Social Icons

Wednesday, 3 October 2012

பெருநாள் தொழுகை

இரு பெரு நாட்களும் அதில் அலங்காரம் செய்து கொள்வதும்.
 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கடை வீதியில் விற்பனை செய்யப்பட்ட தடித்தப்பட்டு நீளங்கி ஒன்றை விலை பேசமுற்பட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி பெரு நாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் (அணிந்து) அலங்கரித்துக் கொள்ளலாமே! என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடையாகும் என்று கூறினார்கள். (பிறகு என் தந்தை) உமர் (ரலி) அல்லாஹ் நாடிய நாட்கள் வரை (இது பற்றி ஏதும் கேட்காமல்) பொறுமையாக இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீளங்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை என்னிடம் கொடுத்தனுப்பியுள்ளீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதை நீங்கள் விற்றுவிடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்) என்று கூறினார்கள்.    (புகாரி-948)
 
பெரு நாள் தினத்தில் ஈட்டிகள், தோல்கேடயங்கள் (உள்ளிட்ட போர்க்கருவிகளால்) வீரவிளையாட்டுக்களில் ஈடுபடுவது).
 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் அருகில் இரு (அன்சாரி) சிறுமியர் (சலங்கையில்லா கஞ்சிராக்களை அடித்து) புஆஸ் போரைப் பற்றிய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தமது முகத்தை (வேறு திசையில்) திருப்பிக் கொண் டார்கள் (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை). அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி, நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாக ஷைத்தானின் இசைக் கருவியா? என்று கடிந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, அவர்களை(ப் பாட) விடுங்கள் என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பிய போது அவ்விரு சிறுமியரையும் நான் விரல்களால் தொட்டுணர்த்தி (வெளியேறிவிடுமாறு கூறி)னேன். உடனே அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். (புகாரி-949)
 

இரு பெரு நாட்களிலும் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை (சுன்னத்).
 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெரு நாளில்) உரையாற்றியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது உரையில்) நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெரு நாள் தொழுகை) தொழுது விட்டுத் திரும்பி வந்து குர்பானிப் பிராணிகளை அறுப்பதாகவே இருக்கவேண்டும். யார் (இதைச்) செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று கூறினார்கள்.  (புகாரி-950)
 
 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரு அன்சாரிச் சிறுமியர் புஆஸ் போர் நாளில் அன்சாரிகள் (ஒருவரையொருவர் தாக்கியும் தூக்கியும்) பாடிய பாடல்களை (சலங்கையில்லா கஞ்சிராக்களை அடித்தபடி) பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர்.- (இதைக் கண்ட) உடனே அபூபக்ர்
(ரலி) அவர்கள், இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக்கருவிகளா? என்று கேட் டார்கள். இது நடந்து ஒரு பெரு நாள் தினத்திலா கும். அப்போது (படுத்துக் கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்) அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்  (புகாரி-952)

நோன்புப் பெரு நாள் தினத்தில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது.
 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப்பெரு நாள் தினத்தில் சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் (தொழுகைக்குப்) புறப்பட மாட்டார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வரும் அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று வந்துள்ளது. (புகாரி-953)

ஹஜ்ஜுப் பெரு நாள் தினத்தில் (தொழுகைக்கு முன்பே) உண்ணுதல்.
  அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஈதுல் அல்ஹா பெரு நாள் தினம்) நபி (ஸல்) அவர்கள், யார் (பெரு நாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும் என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் (அபூபுர்தா) எழுந்து, (அல்லாஹ்வின் தூதரே!) இது இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள் என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டைவீட்டார் சிலர் (உடைய தேவை) பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். (அவர் சொன்ன காரணத்தை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டது போன்று தெரிந்தது. மேலும் அவர், என்னிடம் இரண்டு இறைச்சி ஆடுகளைவிட நான் பெரிதும் விரும்பும் ஒருவயது பூர்த்தியான வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா?) என்று கேட்க, நபி (ஸல்) அவர்களும் அவருக்கு அனுமதியளித்தார்கள். (புகாரி-954)
 
