Social Icons

Thursday 4 October 2012

பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்

நாம் சந்திக்கின்ற எல்லாப் பிரச்சினைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சந்தித்துள்ளனர். அவற்றைச் சந்திக்கும் போது அல்லாஹ்விடம் அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர். அது போன்ற பிரச்சினைகளை நாம் சந்திக்கும் போது அந்தப் பிரார்த்தனைகளில் தகுதியானதைத் தேர்வு செய்யலாம். அந்தப் பிரார்த்தனைகளின் தமிழாக்கத்தைக் கவனித்து இதை நாமே முடிவு செய்து கொள்ளலாம்.

1. அல்லாஹும்மஜ்அல் பீ(எ) கல்பீ(இ) நூரன், வபீ(எ) ப(இ)ஸரீ நூரன், வபீ(எ) ஸம்யீ நூரன், வஅன் யமீனீ நூரன், வஅன் யஸாரீ நூரன் வப(எ)வ்கீ நூரன் வ(த்)தஹ்(த்)தீ நூரன் வஅமாமீ நூரன் வகல்பீ(எ) நூரன் வஜ்அல் லீ நூரன்.










இறைவா! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து! எனது பார்வையிலும், எனது செவியிலும், என் வலது புறமும், இடது புறமும், எனக்கு மேலேயும், எனக்குக் கீழேயும், எனக்கு முன் புறமும், எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்து! எனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து!
ஆதாரம்: புகாரி 6316

2. அல்லாஹும்ம ரப்ப(இ)னா ஆ(த்)தினா பி(எ)த்துன்யா ஹஸன(த்)தன் வபி(எ)ல் ஆகிர(த்)தி ஹஸன(த்)தன் வ(க்)கினா அதாப(இ)ன்னார்.

 



இதன் பொருள் :
இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக. நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!
ஆதாரம்: புகாரி 4522, 6389

3. அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் பு(இ)க்லி வல் ஜுபு(இ)னி வளளஇத் தைனி வகலப(இ)(த்)திர் ரிஜால்












இதன் பொருள் :
இறைவா! துக்கம், கவலை, பலவீனம், சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மற்றவர்களின் அடக்குமுறை ஆகிய அனைத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 5425, 6369

4. ரப்பிஃக்பி(எ)ர்லீ கதீஅ(த்)தீ வஜஹ்லீ வஇஸ்ராபீ(எ) பீ(எ) அம்ரீ குல்லிஹி வமா அன்(த்)த அஃலமு பி(இ)ஹி மின்னீ அல்லாஹும்மஃக்பி(எ)ர் லீ கதாயாய வஅம்தீ வஜஹ்லீ வஹஸ்லீ வகுல்லு தாலி(க்)க இன்தீ அல்லாஹும்மஃக்பி(எ)ர்லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வஅன்(த்)தல் முஅக்கிரு வஅன்(த்)த அலா குல்லி ஷையின் கதீர்.


இதன் பொருள் :
என் இறைவா! என் தவறையும், என் அறியாமையையும், எனது காரியங்கள் அனைத்தையும், நான் வரம்பு மீறியதையும், என்னிடமிருந்து ஏற்பட்டதாக நீ அறிந்த அனைத்தையும் மன்னிப்பாயாக. இறைவா! எனது தவறுகளையும், வேண்டுமென்று செய்ததையும், அறியாமையால் செய்ததையும், விளையாட்டாக செய்ததையும் மன்னிப்பாயாக. இறைவா! நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். நீயே அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன்.
ஆதாரம்: புகாரி 6398

5. அல்லாஹும்ம முஸர்ரிப(எ)ல் குலூபி(இ) ஸர்ரிப்(எ) குலூப(இ)னா அலா
தாஅ(த்)தி(க்)க

 









இதன் பொருள் :
இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 4798

6. அல்லாஹும்ம லக அஸ்லம்(த்)து வபி(இ)(க்)க ஆமன்(த்)து வஅலை(க்)க தவக்கல்(த்)து வஇலை(க்)க அனப்(இ)(த்)து வபி(இ)(க்)க காஸம்(த்)து அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)இஸ்ஸ(த்)தி(க்)க லாயிலாஹ இல்லா அன்(த்)த அன்துளில்லனீ அன்(த்)தல் ஹய்யுல்லதீ லாயமூ(த்)து, வல்ஜின்னு வல் இன்ஸு யமூ(த்)தூன.
 
