Social Icons

Sunday 23 September 2012

நிலையான இன்பம்

இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது தான் இவ்வுலக வாழ்க்கை இன்பத்தை கண்டு பெருமிதம் அடைவதும் துன்பத்தை கண்டு துவண்டு விடுவதும் மனிதனின் இயல்பாக இருக்கிறது. சுகமான வாழ்க்கையை சொர்க்கம்  என்றும், துன்பம் நிறைந்த வாழ்க்கையை நரகம்  என்றும் மனிதர்கள் பேசிக்கொள்கின்றனர். இறந்த பிறகு சொர்க்கம்  என்றும் நரகம் என்றும் இருப்பதை பெரும்பாலான மக்கள் நம்ப மறுக்கின்றனர் சொர்க்கமா? அது எங்கே இருக்கிறது உலகம் தான் சொர்க்கமும், நரகமும் . அது தனியாக எங்கேயும் இல்லை என்கின்றனர். இது போன்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் சில நேரங்களில் தோன்றி மறைகிறது இறந்த பிறகு மீண்டும் எழுப்பப்பட்டு கேள்வி, விசாரணைகள் எல்லாம் முடிந்த பிறகு சொர்க்கம் என்றும் நரகம் என்றும் நமது செயல்களுக்கு ஏற்ப கூலியாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தாலும் அது மிக மிக பலவீனமாகவே இருக்கிறது நபித் தோழர்களுக்கும் அதன்பின் வந்த தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள் இறையச்சத்தை தங்கள் உள்ளங்களில் நிரப்பி வாழ்ந்த நல்லோர்கள் இறையருள் பெற்றவர்களைத் தவிர மற்ற அனைவர் உள்ளங்களிலும் இந்த நம்பிக்கை பலமற்ற நிலையில் தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது இதை வலுப்பெற செய்வதும் சொர்க்கத்திற்கு செல்லும் வழிகளை தேடுவதும் ஒவ்வொரு முமினுக்கும் அவசியமாகும் குறிப்பாக மறு உலக வாழ்க்கை மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்


                சரி சொர்க்கம், நரகம் என்று சொல்கிறோமே அவைகள் எப்படி இருக்கும் என்று நாம் எப்போதாவது யோசித்ததுண்டா? இவைகளை பற்றி நமக்கு என்ன சொல்லப்பட்டிருகின்றது என்பதை நாம் அறிந்துள்ளோமா அதை  அறியும் ஆவல் நமக்கு ஏற்பட்டதுண்டா? அதனை நம்பியவர்களுக்கு கட்டாயம் அந்த ஆவல் இருக்க வேண்டும் அல்லவா! அப்போது தானே நம்மை அதன் பக்கம் இழுக்கும் ஒரு உந்து சக்தி நமக்குள் ஏற்படும் எத்தனை ஆசைகள் நமது உள்ளத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகள் நம்மை எங்கெல்லாம் இழுத்துச்செல் கின்றன  எதையெல்லாம் செய்ய வைக்கின்றன என்பதை நாம் அறிவோம். நாம் ஆசைப் பட்டவைகளை  அடைவதற்காக எவ்வளவோ சிரமங்களை யெல்லாம் சந்திக்கின்றோம் அவைகளையெல்லாம் நாம் சிரமமாக கருதாமல் சிகரத்தை அடையும் சுகாமான சுமைகளாக அல்லவா!கருதுகின்றோம். அப்படிப்பட்ட வலுவான ஆசைகள் சொர்க்கத்தை அடைவதின் மீது நமக்கு ஏற்பட்டதுண்டா? இல்லையென்றே சொல்லிவிடலாம். ஏன்? நாம் சொர்கத்தை பற்றி அறியவில்லை அவ்வளவுதான். உணவின் ருசி உணவின் மீது ஆசையை ஏற்படுத்து கின்றது பெண்ணின் அழகும் கவர்ச்சியும்  அவள் மீது மோகத்தை ஏற்படுத்துகின்றது. ஸ்பரிசத்தால் கிடைக்கும் சுகம் இசையால் கிடைக்கும் இன்பம் அழகான கட்சிகளால் கிடைக்கும் சந்தோசம் நாவின் சுவையால் கிடைக்கும் இனிமை, நாம் நினைத்தவைகள் எல்லாம் இலகுவாக நிறைவேருகிறபோது நமது மனதில் ஏற்படும் சுகமான சுகம் இவைகள் தான் நம்மை உலகத்தில் இயக்கும் சக்திகள் ஆகும் இது போன்று சொர்க்கத்தின் பக்கம் நம்மை அழைத்துச்செல்லும் ஈர்ப்பு சக்தி எது? அது நம்மிடம் ஏற்பட வேண்டுமென்றால் சொர்க்கத்தை பற்றி நாம் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் அல்லவா! அதே சமயம் உலக இன்பங்கள் அத்தனையுமே அழியக்கூடியது, நொடிபொழுதில் துன்பங்களாக மாறி விடக்கூடியவைகள் ஆகும் இதில் இருந்து விதிவிலக்கனவர்கள் எவரும் இல்லை. இதை பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ  13:11  
எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.  (அல்குர்ஆன்-13:11)
                மூஸா(அலை)அவர்கள்  காலத்தில் வாழ்ந்த பெரும் செல்வந்தன் காரூனின் செல்வச் செழிப்பும் பெரும் மகிழ்ச்சியும் மண்ணில்  புதைந்து போனதையும் பிர்அவுன் என்ற சர்வவாதிகாரம்  படைத்த மாமன்னன் நொடிப்பொழுதில் தண்ணீரால் அடித்து செல்லப்பட்டு அநாதையாகச் செத்து போன வரலாறுகளையும் திருமறைகுர்ஆன்  நமக்கு கூறுவதின் நோக்கமும் ,படிப்பினைகளும் என்ன? உலகில் ஏற்படும் இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆயுள் கிடையாது என்பது தானே! இன்பங்கள் பணம் படைத்தவருக்கு மட்டுமே சொந்தமானதும் அல்ல துன்பங்கள் ஏழைகளுக்கு சொந்தமானதும் கிடையாது இவைகள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவைகள் எந்த குழந்தைகளைப்பர்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சி கூத்தடினார்களோ!அவர்களே! பெற்றோர்களின் மனம் உடைந்து தூளாவதற்கும் காரணம் ஆகி விடுகின்றனர் எந்த உணவு நாவுக்கு சுவையை அள்ளி வழங்கியதோ! அதுவே அவனை நோயிலும் சிரமத்திலும் தள்ளி விடுகின்றது. எந்த சுற்றமும் நட்பும் ஒருவனுக்கு பாதுகாப்பாக இருந்ததோ அதுவே அவனை பெரும் ஆபத்தில் தள்ளி விடுகின்றது.
           
