Social Icons

Thursday 6 December 2012

குர்ஆன் ஓதுதல்

1.   குர்ஆனை ஓதிய தோழர் மறுமை நாளில் வருவார் அப்போது குர்ஆன் ‘இறைவா! இவருக்கு ஆடையை அணிவி’ என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். 

 பிறகு குர்ஆன் ‘இறைவா!  இவருக்கு அதிகப்படுத்துவாயாக! என்று சொல்லும்.  அப்போது அவருக்கு உயர்ந்த ஆடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக்கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக அவர் ஓதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி)
நூல்:திர்மிதி நூல்:இப்னுகுஸைமா

2.  மறுமை நாளில் (குர்ஆனை படித்து அதனடிப்படையில் நடந்த)வரிடம் குர்ஆனிய தோழர் ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பீரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும். என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி)
நூல்:அபூதாவுத் நூல்:திர்மிதி.

3.எவருடைய உள்ளத்தில் குர்ஆனைப்பற்றிய அறிவு (வசனங்கள்) சிறிதளவேனும் இல்லையெனில் அது பாழடைந்த வீட்டைப்போல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்:திர்மிதி  நூல்:தாரமி

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்