பொருள்கள், சிறிது கவனம் செலுத்தி அவற்றின் பொருள்களை மனதில் பதியவைத்துக்
கொள்ளுங்கள்.
لِ - "க்கு", بِ -"கொண்டு", عَلى - "மீது" , مِنْ - "இருந்து" , عَنْ - "விட்டும்" ,
فِي - " ல் ", ك - " போல ", اِلى - " பக்கம், பால் " , وَ - "இன்னும்-மேலும்"
என்று பொருள்கள் கொண்ட இவைகள் இடைச்சொற்களாகும். இவைகளுக்கு இந்தப் பொருள்தான் அதிகமாகவரும், ஆனாலும் இடத்தைக்கவனித்துப் பொருத்தமான பொருள்கொள்ளலாம், சில சமயங்களில் பொருளே இல்லாமலும் வரும்.
------------------------------------***********************************-------------------------------
هُوِ அவன்-அது ,
أُولَـٰئِكَ, هُمْ அவர்கள்,
اِنّ – اَنَّ- اِنَّمَا - اَنَّمَا நிச்சயமாக,
إِنِّي நிச்சயமாக நான்,
إِنَّا நிச்சயமாக நாங்கள்,
مَا,لَا இல்லை,
الَّذِي அப்படிப்பட்ட ஒன்று , الَّذِينَ அப்படிப்பட்ட சிலர்-சில.
إِذْ என்ற இந்த வார்த்தைக்கு நேரம் என்ற பொருளுக்காக பயன்படுத்தப்படும்
வார்த்தையாகும், இதை எதனுடன் இணைக்கிறோமோ அந்த பொருளுடன் போது என்று
இணைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக قَالَ என்றால் கூறினான் என்றும்
إِذْ قَالَ - கூறிய போது,
قُلْنَا என்றால் நாம் கூறினோம் என்றும் إِذْ قُلْنَا - நாம் கூறியபோது,
نَجَّيْنَا என்றால் நாம் பாதுகாத்தோம் என்றும்إِذْ نَجَّيْنَا – பாதுகாத்தபோது,
فَرَقْنَا என்றால் நாம் பிரித்தோம் என்றும்إِذْ فَرَقْنَا –பிரித்தபோது என்று பொருள்
கொள்ளவேண்டும்.
--------------------------------------*********************************-------------------------------
مَا க்கு பல பொருள்கள் உள்ளன, ஆயத்தில் ஒன்று
وَمَا كَفَرَ , وَمَا يُعَلِّمَانِ,وَمَا هُم بِضَارِّينَ,مَا لَهُ, இதில் مَا வுக்கு இல்லை என்று பொருள்,
இரண்டாவது - வினைச்சொற்களை பெயர் சொல்லாக ஆக்குவதற்குரியதாகும்,
உதாரணமாக ஓதும் என்ற பொருளுள்ள تَتْلُو என்பதில் مَا வைச்சேர்த்து
مَا تَتْلُو என்று கூறினால் ஓதியவை என்றும்,
இறக்கப்பட்டது என்ற பொருளுள்ள أُنزِلَ என்பதில் مَا வைச்சேர்த்து
مَا أُنزِلَ என்று கூறினால் இறக்கப்பட்டவை என்றும்,
பிரிப்பார்கள் என்ற பொருளுள்ள يُفَرِّقُونَ என்பதில்مَا வைச்சேர்த்து
مَا يُفَرِّقُونَஎன்று கூறினால் பிரிவை உண்டாக்குவதை என்றும், தீங்கிழைப்பான் என்ற
பொருளுள்ள يَضُرُّ என்பதில்مَا வைச்சேர்த்து
مَا يَضُرُّ என்று கூறினால் தீங்கிழைப்பதை என்றும் ,
வாங்கிக் கொண்டார்கள் என்ற பொருளுள்ள شَرَوْا என்பதில்مَا வைச்சேர்த்துمَا شَرَوْا என்று
கூறினால் வாங்கிக்கொண்டது என்று பொருள் கொள்ளவேண்டும்.
--------------------*********************-------------------------------
يَا அழைப்பதற்கு பயன்படுத்தும் வார்த்தையாகும், يَا வுடன் أَيُّهَا வைச் சேர்க்கும் போது
வார்த்தையில் ஒரு அழுத்தத்தைக்கொடுக்கும், குர்ஆனில்يَا أَيُّهَا الَّذِينَ என்றே
பயன்படுத்தப்பட்டுள்ளது. ஈமான்கொண்டவர்களே! என்பதற்குيَا أَيُّهَا الْمُؤْمِنُوْنَ என்றும்
கூறலாம், குர்ஆனில்يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது, இப்படி எங்கு
வந்தாலும் இதே பொருள்தான்.
No comments:
Post a Comment