Social Icons

Sunday 28 October 2012

இஸ்லாம் ௬றும் குடும்பவியல் கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்

4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் எனும் ஒப்பந்தத்தின் முலம் கணவன் மனைவியாக இல்வாழ்க்கையை துவங்குகின்றனர். அவ்விருவரும் மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்து தம்பதியினரும் மகிழ்ச்சியாக நிம்மதியாக குதுகலமாக குடும்பம் நடத்த ஆசைப்படுகின்றனர்.அவர்களது ஆசைப்படி குடும்ப வாழ்க்கை மிளிர்ந்திட வேண்டுமெனில் கணவன் மனைவி ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகும். அந்தவகையில் கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறான வழிவகைகளை ௬றுகின்றது என்பதை பார்ப்போம் .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
தங்கள் மனைவியரிடம் சிறந்தவரே உங்களில் சிறந்தவராவார் .என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள். (திர்மிதி-1082)

{{பெண்கள் விசயத்தில் நடுநிலையை மேட்கொள்ளல்}}

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்களின் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார (புஹாரி-3331.)

மற்றுமொரு அறிவிப்பில் ,நிச்சயமாக பெண் விழா எலும்பிலிருந்து படைக்கப்பட்டாள்.அவள் (உம்) பாதையில் முற்றிலும் நேர்படமாட்டாள். அவளின் கோணல் உள்ள நிலையில் சுகம் பெறுவதாக இருந்தால் சுகம் பெற்றுக்கொள்ளலாம்.நீர் அவளை நேர் படுத்த முயன்றால் அவளை முறித்து விடுவீர்.அவளை முறித்து விடுவதென்பது தலாக் (மணமுறிவு) ஆகும்.அதுவரை நீர் செல்ல வேண்டாம்.என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள். அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம் -2671)

{{கணவன் மனைவிக்கு செய்ய வேண்டியவைகள்}}

அம்ரு பின் அஹ்வசில் ஜுசமி (ரலி) அறிவிக்கின்றார்கள்;-
அறிந்து கொள்ளுங்கள் ! உங்களிடமும் உங்கள் மனைவியருக்கு சில உரிமைகள் உள்ளன.உங்களிடம் உங்கள் மனைவியருகுரிய உரிமையாகிறது,அவர்களுக்கு உடையும், உணவும் அழகிய முறையில் நீங்கள் அளித்து வருவதாகும்.என நபி (ஸல்)அவர்கள் ௬றினார்கள். (திர்மிதி-1083)

மற்றொரு அறிவிப்பில் முஆவியா பின் ஹைதா (ரலி அறிவிக்கின்றார்கள்:-
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவரின் மனைவிக்கு அவள் கணவனிடம் என்ன உரிமை உள்ளது எனக் கேட்டேன்.அதற்கு நபி (ஸல்) அவர்கள் (உம்மிடம் உமது மனைக்குரிய உரிமையாகிறது )நீர் உணவு உண்டால் அவளுக்கும் உண்ண கொடுப்பதும் நீர் உடுத்தினால் அவளுக்கும் உடுத்தக் கொடுப்பதும் ஆகும் என ௬றினார்கள். (அபூதாவுத்-1830)

{{நிறைவு கண்டு நிம்மதி பெற வேண்டும்}}

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்:-
ஒரு முஃமினான ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (அவன் மனைவியை) வெறுக்க வேண்டாம்.அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தாள்,அவளிடமுள்ள வேறொரு நட்குனத்தைக் கொண்டு பொருந்திக்கொல்வானாக! என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள்.(முஸ்லிம்-2672)
 
{{குடும்பத்தினருக்காக செலவு செய்தல்}}
 'அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். (புஹாரி-56)


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!"
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி-1426)

மற்றொரு அறிவிப்பில்,அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) அறிவிக்கின்றார்கள் :-
தான் எவர்களுக்கு உணவளிக்க வேண்டுமோ அவர்களுக்கு உணவளிக்காமல் இருப்பது மனிதனுக்கு பாவத்தால் போதுமானது. (அபூதாவுத்-1442)

{{மனைவியை தண்டித்தல்}}

ஒரு மனைவி தவறு இளைக்கின்றபோது கணவன் அத்தவறை திருத்துவதற்காக வேண்டி மனைவியை தண்டித்தல் என்பது திருத்துவதட்குரிய ஆரம்ப வழிமுறையல்ல மாறாக அவளை தீருத்துவதட்கான இறுதி வழிமுறையாகும்.மனைவியிடம் தவறான நடவடிக்கையை காணும்போது, அன்பாக எடுத்துரைக்க வேண்டும்.அதன் முலம் திருந்தாவிட்டால் படுக்கையை விட்டும் பிரித்து மனரீதியாக அவளிடம் மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அதுவும் பயனளிக்காதபோது இறுதிக்கட்டமாக தண்டித்தல் எனும் எனும் அணுகுமுறையை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இது குறித்து அல்லாஹ் திருமறையில் ௬றும் போது:-
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.(4:34)

