அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் சத்தியத்தை அறிந்து, அதனைப் பின்பற்ற
வாய்ப்பளிப்பானாக!
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய புனித வீட்டை ஹஜ் செய்வதை தன் அடியார்களின் மீது கடமையாக்கியுள்ளான். அதனை இஸ்லாத்தின் அங்கங்களில் ஒன்றாகவும் ஆக்கியுள்ளான். அல்லாஹு தஆலா கூறுகிறான்:
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய புனித வீட்டை ஹஜ் செய்வதை தன் அடியார்களின் மீது கடமையாக்கியுள்ளான். அதனை இஸ்லாத்தின் அங்கங்களில் ஒன்றாகவும் ஆக்கியுள்ளான். அல்லாஹு தஆலா கூறுகிறான்:
وَِللهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ
سَبِيْلاً وَمَنْ كَفَرَ فَإِنَّ اللهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِيْنَ
எவர்கள் அங்கு யாத்திரை செய்ய சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ,
அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று அவ்)வீட்டை ஹஜ்
செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் அப்போது (அதனால்
அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனெனில்) நிச்சயமாக
அல்லாஹ் அகிலத்தா(ர் அனைவ)ரை விட்டும் தேவையற்றவன். (அல்குர்ஆன் 3:97)
( بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا
اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ
وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ )
இஸ்லாம் ஐந்து காரியங்களின்மீது நிறுவப்பட்டுள்ளது. அவை: நிச்சயமாக
வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை என்றும்
நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்றும்
சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, ஜகாத் கொடுப்பது, ஹஜ்
செய்வது, ரமலானில் நோன்பு நோற்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னுஉமர் -ரலி, நூற்கள் : புகாரீ,முஸ்லிம்)
(அறிவிப்பவர்: இப்னுஉமர் -ரலி, நூற்கள் : புகாரீ,முஸ்லிம்)
"இப்பட்டணங்களுக்கு சிலரை அனுப்பி, பொருளாதார வசதியுள்ள அனைவரையும் கண்டறிந்து, அதில் ஹஜ் செய்யாதவர் மீது வரி விதிக்கலாம் என நினைக்கின்றேன். ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை! அவர்கள் முஸ்லிம்கள் இல்லை!" என உமர் (ரலி) கூறியதாக ஸயீத் அவர்கள் தனது ஹதீஸ் தொகுப்பு நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ஹஜ்ஜை நிறைவேற்ற சக்திபெற்றிருந்தும் அதனை -நிறை வேற்றாது- விட்டுவிட்டவன் யூதனாகவோ கிருத்துவனாகவோ மரணிப்பதில் ஆச்சரியமில்லை என அலி (ரலி) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் செய்ய சக்தி பெற்றிருந்தும் ஹஜ் செய்யாதிருப்பவர் விரைவாக அதனை நிறைவேற்றுவது கடமையாகும்.
( تَعَجَّلُوا إِلَى الْحَجِّ يَعْنِي الْفَرِيضَةَ فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي مَا يَعْرِضُ لَهُ )
-கடமையான- ஹஜ்ஜை விரைவாக நிறைவேற்றிவிடுங்கள்! ஏனெனில் உங்களில்
ஒருவருக்கு என்ன தடை நேரும் என்பதை அவர் அறியமாட்டார் என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் -ரலி, நூல் : அஹ்மத்)
ஹஜ் செய்ய சக்தி பெற்றவர் அதனை விரைவாக நிறைவேற்றுவது கடமை என்பதை கீழ்காணும் அல்லாஹ்வின் கட்டளையும் நபிமொழியும் உணர்த்துகின்றன:
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் -ரலி, நூல் : அஹ்மத்)
ஹஜ் செய்ய சக்தி பெற்றவர் அதனை விரைவாக நிறைவேற்றுவது கடமை என்பதை கீழ்காணும் அல்லாஹ்வின் கட்டளையும் நபிமொழியும் உணர்த்துகின்றன:
وَِللهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ
سَبِيْلاً وَمَنْ كَفَرَ فَإِنَّ اللهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِيْنَ
எவர்கள் அங்கு யாத்திரை செய்ய சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ,
அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று அவ்)வீட்டை ஹஜ்
செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் அப்போது (அதனால்
அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனெனில்) நிச்சயமாக
அல்லாஹ் அகிலத்தா(ர் அனைவ)ரை விட்டும் தேவையற்றவன். (அல்குர்ஆன் 3:97)
(. . أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللَّهُ عَلَيْكُمُ الْحَجَّ فَحُجُّوا . . )
மக்களே! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான்.
