அல்லாஹ் தஆலா இந்த சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில் மிகப்பெரிய அருட்கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்த குர்ஆனை ஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
யார் அல்லாஹ்வுடைய வேதத்திருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்துமடங்குவரை உண்டு. ”அஃப் லாம் மீம்” என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அப் ஒரு எழுத்து லாம் ஒரு எழுத்துமீம் ஒரு எழுத்து என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : திர்மிதீ (2835)
இதே போன்று சில குறிப்பிட்ட சூராக்களுக்கு குறிப்பிட்ட சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது ஆதாரப்பூர்வமானஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரு குர்ஆனில் சிறப்பித்து கூறப்படும் அத்தியாயம் தொடர்பாக உள்ள ஹதீஸ்களில் ஆதாரமற்ற ஹதீஸ்கள் அதிகமாக உள்ளது
ஆகவே அவற்றை தவிர்த்து கொண்டு .. ஆதாரமான ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம்பகரா அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வரும் ஹதீஸ்களின் தரத்தை பற்றிப் பாப்போம்
ஆதாரமான ஹதீஸ்கள்
விரண்டோடும் ஷைத்தான்கள்.
அறிவிப்பாளர்:அபூஹரைரா(ர)
நூல்: முஸ்லிம் 1430, திர்மிதி 2802, அஹமது 7487 , 8089, 8560, 8681
பரிந்துரை செய்யும் அத்தியாயம்.
அறிவிப்பாளர் அபூ உமாமா (ரலி)
நூல்: முஸ்ம் 1440 அஹ்மத் 21126, 21136, 21169, 21186
இறைவனிடம் வாதம் செய்யும் சூரா.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)
முஸ்லிம் 1471, திர்மிதி 2808, 16979
ஷைத்தானை விரட்டும் சூரா.
திர்மிதி 2882 தாரமி 3253
இரவு வணக்கத்திற்கு நிகரானது.
அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி இரண்டு (02:285 – 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ மஸ்ஊத் (ரலி)
புஹாரி : 4008
பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும். ''எவர் அல்பகரா எனும் (2வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசனங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 5009.
ஆயத்துல் குர்ஸீ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் ரமளான் ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பணியில் இருந்த போது, ஷைத்தான் வந்து திருடியதாகவும், அவன் பிடிபட்டவுடன், தூங்கும்
போது ஆயத்துல் குர்ஸீ ஓதினால் ஷைத்தான் தீண்ட மாட்டான் என்று அபூஹுரைரா
(ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் புகாரியில் ஹதீஸ் உள்ளது.
அபூஹுரைராவின் முன் ஷைத்தான் வந்தானா? தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதுவது ஷைத்தான் கற்றுத் தந்ததா?
ரமளானுடைய
ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த உணவுப்
பொருளை அள்ளத் துவங்கினான். உடனே நான் அவனைப் பிடித்துக் கொண்டேன். "உன்னை
அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்'' என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்) இறுதியில் அவன், "நீங்கள்
படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன்
பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை
ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்'' என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது, "அவன் பொய்யனாயிருந்தும் உம்மிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3275
கடமையான
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ
அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது.
அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ
முந்திய நபிமார்களுக்கு கொடுக்கப்படாத சூரா.
நூற்கள்: அஹ்மத் (22167) முஸ்ம் (252) திர்மிதி (3198) நஸயி (447) அஹ்மத் (3483)
மேற்கூறப்பட்ட அஹ்மத் அறிவிப்பை தவிர மற்ற அனைத்து நூற்களிலும் சூரத்துல் பகராவை நான் கொடுக்கப்பட்டுள்ளேன் என்று இடம் பெற்றுள்ளது கடைசி ஆனால் கடைசி இரண்டு வசனம் என்று இடம் பெற வில்லை.
ஆதாரமற்ற ஹதீஸ்கள்
சூரத்துல் பகரா இல்லாத வீடு ஒன்றுமில்லாத வீடு.