மனிதன் இன்பத்தை மட்டுமே தேடி அலைகின்றான் துன்பத்தை விரும்புவது கிடையாது ஆனால் அவன் விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும் துன்பம் அவனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. சரி  துன்பமே இல்லாத உலகம் ஒன்று உண்டா? ஆம் உண்டு அதன் பெயர் தன சொர்க்கம்
فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்-2:38)
சொர்கத்தின் வட்டுருக்கமான விளக்கம் இது தான் இத்தகைய நிலையை அடைந்தவர்கள் இவ்வுலகில் எவரும்  உண்டா! இத்தகைய நிலையை அடைய முடியுமா. நிச்சயமாக இவ்வுலகில் முடியாது . இன்பத்திற்குள்ளே துன்பங்கள் துன்பத்திற்குள்ளே இன்பம் இதுவே உலகம் .
            உலகில் நீ எவ்வளவு உயர் நிலையை அடைந்தாலும் துன்பமற்ற வாழ்வை அடைய முடியாது ஓடி ஓடி வாழ்வின் முடிவு வரை நீ ஓடிக்கொண்டே இருந்தாலும் முடிவில் உனக்கு கிடைப்பது விரக்தியும் அமைதியின்மையும் தான் இன்பத்தை தேடி அலைந்த உனக்கு அதிர்ப்தியும் !துன்பமும் சஞ்சலமும் தான் இறுதியில்  பரிசாக கிடைக்கிறது  உலகை பிரிந்து செல்லும் ஒவ்வொரு மனிதனும் முடிவுறாத ஆசைகளின் ஏக்கத்துடனேயே செல்கிறார்கள் . இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழகாக படம் வரைந்து காட்டியுள்ளார்கள் 
                மனிதன் தனது ஆயுட்காலங்களையெல்லாம் கடந்து செல்லும் ஆசைகளை மனதில் தேக்கியவர்களாகவே வாழ்கின்றனர் ஆயிரம் வருடங்கள் மனிதன் வாழ்ந்தாலும் அவனது ஆத்மா திருப்தி அடைவதில்லை. ஆசை  முடிவதில்லை இந்த நிலைக்கு நேர் எதிமறையான வாழ்க்கை தான் சொர்க்கம் , அங்கே ஆக கடைசி நிலையில் உள்ள மனிதர்களும் முழு திருப்தியான வாழ்வில் இருப்பார்கள் இறைவன் வேறு எவருக்குமே வழங்காத பெரு வாழ்வை தனக்கு வழங்கியுள்ளதாக சொர்கவாசிகள் ஒவ்வொருவருமே நினைப்பார்கள் அவர்களின் ஆத்மா முழு திருப்தியோடு அமைதி பெற்றிருக்கும் நாம் விரும்பும் அமைதியும் இன்பமும் நமது காலடியில் கிடக்கும் உலகில் நாம் ஓடி ஓடி , தேடி திரிந்த இன்பங்கள் அத்தனையும் , அமைதியும் நிம்மதியும் நம்மை தேடி வந்து நம்மை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டே இருக்கும், நீங்கள் கற்பனை வளம் மிக்கவரா? உங்கள் கற்பனை சிறகுகளை பறக்க விடுங்கள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் கற்பனை வானில் பறந்து செல்ல முடியுமோ அங்கெல்லாம் செல்லுங்கள் இறுதியாக எந்த வாழ்க்கை உங்களுக்கு விருப்பமானதாக உங்கள் லட்சியக்கனவாக நினைகின்றீர்களோ அவைகளையெல்லாம் மிஞ்சிய பெரும் வாழ்க்கை தான் சொர்க்க வாழ்க்கை.
32:17   فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
அவர்கள் செய்த(நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.(அல்குர்ஆன் 32:17)
என திரு குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளதை இங்கே நாம் நினைத்து பார்க்க வேண்டும்
            ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து சொர்கத்தையும் நரகத்தையும் பார்த்து வரும் படி அல்லா ஹ் கூறினான் பார்த்து விட்டு வந்த ஜிப்ரீலிடம் அல்லாஹ் அவ்விரண்டைப் பற்றியும்  கேட்டான் , சொர்க்கத்தில் நிரம்பியுள்ள எண்ணிலடங்கா பெரின்பங்களை மனிதன் அறிந்து கொண்டால் எவ்வளவு பெரிய பெரும் தியாகங்கள் செய்தாயினும் அதை அடைய வேண்டும் என்று துடிப்பான். நரகத்தில் நிரம்பியுள்ள பயங்கரங்களை மனிதன் அறிந்தால் அதை விட்டும் தன்னை காத்துக்கொள்ள எதை செய்யவும் தயங்கமாட்டான், ஆனால் சொர்கத்திற்கு செல்லும் வழியில் நிரம்பியுள்ள சிரமங்கள் நரகத்தை மூடியுள்ள உலக இச்சைகளும் ஆசைகளும் தான் மனிதனுக்கு பெரும் சோதனைகள் என்றார்கள்