{{பிறர் முன்னிலையில் மனைவியை கண்டிக்க ௬டாது முகத்தில் அடிக்கக் ௬டாது}}

முஆவியா பின் ஹைதா (ரலி) அறிவிக்கின்றார்கள் :-
வீட்டைத்தவிர வேறு இடத்தில் அவள் மீது (உங்கள் மனைவியர்)வெறுப்பை வெளிப்ப்டுத்தாதீர்கள்.மேலும் அவளை பலிக்காதீர் (மன வேறு பாடு ஏற்படின்) இல்லத்திலேயே (படுக்கையில்)தவிர அவளை வெருக்காதீர்கள். உங்கள் மனைவியை அவளது முகத்தில், அடிக்காதீர்கள்.என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள் (அபூதாவுத்-1830)
பொதுவாகவே யாரையும் முகத்தில் அடிக்கவோ சூடிடவோ ௬டாது.ஏனெனில் நபி (ஸல்) ௬ரினர்கள்:- தம சகோதரரிடம் சண்டையிட்டால் முகத்தில் அடிப்பதையும் முகத்தில் சூடிடுவதையும் தவிர்க்கட்டும்..(அபூஹுரைரா (ரலி),முஸ்லிம்-5093)

முஹம்மது பின் அலி அறிவிக்கின்றார்:-
மனைவியை முகத்தில் தவிர்த்து உங்களது மனைவியை அடித்தேயாக வேண்டுமென்றால் அவளுக்கு காயம் வராதமுறையில் கடுமை இல்லாத விதத்தில் மென்மையாக அடியுங்கள். என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள். (முஸ்லிம்-2137)

{{தன்ட்டித்தலும் கண்டித்தாலும் தவறுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்}}

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போன்று அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவுகொள்வீர்கள்.
என அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) அறிவித்தார். (புஹாரி-5204).

அல்லாஹ் திருமறையில் ௬ரியுள்ளான்:- 16:126. (முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.

மேற்படி வசனம் நமது எதிரி நம்மை தாக்கினால் அவனை பதிலுக்கு தாக்கும் போது ௬ட வரம்பு மீறி நடக்காமல் அவன் தாக்கிய அளவே பதில் தாக்குதல் கொடுக்க வேண்டுமென அல்லாஹ் நமக்கு கட்டளை இடுகின்றான்.எதிரிகளின் விசயத்தில் விசயத்தில் இவ்வளவு நேர்மையை இஸ்லாம் கடைபிடிக்க சொல்லும்போது நமது வாழ்க்கை துணைவியின் தவறுக்காக கண் மூக்கு தெரியாமல் தாறுமாறாக நடந்து கொள்வதை இஸ்லாம் எவ்வாறு ஏற்றுகொள்ளும் என்பதை சிந்திக்க வேண்டும்.

எனவே மனைவியை தண்டித்தல்,கண்டித்தல் என்பது அவளை சீர்திருத்துவதற்கு மட்டுமே என்பதை கவனத்தில் கொண்டு செயல் படவேண்டும். மாறாக பழிதீர்க்கும் எண்ணத்தோடு ,முறையற்ற கண்டித்தல் குடும்பத்தில் குழப்பத்தை பல கோணத்தில் அதிகரிக்க செய்யுமே தவிர குறைக்காது.அதனால்தான் அல்லாஹ் <span class=" fbUnderline">“அவர்கள் உங்களுக்கு கட்டுபட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியை தேடாதீர்கள்</span>” என்று ௬ருகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் தமது மனைவிய்ரிடத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என தெரிந்துகொண்டு அவ்வழியை நாமும் கடைபிடிக்கவேண்டும். பாத்திமா பின்த் கைஸ் என்ற பெண்மணி தன்னை இருவர் பெண் பேசுகின்றனர் .அவர்களில் யாரை மணம் முடிப்பதும் என நபியர்களுடன் ஆலோசனை கேட்டபோது அவர்களில் ஒருவரான அபூஜஹம் என்பவர் மனைவிகளை அடிக்கக௬டியவர். என மாற்று ஆலோசனை ௬ரினார்கள்,என்றால் பெண்களை அடிப்பது என்பது வரவேற்கத்தக்க அம்சமோ பண்பாடுமல்ல என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

உங்களில் மார்க்கமும் நல்ல பண்பும் உள்ளவர் பெண் கேட்டு வந்தால் அவர்களுக்கு மனமுடித்துகொடுங்கள். என நபி (ஸல்) அவர்கள் ௬றினார்கள். அபூஹுரைரா(ரலி) திர்மிதி -1004
மேட்௬ரிய நபிமொழிகள் நமக்கு உணர்த்துவது கணவன்மார்கள் தமது மனைவியிடத்தில் நடந்துகொள்ள வேண்டிய ஒழுங்குமுரைகளையும்,அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையுமாகும். அந்தவகையில் இஸ்லாம் ௬ரும் குடும்பவியல் முறைகளை நாம் பெனுகின்றபோது குடும்ப வாழ்வில் எவ்வித குழப்பமோ, சண்டை சச்காரவுகளோ ,கணவனுக்கு எதிராக நடக்கும் மனைவியின் துரோக செயல்களோ நடைபெறாமல் தடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

4:20. நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்