நூல்: தாரமி (3258)
இந்த செய்தி மவ்கூப் பாகவும் மர்பூஃ ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது மவ்கூப் ஆன செய்தி ஆதாரமாக அமையாது ஆனாலும் மர்பூஃ ஆக வரக்கூடிய செய்தி ஆதாரப்பூர்வமாக இருப்பதால் இந்த செய்தி ஆதாரமாகும்.
பைத்தியத்தை நீக்கும் சூரா.
நூல்: அஹ்மத் (20237)இந்த செய்தியில் உன்ர் பின் அ என்பவரும் அபீ ஜனாப் என்பவரும் இடம் பெற்றுள்ளனர் இவ்விருவரையும் அறிஞர்களும் குறை கூறியுள்ளனர்.அறிஞர் அஹ்மத் அவர்கள் இவர் தத்லீஸ் செய்பவர் என்பவர் என்றும் இப்னு மயீன் அவர்களும் இவ்வாறே சொல்கிறார்கள் இப்னு ஸஃது அவர்கள் இவர் கடுமையாக தத்லீஸ் செய்பவர் என்றும் பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 7 பக்கம் 427)இந்த ஹதீஸில் மற்றொரு அறிவிப்பாளரான அபீ ஜனாப் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரையும் அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.அறிஞர் இப்னு மயீன் அவர்கள் இப்னு ஸஃது சொன்னதாக சொல்கிறார் இவரை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர் என்றும் இமாம் புகாரி அவர்களும் அபூஹாதம் அவர்களும் இப்னுல் கத்தான் அவர்கள் பலவீனமாக்கியதாக குறிப்பிடுகிறார்கள் இப்னு மயீன் அவர்கள் பலவீனமானவர் என்றும் உஸ்மான் தாரமி அவர்கள் பலவீனமானவர் என்றும் இஜ் அவர்களும் இவர் பலவீனமானவர் என்றும் அம்ரு பின் அலீ அவர்கள் இவர் ஹதீஸ் துரையில் கைவிடப்பட்டவர் என்றும் இமாம் ஜவ்ஜஸானி அவர்கள் இவர் பலவீமானவர் என்றும் இதே போன்று யஃகூப் பின் சுப்யான் அவர்களும் இவர் பலவீனமானவர் என்றும் இதே போன்று இமாம் அபூஹாதம் அவர்களும் இமாம் அபூதாவூத் அவர்களும் இமாம் நஸயீ அவர்களும் பலவீனமானவர் என்றும் இமாம் ஸாஜி அவர்கள் இவர் ஹதீஸ் துரையில் பலவீமானவர் என்றும் இப்னு அம்மார் அவர்களும் அபூஅஹ்மத் அவர்களும் பலவீமானவர் என்றும் இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரை பலவீமானவர் பட்டியல் சேர்த்துள்ளார்.நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 11 பக்கம் 177)
குர்ஆனின் திமிழ்.
பகரா குர்ஆனின் திமிலாகும். குர்ஆனின் கிளைகளாவது ஓவ்வொரு வசனத்துடனும் எண்பது மலக்குகள் இறங்குகின்றன.இன்னும் ஆயத்துல்குர்ஸி அர்ஷின் கீழிருந்து வெளியேற்றப்பட்டதாகும். பிறகு ஆயத்தல்குர்ஸியைக் கொண்டு சூரத்துல் பகரா இணைக்கப்பட்டது அல்லது சூரத்துல் பகராவைக் கொôண்டு ஆயத்துல்குர்ஸி இணைக்கப்பட்டது.இன்னும் சூரத்து யாஸீன் குர்ஆனின் இதயமாகும் அல்லாஹ்வையும் மறுமை வீட்டின் நற்பேற்றை நாடி ஓரு மனிதர் அதனை (யாஸீன்) ஓதினால் அவருடைய (பாவங்கள்)மன்னிக்கப்படும்.இன்னும் நீங்கள் அதனை மரணத்தருவாயில் இருப்பவர் அருகே ஓதுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: மஃகல் பின் யஸார் (ரலி)
நூல்: அஹ்மத் (19415)இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஒரு மணிதர் என்று இடம் பெற்றுள்ளார் என்று இடம் பெற்றுள்ளது இவரும் இவர் தன்னுடைய தந்தையின் மூலம் அறிவிக்கிறார் இவருடைய தந்தையைப்பற்றியும் எந்த குறிப்பும் இடம் பெற வில்லை எனவே இவர்கள் யாரென்று அறியப்படாதவர்கள் இவர்களுடைய அறிவிக்க கூடிய இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.நான்காவதாக இப்னு மஸ்வூத் (ர) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஆனால் இது மவ்கூப் ஆன செய்தியாகும்.
