Social Icons

Wednesday 23 April 2014

சர்வதேச அழுத்தங்களும் இஸ்லாமிய எழுச்சியும்

     எம்மைக் கடந்து சென்ற நூற்றாண்டின் முதற் காற்கூறின் இறுதியிலிருந்து முஸ்லிம் உலகில் ஆர்த்தெழுந்து வரும் இஸ்லாமிய மறுமலர்ச்சியை மேற்கு நாடுகள் மிகக் கூர்ந்து அவதானித்து வந்துள்ளன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளிலும், மிக வேகமாகப் பரவி வருகின்ற இஸ்லாமிய எழுச்சி, மேற்குலகைப் பொறுத்தவரையில் தற்கொலைப் போராளி ஊடுருவியிருப்பதைப் போன்று, எப்போது? எங்கே? வெடிக்கும் என்ற அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இது, இரு விதங்களில் கிலி கொள்ளச் செய்துள்ளது. ஒரு முனையில் மத்திய கிழக்கையும், இஸ்லாமிய உலகின் ஏனைய பகுதிகளையும் தங்களது அதிகாரத்திற்கு உட்படுத்தும் நவீன ஏகாதிபத்திய (காலனித்துவ)த்திற்கு ஓர் அச்சுறுத்தலாக அமைந்தது. மறுமுனையில், கிறிஸ்தவ மயமாக்கலுக்கு ஒரு பயங்கர சவாலாகவும் அமைந்து காணப்படுகிறது.

எனவே, அமொpக்காவும் அதன் அராஜகங்களுக்குத் துணைபோகும் நேச நாடுகளும் தமது அரசியல், பொருளாதார நலன்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சர்வதேசிய ரீதியாகப் பல்வேறு யுக்திகள், எதிர் நடவடிக்கைகள், திட்டங்கள், நாசகார அழிவு வேலைகள், உளவுப் பணிகள், அணுக் குண்டடிப்புகள், பதவிக் கவிழ்ப்புகள், கொலை வெறியாட்டங்கள், கதிர்வீச்சு, உயிரியல் ஆயுதப் பிரயோகங்கள் போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன.
    இந்த அவசர எதிர்நடவடிக்கைகளின் துல்லிய வெளிப்பாடே இன்று பாலஸ்தீன, காஷ்மீர், இந்தோனேசியா, மலேசியா, ஆப்கானிஸ்தான், லெபனான், ஈரான், ஈராக், சிhpயா, ஜோர்தான், பொஸ்னியா, செசனியா, அப்போனியா போன்ற இன்னோரன்ன இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான அராஜகங்களும் பொருளாதாரத் தடைகளும் அக்கிரமங்களும் ஆக்கிரமிப்புகளுமாகும். அத்தோடு, நச்சுத் தன்மை வாய்ந்த பிரச்சாரப் போர் ஒன்றைத் தொடுத்துள்ள மேற்குலகின் தொலைத் தொடர்பு சாதனங்களின் சவால்கள், வட்டி முறைப் பொருளாதார அமைப்பு, பிற கலாச்சார ஊடுருவல் மூளைச் சலவைக்கு இளைஞர்களை ஆட்படுத்துதல், முதலாளித்துவ சடவாத நாகாpகத்தின் கருவறையிலிருந்து ஜனனித்த, உலகமயமாக்கல் என்ற பல்வகைப்பட்ட சவால்கள் முஸ்லிம் உம்மத்தின் மீது விடுக்கப்பட்டுள்ளன.
    முஸ்லிம் விரோத சக்திகளாலும் முஸ்லிம் பெயர் தாங்கிகளாலும் மேற்கொள்ளப்படுகின்ற இஸ்லாமிய உம்மத்திற்கு எதிரான சதிநாச நடவடிக்கைகளை இனங்கண்டு, அவை காத்திரமான வழிகளினூடாகத் தகர்க்கப்பட்டு வருவது மன ஆறுதலை வழங்குகிறது. இதனால், உலகளாவியதாக ஓங்கி வீசும் பயங்கர நச்சுத் தன்மை வாய்ந்த ஜாஹிலிய்யப் புயலுக்கு மத்தியிலும் இஸ்லாம் எனும் ஒளி விளக்கு அணைந்து விடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய வரலாற்றை படிக்கும் யாரும் இந்த உண்மையை அறியலாம். எனவே, சர்வதேச இஸ்லாமிய உம்மத்திற்கெதிரான அறைகூவல்களை, அழுத்தங்களை இனங்கண்டு, அவற்றுக்கு மத்தியிலும் இஸ்லாம் எழுச்சி பெற்று வரும் விதத்தையும் நோக்குவோம்.

