மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பல்வேறு வகையில் வாழ்த்து கூறிக்
கொள்கின்றனர். இந்த வாழ்த்துகளில் இஸ்லாம் கூறும் வாழ்த்து பல வகையில் சிறந்து
விளங்குவதைப் பிற மதத்து நடுநிலையாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது வணக்கம் என்றும் நமஸ்தே என்றும் மற்றும் இந்தப் பொருளில் அமைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியும் வாழ்த்து கூறுகின்றனர். நாம் சிந்திக்கும் போது இதில் பல குறைபாடுகள் உள்ளதைக் காணலாம்.வணக்கம் என்றால் வணங்குதல், அது போல் ஆங்கிலக் கலாச்சார ஊடுறுவல் காரணமாக நல்ல காலை. நல்ல பகல், நல்ல மாலை, நல்ல இரவு என்றெல்லாம் கூறும் வழக்கம் பரவிவிட்டது. இது எல்லா நேரத்திலும் சொல்ல முடியாத வாழ்த்தாகவுள்ளது. மனிதர்கள் நல்ல நிலையில் இருப்பது பாதி என்றால் கவலை துன்பம் போன்ற கெட்ட நிலை பாதியாக உள்ளது. மரண வீட்டிலோ நோயாளியிடமோ, பெரும் நட்டமடைந்தவரிடமோ பரீட்சையில் ஃபெயிலானவனிடமோ நல்ல காலை, நல்ல மாலை என்று கூற முடியாது. அது பொருத்தமாக இருக்காது. ஆனால் இஸ்லாம் கூறும் அஸ்ஸலாமு அலை(க்)கும் வாழ்த்து பொய் கலப்பில்லாததாகவும் எல்லா நேரத்துக்கும் ஏற்றதாகவும் அமைந்துள்ளது.
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது வணக்கம் என்றும் நமஸ்தே என்றும் மற்றும் இந்தப் பொருளில் அமைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியும் வாழ்த்து கூறுகின்றனர். நாம் சிந்திக்கும் போது இதில் பல குறைபாடுகள் உள்ளதைக் காணலாம்.வணக்கம் என்றால் வணங்குதல், அது போல் ஆங்கிலக் கலாச்சார ஊடுறுவல் காரணமாக நல்ல காலை. நல்ல பகல், நல்ல மாலை, நல்ல இரவு என்றெல்லாம் கூறும் வழக்கம் பரவிவிட்டது. இது எல்லா நேரத்திலும் சொல்ல முடியாத வாழ்த்தாகவுள்ளது. மனிதர்கள் நல்ல நிலையில் இருப்பது பாதி என்றால் கவலை துன்பம் போன்ற கெட்ட நிலை பாதியாக உள்ளது. மரண வீட்டிலோ நோயாளியிடமோ, பெரும் நட்டமடைந்தவரிடமோ பரீட்சையில் ஃபெயிலானவனிடமோ நல்ல காலை, நல்ல மாலை என்று கூற முடியாது. அது பொருத்தமாக இருக்காது. ஆனால் இஸ்லாம் கூறும் அஸ்ஸலாமு அலை(க்)கும் வாழ்த்து பொய் கலப்பில்லாததாகவும் எல்லா நேரத்துக்கும் ஏற்றதாகவும் அமைந்துள்ளது.
அஸ்ஸலாமு அலை(க்)கும் என்றால்
'உங்கள்
மீது சாந்தி உண்டாகட்டும்'
என்று பொருள். திருமண வீட்டுக்கும் சாந்தி தேவை. மரண வீட்டுக்கும் சாந்தி தேவை.
இலாபம் அடைந்தவனுக்கும் சாந்தி தேவை. நட்டம் அடைந்தவனுக்கும் சாந்தி தேவை. மனித
வாழ்வின் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அனைவரிடமும் பயன்படுத்தத் தக்க ஒரே
வாழ்த்து ஸலாம் கூறுதல் மட்டுமே.
'நீங்கள்
நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. ஒருவரை ஒருவர்
நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள்
ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள். அச்செயலை நான் உங்களுக்குக் கூறட்டுமா?'
