Social Icons

Thursday, 18 October 2012

இறைத்தூதர்களை நம்புதல்

இறைத்தூதர்களை நம்புதல்

இறைவனிடமிருந்து பெற்ற செய்தியை மக்களுக்கு அறிவித்து அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக மனித சமுதாயத்தி­ருந்தே தேர்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்கள் ஆவார்கள்.

அனைத்து சமுதாயத்திற்கும் இறைத்தூதர்கள்

அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.

(அல்குர்ஆன் 16:36)
 

இறைத்தூதர்களின் எண்ணிக்கை

இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் மொத்த எண்ணிக்கை பற்றி குறிப்பிடும் ஆதரப்பூர்வமான எந்த ஹதீஸிம் கிடையாது.

அல்லாஹ் கூறுகிறான் :
உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை.

(அல்குர்ஆன் 40:78)
 
குர்ஆனில் பெயர் கூறப்பட்ட நபிமார்கள்

திருமறைக் குர்ஆனில் இருபத்தைந்து இறைத்தூதர்களின் பெயர் கூறப்பட்டுள்ளது.

6 83…86  
வரை 18 நபிமார்களின் பெயர் கூறப்பட்டுள்ளது.

1.    
ஆதம் (அலை)
2.    
நூஹ் (அலை)
3.    
இபுறாஹீம் (அலை)
4.    
இஸ்ஹாக் (அலை)
5.    
யஃகூப் (அலை)
6.    
தாவூத் (அலை)
7.    
சுலைமான் (அலை)
8.    
அய்யூப் (அலை)
9.    
யூசுப் (அலை)
10.    
மூஸா (அலை)
11.    
ஹாரூன் (அலை)
12.    
ஜக்கரிய்யா (அலை)
13.    
யஹ்யா (அலை)
14.    
ஈஸா (அலை)
15.    
இல்யாஸ் (அலை)
16.    
இஸ்மாயீல் (அலை)
17.    
அல்யஸவு (அலை)
18.    
யூனுஸ் (அலை)
19.    
லூத் (அலை)
20.    
இத்ரீஸ் (அலை)         (19:50)
21.    
ஹுத் (அலை)        (26:125)
22.    
ஸா­ஹ் (அலை)’    (26:143)
23.    
ஷுஐப்(அலை)        (26:178)
24.    
துல்கிஃப்லு (அலை)        (38:48)
25.    
முஹம்மது (ஸல்)        (33:40)
 
முதல் நபி

ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதரும் நபியும் ஆவார்கள். ஆனால், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக அனுப்பபட்ட முதல் நபி நூஹ்(அலை) அவர்கள் ஆவார்கள்.

ஷஃபாஅத் பற்றிய ஹதீஸில் ….. மறுமையில் மக்கள் நூஹ் (அலை) அவர்கள் வந்து உலக மக்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களில் நீங்கள்தான் முதலாமவர்
என்று   கூறுவார்கள்.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா(ர­)
நூல் : புகாரீ (3340)
  
 
இறுதித்தூதர்

இறைத்தூதர்களில் இறுதியானவர் நபி முஹம்மது (ஸல்) ஆவார்கள். இறுதி நாள் வரை தோன்றுகின்ற மனித சமுதாயம் முழுமைக்கும் இவர்கள்தான் கடைசி நபியாவார்கள். இவர்களுக்குப் பின்னர் எந்த இறைத்தூதரும் வரமாட்டார்கள். தூதுத்துவம் இவர்களோடு நிறைவு பெற்றுவிட்டது.

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார்.

 (அல்குர்ஆன் 33:40)

(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம்.

(அல்குர்ஆன் 34:28)

(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

(அல்குர்ஆன் 21:107)

அவர்களில் மற்றவர்களுக்காகவும் (அவரை அனுப்பினான்) அவர்களுடன் இவர்கள் இன்னும் சேரவில்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 62:3)

இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுஎனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:19)
  
 
நபி என வாதிடும் பொய்யர்கள்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என்னுடைய சமுதாயத்தில் 30 பொய்யர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அனைவரும் தன்னை நபி என்று வாதிப்பார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர் :  ஸவ்பான் (ர­லி)
நூல் :  திர்மிதீ (2145)


நபி, ரசூல் ஒன்றே!

குர்ஆனில் கூறப்பட்ட நபி என்று சொல்லப்பட்டவரும் ரசூல் என்று சொல்லப்பட்டவரும் வேவ்வாறானவர்கள் என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.

அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.

நபி என்ற சொல் அறிவிப்பவர் என்று பொருள்படும். இஸ்லாமிய மார்க்கத்தில் நபி என்பவர் இறைவனிடமிருந்து பெற்ற செய்தியை மக்களுக்கு அறிவிப்பவர் என்று பொருள்,

ரசூல் என்ற சொல்லும் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தூதர் என்பது இதன் பொருள். இஸ்லாமிய மார்க்கத்தில் தூதர் என்பவர் இறைவனிமிருந்து செய்தியை மக்களுக்கு கொண்டு வருபவர் என்று பொருள்.

இவ்விரு சொற்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு என்று சிலர் கருதுகின்றனர்.

