Social Icons

Thursday 29 November 2012

திருக்குர்ஆன் வினாடி வினா

1.  கேள்வி : அல்லாஹ்வே பெயரிட்ட நபிமார்களின் பெயர் என்ன?
பதில் : யஹ்யா (அலை), ஈஸா (அலை) (அல்குர்ஆன் 19:7, 3:45)
2.   கேள்வி :மனிதன் இறந்தால் அவனை அடக்கம் செய்ய வேண்டுமென மனிதனுக்கு கற்றுக் கொடுத்தது எது?
பதில் : காகம் (அல்குர்ஆன் 5:31)


3.   கேள்வி : உருக்கிய செம்பைப் போலும் கொதிக்க வைக்கப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்குமே அந்த மரத்தின் பெயர் என்ன?
பதில் :  ஸக்கூம் (அல்குர்ஆன் 44 : 43-46)
4.   கேள்வி : நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குழந்தைகளின் பெயர் என்ன?
பதில் : இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை) (அல்குர்ஆன் 14 : 39)
5.   கேள்வி : காளைக் கன்றை கடவுளாக சித்தரித்தவன் யார்?
பதில் : சாமிரீ (அல்குர்ஆன் 20 : 87,88)
6.   கேள்வி : கடவுளாக சித்தரிக்கப்பட்ட காளைக் கன்றை நபி மூஸா (அலை) அவர்கள் என்ன செய்தார்கள் ?
பதில் : அதை நெருப்பில் எரித்து அதன் சாம்பலை கடலில் தூவினார்கள்.     (அல்குர்ஆன் 20 : 97)
7.   கேள்வி : நபி மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரிடம் எந்த அற்புதத்தை காட்டி அல்லாஹ் உடன்படிக்கை எடுத்தான் ?
பதில் : தூர் மலை தலைக்கு மேல் உயர்த்தி (அல்குர்ஆன் 2: 93, 7:171)
8.   கேள்வி : ஜாலூத் என்பவன் யார்?
பதில் : நபி தாவூத் (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த கொடுங்கோல் மன்னன் (அல்குர்ஆன் 2 : 251)
9.   கேள்வி : தாவூத் நபி எந்த மன்னரின் கீழ் வீரராக திகழ்ந்தார்கள்?
பதில் : தாலூத் (அல்குர்ஆன் 2 : 247 -251)
10.   கேள்வி : ஐயாயிரம் வானவர்களைக் கொண்டு உதவி செய்வேன் என்று எந்த போர்க்களத்தில் அல்லாஹ் கூறினான்?
பதில் : பத்ர் (அல்குர்ஆன் 3 : 123-125)

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்