Social Icons

Tuesday, 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 24

 ஜனாஸாவின் சட்டங்கள் பற்றிய நூல்

ஜனாஸாத் தொழுகை தொழுவது, அதைத் தொடர்வது ஆகியவற்றின் சிறப்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 481

“யாரேனும் ஒருவர் ஒரு ஐனாஸா(விற்காக) தொழ வைக்கப்படும் வரை ஆஐராகியிருந்தால் அவருக்கு ஒரு கிராத் (நன்மை) உண்டு. அந்த ஜனாஸாவை அடக்கப்படும்வரை யார் ஆஜராகியிருந்தாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மை உண்டு” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.

“இரண்டு கிராத்துகள்” என்ன என்று (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு பிரமாண்டமான இரு மலைகளைப் போன்றதாகும் எனக்கூறினார்கள்.

யாருடைய ஜனாஸாவின் மீது (நபர்கள்) தொழுகின்றார்களோ அந்நபர் விஷயத்தில் அவர்கள் பரிந்துரை செய்விக்கப்படுவார்கள் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 482

எந்த மய்யித்தாக இருப்பினும் முஸ்லீம்களில் ஒரு கூட்டம் அக்கூட்டத்தவர்களின் எண்ணிக்கை நூறை எத்திவிடுகிறது. (அவ்வாறிருக்க) அவர்களனைவரும் அவருக்காக தொழுது பரிந்துரை செய்கிறார்களில்லை, அவர் விஷயத்தில் அவர்களது பரிந்துரை, (அல்லாஹ்வினால்) அங்கீகரிக்கப்பட்டதே தவிர என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

யாருக்காக நாற்பது நபர்கள் (ஜனாஸா தொழுதார்களோ) அவர்களது தொழுகையின் துஆவின் மூலம், அவர் விஷயத்தில் அவர்களின் பரிந்துரை அங்கீகரிக்கப்படும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 483

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மகனார் ‘குதைத்‘ என்ற இடத்தில் அல்லது அஸ்பான் என்ற இடத்தில் இறப்பெய்திவிட்டார். (அப்போது தன்னுடன் இருந்தவரைப் பார்த்து) குறைபே! அவருக்காக (தொழுகை நடத்த) ஜனங்களில் எத்தனை பேர்கள் கூடியுள்ளார்கள் எனப்பாருங்கள் என்றார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அவர் கூற்றுகிணங்க) நான் (குறைப்) வெளியே சென்று பார்த்தேன். மனிதர்களில் ஒரு கூட்டத்தார் அவருக்காக (அந்த மையித்திற்காக) கூடியிருந்ததை அவருக்கு நான் தெரியப்படுத்தினேன். அப்பொழுதவர்கள், அவர்(வந்திருக்கும் ஜனங்)கள் நாற்பது பேர் இருப்பார்களா? எனக் கேட்டார்கள். (அதற்கு) குறைப் ஆம்! என்றார். (பின்) அவரை (மையித்தை) வெளியே கொண்டு வாருங்கள் என்றார். முஸ்லிமான ஒரு ஆடவர் (மனிதர்) இறப்பெய்தி அவர் ஜனாஸாவை அல்லாஹ்விற்கு எவ்வஸ்துவையும் இணை வைக்காத நாற்பது ஆடவர்கள் தொழவைப்பதில்லை. அவர்களின் (துஆவை) பரிந்துரையை அவர் விஷயத்தில் அங்கீகரித்தே தவிர எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா

இறந்தவர்களில் யாரைப்பற்றி நன்மையானவற்றைக் கொண்டு புகழப்பட்டதோ, அல்லது தீமையைக் குறித்து இகழப்பட்டதோ அவர் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 484

