Social Icons

Sunday, 4 August 2013

பெருநாள் (குத்பா) உரை விளக்கம்

பெருநாள் (குத்பா) உரை

பெருநாள் தொழுகை முடிந்ததும் மக்களுக்கு இமாம் உரையாற்றுவது நபிவழியாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் இரு பெருநாட்கலும் உரை நிகழ்த்துவதற்கு முன்பு தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 962 இந்த ஹதீஸ்கன் அடிப்படையில் முதல் தொழ வேண்டும். அதன் பிறகு தான் உரை நிகழ்த்த வேண்டும். ஆனால் இன்று பெரும்பாலான ஊர்கல் தொழுவதற்கு முன்பாக ஓர் அரை மணி நேர உரை முதல் நடைபெறும். அதன் பிறகு தொழுகையும், அதற்குப் பிறகு இரண்டு உரைகளும் நடைபெறும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைக்கு மாற்றமான செயலாகும்.

மிம்பர் (மேடை) இல்லை

வழக்கமாக ஜும்ஆவின் இரு உரைகளும் பள்யில் உள்ள மிம்பரில் ஆற்றப்படும். அது போல் பெருநாள் தொழுகைக்குப் பிறகு மிம்பரில் நின்று உரையாற்ற வேண்டுமா? அல்லது தரையில் நின்று உரையாற்ற வேண்டுமா? என்று இப்போது பார்ப்போம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள். அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) நூல்: இப்னு குஸைமா. இந்த ஹதீஸ் அடிப்படையில் இமாம் தரையில் நின்று தான் உரையாற்ற வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்கு) தயாராகி தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உரையை) முடித்து இறங்கி பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால் (ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 978 

இந்த ஹதீஸில் நஸல (இறங்கி…….) என்று வருகின்றதே! மிம்பர் இருந்ததால் தானே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறங்கினார்கள் என்று நபித்தோழர் அறிவிக்கிறார் என்ற சந்தேகம் நமக்கு வருகின்றது. நஸல என்ற வார்த்தைக்கு நாம் கொள்கின்ற சரியான பொருன் மூலம் நம்முடைய சந்தேகம் நீங்கி விடுகின்றது. நஸல என்ற வார்த்தை (1) உயரமான இடத்திருந்து இறங்குதல் (2) தங்குதல் (3) இடம் பெயர்தல் என்று மூன்று பொருட்கல் பயன்படுத்தப்படுகின்றது. ஜாபிர் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் நஸல என்ற வார்த்தைக்கு முந்திய இரண்டு பொருட்கள் கொடுக்க முடியாது. மூன்றாவது பொருளை அதாவது இடம் பெயர்தல் என்ற பொருளைத் தான் கொடுக்க வேண்டும். காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரையில் நின்று உரையாற்றினார்கள் என்று மேற்கண்ட இப்னு குஸைமா ஹதீஸ் தெவாகக் கூறுகின்றது எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அங்கிருந்து நகர்ந்து பெண்கள் பகுதிக்கு வந்தார்கள் என்று அந்த ஹதீஸுக்கு விளக்கம் அத்தால் நமக்கு ஏற்படும் அந்தச் சந்தேகம் நீங்கி விடுகின்றது. 

பெண்களுக்குத் தனியாகப் பிரச்சாரம் செய்ய வேண்டுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் பேசியது பெண்களுக்குக் கேட்கவில்லை என்று கருதியதும் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 98 இமாம் பேசுவது பெண்களுக்கு எட்டி விடுமானால் அந்த உரையே போதுமானதாகும். இல்லையேல் பெண்கள் பகுதிக்கு வந்து உரையாற்ற வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.


பெருநாள் குத்பாவைக் கேட்பதன் அவசியம்

ஜும்ஆ உரைக்கும், பெருநாள் உரைக்கும் ஹதீஸில் காட்டப்பட்டுள்ள வித்தியாசத்தைத் தவிர்த்து மீதி எல்லா அம்சங்கலும் பெருநாள் உரை, ஜும்ஆ உரையைப் போன்று தான். ஜும்ஆ உரையைக் காது தாழ்த்திக் கேட்பதற்கு என்ன என்ன காரணங்கள் பொருந்துமோ அதே காரணங்கள் பெருநாள் உரைக்கும் பொருந்துகின்றன. எனவே, நபித்தோழர்கள் எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கன் உரையை அமர்ந்து அமைதியாகக் கேட்டார்களோ அது போல் நாமும் அமைதியாக இமாமின் உரையைக் கேட்க வேண்டும். விரும்பினால் உரையைக் கேட்கலாம்; இல்லையேல் கேட்க வேண்டியதில்லை என்ற கருத்துப்பட வரக்கூடிய ஹதீஸ்கள் ஆதாரமற்றவையாகும். கன்னிப்பெண்கள், மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைவரும் வந்து முஸ்லிம்கன் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது பெருநாள் உரையை கேட்பதற்காகத் தானே தவிர மைதானத்திற்கு வந்து பேசிக் கொண்டிருப்பதற்காக அல்ல! பெருநாள் உரையின் போது பேசிக் கொண்டிருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கன் அந்தக் கட்டளையைக் கேக் கூத்தாக்குகின்றோம் என்பது தான் பொருளாகும்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்