இந்த அனுமதி அவரல்லாதவருக்கும் பொருந்துமா? அல்லது பொருந்தாதா? என்று எனக்குத் தெரியாது.
 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெரு நாளன்று எங்களுக்கு தொழுகைக்குப் பின் உறையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன்பிறகு) நமது குர்பானியைப் போன்று குர்பானி கொடுக்கிறாரோ அவரே (குர்பானி) வழிபாட்டை (முறைப்படி) முடித்தவராவார். யார் (பெரு நாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டாரோ அது தொழுகைக்கு முன்புள்ளதாகும். அவருடைய குர்பானி வழிபாடு நிறைவேறாது. என்று கூறினார்கள்.
அப்போது என் தாய்மாமன் அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் இன்றைய தினம் உண்பதற்கும் குடிப்பதற் குமுரிய நாள் என்று அறிந்தேன். எனது வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் எனது ஆடே முதல் ஆடாக இருக்க வேண்டும் எனவும் நான் விரும்பினேன் ஆகவே (பெரு நாள்) தொழுகைக்கு வருவதற்கு முன்பே நான் அறுத்து விட்டேன். காலைச் சிற்றுண்டியாகவும் (அதை) உட் கொண்டும் விட்டேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நீர் அறுத்த) உம்முடைய ஆடு இறைச்சி(க்காக அறுக்கப்பட்ட) ஆடு என்றே கருதப்படும் என்று கூறினார்கள். அதற்கு அபூபுர்தா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் ஒரு வயதுடைய பெட்டை வெள்ளாடு ஒன்று உள்ளது. அது (கொழுத்திருப்பதால்) இரண்டு ஆடுகளை விட எனக்கு மிகவும் விருப்பமானதாகும். அ(தை நான் அறுப்ப)து எனக்குப் போதுமாகுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம் (உமக்கு மட்டும் அதுபோதுமாகும்.) உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது போதுமாகாது என்று கூறினார்கள். (புகாரி-955)

பெரு நாள் தொழுகைக்காக சொற்பொழிவு மேடையேதும் இல்லாத (திறந்த வெளித்) திடலுக்குச் செல்வது.
 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெரு நாளிலும் ஹஜ்ஜுப் பெரு நாளிலும் (பள்ளிவாசலில் தொழாமல்) திடலுக்குப் புறப்பட்டுச் செல்பவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள் செய்யும் முதல்வேலை தொழுவதேயாகும். (தொழுகை முடிந்த) பின்னர் மக்களை முன்னோக்கி எழுந்து நிற்பார்கள். மக்கள் அனைவரும் அப்படியே தத்தமது வரிசைகளில் அமர்ந்து கொண்டிருப்பார்கள் அப்போது மக்களுக்கு அவர்கள் உபதேசம் புரிவார்கள்; (வ-யுறுத்த வேண்டியதை) அவர்களுக்கு வ-யுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) அவர்களுக்கு கட்டளையிடுவார்கள். (ஏதேனும் ஒரு பகுதிக்கு) படைப் பிரிவுகளை அனுப்ப நினைத்திருந்தால் அனுப்பிவைப்பார்கள். அல்லது எதைப் பற்றியேனும் உத்தரவிடவேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். (இவற்றை முடித்த) பின்னரே (மதீனாவுக்கு) திரும்பிச் செல்வார்கள்.
மதீனாவின் ஆளுநரான மர்வான் பின் ஹகமுடன் ஒரு ஹஜ்ஜுப் பெரு நாளிலோ அல்லது நோன்புப் பெரு நாலோ நான் தொழச் செல்லும் வரை (முத-ல் தொழுகை பிறகு சொற்பொழிவு எனும்) இந்த நடைமுறையையே கடைப்பிடித்து வந்தனர். (மர்வானுடன் நான் தொழச் சென்ற அந்த நாளில்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்த போது கஸீர் பின் ஸல்த் என்பார் உருவாக்கிய சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்று அங்கே தீடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் (பெரு நாள் தொழுகையைத்) தொழுவிப்பதற்கு முன்பே சொற்பொழிவு மேடையில் ஏறப்போனார். உடனே நான் (முத-ல் தொழுவித்து விட்டு பிறகு உரையாற்றும்படி கோர) அவரது ஆடையை பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் (சொற்பொழிவு மேடையில்) ஏறித் தொழுகைக்கு முன்பே உரை (குத்பா) நிகழ்த்தலானார். அப்போது நான் அவரிடம், அல்லாஹ்வின் மீதாணையாக! (நபி வழியை) மாற்றிவிட்டீர்கள் என்று சொன்னேன். அதற்கு மர்வான், அபூ சயீதே! நீங்கள் அறிந்திருக்கும் (அந்த) நடைமுறை மலையேறிவிட்டது என்று சொன்னார். அதற்கு நான், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்திருக்கும் (நபிகளாரின்) நடைமுறை நான் அறியாத (இந்தப் புதிய) நடைமுறையைவிடச் சிறந்ததாகும் என்று சொன்னேன். அதற்கு மர்வான், மக்கள் தொழுகை முடிந்து விட்டால் எ(மது உரை)க்காக அமர்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். எனவே நான் உரையை தொழுகைக்கு முன்பே வைத்துக் கொண்டேன் என்று சொன்னார்.  (புகாரி-956)

பெரு நாள் தொழுகைக்காக நடந்தும் வாகனத்திலும் செல்லலாம். (பெரு நாள் தொழுகைக்கு) பாங்கும் இகாமத்தும் வேண்டியதில்லை.
 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெரு நாள், நோன்புப் பெரு நாள் தினத்தில் (முத-ல்) தொழுவார்கள். தொழுகையை முடித்த பிறகே உரை நிகழ்த்துவார்கள். (புகாரி-957)
 