என்று நபிகள் நாயகம்
(ஸல்)
அவர்கள் கேட்டு விட்டு
'உங்களிடையே
ஸலாமைப் பரப்புங்கள்'
என்றனர்.
நூல் : முஸ்லிம்
81
'இஸ்லாத்தில்
மிகச் சிறந்த நல்லறம்
எது?'
என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
'உணவளிப்பதும்,
உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்'
என விடையளித்தார்கள்.
நூல் : புகாரி
12, 28, 6236
'ஒரு
மனிதன் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைக்கக் கூடாது. இருவரும் ஒருவரை
ஒருவர் சந்திக்கும் போது இவர் இந்தப் பக்கமும் அவர் அந்தப் பக்கமும் திரும்பிக்
கொள்ளக் கூடாது. யார் ஸலாமைக் கொண்டு ஆரம்பிக்கிறாரோ அவரே அவர்களில்
சிறந்தவர்'
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் :
புகாரி
6077, 6237
அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பது வாழ்த்து
ஸலாம்
கூறுவதற்கான சொல்லாக இருப்பது போல் இன்னும் பல வார்த்தைகளும் உள்ளன. அவற்றில்
எதை வேண்டுமானாலும் நாம்
ஸலாம்
கூறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஸலாமுக்குப் பதிலுரைத்தல்
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து
1)
ஸலாமுக்குப் பதிலுரைத்தல்
2)
நோயாளியை நலம் விசாரித்தல்
3)
ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) பின் தொடர்ந்து செல்லுதல்
4)
விருந்தை ஏற்றுக் கொள்ளுதல்
5)
தும்மல் போட்டவருக்காகப் பிரார்த்தனை செய்தல் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி
1240
உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ,
அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்!
அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன்
4:86
ஸலாம் கூறி அனுப்ப
நம் முன்னே இல்லாதவருக்காக இன்னொருவரிடம் ஸலாம் கூறி அனுப்பலாம். யாரிடம் ஸலாம்
சொல்லி அனுப்பப்படுகிறதோ அவர் சம்பந்தப்பட்டவருக்கு இதைத் தெரிவிக்க வேண்டும்.
யாருக்கு ஸலாம் கூறி அனுப்பபட்டதோ அவரும் மறுமொழி கூற வேண்டும். அதற்காக
ஆதாரங்கள் வருமாறு.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் அவர்களின் குடும்பத்தினர் அஞ்சிய போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிழலில் பகல் தூக்கம் தூங்கியதைக் கண்ட அபூகதாதா
(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே உங்கள் குடும்பத்தார் உங்களுக்கு ஸலாமையும்
அல்லாஹ்வின் ரஹ்மத்தையும் (அருளையும்) சொல்லி அனுப்பியுள்ளனர் எனக்
கூறினார் (ஹதீஸ் சுருக்கம்)
நூல் : புகாரி
1821, 1822
முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம்
முஸ்லிம்களுக்கு மட்டுமே
ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக
முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம்,
வந்தனம்,
நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை
தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர். முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம்
உண்டாகுமாறு எப்படிப் பிரார்த்திக்க முடியும் என்று சிலர் கேள்வியெழுப்புவர்.
அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதன் பொருள்
'உங்கள்
மீது சாந்தி உண்டாகட்டும்'.
இஸ்லாம் எனும்
வாழ்க்கை நெறியை முஸ்லிமல்லாதவர் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்கு சாந்தி
கிடைக்கட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. முஸ்லிமல்லாதவர் இவ்வுலக
வாழ்க்கையின் நன்மைகளைப் பெற்று சாந்தியடையட்டும் என்ற பொருளும் இதற்குள்
உண்டு. இவ்வுலக நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்கு கிடைக்க நாம் துஆ செய்யலாம்
இதற்குத் தடை ஏதும் இல்லை. எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறுவதை மறுக்க எந்த
நியாயமும் இல்லை.
'உனக்குத்
தெரிந்தவருக்கும்,
தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு'
(புகாரி
12, 28, 6236)என்ற
நபிகள் நாயகம்
(ஸல்)
அவர்களின் பொன்மொழி முஸ்லிமுக்கு மட்டும் தான் ஸலாம் கூற வேண்டும் என்றால்
முஸ்லிம் என்று தெரிந்தவருக்கு ஸலாம் கூறு என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறியிருப்பார்கள்.
