Social Icons

Tuesday 11 September 2012

மனதில் உறுதி வேண்டும்


           தனக்கு சரியென பட்டதை எந்த தயக்கமும் இன்றி அப்படியே ஏற்று பின் பற்றும் ஆண்மை மிக்க மனிதர்களை காண்பது உலகில் மிகவும் அரிதான ஒன்றாகி விட்டது மனிதர்களை அவர்க ளின் சமூகப் பழக்க வழக்கங்கள் அன்றாட வழமைகள் தனது மனஇச்சைகள் முன்னோர்களின் கலாச்சாரம் ஆகியவைகள் தான் ஆட்சி செய்கிறது அதில் அவனது ஆய்வு சிந்திக்கும் ஆற்றல் அனைத்துமே தோல்வி அடைந்து விடுகிறது இதனால் தான் தனக்கு சரிஎன பட்டதையும் ஏற்று நடக்க மனிதன் பின் வாங்குகிறான் தனக்கு தவறு என தெரிந்ததையும் விட முடியாமல் தடுமாறு கிறான் சமூகத்திற்கு அஞ்சி மன விருப்பம் இல்லாமலேயே பல செயல்களை செய்து கொண்டிருக் கிறான் மனிதன் பழக்கங்களுக்கு அடிமை என்றொரு முதுமொழியுண்டு இதனால்தான் சிறுவயதில் பழகிப்போன செயல்களை பெரியவர்களாக  ஆன பிறகும் விட முடியாமல் தவிக்கும் ஏராளமானவர் களை காண்கிறோம் 


                    இதையே அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இயற்கை(மார்க்கமான இஸ்லாத்தின்)அமைப்பிலேயே பிறக்கின்றது அதன் பெற்றோர்கள் அதை யூதர்களாக,கிறித்தவர்களாக,நெருப்பு வணங்கிகளாக மாற்றிவிடுகின்றனர் என கூறியுள்ளார் கள். நபி(ஸல்)அவர்களின் இக்கூற்று எந்த அளவுக்கு நடைமுறையில் ஒத்து போகிறது என்பதை பார்க்கும் போது பெரும் வியப்பு தான் நமக்கு ஏற்படுகிறது. மருத்துவத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவன் உடலுக்குக்கேடுவிளைவிக்கும் மதுபானங்களை உபயோகிக்கிறார்,புகைபிடிக்கிறார் தனக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்துகொண்டே மதுபானத்தையும், புகையையும் உபயோ கிக்க இவரைதூண்டியது எது?இறைவன் இவருக்கு கொடுத்த அறிவும் சிந்திக்கும் திறனும் என்ன- வாயிற்று மதுவுக்கும், புகைக்கும் பழகிப் போன இவருடைய மனதிற்கு அடிமையாகி போனதைத் தவிர வேறு என்ன காரணம் சொல்ல முடியும்: இல்லையெனில் மதுவும் புகையும் உடம்புக்கு மிகவும் நல்லது அதனால் தான் அவர் அதை உபயோகிக்கிறார் என்று யாராவது சொல்லமுடியுமா? அது போல பெரிய விஞ்ஞhனியாக இருக்கின்றான் அவன் கற்சிலைகளுக்கு முன்னால், சமாதிக்கு முன்னால் பணிந்து குனிந்து வணக்கம் செலுத்துகிறான் பிரார்த்தனை செய்கிறான். உலகியல் தத்துவப்படியோ அல்லது விஞ்ஞhன அடிப்படையிலோ இந்த கல்லுக்கு அல்லது சமாதிக்கு நாம் பேசுவதை கேட்கும்  சக்தியோ நமது எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்ளும் ஆற்றலோ இருக்கி றது என்று சொல்ல முடியுமா நமது தேவைகளை நிறைவேற்றும் சக்தி உண்டா? இல்லவே இல்லை இவைகளுக்கு அத்தகைய எந்த விதமான சக்தியோ ஆற்றலோ இல்லை அப்படியானால் அறிவியல் துறையில் நிபுணத்துவம் பெற்று விஞ்ஞhனி என்று பெயர் பெற்ற இவனுக்கு கற்சிலை களுக்கு எந்த சக்தியும் கிடையாது என்பது தெரியாதா? இந்த சிலைகளை கல்லிலிருந்து மனிதன் தான் செதுக்கினான். சாதாரண கல்லுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது இதை  போய் நாம் வணங்குகிறோமே! நமது சிந்தனை ஏன் இவ்வாறு தவறான முடிவுக்கு வந்தது என்றெல்லாம் இவன் ஏன் யோசிக்கவில்லை  சிறு வயதிலிருந்து இவன் பழகிய பழக்கங்களும் சமூக கலாச்சார மும் மக்களின் நடைமுறைகள் மற்றும் முன்னோர்களின் வழிமுறைகளைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் . தனக்கு அது தவரெனதெரிந்தும் முன்னோர்களில் நடைமுறைகளுக்கு மாற்றமாக நடந்தால் சமூகம் நம்மை தவறாக பார்க்கும் என்ற எண்ணமே அவனை தீமையிலும்  மூடப்பழக்கத்திலும் அவனை மூழ்கடிக்கிறது இல்லை அவன் பெரிய அறிவு ஜீவி, விஞ்ஞhனி அவனுக்கு தெரியாதா? தெரியாமலா வணங்குகிறான் என்று சொல்ல முடியுமா? இந்த இரண்டு மனிதர்களின்  செயலும் ஒரு உதாரணம் தான் இது போல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனை தவறிலும் பாவத்திலும் தள்ளிவிடும் பழக்கங்கள் ஏராளமாக இருக்கின்றது அக் காரணத்தால் தனக்கு தானே தீங்கிழைத்துக் கொள்கிறான் தான் வாழும் சமூகத்திற்கும் கேடு விளைவிக்கிறான் தன்னை படைத்த இறைவனுக்கும் மாறு செய்கிறான் இதை அல்லாஹ் தன் திருமறையில்,
                தன் மன இச்சையை கடவுளாக்கி கொள்பவனை விட வழி கெட்டவன் யார் ? என வினவுகிறான் அல்லாஹ் எந்த ஆத்மாவுக்கும் அநியாயம் செய்யவில்லை எனினும் மனிதன் தனக்கு தானே தீங்கிழைத்துக்கொள்கிறான் என கூறுகிறான்.