            அன்பார்ந்த சகோதரர்களே! நிலையற்ற உலகத்தில் நாம் விரும்பியதை பெறுவதற்கு எவ்வளவு பெரும் தொகையையும் செலவு செய்ய தயாராகும் நாம் முடிவே இல்லாத துன்பம், துயரம், கவலை, துக்கம் போன்ற நம் இன்ப வாழ்வுக்கு இடையூறான எதுவுமே இல்லாத பேரின்ப பெருவாழ்வை சுவனபெருவாழ்வை அடைவதற்கு ஏதாவது முயற்சி செய்துள்ளோமா? ஒரு கிலோ ஆப்பிளுக்கு 150 ரூபாயிலிருந்து மார்கெட் விலை எதுவானாலும் கொடுத்து வாங்கும் நாம் ஆப்பிள் தோட்டமே வேண்டுமென்றால் எவ்வளவு கொடுக்க வேண்டும், ஒரு தோட்டமா! இல்லை என்னென்ன கனி வகைகள் உள்ளனவோ அத்தனை கனிகளையும் அள்ளித்தரும் சொர்கத்தை பெறுவதற்கு என்ன செய்துள்ளீர்கள் சில காலம் வாழ்ந்த பிறகு போட்டதை போட்டபடி விட்டுவிட்டு செத்துபோகும் இந்த பூமியில் ஒரு சென்ட் நிலத்திற்கு எத்தனை லட்சம் வேண்டும் எத்தனை கோடி  வேண்டும் என்று பேரம் பேசும் நாம் எல்லையற்று பறந்து விரிந்து கிடக்கும் சொர்க்க பூமியை வாங்குவதற்கு எத்தனை லட்சம் கொடுக்க போகிறீர்கள؟

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்