Social Icons

Saturday, 5 April 2014

குர்ஆன் ஆயத்துக்கள் உள்ள தாவீஸ்களை அணியலாமா?

அல்லாஹ்வின் பெரும் கிருபையினால் தமிழகத்தில் பல வருடங்களாக ஏகத்துவ பிரச்சாரத்தை செய்து வருகிறோம். நம்முடைய பிரச்சாரங்களில் இணைவைப்பு காரியங்களையும், மூட பழக்க வழக்கங்களையும் கண்டித்து வருகிறோம். இணைவைப்பு காரியங்களில் முக்கியமாக திகழும்  தாயத்துகளையும் கண்டித்து பேசியும், எழுதியும் வருகிறோம்.
இதற்கான ஆதாரங்களை மீண்டும் ஒரு தடவை பாôப்போம்.
நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக மந்திரிப்பதும், தாயத்து, சூனியம் ஆகியவைகள் இணைவைப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் (3385)

உக்பா பின் ஆமிர் (ர­) அவர்கள் கூறுகையில் நபி (ஸல்) அவர்களிடத்தில் பத்து பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை.  அப்போது அந்த கூட்டத்தினர் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்யே ஏன்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தாயத்து இருக்கிறது என்று சொல்­ தன்னுடைய கையினால் தாயத்தை பிடித்து அதை துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். யார் தாயத்தை தொங்க விட்டு கொண்டாரோ அவர் இணைவைத்து விட்டார் என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (16781)
இம்ரான் பின் ஹிசைன் (ர­) அவர்கள் கூறுகையில் நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரின் கையில் செம்பு பட்டையினால் ஒரு வலையத்தை பார்த்தார்கள். இது என்ன வலையம் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இது வாஹினா என்னும் நோயின் காரணமாக  அனிந்திருக்கிறேன் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதை நீ கழற்றி விடு அது உனக்கு நோயை அதிமாக்கும் என்று கூறினார்கள்.
நூல்: இப்னு மாஜா (3522)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் தாயத்தை தொங்கவிடுகிறரோ அவருக்கு அல்லாஹ் தேவையை பூர்த்தி செய்ய மாட்டான். யார் சிப்பியை தொங்கவிடுகிறாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்ற மாட்டான்.
நூல்: அஹ்மத் (16763)
இப்படி பல செய்திகளை வைத்துதான் தாயத்து ஓர் இணைவைப்பு அதை அணியக்கூடது என்று கூறிவருகிறோம். இன்னும் தாயத்து அணிவதினால் சில நம்பிக்கை சார்ந்த இழப்புகளும் ஏற்படுகிறது என்றும் சொல்கிறோம்.
அதை அணிபவர் தனக்கு அது லாபத்தை ஏற்படுத்தும் என்று எண்ணுகிறார். இது தான் இணைவைப்பிற்கு கொண்டு செல்லக்கூடிய காரியமாகும். அதன் பக்கமே தன்னை ஓப்படைத்து விடுகிறான். அந்த எண்ணம் அல்லாஹ்வின் பக்கம் நாடுவதை திருப்பிவிடுகிறது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பது குறைந்து விடுகிறது.
இதை மறுக்கக்கூடியவர்கள் இதற்கு சில விளக்கங்களை கொடுக்கிறார்கள். அந்த விளக்கம் என்ன என்பதை பார்த்து விட்டு அதற்கான மறுப்பை பார்ப்போம்.
தமீமா என்றால் என்ன?
தாயத்து அணிவதை தடுத்தார்கள் என்ற செய்தியில் தாயத்து என்று மொழியாக்கம் செய்த இடத்தில் தமீமா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஹதீஸில் இடம் பெற்றிருக்கின்ற தமீமா என்ற வார்த்தையின் பொருள் கடல் மேல் உள்ள ஒரு ஓடு என்பதாகும். அதன் எழும்பை அரபியர்கள் அணிவார்கள். அதன் மூலம் நோயை தடுக்கலாம் என்ற நம்பிக்கை வைத்திருந்தனர். பெண்கள் தங்கள் கணவர்மார்களை இதன் மூலம் வசியம் செய்வார்கள். இது சூனியத்தி­ருந்து உள்ளதாகும்.