வளம் சேர்க்கும் சூரா.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் பிஷ்ர் பின் முஹாஜிர் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரை அறிஞர்கள் விமர் சனம் செய்துள்ளனர்.இமாம் அஹ்மத் அவர்கள் இவர் ஹதீஸ் துரையில் நிராகரிக்கப்பட்டவர் என்றும் இப்னு மயீன் அவர்களும் இப்னு அபீஹாதம் அவர்களும் இவருடைய ஹதீஸ்களை எழுதலாம் ஆனால் ஆதாரம் பிடிக்க கூடாது இமாம் புகாரி அவர்கள் இவர் அறிவித்த செய்திகளில் சிலதில் மாற்றமாக அறிவிக்க கூடியவர் என்றும் இப்னு அதீ அவர்கள் இவர் அறிவித்த செய்திகள் யாராலும் வழி மொழியப்படாதவை என்றும் இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் அனஸ் (ரலி) அவர்களை தொட்டும் தத்லீஸ் செய்பவர் என்றும் இவர் அதிகமாக தவறிழைப்பவர் என்றும் இமாம் ஸாஜி அவர்கள் இவர் ஹதிஸ் துரையில் நிராகரிக்கப்பட்டவர் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.நூல் : தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 1 பக்கம் 411)இந்த செய்தியின் சில வாசகங்கள் மட்டும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் இடம் பெற்றிருந்தாலும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் வாசகங்களை விட கூடுதலாக இடம் பெற்றுள்ளது கூடுதலாக இடம் பெற்ற இந்த அறிவிப்பு பலகீனமானதாகும் ஏனென்றால் இந்த அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் அப்துல் ஹீமைத் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் பலவீனமானவர்.யஹ்யா பின் அப்துல் ஹீமைத் என்பவர் பலவீனமானவர் என்று நஸயீ அவர்கள் கூறுகிறார்கள்.நூல: லுபாவு வல மத்ரூகீன் (பாகம் 1 பக்கம் 107)இப்னு நூமைர் அவர்கள் இவர் பொய்யர் என்றும் இமாம் அஹ்மத் அவர்கள் இவர் பகீரங்கமாக பொய் சொல்பவர் என்றும் இவர் ஹதீஸ்களை திருடிக்கொண்டிருந்தார் என்பதை அறிந்து வந்தோம் இப்னு ஸஃதி அவர்கள் இவர் வீழ்தாட்டப்பட்டவர் என்றும் இமாம் அவர்கள் பலவீனமானவர் என்றும் இப்னுமயீன் அவர்கள் இவர் பலமானவர் என்று கூறுகிறார்கள்.நூல்: லுபாவு வல் மதரூகீன் (பாகம் 3 பக்கம் 197)
இரு உலகத்தின் நன்மையை பெற்றுத் தரும் சூரா.
நூல்: தாரமி (3380)
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள அய்பஃ என்பவர் விமர்சனத்திற்குள்ளானவர்.
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அய்பஃ இப்னு அப்துல் கலாயீ என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் தனக்கு முன்னால் உள்ள ஸஹாபிகளை விட்டு அறிவிப்பவர்.
நூல்: ஸானுல் மீஸான் (பாகம் 1 பக்கம் 476)
எனவே இந்த செய்தி முர்ஸலாகும் இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.
