Social Icons

Sunday 4 August 2013

பெருநாள் தொழுகையில் பெண்கள்


பொதுவாகப் பெண்கள் பள்வாசலுக்கு வருவதை அனுமதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்யில் தான் தொழுதாக வேண்டும் என்று கட்டளையிடவில்லை. அதை வலியுறுத்தவும் இல்லை. ஆனால் வேறெந்த தொழுகைக்கும் வலியுறுத்தாத அளவுக்கு பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) நூல்: புகாரி 324, 351, 974, 980, 981, 1652

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். அன்றைய நாளின் பரகத்தை எதிர்நோக்கி அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தக்பீர் கூற வேண்டும். அவர்களோடு இவர்களும் துஆச் செய்ய வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) நூல்: புகாரி 971 பெருநாளுக்கென ஒரு பரக்கத் இருக்கின்றது. அந்த நாள் ஆண்களோடு சேர்ந்து பெண்களும் (மாதவிடாய்ப் பெண்களும்) தக்பீர் சொல்ல வேண்டும்.

ஆண்கள் துஆச் செய்யும் போது பெண்களும் தங்களுக்காக துஆச் செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது. கற்பனைக் காரணங்களைக் கூறி பெண்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதைக் தடுப்பவர்கள், பரக்கத்தான அந்த நாள் பெண்கள் செய்ய வேண்டிய வணக்கங்களுக்குத் தடையாக அமைந்து விடுகின்றார்கள். பெண்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதற்கு, சுன்னத்தான திடல் தொழுவதை விட்டுவிட்டு பள்வாசலைத் தேர்ந்தெடுத்ததும் மிக முக்கியமான காரணம் திடல் தொழுகை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாலும், ஹஜ்ஜுப் பெருநாலும் (பள்யில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீது அல் குத்ரீ (ரலி) நூல்: புகாரி 956

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்வாசல் பெருநாள் தொழுகையைத் தொழுததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை. மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்கல் தொழுவதை விட எனது இந்தப் பள்யில் (மஸ்ஜிதுந் நபவீ) தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1190


 இந்த ஹதீஸின் அடிப்படையில் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது மற்ற சாதாரணப் பள்கல் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். பெருநாள் தொழுகைகளை பள்யில் தொழுவது சரியான நடைமுறையாக இருந்திருந்தால் ஆயிரம் மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய மஸ்ஜிதுந் நபவீயில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள். இன்னும் சில ஊர்கல் பெண்களுக்கென தனியாக பெருநாள் தொழுகை நடத்துகின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இப்படி பெண்கள் தனியாக ஓரிடத்தில் கூடி ஜமாத்தாக பெருநாள் தொழுகை தொழுததாக எந்த ஒரு ஹதீஸையும் நம்மால் காண முடியவில்லை.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்