யஹதிகள் உங்களுக்கு (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு
அலைக்க என்று கூறுகின்றனர். (உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்)
எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி
6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927
யஹதிகள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும்
காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக மறுமொழி கூறினால் நாமும்
அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத் தான் இதிலிருந்து அறிந்து கொள்ள
முடியும்.
ஸலாம் கூற யார் முந்திக் கொள்வது
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது யார் வேண்டுமானாலும் ஸலாம் சொல்வதற்கு
முந்தலாம் என்றாலும் யார் முந்திக் கொள்வது சரியான முறை என்பதை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கு ஸலாம் கூற வேண்டும். நடந்து செல்பவர்
அமர்ந்து இருப்பவருக்கு ஸலாம் வற வேண்டும். குறைவான எண்ணிக்கையில் இருப்போர்
அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் மீது ஸலாம் கூற வேண்டும்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி
6232, 6234
மற்றொரு அறிவிப்பில்
வயதில் சிறியவர் பெரியவருக்கு ஸலாம் கூற வேண்டும்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூல் புகாரி
6231
வயதில் சிறியவர்கள் பெரியவர்களுக்கு ஸலாம் கூறுவதே சிறந்தது என்றாலும்
சிறுவர்களுக்கு பெரியவர்கள் ஸலாம் கூறுவதும் நல்ல முன்மாதிரியாகும்.
அனஸ் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு ஸலாம்
கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவும்
குறிப்பிட்டார்கள்.
மலஜலம் கழிப்பவருக்கு ஸலாம் கூறக் கூடாது
உண்ணும் போதும்,
பருகும் போதும்,
இன்ன பிற காரியங்களில் ஈடுபட்டிருக்கும் போதும் ஒருவருக்கு நாம் ஸலாம் கூறலாம்.
அவரும் பதில் ஸலாம் கூறலாம் ஆயினும் மலஜலம் கழிப்பவருக்கு ஸலாம் கூறக்
கூடாது. அந்த நிலையில் பதிலும் கூறக் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது அவர்களைக் கடந்து
சென்ற ஒரு மனிதர் அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
அவருக்கு மறுமொழி கூறவில்லை.
நூல் : முஸ்லிம்
555
பெண்களும் ஆண்களும் ஸலாம்
கூறலாம்
ஆண்கள் பெண்களுக்கு பெண்கள் ஆண்களுக்கு ஸலாம் கூறுவதற்கு மார்க்கத்தில் எந்தத்
தடையும் இல்லை. பெண்களின் குரலை ஆண்கள் கேட்கக் கூடாது என்று சிலர் கூறுவது
ஆதாரமற்ற கூற்றாகும்.
வெள்ளிக்கிழமை தோறும் ஒரு பெண்மணி விருந்தளிப்பார். அவரிடம் விருந்து உண்ணச்
செல்லும் நாங்கள் அவருக்கு ஸலாம் கூறுவோம் என்று
ஸஹ்ல் பின் ஸஅது (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி
938, 6248
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முஸாஃபஹா கைகுலுக்குதல்
நபிவழியாகும்.
'ஏமன்
வாசிகள்
வந்துள்ளனர். முஸாஃபஹா மூலம் முதன் முதலில் நமக்கு முகமன் கூறியவர்கள்
அவர்களே'
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : அபூதாவூத்
4537
ஏமன் மக்களின் முஸாஃபஹா செய்யும் வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதன்
மூலம் அங்கீகாரம் செய்கின்றனர். கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள்
உள்ளிட்ட மூன்று தோழர்கள் தபூக் போரில் பங்கெடுக்கத் தவறியதால் அவர்களை நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் சில நாட்கள் சமூகப் புறக்கணிப்பு. செய்திருந்தனர். பின்னர் அம்மூவரும்
மன்னிக்கப்பட்டதாக அல்லாஹ் ஒரு வசனத்தை அருளிய பின் கஃபு பின் மாலிக் (ரலி)
அவர்கள் பள்ளிக்குச் சென்றனர். அது பற்றி அவர்கள் குறிப்பிடும் போது நான்
பள்ளிவாசலில் நுழைந்தேன். அங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தனர். தல்ஹா
(ரலி) அவர்கள் உடனே என்னை நோக்கி வந்து என்னிடம் முஸாஃபஹா செய்து நல்வாழ்த்து
தெரிவித்தார் என்று குறிப்பிடுகிறார்கள்.