தமீமாவானது இனைவைப்பாகும். அரபியர்கள் தீமையை தடுப்பதற்கும், நன்மையை செய்வதற்கும் அதன் மூலம் நாடினார்கள். அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து உள்ளது. அல்லாஹ்வின் பெயர், ஆயத்துகள் போன்றவைகளாக இருந்தால் தமீமா விற்குள் அடங்காது. (அதாவது ஷிர்க்காகது)
நூல்: பத்ஹீல் பாரி)
நாசிருத்தின் அல் முப்ர்ரஜி இறப்பு 610 அல் முக்ரிப் என்ற அரபி அகராதியில் எழுதுவதாவது அஸ்ஹரி கூறியதாவது தமீமா என்பது ஒரு கடல் விலங்கின் மேல் உள்ள ஓடாகும். அது எழும்பை போல் இருக்கும். அதனை குழந்தைகளின் கழுத்தில் கட்டுவார்கள். தங்களின் தவறான நம்பிக்கையின் படி கண் திருஷ்டியை அதன் மூலம் நீக்குவார்கள்.
அல் குத்பீ கூறுகிறார். சிலர் தாவீஸை தமீமா தான் என்று நினைக்கிறார்கள். இது சரியில்லை. அது கடல் விலங்கின் ஓடாகும். தாவீஸை குர்ஆன் அல்லது அல்லாஹ்வின் பெயர் எழுதியிருந்தால் எந்த குற்றமும் இல்லை.
தமீமா என்றால் பசையுள்ள எழும்பு போன்ற ஒரு மிருகத்தின் ஓடாகும். அதனை தோ­ல் சுருட்டி கழுத்தில் போட்டுக் கொள்வார்கள். தாவீஸை குர்ஆன் அல்லது அல்லாஹ்வின் பெயர்    எழுதப்பட்டிருந்தால் எந்த குற்றமும் இல்லை என்று உள்ளது.
நூல் : ­ஸானுல் அரப்
அபூ மன்சூர் கூறுகிறார். தமீமா என்பது பசையுள்ள கடல் விலங்கின்  ஓடாகும். அதனை கிராமத்து அரபுகள் தங்களின் குழந்தைகளின் கழுத்தில் போட்டு தங்களின் நம்பிக்கையின் படி கண் திருஷ்டியை நீக்குவார்கள். இஸ்லாம் இதனை அழித்து விட்டது.
நூல்: ­ஸானுல் அரப்.
ஜவ்ஹரி என்பவர் எழுதுகின்றார்.    தமீமா என்பது அவர்களின் நம்பிக்கையின் படி காப்பாகும். அதனை கழுத்தில் கட்டுவார்கனள். என்று ஹதீஸில் உள்ளது. யார் தமீமா போடுகிறானோ அவன் நோக்கத்தை அல்லாஹ் பூர்த்தி செய்யாமல் இருப்பானாக  மேலும் கூறப்படுகிறது. தமீமா கடல் விலங்கின் ஓடாகும் தாவீஸில் அல்லாஹ்வின் பெயர் குர்ஆன் ஆயத்துகளினாôல் எழுதினால் குற்றமில்லை.
பைஹகியில் ஆயிஷா (ர­) அறிவிக்கிறார்கள். இன்னல்கள் வந்த பிறகு போடப்படுவதற்கு தமீமா வாகும்.
இன்னல்கள் வந்த பிறகு போடப்படுவதற்கு பெயர் தமீமா அல்ல  மாறாக இன்னல்கள் வருவதற்கு முன்னர் அல்லாஹ்வின் விதியை தடுப்பதற்கு போடப்படுவதற்கு தமீமாவாகும்.
நூல்: ஷரஹ் சுன்னா.
ஹதீஸ் கலை வல்லுனர் ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்களிடம் தாவீஸ் போடுவதை பற்றி கேட்கப்பட்டது. தாவீஸாகிறது  சுருட்டி உருண்டை செய்யப்பட்டதாகவோ அல்லது பேப்பரில்  இருந்தால் கூடும் என்று சொன்னார்கள்.