ஒரு ஐனாஸா கொண்டு செல்லப்பட்டபொழுது அது பற்றி நன்மையாக கூறப்பட்டது. (அதற்கு) “கடமையாகி விட்டது, கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(வேறு) ஒரு ஐனாஸா கொண்டு செல்லப்படும் பொழுது அது பற்றி தீமையாக பேசப்பட்டது. (அதற்கு) “கடமையாகி விட்டது, கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது” என (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். ஒரு ஐனாஸா எடுத்துச் செல்லப்பட்டு அது பற்றி நன்மையாக கூறப்பட்ட போது கடமையாகி விட்டது, கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது என மும்முறை கூறினீர்கள். ஐனாஸா கொண்டு செல்லப்படும் பொழுது அது பற்றி தீமையாக பேசப்பட்டது. கடமையாகி விட்டது, கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது என மும்முறை கூறினீர்கள். (அதன் பொருள் என்ன) எனக் கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், நீங்கள் யாரைப்பற்றி நன்மையாக கூறினீர்களோ அவருக்கு சுவனம் கடமையாகிவிட்டது. நீங்கள் யாரைப்பற்றி தீமையாக கூறினீர்களோ அவருக்கு நரகம் கடமையாகிவிட்டது. நீங்கள்தான் பூமியில் அல்லாஹ்வின் சாட்சியாளார்கள், நீங்கள்தான் பூமியில் அல்லாஹ்வின் சாட்சியாளார்கள், நீங்கள்தான் பூமியில் அல்லாஹ்வின் சாட்சியாளார்கள் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹ் அன்ஹு

ஐனாஸா தொழுகையை முடித்துக் கொண்டு விட்டால் தொழுகையை நிறைவேற்றியவர் வாகனத்தின் மீது ஏறி வரலாம்

ஹதீஸ் எண் : 485

இப்னு தஹ்தாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஜனாஸா) தொழுகை நடத்தினர். (அது முடிந்தபின்) எதுவும் விரிக்கப்படாத நிலையில் ஒரு குதிரை அவர்களுக்காக கொண்டுவரப்பட்டது. ஒரு மனிதர் அக்குதிரையை பிடித்திருக்க அதன்மீது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏறினார்கள். அவர்களை (ஏற்றிக்கொண்டு) அக்குதிரை தன் பாதங்களை நெருக்கமாக வைத்து நடந்தது. நாங்கள் அவர்களுக்குப் பின்னால் தொடர்ந்து விரைந்தோம். கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், “இப்னு தஹ்தாஹ்விற்காக சுவனத்தில் எத்தனையோ ஈச்சங்குலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன என்றும், அல்லது அதை அவர் உண்ணுவதற்கு தகுந்தார்போல் நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளது என்றும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக” கூறினார்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 486

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரில் சிவப்பு விரிப்பு ஒன்று ஆக்கப்பட்டது 1(விரிக்கப்பட்டது)” என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா கூறுகிறார்கள்.

குறிப்பு : 1 நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் சிவப்பு நிற விரிப்பு ஒன்றை விரிக்கவும், அதை அணிந்து கொள்ளவும் செய்து வந்தார்கள். அவர்களுக்குப் பிறகு மற்றெவரும் அதை அணிவதை வெறுத்த, நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களால் உரிமை எழுதப்பட்ட ஷக்ரான் ரளியல்லாஹு அன்ஹு என்பவர். அவ்விரிப்பை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை அடக்கம் செய்வதற்கு முன் கப்ரினுள் விரித்து விட்டார். அதல்லாமல், “இந்த விரிப்பை என் கப்ரில் விரித்து விடுங்கள். நிச்சயமாக நபிமார்களின் உடல்களை பூமி திண்ணுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை (விலக்கப்பட்டுள்ளது) எனக் கூறினார்கள்.” (அறிவிப்பவர் : ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு) என்ற இந்த கட்டளைப்படியும் விரிக்கப்பட்டதாகும். ஆனால் மற்றவர் எவருக்கும் எந்த வித விரிப்பு விரிப்பதற்கோ, தலையணை வைப்பதற்கோ, மார்க்கத்தில் அனுமதியில்லை, அது வெறுக்கப்பட்டதாகும் என்பதை கவனத்தில் கொள்க. காரணம் மய்யித்திற்காக அதன் கப்ரின் உள்ளே அதற்குக்கீழ் எதையும் ஆக்குவதை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பது பைஹகீயில் பதிவாகியுள்ளது.