 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பொரு நாள் தினத்தில் புறப்பட்டுச் சென்று, உரைநிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள்.   (புகாரி-958)
 
 அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது
(யஸீதுக்குப் பின் ஆட்சிப்பொறுப்பேற்ற) அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (-பைஅத்) நடைபெற்ற முதல் நாளில் அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ள நபி (ஸல்) அவர்களது காலத்தில்ன நோன்புப் பெரு நாளில் (பெரு நாள்)தொழுகைக்காகப் பாங்கு சொல்லும் வழக்கம் இருக்கவில்லை; தொழுகைக்குப் பிறகுதான் உரை(யும் அமைந்திருந்தது) என்ற செய்தியைத் தெரிவித்தார்கள் (புகாரி-959)
 
 இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
ள நபி (ஸல்) காலத்தில்ன நோன்புப் பெரு நாளிலோ ஹஜ்ஜுப் பொரு நாளிலோ பாங்கு சொல்லும் வழக்கம் இருக்கவில்லை.  (புகாரி-960)
 
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (நோன்புப் பெரு நாளில்) எழுந்து முத-ல் தொழுதார்கள். அதற்குப் பிறகே மக்களுக்கு உரையாற்றினார்கள். நபி (ஸல்) அவர்கள் உரையாற்றி முடித்ததும் அங்கிருந்து கிளம்பி பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால் (ரலி) அவர்களது கையை தாங்கலாகக் கொண்டு பெண்களுக்கு உபதேசம் புரிந்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையொன்றை விரித்துப் பிடிக்க, அதில் பெண்கள் தம் தர்மத்தை இட்டுக் கொண்டிருந்தனர்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், உரை நிகழ்த்தியபின் பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு உபதேசம் செய்வது இன்றைக்கும் இமாம்கள் மீது கடமை என நீங்கள் கருது கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நிச்சயமாக அது அவர்களுக்குக் கடமைதான். அவர்கள் எப்படி இதைச் செய்யமாலிருக்க முடியும்? என்று கேட்டார்கள். (புகாரி-961)
 
தொழுகைக்குப் பிறகே உரை.
 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் பெரு நாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். (புகாரி-962)
 
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இரு பெரு நாட்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுவார்கள். (புகாரி-963)
 
964 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெரு நாளில் இரண்டு ரக்அத்கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்பும் (எதையும் கூடுதலாகத்) தொழவில்லை; அதற்குப் பின்பும் (எதையும் கூடுதலாகத்) தொழவில்லை. (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க, பெண்கள் பகுதிக்கு வந்து (உபதேசம் புரிந்தார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித்தார்கள். உடனே பெண்கள் (தம்மிடம் இருந்ததை பிலால் அவர்களின் கரத்திலிருந்த துணியில்) இடலாயினர். சில பெண்கள் தம் காதணிகளையும் தம் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் இட்டனர். (புகாரி-964)
 
965 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஈதல் அள்ஹா பெரு நாளின் போது) நபி (ஸல்) அவர்கள், இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்யவேண்டியது (யாதெனில்,) முத-ல் நாம் (பெரு நாள் தொழுகை) தொழுவோம்; பிறகு தொழுகையிலிருந்து திரும்பி வந்து குர்பானிப் பிராணிகளை அறுப்போம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். (பெரு நாள் தொழுகைக்கு) முன்பே யார் (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக முன் கூட்டியே அவர் தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது அன்று சொன்னார்கள். அப்போது அன்சாரிகளில் அபூபுர்தா பின் நியார் எனப்படும் ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! (தொழுகைக்கு முன்பே நான் குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் வயது வந்த ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது (அதை நான் அறுக்கலாமா?) என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், முத-ல் அறுத்ததற்கு பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக் குப் பிறகு வேறெவருக்கும் அது நிறைவேறாது அல்லது போதுமாகாது என்று பதிலளித்தார்கள் (புகாரி-965)

பெரு நாளின் போதும் ஹரம்-புனித எல்லைக்குள்ளும் ஆயுதங்களை எடுத்துச் செல்லலாகாது.
பெரு நாள் தினத்தில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாதென மக்கள் தடைவிதிக்கப்பட்டார்கள். ஆனால் எதிரிகள் பற்றிய அச்சம் இருந்தால் தவிர! என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
 
