Social Icons

Sunday, 29 June 2014

வியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா?

வாரத்தில் திங்கட் கிழமையும் வியாக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் திங்கட் கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு வைப்பதில் கவனம் செலுத்தி வந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதீ (676)

இப்படி இரண்டு நாட்கள் நோன்பு நோற்றால் சுன்னதான நோன்பை நோற்ற நன்மை கிடைக்கும். ஆனால் நாமாக விரும்பும் நாளில் நோன்பு நஃபிலாக நோற்க நமக்கு அனுமதி உண்டு. அந்த அடிப்படையில் ஒரு நாள் நோன்பு நோற்கலாம்.
இந்த இரண்டு நாட்களில் ஒன்றில் நோன்பு நோற்றால் கண்டிப்பாக மற்ற நாளிலும் நோன்பு நோற்க வேண்டும் என மார்க்கம் கூறவில்லை. திங்களன்று நோன்பு நோற்காமல் வியாழக்கிழமை மட்டும் நோன்பு நோற்றால் அதில் தவறேதுமில்லை. அல்லாஹ் ஒரு நாள் நோன்பு நோற்ற கூலியை வழங்குவான்.
நபிலான வணக்கம் பற்றி அறிய

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்