Social Icons

Tuesday 30 July 2013

ரமலான் கடைசி பத்தில் செய்ய வேண்டிய அமல்கள்

அல் ஹம்து­ல்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா அஷ்ரபில் அன்பியாயி அல் முர்ஸலீன வ அலா ஆ­ஹி வ ஸஹ்பிஹி அஜ்மயீன்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே இந்த தலைப்பில் கடைசி பத்து இரவில் செய்ய வேண்டிய அமல்களை சிறிது பார்ப்போம். ரமலானில் கடைசி பத்து இரவுகளுக்கு என்று நபிகள் நாயகம் ஸல் அவர்களிடத்திலும் அவர்களது தோழர்களிடத்திலும் அதிகம் முக்கியத்துவம் இருந்ததை ஹதீஸ்களில் வழியாக அறியமுடிகிறது.

அவர்கள் அதிகமாக அல்லாஹ்விற்கு வணக்க வழிபாடுகள் செய்வது தொழுவுதல் திக்ரு செய்தல் குர்ஆன் ஓதுதல் ஆகியவை அவர்கள் ரமலானில் கடைசி பத்தில் செய்த வணக்கங்களாகும்.
கடைசி பத்தின் இரவு முழுவதுமாக வணக்கங்களை செய்தல்.
ஆயிஷா ர­ அவர்கள் கூறுகையில் குர்ஆனின் பெரும் பகுதியை ஒரு இரவு முழுவதும் ஓதுவதையும் தொழுகையை ஒரு இரவு முழுவதும் தொழுததையும் மாதம் முழுவதும் நோன்பு நோற்றதையும் ரமலானைத்தவிர மற்ற மாதங்களில் நபி ஸல் அவர்கள் செய்ததாக நான் அறியவில்லை. நூல் : நஸயீ 1623.
தன்னுடைய குடுத்பத்தாரை தொழுகைக்காக எழுப்பி விடுதல்.
ஆயிஷா (ரரி) அவர்கள் கூறியதாவது: (ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்! நூல் : புகாரி 2024.
இஃதிகாப் இருக்குதல்.
ஆயிஷா (ரரி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் துணைவியர் இஃதிகாஃப் இருந்தனர். நூல் : புகாரி 2026.
குர்ஆன் ஓதுதல்.
இப்னு அப்பாஸ் (ரரி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். நூல் : புகாரி 6

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்