 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(வாகனத்தில் அமர்ந்திருந்த) இப்னு உமர் (ரலி) அவர்களின் உள்ளங்கா-ல் (ஹிஜாஸின் ஆளுநர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் ஆட்களில் ஒருவர் பாய்ச்சிய ஈட்டியின் முனை பாய்ந்து வாகனத்தோடு அவர்களின் பாதத்தை ஒட்டிக் கொள்ளச் செய்து விட்ட போது நானும் அவர்களுடன் இருந்தேன். உடனே நான் (வாகனத்திலிருந்து) இறங்கி அதைப் பிடுங்கி எடுத்தேன்.-இது மினாவில் இருந்த போது நடந்தது.-இந்தச் செய்தி ஹஜ்ஜாஜுக்கு எட்டி, அவர் இப்னு உமர் (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்க (வர)லானார். அப்போது ஹஜ்ஜாஜ், உங்களைத் தாக்கியது யாரென்று தெரிந்தால் (தக்க நடவடிக்கை எடுப்போம்) என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், நீர்தாம் என்னைத் தாக்கினீர் என்றார்கள். அது எப்படி? என்று ஹஜ்ஜாஜ் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ஆயுதம் கொண்டு செல்லக் கூடாத (பொரு நாள்) தினத்தில் நீர் தாம் ஆயுதம் ஏந்திட உத்தரவிட்டீர். ஹரம் புனித எல்லைக்குள் ஆயுதம் கொண்டு வரப்படக் கூடாது என்றிருக்க, ஹரமுக்குள் ஆயுதங்களை நடமாடவிட்டதும் நீர்தாம் என்று கூறினார்கள். (புகாரி-966)
 
 சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (உடல் நலம் விசாரிக்க) ஹஜ்ஜாஜ் வந்தார். அப்போது அவர்கள் அருகில் நானும் இருந்தேன். (என்னிடம்) ஹஜ்ஜாஜ், இப்னு உமர் எப்படி இருக்கிறார்? என்று கேட்டார். நான், நலமுடன் இருக்கிறார் என்றேன். பிறகு இப்னு உமர் (ரலி) அவர்களிடம், உம்மைத் தாக்கியது யார்? என்று (தெரியாதது போன்று) கேட்டார் ஹஜ்ஜாஜ். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ஆயுதங் களை எடுத்துச் செல்லக்கூடாத (பெரு நாள்) தினத்தில் ஆயுதங்களை எடுத்துச் செல்ல உத்தரவிட்டவரே என்னைத் தாக்கினார் என்று -ஹஜ்ஜாஜை மனதில் வைத்துக்- குறிப்பிட்டார்கள். (புகாரி-967)

பெரு நாள் தொழுகைக்கு காலையிலேயே (நேரத்தோடு) செல்வது.
-உபரித் தொழுகை (அனுமதிக்கப்படும்)- இந்த நேரத்தில் எல்லாம் நாங்கள் (பெரு நாள் தொழுகையைத் தொழுது) முடித்து விடுவோம் என அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
968 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவ்ரகள் கூறியதாவது:
ஈதுல் அள்ஹா பெரு நாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்), நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை யாதெனில் (பெரு நாள் தொழுகை) தொழுது விட்டுத் திரும்பி வந்து குர்பானிப் பிராணிகளை அறுப்பதாகவே இருக்கவேண்டும். இவ்வாறு யார் செய்கிறாரோ அவரே நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். யார் (பெரு நாள் தொழுகை) தொழுவதற்கு முன்பே (பிராணியை) அறுக்கிறாரோ அவர் தமது குடும்பத்தாருக்காக அவசரப்பட்டு முன் கூட்டியே (அறுத்து)விட்ட இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் அறவே சேராது என்று கூறினார்கள். அப்போது என் தாய்மாமன் அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். (ஆனால்) என்னிடம் வயது வந்த ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது (அதை நான் அறுக்கலாமா?) என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், முத-ல் அறுத்ததற்கு பதிலாக இதை வைத்துக் கொள்வீராக அல்லது இதை அறுத்து விடுவீராக ஆனால் உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் ஒரு வயது பூர்த்தியான வெள்ளாட்டுக்குட்டி போதுமாகாது என்று பதிலளித்தார்கள் (புகாரி-968)
 
அய்யாமுத் தஷ்ரீக் (எனும் துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்களில் நற்செயல்(-வழிபாடு)கள் புரிவதன் சிறப்பு.
(22:28ஆவது வசனத்தில்) குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்வார்கள் என்பதிலுள்ள குறிப்பிட்ட நாட்கள் என்பது (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களைக் குறிக்கும்.
எண்ணப்பட்ட நாட்கள் என்பது அய்யாமுத் தஷ்ரீக் நாட்களைக் குறிக்கும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
இப்னு உம்ர் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களிலும் கடை வீதிக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். அவர்கள் இருவரும் தக்பீர் சொல்லும் போது மக்களும் அவர்களுடன் தக்பீர் சொல்வார்கள்.
நஃபிலான தொழுகைக்குப் பிறகும் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் தக்பீர் சொன்னார்கள்.
 
