. எப்படியாவது அமெரிக்காவுக்கு நலன் செய்ய வேண்டும் என்பதைத் தவிர இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க ஒரு முகாந்திரமும் இருக்கவில்லை. பெண் மேட்டரில் மாட்டிக் கொண்டதால் அவர் பதவி பறி போய்விட்டது. இல்லாவிட்டால் மன்மோகனுக்கு அடுத்த இடம் இவருக்கு அளிக்கப்படிருக்கும். மன்மோகன் சிங்கின் எல்லா நடவடிக்கையிலும் அமெரிக்க நலன் இல்லாமல் இருக்காது.

அந்நிய
முதலீடு நல்லதா கெட்டதா என இரு தரப்பிலும் காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. பொதுவாக அந்நிய முதலீடு நல்லது என்று வைத்துக் கொண்டால் கூட இதை நாம் ஆதரிக்க முடியாது. ஏனெனில் இத்திட்டம் அமெரிக்க நிறுவனங்களுக்காக கொண்டுவரப்பட உள்ளதால் பாதிப்புகள்தான் அதிகம்.

இந்தியச் சட்டங்கள் எங்களைக் கட்டுப்படுத்தாது என்ற கொள்கையைக் கொண்டது அமெரிக்கா. யூனியன்கார்பைடு என்ற அமெரிக்க நிறுவனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் போபாலில் மக்கள் செத்து மடிந்தபோது அமெரிக்கா தனது திமிர்த்தனத்தைக் காட்டியது நினைவிருக்கலாம். இன்றுவரை அதற்கு நியாயம் கிடைக்காமல் போபால் மக்கள் போராடிக் கொண்டு உள்ளனர். எங்களை இந்தியச் சட்டம் கட்டுப்படுத்தாது என்று கூறி இந்திய மக்களின் உயிரை துச்சமாக மதித்து தனது அமெரிக்க புத்தியை யூனியன் கார்பைடு காட்டியது.

பெப்சி, கொக்கோகோலா போன்ற பானங்கள் நீண்டநாட்கள் கெடாமல் இருக்க அதில் அதிக அளவு பூச்சிமருந்து கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியிருந்தும், நாடாளுமன்றமே முடங்கியபோதும் அந்நிறுவனங்களை இங்கிருந்து வெளியேற்ற முடியவில்லை. அதே கலவையுடன் நாட்டு மக்களை சிறுகச்சிறுகச் சாகடித்து வருகின்றன.

அமெரிக்காவின் தர  நிர்ணயத்திற்கு உட்படாத பொருட்களையெல்லாம், நமது நாட்டு மக்கள் தலையில் அமெரிக்கா கட்டிவிட்டு நமது உயிருடன் விளையாடும். அதனால் பாதிப்பு ஏற்பட்டால் எங்களை அமெரிக்க நீதிமன்றம்தான் விசாரிக்கும் என அந்நிறுவனங்கள் கூறும். அதை மானம் கெட்ட மத்திய அரசும் ஏற்றுக்கொள்ளும். இதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது அந்நிய முதலீட்டால் எவ்வளவு நன்மை ஏற்பட்டாலும் நாம் கட்டாயம் ஆதரிக்க முடியாது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த பாசுமதி அரிசியில் இரசாயனம் உள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது. தனது நாட்டு மக்களுக்கு மட்டும் தரம்பார்த்து இறக்குமதி செய்யும் அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு கேடுகெட்ட பொருட்களைத்தான் வினியோகம் செய்யும். அதை நமது அமெரிக்க அடிமை அரசாங்கத்தால் தடுக்க முடியாது.

அமெரிக்காவின் பெப்ஸி கோகோகோலா நிறுவனங்களின் பூச்சி மருந்து குளிர்பானங்கள் நமது நாட்டில் தங்கு தடையில்லாமல் நாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து வருவதே இதற்கு போதுமான உதாரணமாகும்.

இந்த ஆபத்துகளைக் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது இது காட் ஒப்பந்தம் போலவும்,  

டங்கல்
திட்டம் போலவும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றே என்பதில் சந்தேகம்  இல்லை .




குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்