                          
மனிதன் இத்தகைய சடங்குகள் சம்பிரதாயங்களை விட்டும் வெளியேற வேண்டும் அற்ப ஆசைகளுக்கும் சமூக பழக்கங்களுக்கும் அடிமையாய் கிடப்பதை விட்டும் அவன் விடுதலை பெற வேண்டும் அறிவுக்கு பொருந்தாத செயல்களை பக்தியின் பெயரால் கடவுள் நம்பிக்கை என்ற பெயரால், மதத்தின் பெயரால் செய்வதை தவிர்க்க வேண்டும் நமக்கு  தவரெனப்பட்டதை விட்டு விட வேண்டும் சமூகத்திற்கு அஞ்சியோ முன்னோர்களின் நடைமுறை என்பதற்காகவோ மதச்சடங்கு என்பதற்காகவோ! செய்ய முன் வருவது மிக பெரிய தவறு அத்தகைய துணிவும் ஆண்மையும் மிக்கவர்கள் தான் இன்றைய உலகதிற்கு தேவை உலகில் சாதனையாளர் திகழ இவர்களால் தான் முடியும் .

பேராண்மைமிக்க இளைஞர்கள் :
                  
திருகுர்ஆனில் சில இளைஞர்களை அல்லாஹ் நமக்கு அறிமுகப்படுத்துகிறான் பேராண்மை மிக்க அந்த இளைஞர்களின் வரலாற்றை படிக்கிற போது நமது உள்ளுணர்வுகள் தட்டி எழுப்பபடுவ தை உணர முடிகிறது இளமை துடிப்பிலும் அதன் வனப்பிலும் உள்ள அந்த இளைஞர் பட்டாளம் தமது கையிலெடுத்த வாழ்க்கை லட்சியத்தை பாருங்கள் அந்த இளமை பருவத்தை ஆசைதீர அனுபவிக்க வேண்டுமென்று தம்மை போன்ற இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்வது போல நாமும் மனம் விரும்பியவாறு இளமையை அனுபவிக்க வேண்டும் எந்த கட்டுபாடுகளும் இன்றி சுதந்திர பறவை களாக சுற்றித்திரிய வேண்டும் என்ற சராசரி மனிதனின் ஆசைகளை தாண்டி லட்சிய மனிதர்களாக உருவெடுக்கிரார்கள், சராசரி மனிதர்களுக்கு சரித்திரத்தில் இடம் ஏது? உயர்ந்த இடம் என்பது எப்போதும் சாதிக்க துடிக்கும் சாதனையாளர்களுக்கு மட்டுமே. உயர் லட்சியம் படைத்த உயர்ந்த மனிதர்களுக்கு மாத்திரமே என்பது தெளிவான விஷயம். இந்த வரிசையில் சிலிர்த்தெழுந்த அந்த இளைஞர்கள் தன் சமூகம் மூட நம்பிக்கையில் மூழ்கி கற்சிலைகளையும் அற்பமான மனிதர்களை யும் வணங்கி கொண்டிருப்பதை காண்கின்றனர்.மனித இனத்திற்கே அவனாமான இந்த இழி செயலை கண்டு மனம் பொறுக்காமல் வேதனையால் மனம் கலங்கி நிற்கின்றனர். எதிரே  இருப் பவர்கள் ஒரு சிலர் அல்ல ஒரு சமுதாயமே நிற்கிறது அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அரசன் இருக்கிறான். என்றாலும் அவர்கள் அஞ்சவில்லை ஏன்?