குர்ஆன் உள்ள தாவீஸை கழுத்தில் கட்டிக் கொள்வதில் எந்த குற்றமும் இல்லை. என்று இமாம் இப்னு ஸீரின் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: குர்துபி
இமாம் புகாரியின் ஆசிரியர் அனஸ் பின் மா­க் அல்லாஹ்வின் பெயர் எழுதப்பட்டவைகளை நோயாளி தன் கழுத்தில் போடுவது எந்த குற்றமும் இல்லை என்று சொன்னார்கள்.
நூல்: குர்துபி
குர்ஆன் எழுதப்பட்வை தமீமாவாக ஆகாது என்று அதா என்பவர் கூறுகிறார்.
இதன் மூலம் தாவீஸை அணிவது எந்த குற்றமும் இல்லை என்பது தெளிவாகிறது. என்று சொல்­ தங்கள் கருத்தை நிலைநாட்டுகிறார்கள்.
ஹதீஸில் தமீமா மட்டும் ஷிர்க் என்று சொல்லப்படவில்லை. ஓதிப்பார்த்தலும் ஷிர்க் என்று சொல்லப்படுகிறது. எனவே ஓதிப்பார்த்தலும் ஷிர்க் என்று சொல்லத்தயாரா? என நம்மை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர்.
ஓதிப்பார்த்த­ல் ஷிர்க் இல்லாமல் இருந்தால் எப்படி கூடுமோ அதேப் போன்று தாயத்தில் ஷிர்க் இல்லாமல் இருந்தால் கூடும்.
குர்ஆன் வசனம் உள்ள தாயத்தை அணியலாம் என்று கூறிய,  (உங்கள் கருத்துப்படி இணைவப்பான காரியத்தை செய்துவிட்ட) ஆயிஷா (ர­), அப்துல்லாஹ் பின் அம்ரு (ர­), அதா (ரஹ்), ஸயீத் பின் முஸய்யப், இப்னு ஸீரின், குர்துபி, இமாம் புகாரியின் ஆசிரியர் மா­க் பின் அனஸ் போன்றவர்களை முஷ்ரிக் என்று சொல்லத்தயாரா?
தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களை மார்க்கமாக கருதமுடியாது என்று சொன்னால் நாம் கேட்கிறோம் ஈமான் சம்மந்தப்படாத  கொள்கை சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஈமான் சம்மந்தப்பட்ட கொள்கை சம்மந்தப்பட்ட  விஷயமாக தாவீஸை கூறுகிறீர்கள். பிறகு ஆயிஷா போன்றவர்கள் எப்படி கூறியிருப்பார்கள். (இந்த வாக்கிய அமைப்பு விளங்கவில்லை)
இங்கு குர்துபியின் கருத்தை பதிவு செய்து முடிக்கிறேன்.
அறியாமைக்காலத்தில் பொருளை அறியாமல் ஓதிப்பார்க்கப்படும். அதனை விட்டு தவிர்ந்து கொள்வது கட்டாயம்.
படைப்புகளில் கண்ணியம் பொருந்தியவர்கள், நல்லடியார்கள் போன்றவர்களின் மூலம் ஓதிப்பார்த்தால் இதனை தவிர்ந்து கொள்வது கட்டாயமாக்கப்படவில்லை. விடுவது சிறந்தது.
அல்லாஹ்வின் பெயராகவோ அல்லது திருக்குர்ஆன் ஆயத்துக்களவோ இருந்தால் எந்த குற்றமும் இல்லை.

குறிப்பு:
ஆயிஷா (ர­) அவர்கள் கழுத்தில் குர்ஆன் ஆயத்து உள்ளதை போட்டுக்கொள்ளலாம் என்று கூறியதாக இப்னு குஸைமாவில் உள்ளதாம் இது சரியான ஹதீஸா என்று விளக்கவும்.

பதில்:
உங்களுடைய வாதம்     மூன்று மட்டுமே.
ஷிர்க் இல்லாமல் இருந்தால் தாவீஸ் அனியலாம்.
சில ஸஹாபாக்கள் தாவீஸ் அனியலாம் என்று சொல்­யிருக்கிறார்களே. அவர்கள் ஷிர்க் செய்தார்களா?
இதே செய்தியில் ஓதிப்பார்ப்பதும் தடை என்று வருகிறது. எனவே ஓதிப்பார்ப்பதையும் என்று சொல்வீர்களா?
