Social Icons

Sunday, 4 August 2013

பெருநாள் தொழுகையில் ஓத வேண்டிய அத்தியாயங்கள்

பெருநாள் தொழுகையில் தக்பீர்கள் கூறிய பின் சூரத்துல் ஃபாத்திஹா ஓதிவிட்டு ஓத வேண்டிய சூராக்கள் குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (அத்தியாயம்: 87) ஹல் அதாக ஹதீசுல் காஷியா (அத்தியாயம்: 88) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தனர். பெருநாளும், ஜும்ஆவும் ஒரே நாளில் வந்து விட்டால் அவ்விரண்டிலுமே மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: முஸ்லிம் 1452 அபூ வாகித் அல்லைஸி (ரலி)யிடம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பெருநாள் தொழுகையிலும், நோன்புப் பெருநாள் தொழுகையிலும் என்ன ஓதுவார்கள்? என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கேட்ட போது, அவ்விரு தொழுகைகலும் காஃப் வல் குர்ஆனில்மஜீத் (அத்தியாயம்: 50) இக்தர பதிஸ் ஸாஅ (அத்தியாயம்: 54) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள் என்று பதிலத்தார்கள். நூல்: முஸ்லிம் 1477 

மேற்கண்ட ஹதீஸ்கள் என்னென்ன அத்தியாயங்களை பெருநாள் தொழுகையில் ஓத வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிய சூறாக்களை நபித்தோழர்கள் அறிவிப்பதிருந்து கிராஅத்தைச் சப்தமிட்டு ஓத வேண்டும் என்பதும் தெவாகின்றது. இவ்வாறாக மற்ற தொழுகைகளைப் போன்ற ருகூவு, சுஜுதுடன் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்