“நீ
மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள்
(என்றும்), பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி
உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச்
செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித
நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி
தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும்
மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
அல்குர்ஆன் 16:68-69
And thy Lord revealed to the bee:
Make hives in the mountains and in the trees and in what they build.
Then
eat of all the fruits and walk in the ways of thy Lord submissively.
There comes forth from their bellies a beverage of many hues, in which
there is healing for men.
Therein is surely a sign for a people who reflect.
Al Quran_16:68 & 69
இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர்.
உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு திரவம் தான் தேன்.
இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள
தேனில் உள்ள மருத்துவ குணம் பற்றி ஆராய்வோமா?
தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, கிருமிகளை வளர விடுவது இல்லை
சித்த மருத்துவம் தேன் பற்றி கூறும்போது இந்த தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்க பலத்தை கொடுக்கிறதாம்
புதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகுமாம்
தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்க செய்கிறதாம்.
தேன் மலமிலக்கியாக கூட செயல்படுகிறதாம்.
தேன் உதிரப் போக்கை கட்டுப்படுத்துகிறதாம்.
தேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து
கொடுத்தால் மலச்சிக்கல், வயிறு பெறுமல், இரைப்பு இருமல், ஜலதோஷம்,
தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகுமாம்.
இதயத்தின் தசைகள் சோர்வடைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு ISCHEMIA, INFRACTION எனும் அபயாய நோய்கள் வருவதை தேன் தடுக்கிறதாம். மேலும் தேன் இதயச் சுமையை குறைக்கிறதாம்.
தேனும் கரித்தூலும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுமாம்.
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டுவிட்டு பிறகு வெண்ணீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்குகிறதாம்.
காயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம்
விரைவில் குணமடையும் எனக் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள்
கண்டறிந்துள்ளனர் என்று ஒரு செய்தி கூட உள்ளது.
அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள்
என்பதற்கும் இறுதி வேதம் என்பதற்கும் இந்த தேன் மற்றும் தேனீ பற்றிய
படிப்பினை ஆதாரமாக இருக்கிறது. நீங்கள் இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வரலாமே!
No comments:
Post a Comment