அல்லாஹ் சூரத்துல் பகராவை இரண்டு ஆயத்துகளை கொண்டு முடித்திருக்கிறான் அந்த இரண்டு ஆயத்துகளை அர்ஷின் கீழிருக்கின்ற பொக்கிஷத்திருந்து கொடுத்திருக்கிறான் அந்த ஆயத்துகளை உங்களுடைய பெண்களுக்கு கற்று கொடுங்கள் ஏனென்றால் அது தொழுகையும் குர்ஆனும் துஆவும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: தாரமி (3390)
இந்த ஹதீஸ் முர்ஸலாகவும் மாபூஃ ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் மாபூஃ ஆக வரக்கூடடிய ஹதீஸ் பலவீனமானதாகும். ஏனென்றால் இலருடைய மணண சக்தியில் கோளாரு இருக்கிறது அது மட்டுமில்லாமல் இப்னு வஹப் இவருக்கு மாற்றமாக அறில்த்திருக்கிறார் இவர் ஹாபிழ் ஆகும் எனவே மர்பூ ஆன செய்தியியையும் மவகூளப் ஆன செய்தியையும் ஏற்றுளுக்கொள்ள முடியாது.
இந்த செய்தியில் எனவே இந்த செய்தியை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.
முந்திய வேத்தில் உள்ள சூரா.
இந்த ஹதீஸ்களின் அனைத்திலும் உபைதுல்லாஹ் பின் அபீ ஹீமைத் என்பவரே இடம் பெற்றுள்ளார் இவரை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.இவர் அறிவிப்பாளர் வரிசைகளை புரட்டுபவர் இவர்தான் இந்த செய்திகளை உருவாக்கினார் என்று சந்தேகப்பட முடியாத அளவிற்கு செய்திகளை கொண்டு வருபவர் இதனால் இவர் விடப்படுவதற்கு தகுதயானவராகும்.நூல்: மஜ்ரூஹீன் (பாகம் 2 பக்கம் 65)
அர்ஷின் கீழிருந்து இறங்கிய பொக்கிஷம்.
நூல்: முஃஜமுல் கபீர் (பாகம் 8 பக்கம் 235)
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் வலீத் பின் ஜமீல் என்பவர் இடம் பெருகிறார் இவûரை அறிஞர்கள் விமர்சனமி; செய்துள்ளனர்.
இமாம் அபூஸர்ஆ அவர்கள் இவர் பலவீமானவர் என்றும் இவர் காஸிம் என்பவவரை வழியாக நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்திருக்கிறார் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 11 பக்கம் 116)
இமாம் அபூஸர்ஆ கூறியதைப் போன்று இவர் காஸிம் என்பவர் வழியாகத்தான் இந்த செய்தியை அறிவித்துள்ளார்.
எனவே இந்த செய்தியை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
அல்லாஹ் இரண்டு வசணங்களை தன்னுடைய அர்ஷின் கீழ் உள்ள பொக்கிஷத்திருந்து இறக்கியிருக்கிறான் இவ்விரண்டு ஆயத்துகளையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் படைப்பினங்கள்>>>>>>> தன்னுடைய கையினால் எழுதினான் யார் அந்த இரண்டு ஆயத்துகளையும் இ1ஷாவுக்கு பின்னால் ஓதுகிறாரோ இரவில் நின்று வணங்குவதை விட்டும் போதுமானதாகும் அவ்விருவசனங்கள் ஆமனர்ரசூலு என்று தொடங்கும் வசனத்திருந்து சூரா முடிவு வரை யாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.தாரிகு ஜீர்ஜான் (பாகம் 1 பக்கம் 268)இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வலீத் பின் உபாத் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.இந்த செய்தியை அபான் என்பவர் ஆஸிமை வழியாக அறிவித்துள்ளார் அபான் என்பவர் என்பவர் இந்த செய்தியை தவிர மற்ற செய்தியை அறிவிப்பதாக நான் அறிய மாட்டேன் என்று காமில் நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்
நூல்: காமில் பீ லுபாவுர் ரிஜால் (பாகம் 7 பக்கம் 84)
நூல்: காமில் பீ லுபாவுர் ரிஜால் (பாகம் 7 பக்கம் 84)
No comments:
Post a Comment