Social Icons

Tuesday, 2 October 2012

ஜும்ஆ தொழுகை

அல்லாஹ் கூறுகிறான்:
ஈமான் கொண்டவர்களே! வெள்ளிக் கிழமை (ஜும்ஆ) தொழுகைக் காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் அழைப்புக்காக (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையாகும் அல்குர்ஆன்-62:9

 "ஜும்ஆ நாளில் பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் குளிப்பது கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் , கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீத்(ரலி) கூறினார்கள். புகாரி-880
"ஜும்அ நாள் வந்துவிட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும் அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும் அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும் அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போலவுமாவார்கள். இமாம் வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டிவிட்டுச் சொற்பொழி வைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்." என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  அபூ ஹுரைரா(ரலி) கூறினார்கள். புகாரி- 929
 ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் 'நீர் தொழுது விட்டீரா?' என்று கேட்டார்கள். அதற்கவர் 'இல்லை' என்றார். 'எழுந்து தொழுவீராக!" என்று கூறினார்கள். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.   புகாரி-930
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
 "இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் 'வாய்மூடு!' என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட் டுவிட்டாய்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீத்(ரலி) கூறினார்கள். புகாரி-934
 
அல்லாஹ் உங்கள் மீது பத்து முறை அருள் புரிவான்:

1357 عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَام وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ

وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَام

நாட்களில் மிகச் சிறந்தது ஜும்ஆ நாளாகும், அதில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார், அதில் தான் அவரது உயிர் கைப்பற்றப்பட்டது, அதில் தான் சூர் ஊதப்படும், அதில் தான் எழுப்பப்படுவார்கள். எனவே ஜும்ஆ நாளில் என் மீது அதிகம் ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள் சொல்லும் ஸலவாத் எனக்கு எடுத்து காண்பிக்கப்படுகின்றது’ என நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரழி), அஹ்மத், அபூதாவுத், நஸாயி).
ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருட நோன்பிருந்த, ஒரு வருடம் நின்று வணங்கிய கூலி:

292 عَنِ أَوْسُ بْنُ أَوْسٍ الثَّقَفِيُّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ ثُمَّ بَكَّرَ وَابْتَكَرَ وَمَشَى وَلَمْ يَرْكَبْ وَدَنَا مِنَ الْإِمَامِ فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا (ترمذي أبواداود).

எவர் ஜும்ஆவடைய நாளில் குளித்து, அதிகாலையிலேயே விரைவாக, வாகனத்தில் ஏராது நடந்து சென்று, இமாமை அன்மித்து உரையை செவிமெடுப்பரானால் அவர் வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருடம் நோன்பிருந்த, ஒரு வருடம் நின்று வணங்கிய நன்மையை அடைந்து கொள்வார்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், திர்மிதி).
இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியில் பிரகாசம்:

عن أبي سعيد قال: قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين (رواه النسائي والحاكم وقال: صحيح).

எவர் கஹ்ப் அத்தியாயத்தை ஜும்ஆ தினத்தில் ஒதுகின்றாரோ அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியில் பிரகாசம் கிடைக்கும்’ (நஸாயி, ஹாகிம்).
இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியிலுள்ள உமது பாவங்களுக்கு மன்னிப்பு:

834 عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ فَلَا يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الْإِمَامُ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ

الْجُمُعَةِ الْأُخْرَى (البخاري).

ஒருவர் ஜும்ஆ தினத்தில் குளித்து, முடியுமான வரை சுத்தமடைந்து, எண்ணையை தேய்த்து, அல்லது தனது வீட்டில் இருந்து வாசனைத் திரவியங்களை தடவி, பிறகு (மஸ்ஜிதுக்கு) சென்று இரண்டு பேருக்கு மத்தியில் பிரிவை ஏற்படுத்தாமல், பின் தனக்கு கடமையானதை தொழுது, இமாம் உரையை நிகழ்த்தும் போது வாய் மூடியவராக அதை செவியேற்பாரானால், அந்த ஜும்ஆவுக்கும் வரும் ஜும்ஆவுக்கும் மத்தியிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மானுல் பாஃரிஸி (ரழி), ஆதாரம்: புஹாரி).
ஜும்ஆவுடைய தினத்தில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு நேரம் உண்டு:

1407 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ فِي الْجُمُعَةِ لَسَاعَةً لَا يُوَافِقُهَا مُسْلِمٌ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ خَيْرًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَقَالَ بِيَدِهِ يُقَلِّلُهَا يُزَهِّدُهَا (متفق عليه).

‘நிச்சயமாக ஜும்ஆவுடைய தினத்தில் ஒரு நேரம் உண்டு, ஒருவர் நின்றவராக தொழுது அல்லாஹ்விடம் ஏதாவது ஒன்றை பிரார்த்தித்து அது அந்த நேரத்துடன் உடன்பட்டு விடுமானால் அல்லாஹ் அதை அவருக்கு வழங்கி விடுவான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: முத்தபஃகுன் அலைஹி).
அறிஞர்களுக்கு மத்தியில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் அந்த நேரம் பற்றி கருத்து வேறுபாடு உள்ளது. பின் வரும் கருத்துக்களை நான் சிறப்பாக கருதுகிறேன்:
ஜும்ஆவடைய நாளின் கடைசி நேரம்:

7363 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجُمُعَةِ سَاعَةً لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ فِيهَا خَيْرًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَهِيَ بَعْدَ الْعَصْرِ (أحمد).

‘நிச்சயமாக ஜும்ஆ தனத்தில் ஒரு நேரம் உள்ளது அந்த நேரத்தில் ஒருவன் நன்மையானதை அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் அதை அவன் வழங்காமல் இருப்பதில்லை. அது அஸருக்கு பின் உள்ள நேரமாகும். (ஆதாரம்: அஹ்மத்).
மற்றொரு அறிவிப்பில்:

884 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ ………….. فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ بَعْدَ الْعَصْرِ (أبوداود نسائي).

ஜும்ஆவுடைய தினத்தில் அஸருக்குப் பின் உள்ள கடைசி நேரத்தில் அதை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ (அபூதாவுத், நஸாயி). இந்தக் கருத்தை இமாம் இப்னுல் கய்யும் என்ற அறிஞரும் ஆதரித்துள்ளார்.
முஸ்லிமின் ஓர் அறிவிப்பில்:

1409 عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ قَالَ قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى

أَنْ تُقْضَى الصَّلَاةُ (مسلم).
இமாம் அமர்ந்ததிலிருந்து தொழுகையை நிறைவேற்றும் வரை உள்ள நேரமாகும். (அறிவிப்பவர்: அபூ மூஸா (ரழி).

ஜும்ஆவுடைய நாளில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்துகள்:
1) நன்றாக குளித்தல்.
2) முதல் நேரத்திலே, நடந்து சென்று, இமாமை அன்மித்து மஸ்ஜிதில் அமருதல்.
3) சுத்தம் செய்து கொள்ளல், மனம் பூசுதல், பல் துலக்குதல்.
4) கஹ்ப் அத்தியாயத்தை ஓதுதல்.
5) நபிகளார் (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத்து சொல்லல்.
6) அதிகம் பிரார்த்தனையில் ஈடுபடல், பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்டும் நேரத்தை கருத்தில் கொண்டு அதிகம் பிரார்த்தித்தல்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்