Social Icons

Sunday 4 August 2013

தொழுகை நேரம்

இன்றைய தினத்தில் நாம் முதல் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பயிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பர்ராஃ பின் ஆஸிப் (ரலி) நூல்: புகாரி 951, 965, 968, 976, 5545, 5560,

மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தினத்தில் முதல் காரியமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வயுறுத்துகின்றது. முதல் காரியமாக பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால் சுபுஹ் தொழுது முடித்த மறு நிமிடமே தொழுது விடவேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

 ஏனெனில் பொதுவாக சுபுஹு தொழுகைக்குப் பின்னர் சூரியன் நன்கு வெப்படும் வரை தொழுவதற்குத் தடை உள்ளது. சுபுஹுக்குப் பின் சூரியன் உதித்துப் பிரகாசிக்கின்ற வரை தொழுவதையும், அஸருக்குப் பின் சூரியன் மறைகின்ற வரை தொழுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 58

இந்த ஹதீஸில் சுபுஹுக்குப் பின்னர் சூரியன் முழுமையாக வெப்படும் வரை தொழுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதால் அந்த நேரம் முடிந்தவுடன் பெருநாள் தொழுகையின் நேரம் துவங்கி விடுகின்றது. தமிழகத்தில் அனேக இடங்கல் காலை 11 மணி வரை தாமதப்படுத்தி பெருநாள் தொழுகையைத் தொழுகின்றார்கள். இது தவறாகும். பெருநாள் தொழுகை மைதானத்தில் தொழவேண்டிய தொழுகையாகும். தொழுகையைத் தாமதப்படுத்தும் போது வெயின் கடுமை காரணமாக மைதானத்தில் மக்கள் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கடுமையான வெப்பம் நரக வெப்பத்தின் வெப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும் போது தொழுகையை (வெப்பம் தணியும் வரை) தாமதப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி 534, 537, 538, 539

 பள்வாசல் சென்று தொழ வேண்டிய கடமையான தொழுகைகளைக் கூட வெயின் கடுமையைக் காரணம் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமதப்படுத்துமாறு கட்டளையிட்டுள்ளார்கள். மக்கள் சிரமப்படக் கூடாது என்பதில் அந்த அளவுக்குக் கவனமாக இருந்துள்ளார்கள். எனவே நபிவழியைப் பின் பற்றித் தொழுவது என்றால் மைதானத்தில் தான் இத்தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும். மைதானத்தில் மக்கள் வெயிலைத் தாங்க முடியாத நேரத்தில் தொழுவது மேற்கண்ட நபிவழிக்கு முரணாக அமைகிறது. மேலும் பெருநாள் தினத்தில் முதல் காரியமாகத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் சூரியன் முழுமையாக வெப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழுது விடுவது தான் சரியான செயலாகும்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்