ரசூல் என்பவர் வேதம் வழங்கப்பட்டவர். நபி என்பவர் அவ்வேதத்தின் அடிப்படையில் பிரச்சாரம் செய்பவர் என்றும் சிலர் கூறுகின்றனர்.  இது தவறானதாகும். நபிக்கும் வேதம் வழங்கப்பட்டதாக பின்வரும் வசனம் கூறுகிறது.

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர் தாம், அதற்கு முரண்பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான்.

(அல்குர்ஆன் 2:213)

மேலும்  2:136, 3:79, 3:81, 19:30, 27:112..117, 29:27, 45:16, 57:26 ஆகிய வசனங்கள் நபிக்கும்
வேதம் வழங்கப்பட்டதாக கூறுகிறது.

வேறு சிலர் நபி என்பவர் தனி மார்க்கம் கொண்டு வந்தவர் ரசூல் அந்த வழியில் நடைபோடுபவர் என்பர்.

இதுவும் தவறாகும். ரசூலுக்கும் தனிமார்க்கம் இருந்ததை பின் வரும் வசனம்
இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்.

(அல்குர்ஆன் 9 : 33)

மேலும் இதே கருத்தை  10:47, 17:15, 48:28, 61:9 என்ற வசனங்களி­ருந்து அறியலாம்.

ரசூல்மார்கள் 313, நபிமார்கள் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்றும் கூறுவர். இதுவும் ஆதாரமான செய்தி இல்லை. நபி, ரசூல் இரண்டும் இறைத்தூதர்களைக் குறிக்கும் இரு வார்த்தைகள். இரண்டும் ஒன்றே. நபிக்கும் ரசூலுக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது
 
இறைத்தூதர்கள் ஆண்களே!

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்.

(அல்குர்ஆன் 16:43)
 
 
ஒவ்வொரு தூதருக்கும் தனி வழிமுறைகள்

உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற் படுத்தியுள்ளோம்.

(அல்குர்ஆன் 5:48)
 
 
நபிமார்களும் இறைவனின் அடிமைகளே!

வ­மையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன் 38:45)
 
நபிமார்களும் மனிதர்களே!

நான் உங்களைப் போன்ற மனிதன்தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 18:110)
 
நபிமர்களுக்கு அதிகாரத்தில் பங்கில்லை!

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்க வில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மை களை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 7:188)
  
 
நபிமார்கள் தாமாக அற்புதம் செய்ய இயலாது!

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது.

(அல்குர்ஆன் 13:38)
 

நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர்

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவி யரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.

(அல்குர்ஆன் 13:38)
 

ஈஸா(அலை) இறைவனின் அடிமையே!

உடனே அவர் (அக்குழந்தை), ”நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான். என்று கூறினார்.

(அல்குர்ஆன் 19 30)

இது ஈஸா(அலை) தொட்டில் குழந்தையாக இருந்தபோது பேசிய வார்த்தைகளாகும்.


ஈஸா(அலை)  கொல்லப்படவில்லை!

அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.

(அல்குர்ஆன் 4:157,158)
 
குர்ஆனுடன் நபிவழியும் அவசியம்

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களி­ருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள்
பகிரங்கமான  வழி கேட்டில் இருந்தனர்.

(அல்குர்ஆன் 3:164)

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.

(
அல்குர்ஆன் 53:2,3)

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

(
அல்குர்ஆன் 16:44)


இவ்வசனத்தில் திருக்குர்ஆனை விளங்கிட இரு வழிகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

முதலாவது வழி, வாசிப்பவர்கள் அவர்களே சிந்தித்து விளங்கிக் கொள்ளுதல்.
இரண்டாவது வழி, யார் வேதத்தைக் கொண்டு வந்தாரோ அந்தத் தூதர் தந்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் விளங்குதல்.

திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்தால் கணிசமான வசனங்கள் எந்த விளக்கமும் தேவைப்படாமல் மேலோட்டமாக வாசிக்கும் போதோ, அல்லது கவனமாக சிந்திக்கும் போதோ விளங்கி விடும். ஆனால் சில வசனங்கள் எவ்வளவு தான் சிந்தித் தாலும் நபிகள் நாயகத்தின் விளக்கம் இல்லாமல் சரியாக விளங்காது.

முஹம்மதே! உமக்கு வேதத்தை அளித்தது, நீர் விளக்குவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் தான் என்று இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது.
திருக்குர்ஆனுடன் நபிகள் நாயகத்தின் விளக்கம் பின்னிப் பிணைந்தது; தவிர்க்க இயலாதது என்பதற்கு வலுவான சான்றாக இவ்வசனம் திகழ்கிறது.

(விரிவான விளக்கத்திற்கு வழிகெட்ட இயக்கங்கள் என்று தலைப்பில் இடம் பெற்ற கருத்தை பார்வையிடுக!)
 

நபிமார்களுக்கு மத்தியில் பாகுபாடு கிடையாது!

நபிமார்களுக்கு எந்த எந்த சிறப்புகளைக் கூறியுள்ளானோ அதைக் கொண்டுதான் அவர்களைச் சிறப்பிக்கவேண்டும். நாமாக நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக்கூடாது.

இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப் பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்).அல்லாஹ்வையும், வானவர் களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர் களையும் அனைவரும் நம்பினார்கள். அவனது தூதர்களில் எவருக்கிடை யேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம்; செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு எனக் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன் 2:285)
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்