கப்ரின் ஓரத்தில் உட்பகுதியில் குழிபறித்து (அக்குழியை) செங்கற்களை (அடுக்கி) வைப்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 487

எனது கப்ரின் ஓரத்தில் குழிபறித்து1 எனக்கு வையுங்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு செய்யப்பட்டதைப் போன்று செங்கற்களை ஆக்கு(நட்டுவையு)ங்கள் என எந்த நோயினால் இறப்பெய்தினாரோ அப்போது ஸஅது பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார் என ஆமிர் பின் ஸஅது ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

குறிப்பு : 1 கப்ரின் உள்ளே ஒரு ஓரப்பகுதியை மய்யித்தை உள்ளே வைத்து அதன் ஓரத்தை செங்கற்களால் அடைத்து விட்டு பின்னர் மண்ணைத்தள்ளி குழியை மூடிவிடுவதாகும். இவ்வகை குழிக்குப் பெயர்தான் அரபியில் ‘லஹத்‘ எனக்கூறுவர். இவ்வகை குழியை தனக்கு தோண்ட வேணடுமென ஸஅது பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸஹாபா (ரிழ்வானுல்லாஹி அலைஹிம் அஜ்மஈன்களின் ஏகோபித்த முடிவின்படி இவ்வகைக் குழியைத்தான் தோண்டி அடக்கம் செய்தனர். அவர்களுடைய கப்ரின் ஓரத்தை அடைக்க, வைக்கப்பட்ட செங்கற்களின் எண்ணிக்கை ஒன்பதாகும்.
ஷரஹ்நவவீ பாகம் 7, பக்கம் 34

கப்ருக்களை சமமாக ஆக்க வேண்டுமென்ற கட்டளை பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 488

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எதைச் செய்ய என்னை அனுப்பினார்களோ? அதைச்செய்ய உன்னை நான் அனுப்ப வேண்டாமா? (அதுதான்) “உருவங்களை, சிலைகளை அழிக்காமல் விட வேண்டாம் என்றும், உயரமான கப்ருக்களை சமமாக ஆக்காமல் விட வேண்டாம்” என்றும் எனக்கு (அபுல் ஹய்யாஜ் அல் அஸதிய்யு) அலிபின் அபீதாலிப் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூல் ஹய்யாஜ் அல் அஸதிய்யு ரளியல்லாஹு அன்ஹு

கப்ருகள் மேல் கட்டிடம் கட்டுவதும் சுண்ணாம்பு பூசுவதும் வெறுக்கத்தக்கதாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 489

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், கப்ருக்கு சுண்ணாம்பு பூசுவதையும், அதன்மீது உட்காருவதையும், அதன்மீது கட்டிடம் கட்டுவதையும் தடுத்துள்ளனர்”

அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு

ஒரு மனிதர் இறப்பெய்திவிட்டால் அவரது இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்குக் காட்டப்படுகிறது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 490

நிச்சயமாக உங்களில் ஒருவர் இறப்பெய்திவிட்டால் அவரது இருப்பிடம் (எது என) காலையிலும் மாலையிலும் அவருக்கு காட்டப்படுகிறது. அவர் சுவனவாசியாக இருப்பின் சுவனவாசிகளில் (காட்டப்படுகிறது). அவர் நரகவாசிகளில் இருப்பின் நரகவாசிகளில் (காட்டப்பட்டு) மறுமை நாளைக்காக அவனின்பால் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரையிலும் இதுவே உனது இருப்பிடம் எனக் கூறப்படும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹுமா

அடியான் கப்ரில் வைக்கப்பட்டிருந்தால் இரு மலக்குகள் கேள்வி கேட்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 491