969 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் எந்த நற்செயலும் இந்த (அய்யாமுத் தஷ்ரீக்) நாட்களில் செய்யும் எந்த நற்செயலையும் விடச் சிறந்ததல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறப்போர் (-ஜிஹாத்)கூட (சிறந்தது) இல்லையா? என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அறப்போர் கூட(ச் சிறந்தது) இல்லைதான். ஆனால், தம் உடலையும் தமது பொருளையும் (இறைவழியில்) அர்ப்பணிக்கப் புறப்பட்டுச் சென்று எதுவுமில்லாமல் திரும்பி வந்த மனிதரைத் தவிர என்று சொன்னார்கள். (புகாரி-969)

(துல்ஹஜ் 10,11,12 ஆகிய) மினாவின் நாட்களிலும் (துல்ஹஜ் 9ஆம் நாள் காலையில்) அரஃபாவுக்குப் புறப்பட்டுச் செல்லும் போதும் தக்பீர் சொல்வது.
உமர் (ரலி) அவர்கள் மினாவில் (தங்கியிருக்கும் நாட்களில்) தமது கூடாரத்திலிருந்தபடி தக்பீர் கூறுவார்கள். அதைக் கேட்டு பள்ளியில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். கடைவீதிகளில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். எந்த அளவிற்கென்றால் மினா முழுவதும் தக்பீர் முழக்கத்தால் அதிரும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவில் (தங்கியிருக்கும்) இந்த நாட்களில் தக்பீர் கூறுவார்கள். எல்லாத் தொழுகைகளுக்குப் பிறகும், தமது படுக்கையில் இருக்கும் போதும், தமது கூடாரத்தில் இருக்கும் போதும், அமரும் போதும் நடக்கும் போதும் அந்த அனைத்து நாட்களிலும் தக்பீர் கூறுவார்கள்.
மைமூனா (ரலி) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
(அப்துல் ம-க் பின் மர்வான் காலத்தில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அபான் பின் உஸ்மான், (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) ஆகியோருக்குப் பின்னால் அய்யாமுத் தஷ்ரீக் (11, 12, 13) நாட்களில் பள்ளிவாச-ல் ஆண்களுடன் பெண்களும் தக்பீர் கூறுவார்கள்.
 
முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க் கொண்டிருந்த போது நான் அனஸ் (ரலி) அவர்களிடம் தல்பியாச் சொல்வது குறித்து, நீங்கள் (மினாவிலிருந்து அரஃபா போகும் போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், தல்பியாச் சொல்பவர் தல்பியாச் சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை என்று பதிலளித்தார்கள். (புகாரி-970)
 
971 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெரு நாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள குமரிப் பெண் களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். எந்த அளவிற்கென் றால் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக் கூடப் புறப்படச் செய்யவேண்டுமெனக் கட்டளையிடப் பட்டோம். பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும் போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள்; ஆண்கள் பிரார்த்திக்கும் போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் அருள் வளத்தையும் (பாவத்) தூய்மையையும் எதிர்பார்ப்பார்கள். (புகாரி-971)
 
பெரு நாள் தினத்தில் ஈட்டி(யைத் தடுப்பாக வைத்துக் கொண்டு அதை) நோக்கித் தொழுதல்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நோன்புப் பெரு நாளிலும் ஹஜ்ஜுப் பெரு நாளிலும் (திறந்த வெளித் திட-ல் தொழுகை நடைபெறுவதால்) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (தடுப்பாக) ஒரு ஈட்டி நட்டு வைக்கப்படும். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அதை) நோக்கித் தொழுவார்கள். (புகாரி-972)
 
பெரு நாள் தினத்தில் இமாம் (தொழுகைக்குப் புறப்பட்டுச் செல்லும் போது அவருக்கு) முன்னால் கைத்தடியோ அல்லது ஈட்டியோ எடுத்துச் செல்வது.
 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பெரு நாள் தொழுகைக்காக) தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அவர்களுக்கு முன்னால் (இரும்புபிடி போட்ட) கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் திடலில் அவர்களுக்கு முன்னால் (அதைத் தடுப்பாக) நட்டு வைக்கப்படும். அதை நோக்கி நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (புகாரி-973)

(பெரு நாளில்) தொழும் திடல் நோக்கி மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுட்பட எல்லாப் பெண்களும் புறப்பட்டுச் செல்வது.
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பெரு நாளில்) மணமுடித்த பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (குமரிப்)பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும்படி நாங்கள் கட்டளையிடப்பட்டோம்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் அல்லது ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் மணமுடித்த பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (குமரிப்)பெண்களையும் புறப்படச் செய்யும்படி நாங்கள் கட்டளையிடப்பட்டோம். ஆனால், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கிருப்பார்கள் என்று அதிகப்படியாகவும் அறிவித்துள்ளார்கள். (புகாரி-974)

தொழும் திடலுக்குச் சிறுவர்களும் புறப்பட்டுச் செல்வது.
 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (சிறுவனாக இருக்கும் போது) நோன்புப் பெரு நாளிலோ அல்லது ஹஜ்ஜுப் பெரு நாளிலோ நபி (ஸல்) அவர்களுடன் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள் (பெரு நாள் தொழுகை) தொழுது விட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். அதன் பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு உபதேசம் புரிந்தார்கள்; (மறுமையை) அவர்களுக்கு நினைவூட்டிப் பேசினார்கள்; தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (புகாரி-975)