முதலாவது வாதத்திற்கு பதில்.
அரபியர்கள் ஒரு எழும்பை எடுத்து அதை கட்டி தொங்க விட்டுக்கொள்வார்கள். அவர்களின் நம்பிக்கைப்படி அந்த எழும்பின் மூலம் கண்ணால் ஏற்படக்கூடிய தீங்கை விட்டு போக்கி கொள்வார்கள். இதுதான் தடுக்கப்பட்டுள்ளது. இவை அல்லாமல் குர்ஆன் வசனங்கள் அல்லது அல்லாஹ்வின் பெயர்கள் இருந்தால் அனியலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
குர்ஆன் வசனமாக இருந்தால் அல்லது அல்லாஹ்வின் பெயர்களாக இருந்தால் அவைகளை கட்டிக் கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்றோ அல்லது கட்டிக் கொள்ளலாம் என்றோ சொன்னதாகவோ ஒரு ஆதாரத்தைக் கூட காட்டவில்லை.
இது ஒரு புறமிருக்க ஷிர்க் இல்லாமல் இருந்தால் அதைக்கட்டிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் ஏன் சொல்லவில்லை.?
நபி (ஸல்) அவர்கள் பொதுவாக ஒன்றை சொல்­ருந்தால் அதை பொதுவாகத்தானே, அனைத்துக்கும் தானே எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி இருக்க ஷிர்க் இல்லாமல் இருந்தால் அனியலாம் என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்?
நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சொல்வதைப் போன்று குர்ஆன் வசனங்களை கட்டிப்போடாமல் ஏன் ஓதிப்பார்த்தார்கள்.? அதற்கு மட்டும் ஏன் அனுமதி கொடுத்தார்கள்.?
இன்னும் சொல்லப்போனால் பொதுவான இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிராகவும் இந்த தாயத்துகள், தாவீஸ்கள் இருக்கின்றன.
குர்ஆன் சொல்கிறது.
மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன.
அல் குர்ஆன் (10 : 57)
ஒருவர் குர்ஆன் வசனங்களை படிப்பதினால்தான் அவருக்கு நோய் நீங்கும் என்று இந்த திருக்குர்ஆன் சொல்கிறது. இதை விடுத்து ஒருவர் குர்ஆனை தனனுடைய கழுத்தில் கட்டித்தொங்க விட்டுக் கொண்டார் என்று சொன்னால் அவருக்கு நோய் நீங்குமா?
இதை விளங்க ஒரு உதாரணத்தை கூறுகிறேன்.
ஒருவர் மருத்துரிடம் சென்று அவடைய நோய்க்காக மருத்துவரிடம் காட்டி மருந்து சீட்டு வாங்கி வருகிறார். வாங்கி வந்தவர் அதைக்கட்டி தன்னுடைய கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டார். இப்போது அவருடைய நோய் குணமாகுமா? மருத்துவர் எழுதி தந்த சீட்டை மருந்து கடைகளிடம் காட்டி மருந்துகளை வாங்கி சாப்பிட்டதானே நோய் நீங்கும். இதே போல்தான் குர்ஆனும் குர்ஆனை ஓதினால்தான் நிலரணம் கிடைக்கும்.
உங்களுடைய கருத்துப்படி அவர் மருத்துவ சீட்டை கழுத்தில் மாட்டிக் கொண்டால் அவருடைய நோய் தீர்ந்து விடும். இது அறிவுக்கு கொஞ்சமாவது பொருத்தமாக இருக்கிறதா?
அறிவுக்குப் பொருத்த மில்லாத காரணத்தினால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை செய்யவுமில்லை, செய்ய கட்டûயிடவுமில்லை.
அடுத்து ஸஹாபாக்கள் இதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்களே என்று உங்களுடைய வாதத்தை எடுத்து வைக்கின்றீர்கள்.