நூல் : புகாரி
4418,
ஆண்கள் பெண்களுக்கு முஸாஃபஹா செய்யக்கூடாது
நான் சில பெண்களுடன் சேர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பைஅத்
(உறுதிமொழி) எடுக்கச் சென்றேன். அப்போது அவர்கள்
'உங்களுக்கு
இயன்றவரை சக்திக்கு ஏற்றவரை நிறைவேற்றுங்கள்'
என்றும்
'பெண்களிடம்
நான் முஸாஃபஹா செய்ய மாட்டேன்'
எனவும் கூறினார்கள்.
நூல் : இப்னுமாஜா
2865
'பெண்களிடம்
நான் முஸாஃபஹா செய்ய மாட்டேன்'
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து ஆண்களிடம் முஸாஃபஹா செய்பவர்களாக
இருந்தனர் என்பதை தெளிவாக விளங்க முடியும்.
ஆண்கள்,
ஆண்களுக்கும் பெண்கள் பெண்களுக்கும் முஸாஃபஹா செய்வது நபிவழியில் உள்ளதாகும்.
இந்திய இலங்கை போன்ற அரபியர்கள் அல்லாத நாடுகளில் சில முஸ்லிம்கள் முஸாஃபஹாச்
செய்யும் போது தமது இரு கைகளால் மற்றவரின் இரு கைகளைப் பிடிக்கின்றனர். வேறு
சிலர் இவ்வாறு முஸாஃபஹாச் செய்யும் போது மற்றவரின் இடது கை கட்டை விரலை
அழுத்திப் பார்க்கின்றனர்.
கில்று என்பவர் இன்னும் உயிரோடு உள்ளார்,
அவருக்கு இடது கை கட்டை விரலில் எலும்பு இருக்காது. அவர் எந்த எந்த மனிதரின்
தோற்றத்திலும் வருவார். அவரை முஸாஃபஹா செய்து விட்டால் நாம் அவ்லியா ஆகலாம்
என்று மார்க்க அறிவு இல்லாத கட்டிய கட்டுக் கதை தவிர இதற்கு எந்த ஆதாரமும்
இல்லை.
முஸாஃபஹாச்
செய்யும் முறை
வலது கையால் மற்றவரின் வலது கையைப் பிடிப்பதே முஸாஃபஹா செய்யும் சரியான
முறையாகும்.
ஒரு உள்ளங்கையை மறு உள்ளங்கையில் சேர்த்தல் என்பது தான் முஸாஃபஹா என்ற
சொல்லின் நேரடி அர்த்தமாகும்.
இருவருமே ஒரு கையால் முஸாஃபஹா செய்யும் போது தான் இந்த நிலை ஏற்படும். இரண்டு
கைகளால் செய்யும் போது இடது உள்ளங்கை மற்றவரின் வலது புறங்கையில் தான் படும்.
இரு பக்கமும் உள்ளங்கைகள் சந்திக்காது. எனவே முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடிப்
பொருளே ஒரு கையால் தான் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.அகராதியை
மேற்கோள் காட்டி இப்னு ஹஜர்,
இப்னுல் கய்யிம் போன்ற பல அறிஞர்கள் ஒரு கையால் முஸாஃபஹாச் செய்வது தான்
சரியான முறை என்கின்றனர். இரண்டு கைகளால் முஸாபஹாச் செய்ய வேண்டும். அல்லது
செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை எடுத்துக்
காட்டுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அத்தஹிய்யாத் கற்றுத் தந்தனர்.
அப்போது எனது ஒரு கை அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே இருந்தது
என்பது தான் அந்த ஹதீஸ்.