இஸ்லாமிய வரலாற்றின் ஓட்டத்தில் மிகப் பாரதூரமான பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதனால், பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது இஸ்லாமிய சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற வரலாற்றுக் கால கட்டம், சர்வதேச hPதியாக சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் மாற்றங்கள் ஏற்படும் அறிகுறிகளைப் புலப்படுத்துகிறது. மேலும், இவ்வறிகுறிகளால் வரலாற்றின் போக்கில் முன்பு ஏற்பட்ட மாற்றங்களை விட பல்வேறு பாரதூரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற, அதனை எதிர் கொள்ளச் செய்கின்ற காலகட்டமாகவும் அமைகிறது.
    கம்யு+னிசத்தின் வீழ்ச்சியோடு பனிப்போர் பு+ச்சாண்டியை முடிவுக்குக் கொண்டு வந்த முதலாளித்துவவாதிகள், தங்களது ஆதிக்க வெறிக்கு எதிரான மிகப் பொpய சவாலாக இஸ்லாத்தையே கண்டனர். எனவே, வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் பல ஆண்டுகளாக ஓர் இறுக்கமற்ற தன்மை உடையதாகக் காணப்பட்ட இஸ்லாமிய எழுச்சிக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள், ‘அடிப்படைவாத’, ‘பயங்கரவாத’ ஒழிப்பு நடவடிக்கைகளாக இனங்காணப்பட்டன. மேற்கின் கிறிஸ்தவ நாடுகளைக் கொண்ட பலமிக்க கூட்டணி, திட்டமிடப்பட்ட அடிப்படையில் மத்திய கிழக்கிலிருந்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட தெற்காசிய நாடுகள் வரை வியாபித்துள்ளது. இந்த விhpவாக்கல் நடவடிக்கையின் நோக்கம் முஸ்லிம்களை ஒடுக்குவதல்ல, அழித்தொழிப்பதாகும் என்பதை ஆழ்ந்து அவதானிக்கும் எவரும் உணர்ந்து கொள்வார்.
    மத்திய கிழக்கில் தங்கள் அடிவருடிகளையும் சந்தர்ப்ப வாதிகளையும் வைத்து அதனைச் சாதித்து வரும் இஸ்லாத்தின் எதிர்சக்திகள், தெற்காசியாவில் Voice of America, CNN போன்ற பிரச்சாரப் போரோடு, சி.ஐ.ஏ, ரா, மொஸாட் கூட்டு ஒப்பந்தம், கடற்படை நகர்வுகள், கூட்டுப் பயிற்சிகள், மதவாதத் தூணடுதல்கள், இனச் சுத்திகாpப்பு நடவடிக்கைகள் போன்ற இராணுவ நடவடிக்கைகளுடன் தமது எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
    அமொpக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேசத் துறை மத்திய நிலையத்தின்

சர்வதேச வழிகாட்டியான இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் ஆத்மீகப் புதையலாகப் பெற்று, சிறப்புற்று விளங்குகின்ற முஸ்லிம் உம்மத்தின் இஸ்லாமிய மறுமலர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் வகையில், சர்வதேசிய அரங்கில் பல்வேறு சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று முஸ்லிம்கள், உலகில் எவ்வளவு பலமுள்ள சக்தியாக இஸ்லாமிய எழுச்சியுடன் எழுகிறார்களோ, அந்தளவு அதனை அமுக்கி, சிதறடித்து, சின்னாபின்னமாக்கி, ஐக்கியத்தை சிதைத்து, நாசப்படுத்த ஆயுத ரீதியான, சிந்தனா ரீதியான பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
(Centre of International Relationபணிப்பாளரான பேராசிரியர் ஸாமுவேல் ஹன்டிங்டன் அவர்கள் அமொரிக்காவின்
