Social Icons

Monday, 19 November 2012

ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள கடமை?



அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'
ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள கடமை ஐந்தாகும்:

1)
ஸலாமிற்கு பதில் கூறுவது 2) நோயாளியை நலம் விசாரிப்பது 3) ஜனாஸாவில் கலந்து கொள்வது 4)விருந்தை ஏற்பது 5) தும்மியவருக்கு பதில் கூறுவது என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்:-

ஒரு முஸ்லிமின் கடமை ஆறாகும். அவரை நீ சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறு! உன்னை அவர் விருந்துக்கு அழைத்தால் அவருக்கு பதில் கூறு! உன்னிடம் உபதேசம் செய்ய வேண்டினால், அவருக்கு நீ உபதேசம் செய்! தும்மியப்பின் அல்லாஹ்வை புகழ்ந்தால் அவருக்கு நீ பதில் கூறு! அவர் நோயுற்றால் அவரை நலம் விசாரி. அவர் இறந்தால் அவரை பின் தொடர்ந்து செல்! என்று உள்ளது. (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 238)


அபூ உமாரா என்ற பாரஉ இப்னு ஆஸிப்; (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''
நபி(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு விஷயங்களை விட்டும் எங்களை தடுத்தார்கள். 'நோயாளியை நலம் விசாரித்தல், ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், தும்மியவருக்கு பதில் கூறுதல், சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்றுதல், அநீதம் செய்யப்பட்டவருக்கு உதவுதல், (விருந்துக்கு) அழைத்தவனுக்கு பதில் கூறுதல், ஸலாமிற்கு பதில் கூறுதல் என, எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.

தங்க மோதிரங்கள் அணிவது, வெள்ளி பாத்திரத்தில் பருகுவது, பட்டு கலந்த சிவப்பு நிறத் துணி, பட்டு மற்றும் கித்தான் நூலால் உள்ள துணி, பட்டு அணிதல், கெட்டியான பட்டு, குறுக்கிலும், நெடுகிலும் பட்டு நூலால் நெய்யப்பட்ட துணி ஆகியவற்றை விட்டும் எங்களைத் தடுத்தார்கள்.(புகாரி,முஸ்லிம்

(
ரியாளுஸ்ஸாலிஹீன்: 239)


No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்