உலகமே ஒன்று சேர்ந்து செய்தாலும் தவறு ஒருக்காலும் சரியாகி விட முடியாது அல்லவா? தங்களுக்கு தவறென ப்பட்டதை, அசத்தியத்தை சமூகத்திற்கு அஞ்சி செய்ய அவர்களின் பேராண்மை அவர்களை அனுமதிக்கவில்லை முன்னோர் களின் வழிமுறை காலம்காலமாக நடைமுறையிலிருக்கும் ஊர்பழக்கதை எதிர்கின்றனர்.எவருக் கும் அஞ்சி தங்களின் சத்திய கொள்கையை மறைக்க வில்லை மாறாக ஓங்கி உரைக்கின்றனர் அதை தூக்கி பிடிக்கின்றனர் அதன் எதிர்விளைவு எப்படி இருக்கும் என்பதை அவர்கள் அறியாத மூடர்கள் அல்ல. நன்றாகவே தெரியும் கொடுங்கோல் அரசன் மூடநம்பிக்கையே வாழ்க்கையாகிப் போன  ஜனங்கள் ஊரோடு ஒத்து வாழ் என்பதெல்லாம், கொள்கைகளை பற்றி கவலைபடாத உலக வாழ்கை மட்டுமே குறிக்கோளாக கொண்ட மக்களில் மன ஓட்டத்தில் எழுந்த ஒரு கருத்து அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை,அவர்கள் இதற்கெல்லாம் அஞ்சகூடியவர்கள் அல்ல,அவர்களிடம்  அச்சம் என்று ஒன்று இருக்குமானால் அது இறைவனைப்  பற்றிய அச்சம் ஒன்று மட்டுமே இதனால் அவர்களின் உள்ளம் எ/கு போன்று உறுதியாகிவிட்டது, இதையே அல்லாஹ் தன் திருமறையில்  அவர்கள் தம் இறைவனின் மீது நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் நாம் அவர்களை மேலும் மேலும் நேர்வழியில் முன்னேறச் செய்தோம்  என கூறுகிறான். இதனால் அவர்கள் எழுந்து நின்று தெளிவாக அறிவிக்கிறார்கள் .
             
                யார் வானங்களுக்கும் பூமிக்கும் அதிபதியாக இருக்கின்றானோ அவனே எங்களுக்கும் அதிபதி ஆவான் அவனை அல்லாத வேறு எவனையும் கடவுளாக அழைக்க மாட்டோம் அவ்வாறு அழைத்தால் நிச்சயமாக நங்கள் பெரிய தவறை செதவர்களாகிவிடுவோம் என பகிரங்கமாக அறிவித்தார்கள். நமது இந்த சமுதாயத்தவர்கள் அகில உலகின்  இறைவனை விட்டு விட்டு மற்ற (அவனது படைப்புகளில்) எவைகளை கடவுள்களாக கருதுகின்றனரோ அவைகள் தெய்வங்கள் தாம் என்பதற்கு தெளிவான சான்றுகள் அவர்களிடம் உண்டா? இவ்வாறு இறைவன் மீது பொய்யை புனைந்து கூறுபவர்களைவிட பெரும் கொடுமைக்காரர்கள் யார்? 18:14,15 என்று அந்த இளைஞர்கள் தங்களுக்குள் பேசி வருவதை இறைவன் தனது திருமறையில் கூறுகிறான்.