பெரு நாளில் பெண்களுக்கு இமாம் உபதேசம் புரிவது.
 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெரு நாள் அன்று எழுந்து தொழுதார்கள். (பெரு நாள்) தொழுகையை முத-ல் நடத்திவிட்டுத் தான் உரை நிகழ்த்தினார்கள். உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்குச் சென்று (தம்முடனிருந்த) பிலால் (ரலி) அவர்களின் கைமீது சாய்ந்தபடி பெண்களுக்கு உபதேசம் புரிந்தார்கள். பிலால் (ரலி) அவர்களே தமது ஆடையை ஏந்திக் கொண்டிருக்க பெண்கள் (தத்தமது) தர்மத்தை அதில் இட்டுக் கொண்டிருந்தனர்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதை எனக்கு அறிவித்த அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் நான், நோன்புப் பெரு நாள் (ஸதக்கத்துல் ஃபித்ர்) தர்மத்தையா (அப்பெண்கள் இட்டனர்)? என்று கேட்டேன்.. அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், இல்லை. அப்போது தாமாகவே தர்மப் பொருட்களையே போட்டனர். அவர்கள் தம் (கால் விரலில் அணிந்திருந்த) மெட்டிகளையும் போடலாயினர். இன்னும் (பிற அணிகலன்களையும்) அவர்கள் போட்டனர் என்று பதிலளித்தார்கள்.
நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், இவ்வாறு (பெண்கள் பகுதிக்குச் சென்று) போதனை செய்வது இன்றைக்கும் இமாம்கள் மீது கடமை என நீங்கள் கருதுகிறீர்களா? என்றும் கேட்டேன். அதற்கு அவர்கள், நிச்சயமாக அது அவர்களுக்குக் கடமைதான். அவர்கள் எப்படி இதைச் செய்யாமலிருக்க முடியும்? என்று கேட்டார்கள். (புகாரி-978)
 
 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெரு நாள் தொழுகையில் பங்கெடுத்துள் ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்து வதற்கு முன்பே (பெரு நாள்) தொழுகை நடத்து பவர்களாக இருந்தனர். அதன் பிறகே அவர்கள் உரை நிகழ்த்துவார்கள். (உரை முடிந்த பின்) நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து நகர்ந்து, (மக்களைத்) தமது கையால் அமரச் செய்ததை இன்று:ம நான் (என் கண்ணெதிரே) காண்பது போன்று உள்ளது. பிறகு ஆண்(கள் அமர்ந்திருந்த வரிசை)களைப் பிளந்து கொண்டு பெண்கள் பகுதிக்குச் சென் றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
அப்போது நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப்பிரமாணம் செய் வதற்காக வந்தார்களாயின்... என்று (தொடங்கும் 60:12ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதி முடித்து விட்டு, இந்த உறுதிமொழியில் நீங்கள் நிலையாக இருப்பீர்களா? என்று கேட்டார்கள். ஒரேயொரு பெண்மணி மட்டும், ஆம் (நீடிப்போம்) என்றார். அவரைத் தவிர வேறெவரும் நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளிக்கவில்லை.- அந்தப் பெண்மணி யாரென்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹஸன் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை- அப்பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், நீங்கள் தர்மம் செய்யுங்கள்! என்று சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை ஏந்தியபடி என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், வாருங்கள்! என்று கூறினார்கள். அப்பெண்கள் மெட்டிகளையும் மோதிரம்களையும் (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போடலாயினர். (புகாரி-979)

