ஐவேளைத் தொழுகைக்குப் பின்னால் பல திக்ருகளைக் கூறுவதற்கு நபி (ஸல்)
அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். அவற்றில் அனைத்தையுமோ அல்லது சிலதையோ நாம்
கூறிக் கொள்ளலாம். ஆதாரப்பூர்வமான தொகுப்புகளில் வந்துள்ளவற்றில் சிலதைத்
தருகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதை (அல்லாஹு அக்பர் என்ற) தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரீ 842, முஸ்லிம் 1022
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர்,
(அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி) மூன்று முறை பாவமன்னிப்புத் தேடுவார்கள். மேலும் அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம், வமின்(க்)கஸ் ஸலாம், தபாரக்(த்)த தல் ஜலாலி வல்இக்ராம்
(பொருள்: இறைவா! நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. மகத்துவமும், கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியமிக்கவன்) என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)நூல்: முஸ்லிம் 1037

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃ(த்)தய்(த்)த வலா முஃ(த்)திய லிமாமனஃ(த்)த வலா யன்ஃபவு தல் ஜத்தி மின்(க்)கல் ஜத்து
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது) என கடமையான தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி) நூல்கள்: புகாரீ 844, முஸ்லிம் 1039
அல்லாஹும்ம இன்னீ அவூதுபி(க்)க மினல் புக்லி, வஅவூதுபி(க்)க மினல் ஜுப்னி, வஅவூதுபி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வஅவூது பி(க்)க மின் பித்ன(த்)தித் துன்யா, வஅதாபில் கப்ர்.
(பொருள்: இறைவா! உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புத் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என இறைவனிடம் தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடினார்கள். அறிவிப்பவர்: சஅத் (ரலி), நூல்: புகாரீ 6390, 2822
அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக்
(பொருள்: இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டு விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆத் (ரலி)நூல்கள்: அபூதாவூத் 1301, அஹ்மத் 21109
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ். வலா நஅபுது இல்லா இய்யாஹுலஹுன் னிஃம(த்)து வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ்கரிஹல் காஃபிரூன்
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன். நல்லவற்றைச் செய்வதற்கோ, தீயவற்றிலிருந்து விலகுவதற்கோ அல்லாஹ்வின் துணையின்றி இயலாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருள் அவனுடையது. உபகாரம் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. நிகராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன) என ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஸலாம் கூறும் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1041
யார்
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33தடவைகளும்,
அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும்
ஆக மொத்தம் 99 தடவைகள் கூறி விட்டு, நூறாவதாக லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு
லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின்
கதீர்
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்) எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1048
மேற்கூறப்பட்ட அனைத்தும் ஐவேளைத் தொழுகைக்கு பிறகு கூறியதாகவே இடம்பெற்றுள்ளது.
ஆனால் ஃபஜ்ர், அஸர் தொழுகைக்கு என்று தனியான திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.
ஃபஜ்ர், மற்றும் அஸர் தொழுகைக்குப் பிறகு குறிப்பிட்ட திக்ருகள் செய்வதற்குப் பின்வரும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸைக் கவனத்தில் கொண்டு செய்திருக்கலாம்.
உமது இறைவனை அதிகம் நினைப்பீராக! காலையிலும் மாலையிலும் துதிப்பீராக! என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 3:41)
இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வருகின்றார்கள். ஃபஜ்ருடைய தொழுகையிலும் அஸருடைய தொழுகையிலும் ஒன்று சேருகின்றார்கள். பிறகு, அல்லாஹ் லிஅவனோ மிகவும் அறிந்தவன்லி அவர்களிடம், (பூமியிலுள்ள) என் அடியார் களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டு வந்தோம். அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்கடம் நாங்கள் சென்றோம் என்று பதிலப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (3223)
திருக்குர்ஆன் காலையிலும் மாலையிலும் திக்ர் செய்யுமாறு கட்டளையிடுவதாலும், பகல் நேர, இரவு நேர வானவர்கள் சந்தித்துக் கொள்ளும் நேரமாகவும் இறைவன் விசாரிக்கும் நேரமாகவும் ஃபஜ்ர், அஸர் தொழுகைகள் இருப்பதால் இந்த நேரங்களில் திக்ர் செய்தால் இறைவனிடம் நற்பெயர் எடுக்க முடியும் என்ற எண்ணத்தில் செய்திருக்கலாம்.
ஆனால் இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யவில்லை. எல்லாத் தொழுகைக்குப் பிறகும் திக்ர் செய்துள்ளார்கள். அவர்களே பின்பற்றத் தகுதியானவர்கள்.
அடுத்து, ஐவேளைத் தொழுகைக்குப் பிறகு, சப்தமிட்டு திக்ர் செய்வதற்கும் கூட்டாக துஆச் செய்வதற்கும் நபிமொழிகளில் ஆதாரம் இல்லாததுடன், சப்தமிடாமல் திக்ர் மற்றும் துஆச் செய்யவேண்டுமென்றே திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)

No comments:
Post a Comment