Forign Affairs  என்ற சஞ்சிகையில் “Clash of Civilizations”என்ற ஒரு கட்டுரைத் தொடரை எழுதி வந்தார். அதில், “புதிய போராட்டம் ஒன்று ஆரம்பமாகப் போகிறது. அது வரலாற்றில் இதற்கு முன்னர் ஏற்பட்ட போர்களை விட மிகவும் பார தூரமானதாகவும், பயங்கரமானதாகவும் அமையும். அதுதான், இஸ்லாத்திற்கும் மேற்கத்திய நாகாpகங்களுக்குமிடையே ஏற்படப் போகும் போர்” என அவர் அதில் எதிர்வு கூறினார். இந்தக் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இஸ்லாமிய உலகின் அவதானிகளிடத்தில் கருதப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்த ப்பட்டது. ஹன்டிங்டன் கருத்துப்படி, “மேற்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற நாகாPகத்திற்கு அறைகூவலாக ஓர் இஸ்லாமிய எழுச்சி தோன்றிக் கொண்டிருக்கிறது. அந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியின் அடியாகத் தோன்றிக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய ஷாPஅத் விடுக்கின்ற அறைகூவலை வெற்றி கொள்வதற்கு அமொpக்காவும் மேற்கத்திய உலகமும் சகல ஆயத்தங்களையும் செய்வதற்கு அணிதிரள வேண்டும்” என்று வலியுறுத்தினார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய உலகிற்கு எதிராக பிரான்ஸ், பிhpட்டன், ஜெர்மன் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் தொடுத்த போருக்கு இவாpன் கருத்தை ஓரளவு உவக்கலாம்.
    முஸ்லிம் நாடுகளை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அடிமைப்படுத்;தி, மேற்கத்திய மொழியை பரவச்செய்து, பாரம்பாpயமான இஸ்லாமிய பண்பாட்டைச் சிதைத்து, மேற்கத்திய கலாச்சார ரீதியாகச் சிந்திக்கக் கூடிய ஒரு படித்த வர்க்கத்தை உருவாக்கி, கலாச்சார ஊடுறுவலை மேற்கொள்ளல் என்ற அந்த நடவடிக்கையால் உருவாகியவர்களே சல்மான் ருஷ்தி, நஜீப் மஹ்பு+ழ், தஸ்லீமா நஸ்ரின், தோப்பில் முஹம்மது மீரான், ஸாரா அபு+பக்கர் போன்றவர்கள். இவர்கள் இஸ்லாமிய உம்மத்துக்குள் இருந்து கொண்டே அதற்கு எதிராகச் செயற்படுபவர்கள்.
அரசியல் அழுத்தங்கள்
    அரசியல் ரீதியாக மேற்கத்திய நாகாpகத்தை முஸ்லிம் நாடுகளில் திணித்து அவற்றை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர அமொpக்காவும், மேற்குலகும் நினைக்கின்றன. முஸ்லிம் நாடுகளின் உhpமைகளில் தலையிட அவை பின் நிற்கவில்லை. அமொpக்காவும் பிரிட்டனும் இணைந்து முறையற்றுப் பெற்றெடுத்த இஸ்ரேலிச் சட்ட விரோத நாடு, சுதேசிகளாக பாலஸ்தீன் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப் பயங்கரமான இனச்சுத்திகாரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலின் இம்மோசமான இனவெறிக்கு எதிராக 1987ம் ஆண்டு மாபெரும் எழுச்சிப் பேரவை ஒன்று தோற்றிவிக்கப்பட்டு வளர்ந்து வருகின்றது. இந்த எழுச்சி அலை இஸ்ரேலை நோக்கி ஆக்ரோஷமாகக் குமுறத் தொடங்கிவிட்டது. இதில் சிறுவர்கள், பெண்கள், முதியோர் என சமூகத்தின் அனைத்துத் தரப்பு அங்கத்தவர்களும் பங்கு கொள்கின்றனர். கடந்த ஆண்டு (22-10-2001) இலங்கைத் தினகரன் வாரமஞ்சரியின் முன்பக்கத்தில், இரண்டு சிறுவர்கள் (எட்டு வயது மதிக்கத்தக்க) தம்மை நோக்கிச் சுடக் குறிபார்க்கும் நவீன இயந்திரத் துப்பாக்கி தாpத்த இஸ்ரேலிய இராணுவத்தினர் மீது கல்லெறியும் படமொன்று பிரசுhpக்கப்பட்டிருந்தது. இது போன்று ஆக்கிரமிப்பை எதிர்ப்பதில் 40-50 வயதுடைய பெண்கள் கூட நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். “எங்கள் முதல் தொழுகைத் திசையான (கிப்லா), மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள ஜெருஸலம் தான் சுதந்திர பாலஸ்தீனத்தின் தலைநகராக அமையும். இதில் எவ்வித மாற்றத்திற்கும் நாங்கள் உட்பட மாட்டோம். அராஜகத்திற்கு அடிபணிய மாட்டோம்” என்று உறுதியுடன் பாலஸ்தீன சகோதரர்கள் கூறுகின்றனர்.