ஸஹாபாக்களில் அப்துல்லாஹ் பின் அம்ரு (ர­) அவர்கள் செய்ததாக திர்மிதியில் (3451) ல் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் அய்யாஸ் என்பவர் இடம் பெருகிறார். இவர் ஷாம் வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக்கொள்வாôர்கள். இங்கே இடம் பெற்றிருக்கூடிய இஸமாயீல் பின் அய்யாஸ் அவர்களுக்கு அறிவித்தவர் முஹம்மத் பின் இஸ்ஹாக் என்பவராகும்.  இவர் தங்கிய ஊர் மதினாவாகும். அவர் இறந்த ஊர் பக்தாத் ஆகும். இவருக்கும் ஷாம் என்ற ஊருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனவே இந்த செய்தியை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அடுத்து ஒரு ஸஹாபி இந்த மாதிரி ஷிர்க்கான காரியங்கள் செய்திருப்பாரா? குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக செய்திருப்பாரா? என்ற எண்ணத்தின் அடிப்படையில் பார்த்தாலும் இந்த செய்தியை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
(சில நேரங்களில் நபித்தோழர்கள் குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக சில செயல்களை செய்தது உண்டு இது தனிவிஷயம்)
அடுத்து ஆயிஷா (ர­) அவர்கள் குர்ஆன் வசனங்களாக இருந்தால் அவை கழுத்தில் போட்டுக் கொள்ளலாம் என்று சொன்னதாக இப்னு குஸைமாவில் ஒரு செய்தி இடம் பெற்றதாக சந்தேகத்துடன் தெரிவித்திருந்தீர்கள். நான் பார்த்தவரையில் அப்படி ஒரு செய்தியை பார்க்க முடியவில்லை.
நீங்கள் எந்த செய்தியை வைத்து தாவீஸ் அனியக்கூடாது என்று சொன்னீர்களளோ அதே செய்தியில் ஓதிப்பார்ப்பதையும் தடை செய்தார்கள் என்று வருகிறதே அதை தடை என்று சொல்வீர்களா? என்று மூன்றாவது ஒரு கேள்வியையும் எடுத்து வைத்துள்ளீர்கள்.
உன்மையில் நீங்கள் சொல்வதைப் போன்று ஷிர்க் இருந்தால் ஓதிப்பார்க்ககூடாது. ஷிர்க் இல்லாமல் இருந்தால் ஓதிப்பார்க்காமல் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்களே கூறியிருக்கிறார்கள்.
அவ்ஃப் பின் மா­ரிக் அல்அஷ்ஜஈ (ரரி­) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபியவர்களிடம்), ”அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), ”நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்ரி­க்காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப்பார்த்தரில் எந்தக் குற்றமும் இல்லை” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்­ம் (4427)
இந்த செய்தியை வைத்துதான் நாம் ஷிர்க் இல்லாமல் இருந்தால் ஓதிப்பார்க்கலாம் என்று சொல்­ வருகிறோம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தாயத்தில் இப்படி இணைவைப்பு இல்லாமல் இருந்தால் போட்டுக் கொள்ளலாம் என்று எந்த முன்மாதிரியும் இல்லை.
ரசூல் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்த்தார்கள் என்று வந்துள்ளதால் தடை செய்தது அறியாமைக்காலத்தில் உள்ளதைதான் என்று உறுதியாக சொல்லலாம். ஆனால் தாயத் அனிவது தடை என்று சொல்­விட்டு அதற்கு அனுமதி கொடுத்ததாகவோ, அதை செய்ததாகவோ எந்த செய்தியும் இல்லை. எனவே குர்ஆன் ஆயத்துக்களை வைத்தோ அல்லது நபி மொழியில் உள்ள துஆக்களை வைத்தோ ஓதிப்பார்ப்பதை  தடை செய்ய முடியாது.
அடுத்து உங்களது நம்பிக்கை படி பாத்ரூமில் குர்ஆன் வசனங்களை கொண்டு செல்ல கூடாது அப்படி இருக்கையில் நீங்கள் குர்ஆன் ஆயத்துகள் உள்ள தாவீஸை அனிந்து கொண்டு பாத்ரூம் செல்லலாம் என்று கூற வருகிறீர்களா? நீங்கள் சொல்வது உங்கள் நம்பிக்கைக்கு மாற்றமாக இருக்கிறதே இதற்கு நீங்கள் பதில் சொல்ல கல்மை பட்டிருக்கின்றீர்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையை விளங்க செய்வானக.
                                                                                                    -  எஸ். யூசுப் பைஜி

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்