நூல் : புகாரி
6265
ஒருவருக்குக் கற்றுக் கொடுக்கும் போது ஆசிரியர் தமது இரு கைகளால் மாணவரின் ஒரு
கையைப் பிடித்துக் கொண்டு சொல்லிக் கொடுக்கலாம் என்பது தான் இதிலிருந்து
தெரிகிறது. ஒருவரைச் சந்திக்கும் போது செய்யும் முஸாஃபஹா பற்றி இது
குறிப்பிடவில்லை. மேலும் இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைகளையும்
இப்னு மஸ்வூத் (ரலி) ஒரு கையையும் பயன்படுத்தியுள்ளனர். முஸாஃபஹாவுக்கு இதை
ஆதாரமாகக் காட்டுவோர்
'ஒருவர்
ஒரு கையையும் மற்றவர் இரு கைகளையும் பயன்படுத்த வேண்டும்'
என்று கூறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கட்டியணைக்கும் வழக்கமும் மக்களிடம்
பரவலாகக் காணப்படுகிறது. இந்தச் செயல் நபிவழி என்று சொல்லும் அளவுக்கு ஏற்கத்
தக்க ஆதாரம் ஏதும் இல்லை. இது பற்றி சில ஹதீஸ்கள் இருந்தாலும் அவை அனைத்துமே
பலவீனமானவையாக உள்ளன. ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸ இல்லை
நாம் யாரைப் பெரியவர்கள் என்று எண்ணுகிறோமோ அவர்களின் கைகளை முத்தமிடும் முட
நம்பிக்கையும் சிலரிடம் காணப்படுகிறது. மிகச் சில நபித்தோழர்கள் மிகச் சில
சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கைகளை முத்தமிட்டுள்ளதற்கு சில
ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை நம்பகமானது என்று வைத்துக்
கொண்டாலும் அது இச்செயலுக்கு ஆதாரமாகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மகான் என்று நம்புவது மார்க்கத்தின் கடமை.
அல்லாஹ்வும்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் யாரை மகான்கன் என்று குறிப்பிட்டுச் சொன்னார்களோ
அவர்களையும் மகான்கள் என்று நாம் நம்புவது கடமை.
மற்ற எவரையும்
மகான் என்றோ இறைவனுக்கு நெருக்கமானவர்
என்றோ கைகளை முத்தமிட்டால் பரகத் எனும் பாக்கியம் கிடைக்கும் என்றோ
முடிவு செய்யும் அதிகாரம் நமக்கு இல்லை வெறும் தாடியையும்,
ஜிப்பாவையும் பேச்சாற்றலையும்,
அரபு மொழி அறிவையும்
வைத்துக் கொண்டு மகான் என்று முடிவு செய்வது இறைவனது அதிகாரத்தைக் கையில்
எடுக்கும் குற்றமாகும்.
'மகானா
அல்லவா என்பதை நானல்லவா தீர்மானிக்க வேண்டும். இதைத் தீர்மானிக்க நீ யார்'
என்று அல்லாஹ் கேட்டால் அதற்கு நம்மிடம் ஏற்கத்தக்க பதில் இல்லை.
சிலர் இந்த எல்லையையும் கடந்து மகான்கன் என்று இவர்களாகத் கற்பனை செய்து
கொண்டவர்களின் கால்களில் (சில நாடுகளில்) விழுகின்றனர்.
இது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால்
மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதித்திருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)
நூல் : திர்மிதி
1079
சந்திக்கும் மனிதர் பெரியவர் அல்லது தலைவர் அல்லது முக்கியத்துவம் வாய்ந்தவர்
என்றால் அவருக்காக எழுந்து நிற்கும் பழக்கமும் சமுதாயத்தில்
உள்ளது.ஒருவரை வரவேற்கவும் வழி அனுப்பவும் எழுந்து நிற்பதற்கு மார்க்கத்தில்
அனுமதி உள்ளது. மரியாதைக்காக எழுந்து நிற்பதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட நபித்தோழர்களுக்கு விருப்பமானவர் ஒருவரும்
இருந்ததில்லை. அப்படி இருந்தும் நபிகள் நாயகத்துக்குப் பிடிக்காது என்பதை
அவர்கள் அறிந்திருந்த காரணத்தால் நபிகள் நாயகத்தை அவர்கள் கண்டால் அவர்களுக்காக
எழ மாட்டார்கள். அறிவிப்பவர் :அனஸ் (ரலி)நூல்கள்
:திர்மிதி
2678,
அஹ்மத்
11895, 12068, 13132
தனக்காக மற்றவர்கள் எழ வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது
இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்
என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறியதாக முஆவியா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்கள் : அபூதாவூத்
4552,
திர்மிதி
2679,
ஸஃது பின் முஆத் (ரலி) அவர்கள் வந்த போது உங்கள் தலைவரை நோக்கி எழுங்கள் என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி
3043, 3804, 4121, 6262
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃதுக்கு மரியாதை செலுத்துவதற்கு எழுவில்லை.
