Social Icons

Thursday 5 September 2013

காட்டுமிராண்டித்தனமான பத்வா



உபியில் முஸ்லிம் மத அறிஞர்கள் காட்டுமிராண்டித்தனான பத்வாவைக் கொடுத்து இஸ்லாத்தையும் பெண்களையும் கேவலப்படுத்தியுள்ளனர். வடநாட்டில் இது போன்ற கிறுக்குத் தனங்களுக்குப் பஞ்சம் இல்லை. அந்தத் தீர்ப்பு குறித்து கீழ்க்கண்ட செய்தி நாளிதழ்களில் வெளியாகியுள்ளது 

முசாபர்நகர் (உ.பி.,) : கணவர் காணாமல் போனதால், வேறொருவரைத் திருமணம் செய்த பெண்ணை, திரும்பி வந்த கணவருடன் வாழும்படி ஊர் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. 

 உத்தரபிரதேச மாநிலம் மிரன்பூரைச் சேர்ந்தவர் ரோஷன் என்ற முஸ்லிம் பெண். இவர் கணவர் இர்ஷாத். இவர் திடீரென காணாமல் போனார். ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில், கபார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் ரோஷன். இந்நிலையில், இர்ஷாத் திரும்பி வந்தார். மிரன்பூர் பஞ்சாயத்து கூடி, ரோஷனின் இரண்டாவது திருமணம் செல்லாது என்றும், முதல் கணவர் இர்ஷாத்திடம் திரும்பிச் செல்லும்படியும் தீர்ப்பளித்தது. இதேபோல், மீரட் அருகில் உள்ள முண்டாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரிப். இவர் கார்கில் போரின் போது காணாமல் போனார். அப்போது அவர் மனைவியான குடியா, தவுபிக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆரிப் திரும்பி வந்தபோது, பஞ்சாயத்து, ஆரிப் மனைவி மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தீர்ப்பளித்தது. - தினமலர் 

 பெண்களுக்கு ஆன்மா உண்டா என்று நமது நாட்டில் ஒரு காலத்தில், பட்டி மன்றமே நடந்துள்ளது. அதாவது பெண்களை மனித இனத்தில் சேர்ப்பதா அல்லது ஆடு மாடுகளைப் போன்ற சொத்துக்களின் பட்டியலில் சேர்ப்பதா என்பது இதன் உள்கருத்தாகும். 

ஆனால் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு உரிமைகள் உண்டு என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. 

இந்த நிலைப்பாட்டை முஸ்லிம் மதகுருமார்கள் அறியாமல் உள்ளதால் காட்டுமிராண்டித்தனமான பத்வாக்களைக் கொடுத்து இஸ்லாத்தைக் கேவலப்படுத்தி வருகின்றனர். 

தனக்கு மனைவியைப் பிடிக்கவில்லை என்றால் விவாக ரத்துச் செய்யும் உரிமை ஆணுக்கு உள்ளது. அது போல் பெண்ணுக்கும் உள்ளது. கனவனைப் பிடிக்கவில்லை என்பதற்காக அல்லது காணாமல் போய் விட்டான் என்பதற்காக அவள் முந்தைய திருமணத்தை முறித்து மறு திருமணம் செய்யும் உரிமை உள்ளது. அவ்வாறு திருமணம் செய்த பின் காணாமல் போனவன் வந்து விட்டால் அவனிடம் போய்விட வேண்டும் என்று தீர்ப்பளிப்பது பெண்களை ஆடு மாடுகளைப் போல் சொத்தாகப் பாவிக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடாகும். 

முதல் கணவனுடன் சேர வேண்டும் என்றால் இரண்டாம் கணவருடன் வாழ்ந்தது விபச்சாரமா? திருமணமா?

 விபச்சாரம் என்று இவர்கள் கூற மாட்டார்கள். திருமணம் என்று தான் கூறுவார்கள். திருமனம் என்றால் முதல் கணவனின் மனைவியை திருமணம் செய்து வைத்தார்களா?

 அல்லது அந்த திருமணத்தை ரத்துச் செய்து விட்டு திருமணம் செய்து வைத்தார்களா? 

அடுத்தவன் மனைவியைத் திருமணம் செய்து வைத்ததாக இவர்களே கூற மாட்டார்கள். முதல் கணவனுடன் உள்ள திருமண பந்தத்தை ரத்துச் செய்த பிறகு தான் இரண்டாம் திருமணம் நடந்துள்ளது என்றால் முதல் கணவன் கணவனாகவே இல்லை என்று ஆகின்றது. அவ்வாறிருக்க அவனுடன் சேர்ந்து வாழுமாறு பத்வா கொடுப்பது எந்த வகை நீதி?

onlinepj

1 comment:

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்