நிச்சயமாக, அடியான் அவனது கப்ரில் வைக்கப்பட்டு(விட்டால்) அவனது தோழர்களெல்லாம் திரும்பிவிடின் (திரும்பிச் செல்லும் போது) அவர்களது செருப்பின் காலடி ஓசைகளை. நிச்சயமாக உறுதியாகவே அவர் (அடக்கம் செய்யப்பட்ட மனிதர்) கேட்கிறார். (மற்றொரு அறிவிப்பில் அவர்கள் திரும்பிவிடுவார்களாயின் என்று உள்ளது.) அவரிடம் இரு மலக்குகள் வந்து அவரை உட்காரவைக்கின்றனர். அம்மனிதரைப்பற்றி நீ என்ன சொல்லிக்கொண்டிருந்தாய் என அவரிடம் அவ்விருவரும் கேட்பார்கள். (அப்போது) முஃமினானவர் நிச்சயமாக, “அவர் அல்லாஹ்வின் அடியார் என்றும், அவனுடைய தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்” எனக்கூறுவார். (அப்போது) அவருக்கு நரகத்தில் (இருந்த) உனது இருப்பிடத்தைப் பார். அதை சுவனத்தில் உனது இருப்பிடமாக அல்லாஹ் மாற்றிவிட்டான். அவ்விரண்டு(இருப்பிடங்களையு)ம் அவர் காண்பார் என அல்லாஹ்வின் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். அவரது கபர் எழுபது முழம் அளவிற்கு விஸ்தரிக்கப்படும். (மறுமை நாளைக்காக) அவர்கள் எழுப்பப்படும் வரை அதன்மீது பச்சை பசுமையாக ஆக்கப்படும் (நிரப்பப்படும்) என நமக்குக் கூறப்பட்டது என கதாதா ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

விசுவாசங் கொண்டவர்களை நிலையான கூற்றைக் கொண்டு இம்மை வாழ்க்கையிலும் மறுமையிலும் நிலைப்படுத்திவைக்கிறான் என அல்லாஹ்வின் கூற்றானது நிச்சயமாக அது ‘கப்ரிலாகும்‘ என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 492

விசுவாசங் கொண்டவர்களை நிலையான சொல்லைக்கொண்டு அல்லாஹ் நிலைப்படுத்தி வைக்கிறான் என்ற அவனின் கூற்று, கப்ரில் வேதனைப்பற்றி (அது உண்டென நிரூபணம் செய்ய) இறங்கியதாகும் என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக பராஉ பின் ஆஜிப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

கப்ரில் வைக்கப்பட்ட அவரிடம் உமது இரட்சகன் யார்? எனக்கேட்கப்படும். அதற்கவர் என்னுடைய இரடசகன் அல்லாஹ் என்றும், எனது நபி முஹம்மது ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எனவும் கூறுவார். அதுதான் விசுவாசங்கொண்டவர்களை “நிலையான கூற்றைக் கொண்டு இம்மை வாழ்க்கையிலும் மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்தி வைக்கிறான்” என்ற கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ்வின் கூற்றாகும்.

அறிவிப்பவர் : அல்பராஉ ஆஜிப் ரளியல்லாஹு அன்ஹு

கப்ரின் வேதனை - அதை விட்டும் காக்கத் தேடுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 493

ஒரு சமயம் ‘பனின் நஜ்ஜாரு‘க்குரிய தோட்டத்தில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்குரிய கழுதையின் மீது அமர்ந்திருந்தனர். அ(க்கழுதை)து அவர்களைச் சாய்த்து கீழே தள்ளிவிட எத்தனித்தது. அங்கே ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு கப்ருக்கள் இருந்தன. (ஜுரைரிய்யு இவ்வாறு தான் கூறுகிறார்) (அப்போது) நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் “இந்த கப்ருகளுக்குரியவர்ள் யாவர் என யாருக்கு தெரியும் எனக்கேட்டனர். (அப்போது) ஒரு மனிதர் ‘நான்‘ (எனக்குத் தெரியும்) என்றார். “இவர்களெல்லாம் எப்பொழுது இறப்பெய்தியவர்கள்” எனக்கேட்டார்கள். (அதற்கவர்) இவர்களெல்லாம் இணை வைக்கக்கூடிய (அறியாமைக்) காலத்தில் இறப்பெய்திவிட்டனர் என்றார். (அதற்கு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) நிச்சயமாக இந்த சமூகத்தவர்கள் அவர்களது கப்ரில் சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள். ‘நீங்களும் அடக்கம் செய்யப்படாமல் இருக்க மாட்டீர்கள்‘ என்பதை பற்றி நான் பயப்படாவிட்டால் கப்ரின் வேதனையிலிருந்து எதை நான் செவியுறுகிறேனோ உங்களுக்கும் கேட்கவைக்கும் படியாக அல்லாஹ்விடம் நிச்சயமாக ‘துஆ‘ செய்திருப்பேன் எனக்கூறினார்கள். அதன்பிறகு எங்களை நோக்கி வந்து “நரக வேதனையிலிருந்து அல்லாஹ்வை கொண்டு காவல் தேடுங்கள்” எனக் கூறினர். (அப்போது) அவர்கள் ‘அல்லாஹ்வைக் கொண்டு நரக வேதனையிலிருந்து நாங்கள் காக்குமாறு கார்மானம் தேடுகிறோம்‘ என்றனர்.

“கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்வைக் கொண்டு கார்மானம் தேடுங்கள் என (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) கூறினார்கள்”. (அதற்கு) அவர்கள் “கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்வைக் கொண்டு நாங்கள் காக்கத் தேடுகிறோம்” எனக் கூறினார்கள்.

“வெளியாகி இருக்கின்ற, இன்னும் மறைந்திருக்கின்ற குழப்பங்களிலிருந்து காக்கத் தேடுங்கள்!” என்றனர். (அதற்கவர்கள்) வெளியாகி இருக்கின்ற, மறைந்திருக்கின்ற எல்லாக் குழப்பங்களிலிருந்தும் அல்லாஹ்வைக் கொண்டு நாங்கள் காக்கத் தேடுகிறோம்” என்றனர்.

தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து அல்லாஹ்வைக்கொண்டு காவல் தேடுங்கள் என்றார்கள். (அதற்கவர்கள்) தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து அல்லாஹ்வைக் கொண்டு காவல் தேடுகிறோம் என்றனர்.

அறிவிப்பவர் : ஜைதுபின் தாபித் ரளியல்லாஹு அன்ஹு

யூதப்பெண், அவள் கப்ரில் தண்டனை கொடுக்கப்படுகிறாள் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 494

சூரிய அஸ்தமனத்திற்குப்பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (வெளியில்) புறப்பட்டுச் சென்றார்கள். (சென்ற அவர்கள்) ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு “யூதப்பெண் ஒருத்தி, அவள் கப்ரில் வேதனை செய்ய(தண்டிக்க)ப்பட்டுக் கொண்டிருக்கிறாள்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு

கப்ருகளை ஜியாரத்து செய்வதும் அதை உடையவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்பதும் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 495

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களின் அன்னையாரின் கப்ரை ஜியாரத்துச் செய்தார்கள். (அப்போது) அவர்கள் அழுதார்கள், அவர்களைச் சுற்றி இருந்தவர்களையும் அழச்செய்தார்கள்! (அதன்பின்)

“எனது இரட்சகனடம் (என் அன்னை) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்க நான் அனுமதி கோறினேன். எனக்கு அவன் அனுமதி வழங்கவில்லை. அவர்களது கப்ரை காண (சந்திக்க) அனுமதி கேட்டேன், எனக்கு அனுமதியளித்தான். ஆகவே கப்ருகளை ஜியாரத்துச் செய்யுங்கள். நிச்சயமாக அது மரணத்தை நினைவுபடுத்துகிறது” எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 496

“கப்ருகளை ஜியாரத்துச் செய்வதிலிருந்து உங்களை நான் தடுத்திருந்தேன். அவைகளை ஜியாரத்துச் செய்யுங்கள். மூன்று நாட்களுக்கு மேல் குர்பானி இறைச்சிகளை சேமித்து வைக்கவேண்டாம் என உங்களை நான் தடுத்திருந்தேன். உங்களுக்கு எவ்வாறு தோன்று (வசதிப்படு)கிறதோ அவ்வாறு சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். சில பாத்திரங்கள், அல்லாதவற்றில் பழங்களை ஊறவைப்பதை நான் தடுத்திருந்தேன். எல்லாப்பாத்திரங்களிலும் (வைத்துப்) பாருங்கள், போதைத்தருபவற்றை அருந்தாதீர்கள்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