வரவேற்கவே எழுந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் வரும் போது அவரை நோக்கி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து செல்வார்கள்.
நூல் : அபூதாவூத்,
4540,
திர்மிதி
3807
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மகளுக்கு மரியாதை செலுத்த எழவில்லை. வரவேற்கவே
எழுந்தார்கள்.
மதிப்பில் பெரியவர்கள் சிறியவர்களுக்காக எழுவது வரவேற்பதற்காகத் தான்
இருக்கும். ஆனால் மதிப்பில் சிறியவர்கள் எழுவது இரண்டு வகையாக இருக்கும்.
எனவே ஒருவரை மற்றவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுதலும்,
முஸாபஹா செய்தலும் தவிர வேறு எந்த விதமான மரியாதையும் இஸ்லாத்தில் இல்லை என்பதை
உணர்ந்து நடக்கும் நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக.
நாம் எதை செய்கிறோமோ அதை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் செய்ய
பழகிக்கொள்வோம் அதாவது ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதே சலாத்தை கொண்டு முஸாபஹா
செய்த பிறகு
ஏனய பேச்சுக்களை ஆரம்பிக்க எம்மை நாம் பலக்கிக்கொள்ள
வேண்டும். அது தான் நபி வழி. பிரியாவிடை செய்யும் போதும்
அவ்வாறு செய்துகொள்ளலாம். ஆனால் எம்மில் பலர் பல
சந்தர்ப்பம்களில் (பொதுவாக ஜனாசா வீடு ஈத் தினம்களில் வெளியூர் போகும் ஒருவரை
சந்திக்கையில்)பேச்சுக்களை சாதரணமாக ஆரம்பித்து இடையில் நாம் ஸலாம்
குரிக்கொள்வோம் என்று மிகவும் பக்தியாக இரு கைகளையும் கொடுத்து
அஸ்ஸலாமு அழைக்கும் என்ற ஸலாத்துக்கு பதிலாக அல்லாஹும சல்லி அலா
முஹம்மது என்று சிறிய சலவாத்து பரிமாறிக்கொண்டு முடிவில் இருவரும் அவரவர் வலது
கையின் ஆட்காற்றி விரலை எடுத்து முக்கை தொடுவது போன்ற நபி (ஸல்) அவர்கள்
கட்டித்தராதபடி செய்வதை நாம் எடுத்துக்காட்டினால் இதோ பாருடா சலவாத்து சொல்லாத
கூட்டம் என்பார்கள். ஒரு கையால்
முசபஹா செய்தால் இந்திய இலங்கை போன்ற அரபியர்கள் அல்லாத நாடுகளில் சில
முஸ்லிம்கள் இது ஆண்கிலையர் வலி என்பார்கள். உலகத்துக்கே வழி காட்டிய எமது
உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தான் ஆண்கிளையர் இந்த விடயத்தில்
பின்பற்றுகிறார்கள் என்ற உண்மை யாருக்கு புரியப்போகிறது,
அதனால் ஒரு கைகுலுக்குவது அந்த சந்தர்பம்களில் அஸ்ஸலாமு அழைக்கும் என்ற
ஸலாத்தை பரிமாறிக்கொள்வது தான் நபி வழியில் ஆதாரம் உள்ள
சரியான முறையாகும். ஹதீஸ் கல் அரபி பாஷையில்
இருப்பதனால் சரியாக அரபியர் விளங்கியதனால் தான் இதை
அரபியர் சரியாக நடை முறை படுத்துகிறார்கள் என்பது
விளங்குகிறது.
No comments:
Post a Comment