பெரு நாள் தொழுகை தொழச் செல்லப் பெண்களுக்கு மேலங்கி இல்லாவிட்டால் என்ன செய்வது?
 ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பெரு நாள் தினத்தில் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்லக் கூடாதென எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி பனூ கலஃப் வமிசத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். நான் அவரிடம் சென்றேன். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா-ரலி) வழியாக வந்த ஹதீஸை அறிவித்தார்:
-என் சகோதரி (உம்மு அத்தியா-ரலி) அவர்களின் கணவர் நபி (ஸல்) அவர்களோடு பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்டார். இதில் என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவரோடு இருந்தார்- என் சகோதரி (உம்மு அத்தியா) கூறினார்:
(பெண்களாகிய) நாங்கள் (போர்கள் நடைபெறும் போது) காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனிப்போம். நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாளில் தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்லாமல் (வீட்டிலேயே) அவள் இருப்பது குற்றமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டுமே! பெண்களும் நன்மையான காரியங்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் வணக்க வழிபாடுகளிலும் கலந்து கொள்ளட்டுமே. என்று சொன்னார்கள்.
ஹஃப்ஸா பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உம்மு அத்தியா (ரலி) அவர்கள் வந்த போது நான் அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், என் தந்தை (நபியவர்களுக்கு) அர்ப்பணமாகட்டும்! ஆம் (நான் செவியுற்úற்ன்) என்று பதிலளித்தார்கள்.-உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும்போதெல்லாம் என் தந்தை (நபியவர்களுக்கு) அர்ப்பணமாட்டும்  என்பதையும் சேர்த்தே கூறுவார்கள்.
திரைக்குள்ளிருக்கும் வயதுவந்த பெண்களும் அல்லது மணமுடித்த பெண்களும், திரைக் குள்ளிருக்கும் (குமரிப்) பெண்களும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களும் (தொழும் திடலுக்குப்)புறப்பட்டுச் செல்லட்டும். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள். பெண்கள் நண்மையான காரியங்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் வணக்க வழிபாட்டிலும் கலந்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள் உம்மு அத்திய்யா (ரலி).
பனூகலஃப் வம்சத்தாரின் மாளிகையில் தங்கியிருந்த அந்தப் பெண்மணி தொடர்ந்து கூறுகிறார்:
நான் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடம், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுமா (பெரு நாள் தொழுகை நடக்கும் திடலுக்குச் செல்வார்கள்)? என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், ஆம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் அரஃபா (மினா, முஸ்த-ஃபா போன்ற) இன்ன இன்ன இடங்களுக்குச் செல்வதில்லை? என்று (திருப்பிக்) கேட்டார்கள் (புகாரி-980)

தொழுமிடத்தைவிட்டு மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் ஒதுங்கி இருப்பது.
 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாது:
(பெரு நாளில் பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்லுமாறு (நபியவர்களால்) கடடளையிடப்படடோம். அப்போது மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் மணமுடித்த பெண்கள், திரைக்குள்ளிருக்கும் (குமரிப்)பெண்கள் ஆகியோரையும் புறப்படச் செய்யும்படி கட்டளையிடப்பட்டோம்.
-இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் அல்லது திரைக்குள்ளிருக்கும் வயது வந்த பெண்களையும் என்று ஐயத்துடன் அறிவிக்கிறார்-
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களோ முஸ்லிம்கள் கூடும் இடங்களிலும் அவர்களின் வணக்க வழிபாட்டிலும் கலந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் தொழும் இடத்திலிருந்து ஒதுங்கி இருப்பார்கள் என்று ளநபி (ஸல்) அவர்கள்ன கூறினார்கள். (புகாரி-981)

ஹஜ்ஜுப் பெரு நாள் தினத்தில் தொழும் திட-லேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங் களையும் அறு(த்து குர்பானி கொடு)ப்பது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுப் பெரு நாள் தினத்தில்) தொழும் திட-லேயே ஆடுமாடு களையும் ஒட்டகங்களையும் அறுப்பார்கள். (புகாரி-982)

பெரு நாள் உரையின் போது இமாமும் மக்களும் இடையே பேசிக் கொள்வதும் இமாம் உரைநிகழ்த்திக் கொண்டிருக்கும் போது இமாமிடம் ஏதேனும் ஒன்றைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டால் (அதற்கு அவர் பதிலளிப்பதும்).
 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெரு நாளன்று தொழுகைக்குப் பின் எங்களிடையே உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நமது குர்பானியைப் போன்று குர்பானி கொடுக்கிறாறோ அவரே (குர்பானி) வழிபாட்டை (முறைப்படி) முடித்தவராவார். யார் (பெரு நாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டாரோ அது இறைச்சி(க்காக அறுக்கப்பட்ட) ஆடுதான் (குர்பானி ஆடன்று) என்று கூறினார்கள்.
அப்போது அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்றைய தினம் உண்பதற்கும் குடிப்பதற்குமுரிய தினம் என்று அறிந்து கொண்டு, தொழுகைக்குப் புறப்பட்டு வருவதற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன். நான் அவசரப்பட்டுவிட்டேன். நானும் சாப்பிட்டேன் என் குடும்பத்தாரையும் என் அண்டைவீட்டாரையும் சாப்பிடச் செய்தேன் என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பெரு நாள் தொழுகைக்கு முன்பே அறுக்கப்பட்ட) அந்த ஆடு இறைச்சி ஆடுதான் (குர்பானி ஆடன்று) என்று கூறினார்கள். அதற்கு அபூபுர்தா (ரலி) அவர்கள், அவ்வாறாயின் ஒரு வயது பூர்த்தியான பெட்டை வெள்ளாடு ஒன்று என்னிடம் உள்ளது. அது இரண்டு (கொழுத்த) இறைச்சி ஆட்டைவிடச் சிறந்ததாகும். அ(தை நான் அறுப்ப)து எனக்குப் போதுமாகுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சரி (நீங்கள் அறுக்கலாம்). உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் அது போதுமாகாது என்று பதிலளித்தார்கள். (புகாரி-983)

       அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெரு நாளன்று தொழுகை நடத்திவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். அப்போது (பெரு நாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தவர் மறுபடியும் குர்பானி கொடுக்குமாறு கட்டளையிட் டார்கள். அப்போது அன்சாரிகளில் (அபூபுர்தா எனும்) ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே, என் அண்டைவீட்டார் பசியால் இருந்தனர் அல்லது வறுமையில் இருந்தனர் (ஆகவே,) நான் தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் ஒரு வயது பூர்த்தியான பெட்டை வெள்ளாடு ஒன்று உள்ளது. அது (கொழுத்த) இரண்டு இறைச்சி ஆடுகளை விடச் சிறந்தது (அதை நான் அறுக்கலாமா?) என்று கேட்டார்கள். (புகாரி-984)
இது விஷயத்தில் அந்த மனிதருக்கு மட்டும் நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
 
 ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ
(ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெரு நாளன்று தொழுகை நடத்திவிட்டுப் பிறகு உரையாற்றினார்கள். அதற்குப் பின் குர்பானிப் பிராணிகளை அறுத்தார்கள். (பெரு நாள்) தொழுகைக்கு முன்பே யார் (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டாரோ அவர் அதற்குப் பதிலாக வேறொன்றை அறு(த்துக் குர்பானி கொடு)க்கட்டும். யார் அறுக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும் என்று கூறினார்கள். (புகாரி-985)

பெரு நாள் தொழுகை தொழச் சென்றவர் தொழுது விட்டு திரும்பும் போது வேறு பாதையில் வருவது.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெரு நாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (ஒரு பாதையில் தொழும் திடலுக்குச் சென்றுவிட்டு) வேறு பாதையில் திரும்பி வருவார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. ஆனால் ஜாபிர் (ரலி) அவர்களின் (மேற்கண்ட அறிவிப்பே) ஆதாரபூர்வமானதாகும். (புகாரி-986)

பெரு நாள் தொழுகை தவறிவிட்டால் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.
(பெரு நாள் தொழுகை தொழச் செல்லா)பெண்களும், வீடுகளிலும் குக்கிராமங்களில் இருப்போரும் இவ்வாறே செயல்படவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், இது இஸ்லாமியர்களான நமது பெரு நாளாகும் என்று கூறியுள்ளார்கள்.
(பெரு நாள் தொழுகை தவறிவிட்ட போது) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம்முடைய அடிமை இப்னு அபீஉத்பாவுக்கு ஆணையிட்டு (பஸ்ராவிலிருந்து ஆறுமைல் தொலைவிலிருந்த) ஸாவியா எனும் இடத்தில் தம் மனைவி மக்களைத் திரட்டி நகரவாசிகள் தொழுவது போன்று (இரண்டு ரக்அத்கள்) தொழு(வித்)தார்கள்; அவர்கள் தக்பீர் சொல்வது போன்றே தக்பீர் சொன்னார்கள்.
கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பெரு நாள் தினத்தில் ஒன்று கூடி இமாம் செய்வது போன்றே இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும் என இக்ரிமா (ரஹ்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒருவருக்கு பெரு நாள் தொழுகை தவறி விட்டால் அவர் (தனியாக) இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
 
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மினாவின் நாட்களில் என் அருகில் (அன்சாரிச்) சிறுமியர் இருவர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்து (புஆஸ் போர் பரணிகளைப் பாடிக்) கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தமது ஆடையால் போர்த்தி(ப்படுத்துக்) கொண்டிருந் தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து அவ்விருவரையும் அதட்டினார்கள். உடனே நபி (ஸல்) தம் முகத்தைவிட்டு ஆடையை விலக்கி, அவ்விருவரையும் விட்டு விடுங்கள், அபூபக்ரே! (அவர்கள் பாடட்டும்.) ஏனெனில், இவை பண்டிகை நாட்களாகும் என்று கூறினார்கள். அந்த நாட்கள் (துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) மினாவின் நாட்களாக அமைந்திருந்தன. (புகாரி-987)
 
 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னை மறைத்தபடி நிற்க, நான் பள்ளிவாச-ல் (வீர விளையாட்டுக்கள்) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களை உமர் (ரலி) அவர்கள் அதட்டினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், (உமரே!) அவர்களை விட்டுவிடுங்கள்! என்று கூறிவிட்டு, அச்சமின்றி விளையாடுங்கள், அர்ஃபிதாவின் மக்களே! என்று (அபிசீனியர்களை நோக்கிக்) கூறினார்கள். (புகாரி-988)
 
பெரு நாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் (வேறு தொழுகைகள்) தொழலாமா?
பெரு நாள் தொழுகைக்கு முன் (வேறு தொழுகைகள்) தொழுவதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர் என சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெரு நாள் தினத்தில் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் (பெரு நாள் தொழுகை) தொழுதார்கள். அதற்கு முன்பும் எதையும் தொழவில்லை; அதற்குப் பின்பும் எதையும் தொழவில்லை. அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தனர். (புகாரி-989)

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்