    அடுத்து, முக்கிய அரசியல் ஒடுக்கு முறைக்கு உட்பட்டவர்களாக காஷ்மீர் முஸ்லிம்கள் உள்ளனர். இந்தியா, முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட வன்முறைகளைத் தூண்டி விடுகின்றது. 400 ஆண்டுகள் பழமையான பாபாp மஸ்ஜிதை தகர்த்து, முஸ்லிம் உம்மத்தின் காpயைப் பு+சுவது, பாபாp மஸ்ஜிதை மீண்டும் கட்டிடவும், ஏனைய பள்ளிகளைப் பாதுகாக்கவும் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.
முஸ்லிம்களுக்கு என்றும் எதிhpயான ரஷ்யா, செர்பியர்களுக்கு எதிராக முஸ்லிம்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராகவே செயற்பட்டு வருகின்றது. சுமார் 2700 புகைப்படங்கள் அப்பாவி பொஸ்னிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்பதைச் சித்தாpப்பனவாகவே உள்ளன. ஐ.நா.வின் மனித உhpமை ஆய்வாளரான முன்னாள் போலந்துப் பிரதமர் டேட்யு+ஸ் மஸோஷக் 27-7-1995 நாளன்று செர்பியர்களின் வெறியாட்டத்தைக் கண்ணால் கண்டவுடன், ஐ.நா.வின் கையாலாகாத் தனத்தை விமசித்துவிட்டுத் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
‘இரகசிய ஆசியா’ என்றழைக்கப்பட்ட சீனாவின் சிங்கியாங் என்ற பகுதியில் சீனாவிலுள்ள முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வசிக்கின்றனர். மத்திய ஆசியாவுக்கும், மங்கோலியாவுக்கும் இடைப்பட்ட இந்தப் பகுதி, சீன அரசின் அதிகாரப் பிடிக்குள் சிக்கித் தவிக்கிறது. அங்கே 200 பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அல்குர்ஆனைப் போதிக்கும் 600 போதனா பீடங்கள் ‘சட்டத்திற்குப் புறம்பான கட்டடம்’ என்று சீல் வைக்கப்பட்டுள்ளன. பல இலட்சக் கணக்கான, அறிவுப் பாரம்பாpய மிக்க நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் அரச ஊழியர்கள் நாலாயிரம் பேர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு, 15,000 அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 1950ல் சிங்கியாங்கில் 85 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் தொகை, 1993ல் 48 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இங்கு 1964 ஆண்டிலிருந்து தொடங்கி இன்று வரை 44 முறை அணு வெடிப்பாpசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, முஸ்லிம்கள் குடியிருக்க முடியாதவாறு ஆக்கப்பட்டுள்ளது. யு+சுப் இஸ்லாம் அவர்கள் மார்க்கக் கல்வியோடு உலகியற் கல்வியையும் போதித்து வரும் ஐளடயஅiஉ ளுஉhழழடக்கு இன்னும் அரசு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. பிரான்ஸிலும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்க மறுக்கப்படுகின்றன.
மேற்கு ஜெர்மனியில் பர்தா அணியும் பெண்கள் கேலி செய்யப்படுகின்றனர். சுவீடனில் ஹலாலான உணவின்றி முஸ்லிம்கள் தவிக்கின்றனர். கென்யாவில் முஸ்லிம்கள் 20மூ உள்ளனர். கல்வி கற்கப் போதிய வசதியின்மை தொடர்கிறது. சவு+தி அரேபியாவும் குவைத்தும் 13.50 கோடியை கென்யாவில் முஸ்லிம் கல்விக்காக உதவியுள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்