Social Icons

Thursday, 29 November 2012

உருவப்படம் இருக்கும் இடங்களில் தொழலாமா?

உருவம் இருக்கும் இடங்களில் தொழக்கூடாது என்பதற்கு பின்வரும் செய்தி நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

ஆயிஷா (ர­) அவர்கள் அறிவிப்பதாவது எங்களிடம் உருவம் பொறிக்கப்பட்ட ஆடை இருந்தது. அதை நான் நபி ஸல் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களுக்கு முன் வைத்தேன். நபி ஸல் அவர்கள் அதை தடை செய்தார்கள்.
                                              நூல்:தாரமி2547
இது அல்லாமல் நாம் தொழுது கொண்டிருக்கும் போது நம்முடைய கவனத்தை திசை திருப்புகின்ற பொருளையோ. ஆடையையோவைக்ககூடாது.
ஆயிஷா(ரலி)அவர்கள்கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி அடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுதுகொண்டிருக்கும்போது) அதன் வேலைப்பாடுகளை  ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், ”எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த.) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) அன்பிஜான்’ (நகர ளி) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிரிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டதுஎன்றுசொன்னார்கள்.
ஆயிஷா (ர) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், ”நான் தொழுது கொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டு  இருந்தேன். அது என்னைக்  குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
                                             நூல்:புகாரி373.
எனவே உருவப்படங்கள் உள்ள இடங்களிலோ அல்லது நம்மை திருப்புகின்ற படங்கள் மற்றும் ஆடைகள் இவைகள் இருக்கும் இடத்தில்தொழக்கூடாது.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்