       அன்பர்களே நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் இன்று உலகமெங்கும் இறைவனை விடுத்து அவனது படைப்புகளை (கல்லை, மண்ணை,மரத்தை,பறவையை) கடவுள் என நினைத்து வணங்கும் மடமை பல்கிபெருகி கொண்டே போகிறது இதை பகிரங்கமாக எதிர்க்கும் துணிச்சல் மிக்க ஆண் மக்களை நாம் பார்க்க முடியுமா? இது போன்ற பெரிய தவறுகளை விடுங்கள் நமது பார்வையில் படும் சிறிய தீமைகளை சமுதாயத்தில் ஒரு கூட்டம் செய்யும் போது தீமைகளை தடுக்கதுணிந்தவர் கள் எத்தனை பேர்? மனித இனத்தை சீர்படுத்துவதற்காக தோன்றிய  சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், நன்மையை ஏவுகிறீர்கள், தீமையை தடுக்கிறீர்கள்! என்று முஸ்லிம் சமுதாயத்தை பார்த்து இறைவன்  கூறுகிறானே அது நமக்கு கொஞ்சமாவது பொருந்துமா! உங்களில் எவர் தீமையை பார்கிராரோ அவர் அதை தன் கரத்தால் தடுக்கட்டும் முடியவில்லையெனில் தன் நாவால் தடுக்கட்டும் அதுவும் முடியவில்லையெனில் உள்ளதால் வெறுத்து ஒதுங்கட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறி இருக்கிறார்கள் அதை பற்றி எப்போதாவது யோசித்திருப்போமா? நமக்கேன் வம்பு யார் எக்கேடு கெட்டால் என்ன? நாம் பிரட்சினைகள் இல்லாமல் இருந்து கொள்வோம்  என்றுதானே நினைக்கின்றோம்! தனி மனிதர்களை விடுங்கள், நமது சமுதாயம் இன்று உலகில் பல்கி பெருகி உலகம் முழுவதும் வாழ்கிறதே ! சமுதாயத் தலைவர்கள் இதை பற்றி யோசித்திருப்பார்களா ? எந்த சமுதாயத்திற்கும் இல்லாத ஜமாஅத் அமைப்பு பள்ளிவாசல்கள் மூலம் ஒரு நாளைக்கு ஐந்து முறை கூடி கலையும் அறிய வாய்ப்பை நமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறானே? இந்த ஜமாத்துகள் சமூகத்தில் நிலவும் தீமைகள் பற்றியும் அதை களைவது பற்றியும் யோசித்திருப்பார்களா? அப்படி ஒரு சிந்தனையாவது அவர்களுக்கு  ஏற்பட்டதுண்டா ? அதற்கு தூண்டு கோலாக சமுதாயத்தில் உள்ள அறிஞர்கள் சமூக சிந்தனையாளர்கள் யாராவது இருந்துள்ளார்களா? இறை நம்பிக்கையாளன் சமூக சிந்தனை யற்றவனாக எப்படி இருக்க முடியும், சமூகத்தின் அவலங்களை களைவதும் சிறந்த மனிதர்களை உருவாக்குவதும் தானே இஸ்லாத்தின் அடிப்படையான நோக்கமும் போதனைகளும்! அவைகள் இல்லமல் ஒருவன் சரியான இறை விசுவசியாக எப்படி இருக்க முடியும், என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் , இறை நம்பிக்கையாளர்களுக்கு குகை தோழர்களின் வரலாறு ஒரு சிறந்த எடுத்துகாட்டு . இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இது போன்ற திட சித்தக்காரர்களை நாம் அதிகமாக பார்க்க முடியும் அன்பான சகோதரர்களே! இப்போது நாம் எப்படி இருக்கிறோம்! என்பதை நம்மை நாமே சுய பரிசோதனை செய்து பார்ப்போமா? அல்லாஹ் நமது இதயத்திலும் உறுதியை ஏற்படுத்த வேண்டும் தீமைகளையும் இறைவனுக்கு விரோதமான காரியங்களையும் எதிர்க்கும் துணிவையும் திராணியையும் வழங்க வேண்டும் ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளனாக வாழ்ந்து  அதே நிலையில்  அல்லாஹ்வை சந்திக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன் !!!

K S அப்துல்லாஹ் உமரி
கடையநல்லூர்

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்