Social Icons

Sunday 9 September 2012

ரமலானை திரும்பி பார்போம்

                     நம்மை கடந்து சென்ற புனித ரமலானின் நினைவுகள் நமது உள்ளத்தில் பல எண்ணச்சிதறல்களை தூவிச்சென்றுள்ளது நோன்பு திறக்கும் நேரத்தில் நமது ஈமானிய  சகோதரர்களுடன் இணைந்து ஒன்றாக அமர்ந்து நோன்புதிறக்கும் நேரத்தை எதிர்நோக்கியவாறு இருந்த காட்சிகள் ஒருவருக்கொருவர் பழங்களையும் பிற உணவுகளையும் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சிகள் நமது இதயத்தை இதமாக வருடுகிறது இந்த சகோதர வாஞ்சை பிற காலங்களிலும் நம்  ஈமானிய  சகோதரருடனும்  நமது அண்டை அயலாரோடும், இரத்த பந்தங்களோடும், நம்மை தேடி வரும் விருந்தினரோடும் ஏன் தொடரக்கூடாது. ஈமானிய  சகோதர உறவை , இரத்த உறவை ,மனித நேயத்தை வலியுறுத்தி அல்லாஹ்வின் தூதர் நமக்கு இட்ட கட்டளைகள் ஏராளமாக இருப்பதை நாம் ஏன் கவனிப்பதில்லை எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ , அவர் நல்லதை பேசட்டும் அல்லது மௌனாமாக இருக்கட்டும் , எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும் ,
  