கப்ராளிகளுக்கு ஸலாம் கூறுதல், அவர்களின் மீது அருள்கோரல், அவர்களுக்காக பிரார்த்தித்தல் ஆகியவை பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 497

என்னைப்பற்றி, என் தாயைப்பற்றி ஒரு செய்தியை அறிவிக்கட்டுமா?என முஹம்மது பின் கைஸ் என்பவர் ஒரு நாள் கூறினார். (அதைக் கேட்ட நாங்கள்) அவரை ஈன்ற தாயைப்பற்றிய செய்தியைத் தான் அவர் நாடு(சொல்ல நினைக்கி)றார் என நாங்கள் நினைத்தோம். (ஆனால் அவர்) என்னைப்பற்றி, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி உங்களுக்கு செய்தியை அறிவிக்கட்டுமா? என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் எனக்கூறினார். (அதற்கு) நாங்கள் ஆம்! எனக் கூறினோம். அதற்கவர்,

எனது இரவாக (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) தங்கும் முறையாக இருந்த போது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் என்னுடன் (தங்கி) இருந்தனர். பின் (வெளியில் சென்று) திரும்பி (வந்து) தங்களது மேலாடையை (கழற்றி) வைத்து விட்டு, தங்களது இரு காலனிகளையும் கழற்றி தங்களது கால்களுக்கு கீழ் வைத்தனர். தங்களது மேலாடையின் ஒரு பகுதியை தங்களது (படுக்கையின்) விரிப்பில் விரித்துவிட்டு படுத்துக் கொண்டனர். கொஞ்ச நேரமல்லாதே தவிர (அவர்கள்) படுத்திருக்கவில்லை. (பின்) நான் தூங்கிவிட்டதாகவும் எண்ணினர். (அதனால்) மெதுவாக தங்களது மேலாடையை எடுத்துக் கொண்டு மெதுவாக காலணிகளையும் மாட்டிக்கொண்டு, கதவை மெதுவாக திறந்து கொண்டு வெளியேறினர். அதன்பின் கதவையும் மெதுவாக சாத்திவிட்டனர்.

(உடனே நான் எழுந்து) என் சட்டையை நான் போட்டுக்கொண்டு (முகத்தையும்) மூடிக்கொண்டு என் கீழ் ஆடை(யை சரி செய்து அதன்) மூலம் என்னை மறைத்துக் கொண்டு அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி நடந்தேன். அவர்கள் ‘பகீ‘யை வந்தடைந்து அங்கே நீண்ட நேரம் நின்றார்கள். அதன்பிறகு தங்களது கைகளை மும்முறை உயர்த்திவிட்டுத் திரும்பினார்கள். நானும் திரும்பினேன். அதன்பின் (அவர்கள்) துரிதமாகச் சென்றார்கள். நானும் துரிதமாக (பின் தொடர்ந்து) சென்றேன். இன்னும் வேகமாக (அவர்கள்) நடந்தார்கள். நானும் (அதே போன்று) வேகமாக நடந்தேன். அதைவிட வேகமாக நடந்தார்கள். நானும் அதை விட வேகமாக நடந்து அவர்களை முந்திக்கொண்டு (வீட்டினுள்) நுழைந்து நான் படுத்துக் கொண்டேன். (அப்போது) அவர்களும் (வீட்டினுள்) நுழைந்தனர். வேகமாக நடந்ததின், காரணமாக (எனக்கு) மூச்சு இறைக்க, வயிறு மேலும் கீழும் ஏறி இறங்குவதைப் பார்த்து, வேகமாக ஓடிவந்தவருக்கு ஏற்பட்ட நிலை போன்றிருந்ததைப் பார்த்து, ஆயிஷாவே! உனக்கு என்ன நேர்ந்தது? எனக்கேட்டார்கள். (அதற்கு) நான் ஒன்றுமில்லை எனக் கூறினேன். (அதற்கவர்கள்) நிச்சயமாக நீ எனக்கு (இது பற்றி) தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் செய்திகளை அறிந்தவனும் நுட்பமானவனுமான அவன் (அல்லாஹ்) எனக்கு அறிவிப்பான் என்றனர்.

