ரஜப் மாதம் பித் அத்கள்!!!!
என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
ரஜப் மாதம் வந்து விட்டால் சில ஊர்களில் பூரியான் ஃபாத்திஹா என்ற பெயரில் பாயாசம் தயாரித்து, பூரி சுட்டு ஃபாத்திஹாக்கள் ஓதுகிறார்களே! இவ்வாறு ஃபாத்திஹா ஓத வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா?
ரஜப் மாதம் பிறை 22ல் ஜாஃபர் சாதிக் என்ற ஒரு பெரியாரின் பெயரில் இவ்வாறு ஃபாத்திஹா ஓதுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த சில காரியங்களைத் தவிர வேறு எதுவும் இறந்தவர்களைச் சென்று அடையாது.
சரியாக 22 பூரிகள் தயாரித்து, 2 அண்டாக்களில் பாயாசம் தயாரித்து இந்த ஃபாத்திஹாக்களை ஓதுகின்றனர். இதை ஓதினால் செல்வம் பெருகி விடும் என்று நம்பிக்கையும் வைத்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்களது காலத்தில் பூரி என்ற ஒன்றே கிடையாது. அவர்கள் பூரியைப் பார்த்ததும் கூட கிடையாது. ஏன்? சலிக்கப்பட்ட மாவில் எந்த ஒரு உணவையும் சாப்பிட்டது கூட கிடையாது.
அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நன்கு சலித்து சுத்தம் செய்யப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட) வெள்ளை ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?'' என்று கேட்டேன். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை நபியாக அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து அவர்களை இறைவன் மரணிக்கச் செய்யும் வரை (சலித்து சுத்தமாக்கப்பட்ட மாவினாலான) வெள்ளை ரொட்டியைப் பார்த்ததே இல்லை'' என்று பதிலளித்தார்கள். நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்ததுண்டா?'' என்று கேட்டேன். அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை நபியாக அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து அவர்களை இறைவன் மரணிக்கச் செய்யும் வரை சல்லடையைக் கண்டதேயில்லை'' என்றார்கள். நான் "கோதுமையை நீங்கள் எப்படிச் சாப்பிட்டு வந்தீர்கள்? சலிக்காமலேயா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நாங்கள் கோதுமையை அரைத்து, (உமியை நீக்க) அதில் வாயால் ஊதுவோம். அதிலிருந்து (தவிடு, உம்மி போன்ற) பறப்பவை பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீர் கலந்து (ரொட்டி தயாரித்து) உண்போம்'' என்றார்கள்.
நூல்: புகாரி 5413
நூல்: புகாரி 5413
மேற்கண்ட ஹதீஸை ஒன்றிற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை படியுங்கள். இப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் பூரி சுட்டு ஃபாத்திஹாக்கள் ஓதியிருப்பார்களா? அப்படி ஓதியிருப்பார்கள் என கற்பனை தான் செய்ய முடியுமா? இன்றைய லெப்பைமார்கள் எப்படியெல்லாம் தாய்மார்களை ஏமாற்றுகிறார்கள் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இந்த ஃபாத்திஹாவை ஓதினால் வறுமை நீங்கி விடும் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர். நபி (ஸல்) அவர்களே தங்களுடைய வறுமையை நீக்க முடியவில்லை எனும் போது இது போன்ற ஃபாத்திஹாக்கள் நீக்கி விடுமா?
செல்வத்தைத் தருபவனும், எடுப்பவனும் அல்லாஹ் தான். செல்வத்தை இறைவன், தான் நாடியோருக்குக் கொடுப்பான். தான் நாடியோருக்குக் குறைப்பான். எத்தனையோ நபிமார்கள் வறுமையில் வாடியுள்ளனர்.
எனவே இந்த ஃபாத்திஹா ஓதினால் வறுமை அகன்று விடும் என்று நம்பிக்கை வைப்பது வழிகேடாகும்.
நபி (ஸல்) அவர்கள் இது போன்ற எந்த ஒரு காரியத்தையும் கற்றுத் தரவில்லை. இவைகளெல்லாம் ஆலிம்கள் என்ற பெயரில் சிலர் மக்களை ஏமாற்றி, தங்கள் வயிற்றை வளர்த்துக் கொள்வதற்காக உருவாக்கிய வழிகேடான காரியங்களாகும். எனவே இது போன்ற காரியங்களை முன்னின்று செய்யக் கூடிய தீன்குலப் பெண்மணிகள் இவற்றைத் தவிர்ந்து கொள்வது மிக மிக அவசியமாகும்
No comments:
Post a Comment