Social Icons

Thursday 20 September 2012

தயாராகி விட்டீர்களா? ஜும்ஆவுக்கு!!!!

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!!!!!

 இன்றைய தினம் "ஜும்ஆ" தொழுகை தொழுததாக உங்கள் பெயர் பதிவு செய்யப்படவேண்டுமா? இமாம் மெம்பரில் ஏறும் முன்னர் பள்ளியில் நுழைந்து விடுங்கள். 
   
அல்லாஹ் கூறுகிறான்:
ஈமான் கொண்டவர்களே! வெள்ளிக் கிழமை (ஜும்ஆ) தொழுகைக் காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் அழைப்புக்காக (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையாகும் அல்குர்ஆன்62:9


 "ஜும்ஆ நாளில் பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் குளிப்பது கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் , கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீத்(ரலி) கூறினார்கள். புகாரி 880
"ஜும்அ நாள் வந்துவிட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும் அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும் அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும் அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போலவுமாவார்கள். இமாம் வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டிவிட்டுச் சொற்பொழி வைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்." என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  அபூ ஹுரைரா(ரலி) கூறினார்கள். புகாரி 929

 ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் 'நீர் தொழுது விட்டீரா?' என்று கேட்டார்கள். அதற்கவர் 'இல்லை' என்றார். 'எழுந்து தொழுவீராக!" என்று கூறினார்கள். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.   புகாரி930

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
 "இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் 'வாய்மூடு!' என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட் டுவிட்டாய்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீத்(ரலி) கூறினார்கள். புகாரி934

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்