Social Icons

Thursday, 4 October 2012

தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ

1, வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்
அல்லாஹும்ம ஃகலக்(த்)த நப்(எ)ஸீ, வஅந்(த்)த தவப்பா(எ)ஹா, ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ப(எ)ஹ்ப(எ)ள்ஹா, வஇன் அமத்தஹா ப(எ)ஃக்பி(எ)ர்லஹா, அல்லாஹும்ம  இன்னீ அஸ்அலு(க்)கல் ஆபி(எ)யா என்று ஓத வேண்டும்.

இதன் பொருள் :
இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 4887
 
2, வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.
அல்லாஹும்ம ரப்ப(இ)ஸ் ஸமாவா(த்)தி வரப்ப(இ)ல் அர்ளி, வரப்ப(இ)ல் அர்ஷில் அளீம், ரப்ப(இ)னா வரப்ப(இ) குல்லி ஷையின், பா(எ)லி(க்)கல் ஹப்பி(இ) வன்னவா, வமுன்ஸிலத் தவ்ரா(த்)தி வல் இஞ்சீலி வல் பு(எ)ர்கான், அவூது பி(இ)(க்)க மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்(த்)த ஆஃகிதுன் பி(இ)னாஸிய(த்)திஹி, அல்லாஹும்ம அன்(த்)தல் அவ்வலு ப(எ)லைஸ கப்ல(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் ஆஃகிரு ப(எ)லைஸ ப(இ)ஃத(க்)க ஷைவுன், வஅன்(த்)தள் ளாஹிரு ப(எ)லைஸ ப(எ)வ்க(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் பா(இ)த்தினு ப(எ)லைஸ தூன(க்)க ஷைவுன், இக்ளி அன்னத்தைன, வஅஃக்னினா மினல் ப(எ)க்ரி

இதன் பொருள்:
இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா! நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களைச் செல்வந்தர்களாக்குவாயாக.  ஆதாரம்: முஸ்லிம் 4888
 
3, படுக்கையை உதறி விட்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.
பி(இ)ஸ்மி(க்)க ரப்பீ(இ), வளஃது ஜன்பீ(இ) வபி(இ)(க்)க அர்ப(எ)வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்(எ)ஸீ ப(எ)ர்ஹம்ஹாவஇன் அர்ஸல்(த்)தஹா  ப(எ)ஹ்ப(எ)ள்ஹா பி(இ)மா தஹ்ப(எ)ளு பி(இ)ஹி இபா(இ)த(க்)கஸ் ஸாலிஹீன்.

இதன் பொருள்:
என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!
ஆதாரம்: புகாரி5845
 
4, பி(இ)ஸ்மில்லாஹ்  எனக் கூறி படுக்கையை உதறி விட்டு வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு பின் வரும் துஆவை ஓதலாம்.

ஸுப்(இ)ஹான(க்)கல்லாஹும்ம ரப்பீ(இ), பி(இ)(க்)க வளஃது ஜன்பீ(இ), வபி(இ)(க்)க அர்ப(எ)வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்(எ)ஸீ ப(எ)ஃக்பி(எ)ர் லஹா, வஇன் அர்ஸல்(த்)தஹா ப(எ)ஹ்ப(எ)ள்ஹா பி(இ)மா தஹ்ப(எ)ளு பி(இ)ஹி இபாத(க்)கஸ் ஸாலிஹீன்.

இதன் பொருள்:
என் இறைவனே! அல்லாஹ்வே நீ தூயவன். உன்னால் தான் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன்னால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதை மன்னிப்பாயாக. கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 4889
 
5, தூங்குவதற்கு முன் ஆய(த்)துல் குர்ஸீ எனப்படும் 2:255 வசனத்தை ஓதிக் கொண்டால் விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: புகாரி 3275

ஆய(த்)துல் குர்ஸீ வருமாறு:
அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா பி(எ)ஸ்ஸமாவா(த்)தி வமா பி(எ)ல் அர்ளி, மன் தல்லதீ யஷ்ப(எ)வு இந்தஹு இல்லா பி(இ) இத்னிஹி, யஃலமு மாபை(இ)ன ஐதீஹிம் வமா ஃகல்ப(எ)ஹும் வலாயுஹீ(த்)தூன பி(இ)ஷையின் மின் இல்மிஹி இல்லா பி(இ)மா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிப்(எ)ளுஹுமா வஹுவல் அளிய்யுல் அளீம்.