           
                எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ , அவர்தனது அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும் என அல்லாஹ்வின் தூதர் கூறியுள்ளதை நாம் நினைத்து பார்க்க வேண்டும் (அபூ ஹுரைரா , புஹாரி முஸ்லிம்)
                 புனித ரமலானின் காலங்களில் உண்ணாமல் பருகாமல் நோன்பு இருந்தோம் பொய், புறம், கோள் சொல்லாமல் மௌன விரதம் இருந்தோம். பசித்திருப்பது மட்டுமே   நோன்பு என தவறாக விளங்கிய சில பல சகோதரர்கள் பொய்யான பேச்சுக்களிலும், புறம் பேசுவதிலும் , கோள் சொல்வதிலும் ,தீய காரியங்களிலும் , ஈடுபடுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருளிய நோன்பின் ஒழுக்கங்களை அறிய முயற்சிக்க வேண்டும் அல்லது அதில் கவனம் செலுத்த வேண்டும் இல்லையென்றால் அது நமது நோன்பை பயனற்றதாக ஆக்கி விடும் எத்தனயோ நோன்பாளிகள் பசிதிருப்பதையும் தாகித்திருப்பதையும் தவிர வேறெதையும் பெற்றுக்கொள்ளவில்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.    எவர் பொய்யான பேச்சுகளையும், தவறான செயல்களையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதும் தாகித்திருப்பதும், அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அப்படியே ரமலான் நோன்பு காலங்களில் பொய்யான பேச்சு , தவறான செயல்களை விட்டு விலகி இருந்த பலர்  பிற காலங்களில் இவைகளை செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்  நோன்பு காலங்களில் தடை செய்யப்பட்ட இந்த காரியங்கள் மற்ற காலங்களில் அனுமதிக்கப்படிருக்கின்றதா? இல்லையே! பொய்யான பேச்சுகளும்  தவறான செயல்களும் , மனித சமூகத்தில் ஏற்படுத்திய பயங்கர விளைவுகள் கொஞ்சமா? பொய்யான பேச்சுகள் பேசுவது நயவஞ்சகனின் அடையாளம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது மிகவும் முக்கிய துவம் வாய்ந்ததாகும் பொய்யை உண்மை என நம்பி தமது ஈமானை இழந்தவர்கள் ஏராளம் ! தங்கள் மானம் மரியாதையை பரி கொடுத்த பரிதாபத்திகுரியவர்கள் எத்தனை பேர் ! தனது பொருளாதரத்தை பரி கொடுத்தவர்கள் எத்தணை பேர் ! என பாதிக்கப்பட்டோரின் பட்டியல் மிக நீளமாக சென்று கொண்டிருக்கிறது சத்தியத்திற்கு எதிரான பொய் பிரச்சாரத்தால்  காலங்காலமாக நேர்வழியை விட்டும் தடுக்கப்பட்டவர்கள் நிலையோ இன்னும் அதிகம்  பொய்யான வதந்திகளால் பெரும்பெரும் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன அதனால் அநியாயமாக சிந்தப்பட்ட இரத்தங்கள் கொஞ்சமா? பறிக்கப்பட்ட அப்பாவிகளின் உயிர்கள் ஏராளம்! இதனால் தான் கேள்விப்பட்டதை எல்லாம் பரப்புபவன் பொய்யன் என்பதற்கு போதுமான ஆதாரமாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பொய் என்பது சமூகத்தின் அடித்தளத்தையே அசைத்துவிடக்கூடிய கொடிய குற்றமாகும் இதயே இஸ்லாத்தின் விரோதிகள் இஸ்லாத்திற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.
                 இஸ்லாத்திற்கு எதிரான பொய்யான பிரச்சாரத்தையே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்தங்கள் நாவினால் அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்து விட இவர்கள் விரும்புகிறார்கள். காபிர்கள் வெறுத்த போதும் தனது ஒளியை அல்லாஹ் பூரணப்படுதித்யே தீருவான்  திருமறை 61:8
                 இத்தகைய தீய பொய்களை விட்டும் நம்மை தடுத்து தூய பொய்களற்ற, தீமைகளற்ற மனித நேய வாழ்க்கையை இந்த ரமலான் நமக்கு ஒரு மாத காலமாக வழங்கி உள்ளது. தீமைகள் நிரந்தரமாக நம்மை விட்டு விலக வேண்டும் ராமலானுக்குப்பிறகு அவைகள் நமது வாழ்வில் தொடரக்கூடாது இதன் மூலம் அல்லாஹ் நம்மிடம் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும். நோன்பினால் நமது வாழ்வில் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன, மாற்றங்கள் என்ன  என்று  சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய சமுதாயம் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என அல்லாஹ் விரும்புகிறான் ஏனெனில் இறை நம்பிக்கையாளர்கள் எப்போதும் கீழ்நிலையில் இருப்பதில்லை இதை குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது
                 நீங்கள் உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக இருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள் அனே அல்லாஹ் கூறுகிறான் 3:139
 இந்த வசனம் நமது ஈமானை நாமே சுய பரிசோதனை செய்ய தூண்டுகிறது அல்லவா?
                 முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பெருமையை அவனது மகத்துவத்தை உலகில் நிலை நிறுத்த பாடுபட வேண்டும் அவைகளை உலகில் உயர்த்திப்பிடிக்க வேண்டும் எல்லா மக்களிடமும் இறைவனின் சத்தியகொள்கைகளையும்  அவனது வேதமான  குர்ஆனின்செய்திகளையும் கொண்டு செல்ல வேண்டும் . மனித குலம். சைத்தானின் பிடியிலிருந்தும் தவறான கொள்கைகளிலிருந்தும் மீண்டெழும் வழிகளை பரவலாக்க வேண்டும். அந்த பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்பது தான் இறைவனின் விருப்பமாகும். இத்தகைய மாபெரும் பணிகளை செய்தவற்குரிய தகுதியையும் ஆற்றலையும் நாம் பெற்றுள்ளோமா என நாம் சிந்திக்க வேண்டும் . ஒவ்வொரு முமினும் அத்தகைய தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும் ஏனெனில் வெறும் உயிரோட்டம் அற்ற சடங்குளால் உலகில் எதையும் நம்மால் சாதித்து விட முடியாது இத்தகைய ஆற்றலும் வல்லமையும் இறை அச்சத்தின் மூலமாக மட்டுமே கிடைக்கும் இறை அச்சமே எல்லாவிதமான நன்மைகளுக்கும் ஊற்றுக்கண்ணாகும ஒரு மனிதன் ஈமானிலும் நற்பண்புகளிலும் உயர்ந்து நிற்க வேண்டுமானால் அதற்கு இறை அச்சமே அடிப்படை தேவை ஆகும். தான் ஈடுபடும் துறையில் உறுதியாக நின்று இறைவனின் அருளையும் உதவியையும் பெற அது வழியாகும் ஈமானின் பலத்தையும் இதன் மூலமே நாம் பெற முடியும் இதையே ரமலானில் நோன்பு  மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் பெற வேண்டும். இதன் மூலம் நன்மைக்குரிய வழிகள் திறக்கப்படுகிறது ஆகவே சகோதர்களே கடந்து சென்ற இந்த ரமதானின் முலம் நாம் இதை பெற்றுள்ளோமா ? இல்லையா என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்

                அல்லாஹ் கூறுகிறான் ,இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் அவனுடைய தூதர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் தன் கருணையிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு இரு மடங்கு  (உதவிகளை) வழங்குவான். மேலும் உங்களுக்கு (உலகை வெல்லும்) ஒளியையும் அருளுவான் அந்த ஒளியின்  மூலம் இறை பணியில் நீங்கள் விரைந்து செல்வீர்கள் அதனால் உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் “அல்லாஹ் பெரும் மன்னிப்பளனாகவும் கருணையாளனாகவும் இருக்கிறான் 57:28
                 சகோதரர்களே ! முமின்களாகிய நாம் நமது கடமைகளை எண்ணி பார்போம் கடைமைகளை நிறைவாக செய்வோம் அத்தகைய ஆற்றல்களையும் இறையருளால் அடைய முயற்சிப்போம் இறைவனின் சத்திய செய்திகளை உலக மக்களிடம் கொண்டு செல்லும் பணியின் அவசியத்தை உணர்வோம் அதற்கு தேவையான பணிகளைச்செய்வோம் புனித ரமலானின் நோன்பில் நாம் பெற்ற பயிற்ச்சி அதறக்கு துணை செய்யட்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது பணிகளைச்செய்ய நம்மை தேர்வு செய்யட்டும் நமக்கு உதவி செய்யட்டும் அதன் மூலமன் ஈருலக வெற்றிகளையும் வழங்கட்டும் .

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்