(உடனே) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! எனது தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம் என நான் கூறிவிட்டு (நடந்த) விஷயத்தைக் கூறிவிட்டேன் என (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள். (அப்போது) எனக்கு முன்பாக நான் கண்ட கருப்பு உருவம் நீ தானே எனக்கேட்டார்கள். (அதற்கு) நான் ஆம்! என்றேன். (அப்போது) தங்களது முன்கையினால் எனது நெஞ்சின் மேல் ஒரு அடி அடித்து விட்டார்கள். அது என்னை நோவினை செய்துவிட்டது. அதன்பிறகு, அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு அநீதி இழைப்பார்களென நீ எண்ணி விட்டாயா? எனக்கேட்டனர். ஜனங்கள் எவ்வளவு தான் மறைத்தாலும் அல்லாஹ் நிச்சயமாக அறிந்து கொள்வான் என (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹு) கூறினார்கள். (அதற்கு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள், ஆம்! என்று கூறிவிட்டு, நிச்சயமாக ஜிப்ரில் அலைஹிஸலாம் அவர்கள் உன்னைப்பார்த்த சமயம் என்னிடம் வந்து என்னை அழைத்துவிட்டு உன்னை விட்டும் அவர் தன்னை மறைத்துக் கொண்டார். அவருக்கு நான் பதில் கூறினேன். ஆனால், அதை நான் உன்னிடமிருந்து மறைத்து விட்டேன். நீ உறங்குவதற்கு துணிகளை எடுத்துவிட்ட சமயத்தில், அவர் (ஜிப்ரீல்) உள்ளே நுழையத்த தயாராக இல்லை. (மேலும்) நான், நீ தூங்கிவிட்டதாக எண்ணி உன்னை எழுப்புவதை நான் வெறுத்தேன். மேலும் என்னைப் பார்த்து வெறுப்பாகிவிடுவாயோ? எனவும் (நான்) பயந்தேன் எனக்கூறினார். அதன்பிறகு, நிச்சயமாக உமது இரட்சகன் ‘பகீஉ‘வாசிகளிடம் வந்து அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்குமாறு கட்டளையிடுகிறான் எனவும் கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்களுக்கு (பகீஉ வாசிகளுக்கு) நான் என்ன கூற வேண்டுமெனக் கேட்டேன்? அதற்கவர்கள் “அஸ்ஸலாமு அலா அஹ்லியத்தியாரி மினல் மூஃமினீனவல் முஸ்லிமீன வயர்ஹமல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னாவல் முஸ்தஉகீரீன வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்” எனக்கூறினார்கள்.

கப்ருகளின் மீது அமர்வதும் அதன்மேல் தொழுவதும் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 498

உங்களில் ஒருவர் நெருப்பின் மீதமர்ந்து அவரது உடை எரிந்து அவரது உடல் வரை அந்நெருப்பு வந்து விடுவது, கப்ரின் மீது அமர்வதைவிட அவருக்கு அது சிறந்ததாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 499

“கப்ரின் மீது உட்காரதீர்கள், அதன்பால் தொழாதீர்கள்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமர்ஸத் அல் கனவீ ரளியல்லாஹு அன்ஹு

நல்ல மனிதர் அவரைப்பற்றி புகழப்படுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 500

ஒரு மனிதர் நலவானவற்றை செய்கிறார். அவரை மனிதர்கள் புகழ்கிறார்கள், அவரைப்பற்றி எனக்குச் சொல்லுங்கள் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அது மூஃமீனான மனிதருக்கு துரிதமாகக் கிடைக்கும் சுபச் செய்தியாகும்” எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர்ரு ரளியல்லாஹு அன்ஹு

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்