திருக்குர்ஆன் 22:47, 32:5 ஆகிய வசனங்களில் இறைவனின் ஒரு நாள் என்பது உங்கள் நாட்களில் ஆயிரம் வருடங்கள் அளவுடையது எனவும், 70:4 வசனத்தில் ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனவும் கூறப்படுகிறது.
ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்கு (1,82,50,000 நாட்களுக்கு) நிகரானது என்று கூறப்படுவதைச் சென்ற நூற்றாண்டுக்கு முன் வரை வாழ்ந்தவர் களால் புரிந்து கொள்ள முடியாது. நாட்கள் என்பது மாறவே மாறாது என்பது தான் உலக மக்களின் நம்பிக்கையாக இருந்தது.
ஆனால் ஒரு நாள் என்பது ஒருவரின் பயண வேகத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதை ஐன்ஸ்டீன் என்பவர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தார். இது ரிலேட்டிவிட்டி எனும் சார்பியல் கோட்பாடு எனப்படுகிறது.
உதாரணமாக, இந்தப் பூமியிலிருந்து ஒருவன் ஒளி வேகத்தில் மேல் நோக்கிப் பயணம் செய்து கொண்டே இருக்கிறான். (ஒளியின் வேகம் வினாடிக்கு சுமார் 3,00,000 கி.மீ). பூமியில் ஐம்பது ஆண்டுகளில் செய்கின்ற காரியங்களைச் செய்து விட்டு அவன் திரும்பி வந்தால் பூமியில் சிறிது நேரமே கழிந்திருக்கும் இது இன்றைய நவீன உலகில் வாழும் மேதைகளில் பலருக்கே புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்தாலும் உண்மை இது தான்.
இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்வெளிப் பயணம் சென்று விட்டு, பல ஆண்டுகளில் செய்து முடிக்கும் அளவுக்குக் காரியங்களை ஆற்றி விட்டுப் பூமிக்கு வந்தார்கள். ஆனால் பூமியில் சற்று நேரம் தான் கழிந்திருந்தது.
ரிலேட்டிவிட்டி எனும் சார்பியல் கோட்பாட்டை 1905ஆம் ஆண்டு தான் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தார். இதை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார் என்றால் நிச்சயம் அவர் இதைச் சொந்தமாகக் கூறியிருக்க முடியாது. அது இறைவனின் கூற்றாகவே இருக்க முடியும்.
இங்கே மற்றொரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.
32:5 வசனத்தில் ஒரு நாளை ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது எனக் கூறும் திருக்குர்ஆன், 70:4 வசனத்தில் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சம மானது எனக் கூறுவது ஏன்? இரண்டும் முரண்படுகிறதே என்பது தான் அந்தச் சந்தேகம்.
ஆயிரமும், ஐம்பதாயிரமும் ஒன்றுக் கொன்று முரண்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இரண்டும் வெவ்வேறு செய்திகளைக் கூறும் வசனங் கள் என்பதை விளங்கிக் கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை.
இவ்விரு வசனங்களில் பயன் படுத்தப்பட்டுள்ள சொற்களைக் கவனிக் கும் எவரும் இரண்டும் தனித்தனியான விஷயங்கள் என்பதை விளங்கிக் கொள்வர்.
70:4 வசனத்தை எடுத்துக் கொண் டால் பூமிக்கு வருகின்ற வானவர்கள் மேலேறிச் செல்வது பற்றிக் கூறப்படுகிறது. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் பூமியிலிருந்து இறைவனிடம் மேலேறிச் செல்லும் வேகம் ஐம்பதாயிரம் வருடங்களுக்கு நிகரான ஒரு நாளின் வேகம் எனக் கூறப்படுகிறது.
அதாவது ஒரு நாளில் அவர்கள் சென்றடைந்த தூரத்தை நீங்கள் அடைவது என்றால் ஐம்பதாயிரம் ஆண்டுகள் (அதாவது 1,82,50,000 நாட்கள்) தேவைப்படும். அவர்கள் ஒரு விநாடியில் சென்றடையும் தூரத்தை நாம் அடைவது என்றால் 211 நாட்கள் தேவைப்படும். அவ்வளவு வேகமாக அவர்களின் பயணம் அமைந்திருக்கும்.
வானவர்களின் பயண வேகத்தை 70:4 வசனம் கூறுகிறது.
32:5 வசனம் வானவர்களின் வேகத்தைக் கூறவில்லை. இறைவன் பிறப்பிக்கும் கட்டளை பூமியை அடைந்து மீண்டும் திரும்பிச் செல்வதற்கான வேகத்தைக் கூறுகிறது. இறைவன் ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான கட்டளைகளைப் பிறப்பிக்கின்றான்.
உலகில் நடக்கும் எந்தக் காரியமா னாலும் அவனது கட்டளைப்படியே நடக்கின்றன.
இவ்வாறு பிறப்பிக்கப்படும் கட்டளை கள் பூமியை அடைந்து மீண்டும் இறைவனைச் சென்றடையும் வேகம் பற்றி இவ்வசனம் கூறுகிறது.
இறைவனின் ஒரு கட்டளை ஒரு நாளில் சென்றடையும் தூரத்தை மனிதன் அடைய 1000 ஆண்டுகள் (3,65,000 நாட்கள்) தேவைப்படும்.
இறைவனின் கட்டளை ஒரு விநாடியில் செல்லும் தூரத்தை நாம் அடைய நான்கு நாட்களுக்கு மேல் தேவைப்படும்.
வானவர்களின் வேகம், கட்டளை களின் வேகத்தை விட 50 மடங்கு அதிகமாகவுள்ளது.
இது போல் 22:47 வசனமும் இறை வனின் கட்டளைகளின் வேகத்தையே குறிப்பிடுகின்றது.
அவசரமாக வேதனையைத் தேடுகின்றனர். அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான். சொன்னபடி வேதனை வந்து சேரும் என்று கூறிவிட்டுத் தான் உங்கள் இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணிக்கின்ற ஆயிரம் வருடங் களைப் போன்றது எனக் கூறுகிறான்.
அதாவது இறைவன் கட்டளை பிறப் பித்து விட்டால் ஆயிரம் ஆண்டுக்கு நிகரான வேகத்தில் அக்கட்டளை வந்து சேரும் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.
எனவே ஆயிரம் ஆண்டுகள் என்பதும் ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்பதும் வெவ்வேறு விஷயங் களுக்கான கணக்கு என்பதைப் புரிந்து கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லை.
Sharma Academy UPSC IAS MPPSC MPPSC Notes Best Online Coaching Classes in Indore
ReplyDelete