எனவே ஹஜ் செய்யுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் தமது பிரசங்கத்தில்
கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)
உம்ராச் செய்வதும் கடமையாகும் என்பதை உணர்த்தும் பல நபிமொழிகள்
வந்துள்ளன. அவைகளில் சில:
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாம் என்றால் என்னவென்று வினவியபோது,
(الإِسْلاَمُ : أَنْ تَشْهَدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ
مُحَمَّداً رَسُوْلُ اللهِ، وَتُقِيْمَ الصَّلاَةَ، وَتُؤْتِيَ
الزَّكَاةَ، وَتَحُجَّ الْبَيْتَ وَتَعْتَمِرَ، وَتَغْتَسِلَ مِنَ
الْجَنَابَةِ، وَتُتِمَّ الْوُضُوْءَ، وَتَصُوْمَ رَمَضَانَ)
இஸ்லாம் என்பது: நிச்சயமாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர
வேறு எவருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள்
அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்றும் நீர் சாட்சி கூறுவது, தொழுகையை
நிறைவேற்றுவது, ஜகாத் கொடுப்பது, (அல்லாஹ்வுடைய) வீட்டை ஹஜ் செய்வது,
உம்ராச் செய்வது, பெருந்தொடக்கிற்காக -ஜனாபத்திற்காக- குளிப்பது, உளுவை
முழுமையாகச் செய்வது, ரமலானில் நோன்பு நோற்பது என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் -ரலி,
நூற்கள் : இப்னு குஸைமா, தாரகுத்னீ
-இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்த அறிவிப்பின் அறிவிப்பாளர் வரிசை
தரமானது, ஸஹீஹானது என்று கூறியுள்ளார்கள்.)
عَنْ عَائِشَةَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَلْ عَلَى
النِّسَاءِ مِنْ جِهَادٍ قَالَ نَعَمْ عَلَيْهِنَّ جِهَادٌ لَا قِتَالَ
فِيهِ الْحَجُّ وَالْعُمْرَةُ
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! பெண்கள் மீது ஜிஹாத் கடமை ஏதும் உள்ளதா?
என்று ஆயிஷா (ரலி) அவர்கள் வினவியதற்கு, ஆம்! அவர்கள் மீது சண்டை
இல்லாத ஜிஹாத் செய்வது கடமையாகும். அது ஹஜ்ஜும் உம்ராவும் என்று நபி
(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர்: ஆயிஷா -ரலி, நூற்கள்: அஹமத், இப்னுமாஜா)
(அறிவிப்பவர்: ஆயிஷா -ரலி, நூற்கள்: அஹமத், இப்னுமாஜா)
ஹஜ்ஜும் உம்ராவும் வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே கடமையாகும்.
(اَلْحَجُّ مَرَّةٌ فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ)
ஹஜ் ஒரு தடவைதான் (கடமையாகும்). அதற்கு அதிகமாகச் செய்வது உபரியாகும்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் -ரலி,
நூல் :அஹ்மத்)
உபரியான ஹஜ் மற்றும் உம்ராவை அதிகமாக நிறைவேற்றுவது சுன்னத்தாகும்.
உபரியான ஹஜ் மற்றும் உம்ராவை அதிகமாக நிறைவேற்றுவது சுன்னத்தாகும்.
( اَلْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ )
ஒரு உம்ரா மற்றொரு உம்ராவிற்கு இடைப்பட்ட (காலங்களில் நிகழும்)
பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குரிய
கூலி சொர்க்கத்தைத் தவிர வேறில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா-ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
(அறிவிப்பவர் : அபூஹுரைரா-ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
No comments:
Post a Comment