இதன் பொருள்:
அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.  (திருக்குர்ஆன் 2:255)
 
6, பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 
ஆதாரம்: புகாரி 4008, 5010, 5040, 5051

இரவில் ஓதினால் போதும் என்று கூறப்பட்டுள்ளதால் மஃரிப் முதல் சுப்ஹ் வரை இதை ஓதிக் கொள்ளலாம். அந்த வசனங்கள் வருமாறு:
 
ஆமனர் ரஸுலு பி(இ)மா உன்ஸில இலைஹி மின் ரப்பி(இ)ஹி வல் மூமினூன். குல்லுன் ஆமன பி(இ)ல்லாஹி, வமலாயி(க்)கத்திஹி வகு(த்)துபி(இ)ஹி, வருஸுலிஹி, லாநுப(எ)ர்ரி(க்)கு பை(இ)ன அஹதிம் மின் ருஸுலிஹி, வகாலூ ஸமிஃனா வஅதஃனா ஃகுப்(எ)ரான(க்)க ரப்ப(இ)னா வஇலை(க்)கல் மஸீர். லாயு(க்)கல்லிபு(எ)ல்லாஹு நப்(எ)ஸன் இல்லா உஸ்அஹா, லஹா மா கஸப(இ)த். வஅலைஹா மக்தஸப(இ)த். ரப்ப(இ)னா லாதுஆகித்னா இன் நஸீனா அவ் அக்தஃனா, ரப்ப(இ)னா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்(த்)தஹு அலல்லதீன மின் கப்(இ)லினா, ரப்ப(இ)னா வலா துஹம்மில்னா மாலா தாக்க(த்)த லனா பி(இ)ஹி, வஃபு(எ) அன்னா வஃக்பி(எ)ர் லனா வர்ஹம்னா அன்(த்)த மவ்லானா ப(எ)ன்ஸுர்னா அலல் கவ்மில் காபி(எ)ரீன்.

இதன் பொருள்:
இத்தூதர் தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம். செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு எனக் கூறுகின்றனர். எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. 'எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).
(திருக்குர்ஆன் 2:285,286)

7, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி தம்மால் இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை தடவிக் கொள்வார்கள்.  ஆதாரம்: புகாரி 5018, 5748, 6319

அந்த அத்தியாயங்கள் வருமாறு:
பி(இ)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்,  
குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம்யலித், வலம் யூலத். வலம் யகுன் லஹு குபு(எ)வன் அஹத்.

இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
அல் குர்ஆன் :112 வது அத்தியாயம்

பி(இ)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
குல் அவூது பி(இ) ரப்பி(இ)ல் ப(எ)லக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப்(இ). வமின் ஷர்ரின் னப்ப(எ)ஸாத்தி பி(எ)ல் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.

இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!    அல் குர்ஆன் :113 வது அத்தியாயம்

பி(இ)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
குல்அவூது பிரப்பி(இ)ன் னாஸ். மலி(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு பீ(எ) ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.

இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும்,  மனிதர்களிலும்இத்தகையோர் உள்ளனர்.
அல் குர்ஆன் :114வது அத்தியாயம்
 
8, நீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து விட்டு பின்னர் வலது புறமாக சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவை ஓது! நீ ஓதுவதில் கடைசியாக இது இருக்கட்டும். இதை ஓதி விட்டும் படுத்து அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன் மரணித்தவனாவாய் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.   ஆதாரம்: புகாரி 247, 6313, 6315, 7488, 6311, 7488

அந்த துஆ இது தான்.
அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வப(எ)வ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(இ)(த்)தன் வரஹ்ப(இ)(த்)தன் இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க இல்லா இலை(க்)க அல்லாஹும்ம ஆமன்(த்)து பிகிதாபி(இ)(க்)கல்லதீ அன்ஸல்(த்)த வபி(இ)நபி(இ)ய்யிகல்லதீ அர்ஸல்(த்)த

இதன் பொருள்:
இறைவா! என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்து விட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். (உனது அருளில்) நம்பிக்கை வைத்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க உன்னை விட்டால் வேறு போக்கிடம் ஏதும் இல்லை. இறைவா! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்