Social Icons

Monday, 29 October 2012

தொழுகையில் ஆமீனை மனதுக்குள் சொல்லலாமா?

இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன் எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன், மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 782


இந்த ஹதீஸில் கூறப்படும் கூலூ (நீங்கள் சொல்லுங்கள்) என்ற அரபி வாசகம், மெதுவாகச் சொல்வதையும் சப்தமிட்டுச் சொல்வதையும் எடுத்துக் கொள்ளும். எனவே நாம் விரும்பினால் சப்தமிட்டும் ஆமீன் கூறலாம். விரும்பினால் சப்தமிடாமலும் கூறலாம் என்று எழுதியிருந்தோம்.

நபிகளார் அவர்களின் தாய் மொழி அரபியாக இருந்ததால் அவர்கள் சொன்ன செய்திகள் அனைத்தும் அரபி மொழியில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் நபிகளார் சொன்ன ஒரு செய்தியை மொழிபெயர்க்கும் போது அந்த மொழியில் அதற்கு என்ன பொருள் கொடுக்க வேண்டுமோ அதே பொருளைத் தான் நாம் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் நாம் அவ்வாறு கூறியுள்ளோம். இது எல்லா மொழியில் கடைப்பிடிக்கும் ஒரு முறை தான். தமிழில் உள்ள ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு வாதிடக் கூடாது. அதன் மூலச் சொல் எந்த மொழியில் இருக்கிறது என்பதைக் கவனித்து, அந்த மொழியில் அதன் பொருள் என்பதைப் பார்த்தே முடிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்