இதன் பொருள் :
இறைவா! உனக்குக் கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன் மீதே நம்பிக்கை வைத்தேன். உன்னிடமே திரும்பினேன். உன்னிடமே வழக்குரைக்கிறேன். இறைவா என்னை நீ வழி தவறச் செய்யாதிருக்க உனது கன்னியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தான் மர ணிக்காது உயிருடன்
இருப்பவன். மனிதரும், ஜின்களும் மரணிப்பவர்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 4894

7. அல்லாஹும்ம அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்ம(த்)து அம்ரீ, வஅஸ்லிஹ் லீ துன்யாயல்ல(த்)தீ பீ(எ)ஹா மஆஷீ, வஅஸ்லிஹ் லீ ஆகிர(த்)தியல்ல(த்)தீ பீ(எ)ஹா மஆதீ வஜ்அலில் ஹயா(த்)த ஸியாத(த்)தன் லீ பீ(எ) குல்லி கைரின் வஜ்அலில் மவ்(த்)த ராஹ(த்)தன் லீ மின் குல்லி ஷர்ரின்.


இதன் பொருள்:
இறைவா! எனது காரியங்களின் கவசமாக உள்ள எனது நடத்தையைச் சீர் படுத்துவாயாக. நான் வாழ்கின்ற இவ்வுலகையும் எனக்குச் சீர்படுத்துவாயாக. நான் திரும்பிச் செல்ல இருக்கிற எனது மறுமையையும் சீர்படுத்துவாயாக. எனது வாழ் நாளை ஒவ்வொரு நன்மையையும் அதிகப்படுத்தக் கூடியதாக  ஆக்கு. எல்லா தீமையி லிருந்தும் எனக்கு விடுதலையளிப்பதாக எனது மரணத்தை ஆக்கு!
ஆதாரம்: முஸ்லிம் 4897

8. அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஹுதா வத்து(க்)கா வல் அபா(எ)ப(எ) வல்கினா

இதன் பொருள் :
இறைவா! உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 4898

9. அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் அஜ்ஸி வல்கஸலி வல்ஜுபு(இ)னி வல்பு(இ)க்லி வல்ஹரமி வஅதாபி(இ)ல் கப்(இ)ரி. அல்லாஹும்ம ஆ(த்)தி நப்(எ)ஸீ தக்வாஹா வஸக்கிஹா அன்(த்)த கைரு மன் ஸக்காஹா அன்(த்)த வலிய்யுஹா வமவ்லாஹா, அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மின் இல்மின் லாயன்ப(எ)வு வமின் கல்பி(இ)ன் லாயக்ஷவு வமின் நப்(எ)ஸின் லா தஷ்ப(இ)வு வமின் தஃவ(த்)தின் லா யுஸ்(த்)தஜாபு(இ) லஹா



இதன் பொருள் :
இறைவா! பலவீனம், சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! எனது உள்ளத்துக்கு இறையச்சத்தை வழங்கி விடு! அதைத் தூய்மைப்படுத்து! தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீ தான் அதன் பொறுப்பாளன். அதன் எஜமானன். இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், அடக்கமில்லாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத ஆத்மாவை விட்டும், அங்கீகரிக்கப்படாத துஆவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 4899

10. அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மின் ஸவாலி நிஃமதி(க்)க வதஹவ்வுலி ஆபி(எ)ய(த்)தி(க்)க வபு(எ)ஜாஅதி நிக்ம(த்)தி(க்)க வஜமீஇ ஸகதி(க்)க

இதன் பொருள் :
இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 4922

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்